Thursday, November 28, 2019

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா.(லூக்.21:33)

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா.
(லூக்.21:33)
*   *    *   *   *    *   *    *    *   *

இப்போதெல்லாம் எல்லோருடைய கையிலும் பைபிள் இருக்கிறது.

ரொம்ப சந்தோசம்.

பைபிள் வாசிக்கும் பழக்கமும் இருக்கிறது.

ரொம்ப ரொம்ப சந்தோசம்.

பைபிள் இறைவனுடைய
 வார்த்தை என்ற நம்பிக்கையும் இருகிறது.

ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம்.

ஆனால், இறை வார்த்தையில் 
நம்பிக்கை  இருகிறதா?

யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலும், "ஆம்" என்ற பதில் வரும்.

ஆனால் பதிலை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்து 

அது எந்த அளவுக்கு வாழ்க்கையோடு ஒத்துப் போகிறது என்று அவரவர்.

சுய பரிசோதனை (Self examination) செய்து பார்க்க வேண்டும்.

தேர்வு முடிவுகள் ஆளுக்கு ஆள் மாறுபடும்.


நண்பர் ஒருவர் ஒருநாள் ரொம்ப கவலையோடு உட்கார்ந்திருந்தார்.

"என்ன சார் விசயம்? ஏதாவது கப்பல் கவுந்து போச்சா?"

"கவுந்தது மட்டுமல்ல, முங்கியே போச்சி சார்."

"என்ன சொல்றீங்க?"

"I. A. S தேர்வில எல்லா Attemptம் போச்சி."

"தினசரி பைபிள் வாசிக்கும்  பழக்கம்  உண்டா? "

"ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் பைபிள் வாசித்துவிட்டு, வசனங்களைத் தியானித்து விட்டுதான் அடுத்த வேலை."

"வாசிப்பது சரி. வாசிக்கிறதை நம்புகிறீர்களா?"

"என்ன சார், கடவுள் நம்பிக்கை இல்லாத ஆள் மாதிரி பேசறீங்க? "

"ஹலோ! கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க."

"இறை வார்த்தை என் உயிர். என் உயிரை நான் நம்பாதிருப்பேனா?"

" உங்களைப் பார்க்க உயிர் உள்ள ஆள் மாதிரி தெரியல.

உயிர் இருந்தால் இப்படி இருக்க மாட்டீங்க. உற்சாகமாக,  மகிழ்ச்சியாக இருப்பீங்க."

"என் கவலைக்கு காரணத்தை ஏற்கனவே சொல்லி விட்டேன்.

நீங்கள் என்னை நக்கல் பண்ணுறது மாதிரி தெரியுது."

"இறைவார்த்தையை நீங்கள் நம்புறதா இருந்தால் மகிழ்ச்சியாய் இருந்துதான் ஆகவேண்டும்.

'என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்'

என்பது இறை வார்த்தை.

என்ன நேர்ந்தாலும் -

வெற்றி கிடைத்தாலும்,

தோல்வி அடைந்தாலும்,

நோய் சுகமானாலும்,

சுகமாகா விட்டாலும்,

சுனாமியால் நகரமே அழிந்தாலும்,

உலகமே அழிந்தாலும்

நன்றி கூறுங்கள்.

நன்றி கூறிவிட்டு யாராவது கவலையாய் இருப்பார்களா? "

"உண்மைதான். ஆனால்..."

"என்ன ஆனால்?

நம்பிக்கையில் நடுநிலை கிடையாது.

No neutral position! 

ஒன்று நம்புகிறோம்,, அல்லது நம்பவில்லை.

நம்பினால் மகிழ்ச்சி,

நம்பாவிட்டால் கவலை.

நீங்க கவலையாய் இருக்கிறீங்க. . அப்போ என்ன அருத்தம்?"

"சரி, ஆளவிடுங்க."

"என்னது? ஆளவிடவா? நம்ம நாட்டையா?"


"விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்."

(இன்று இருக்கிற பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் அழியும் என்பதற்கு ஆதாரமான இறைவார்த்தை.)

விண் வெளியில் உள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களும், நாம் வாழும் உலகமும் அழிந்து போகும். 

ஆனால் இயேசுவின் வார்த்தை என்றும் நிலைத்து நிற்கும்.

அதாவது இறைவார்த்தை நிச்சயமாக  நிறைவேறும்.


நாம் ஒரு நிமிடம் சிந்திப்போம்.

நாம் இறைவார்த்தையை நம்பி வாழ்கிறோமா?

இந்த உலகை நம்பி வாழ்கிறோமா?

One crucil question:

இந்த நொடியில் இயேசு  நம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.

" கேட்பது உடனே கிடைக்கும்.

உனக்கு உடனடியாக மரணம் வேண்டுமா?

அல்லது நீண்ட ஆயுள் வேண்டுமா?"

உடனே பதில் சொல்வோமா? கொஞ்சம் அவகாசம்(Time) கேட்போமா?

நாம் என்ன பதில் சொல்லுவோம்?



நாம் யாருக்கும்  பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது ,

'நீண்ட நாள் வாழ்க என்றுதான் வாழ்த்துகிறோம்.

'சீக்கிரம் மரித்து நித்திய வாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவதில்லை.


ஒருவர் படித்துக் கொண்டிருக்கிறார்.

அவரை

"படிப்பு முடிந்தவுடன்,

சீக்கிரம் வேலை கிடைக்க வாழ்த்துகிறேன்"

என்று வாழ்த்துகிறோம்.

ஆனால் இன்றுதான் பிறந்த குழந்தையை,

"வாழ்க்கை முடிந்தபின் நல்ல மரணம் அடைந்து மோட்சத்திற்குப் போக வாழ்த்துகிறேன்." 

என்றா வாழ்த்துகிறோம்? 

இப்படி வாழ்த்திவிட்டு அடிபடாமல் திரும்ப முடியாது.


நம் எல்லோருடைய மனதிலும் ஒரு எண்ணம் இருக்கிறது,

'இவ்வுலகில் நீண்டநாள் வாழ்ந்துவிட்டு அப்புறமாக மோட்சத்திற்குப் போகவேண்டும்.'



"உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்."
(அரு.14:3)

"நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."
(மத்.24:44)

"இதோ நான் திருடனைப்போல் வருகின்றேன்.

விழித்திருப்பவன் பேறுபெற்றவன்."
(திருவெளி.16:14, 15)


"திருடன் நள்ளிரவில் வருவதுபோல் ஆண்டவருடைய நாள் வரும்."
(1தெசெலோ.5:2)

இவை எல்லாம் இறைவார்த்தைகள்.

சும்மா பயம் காட்டுவதற்காகச் சொல்லப்பட்டவை அல்ல.

உண்மையிலேயே நாம் எதிர்பாராத தேரத்தில் மரணம் வரும்.

இறை வார்த்தை நிறைவேறியே தீரும்.


ஆகவே, நாம் மரணம் அடைய

 எப்போதும், ஒவ்வொரு நொடியும் தயாராய் இருக்க வேண்டும் 

என்பதற்காகச் சொல்லப்பட்ட இறை வார்த்தைகள்.


மரணம்

கருவில் இருக்கும்போதே வரலாம்.

பிறந்தவுடனே வரலாம்.

இளமையிலும் வரலாம்.

முதுமையிலும் வரலாம்.

விழித்திருக்கும்போதும் வரலாம்.

தூங்கும்போதும் வரலாம்.

இயல்பாகவும் வரலாம்.

விபத்திலும் வரலாம்.

நாம் எதிர்பாராதபோது வரும்.

இறைவார்த்தைகளை நாம் உண்மையிலேயே நம்பினால்

 நாம் எப்போதுமே மரணத்திற்குத் தயாராய் இருப்போம்.

மகிழ்ச்சியாயும் இருப்போம்.



எப்போதுமே மரணத்திற்குத் தயாராய் இருப்பது எப்படி?

1.  எந்தச் சூழ்நிலையிலும் சாவான பாவம் செய்யக்கூடாது.

2. பலகீனம் காரணமாக பாவத்தில் விழ நேர்ந்தால்

 உடனே பாவசங்கீர்த்தனம் செய்து

 ஆன்மாவைத்  தயார் நிலைக்குக் கொண்டுவந்து விட வேண்டும்.

 மரணத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

3.ஒவ்வொரு நாள் படுக்கப் போகும்போதும் ஆன்மப் பரிசோதனை செய்ய வேண்டும்.

சாமியார் பிரசங்கத்தை உற்றுக் கேட்டு விட்டு பூசை முடிந்தவுடன் மறந்து விடுவது போல் 

பைபிள் வசனங்களை வாசித்துவிட்டு, எழுந்தவுடன் மறந்து விடக் கூடாது.

இறைவார்த்தைகள் வெறுமனே வாழ்க்கை வழிகாட்டிகள் மட்டுமல்ல

அவைதான் நம்  வாழ்க்கையே.

நமது வாழ்வும், வழியும், உயிரும் இயேசுவே.

இயேசுவின் வார்த்தை அழியாது.

இயேசு சொன்ன ஒவ்வொரு சொல்லும் நிறைவேறும்.

ஆகவே இயேசுவின் வார்த்தைகளை வாழ்வோம்.

நிலைவாழ்வை அடைவோம்.


லூர்துசெல்வம்.

"இவளோ தன் வறுமையிலும் தன் பிழைப்புக்கானது முழுவதையுமே போட்டுவிட்டாள்" (லூக்.21:4)

"இவளோ தன் வறுமையிலும் தன் பிழைப்புக்கானது முழுவதையுமே போட்டுவிட்டாள்" (லூக்.21:4)
*   *    *   *   *    *   *    *    *   *   

எல்லோரும் காற்றைத்தான் சுவாசிக்கிறோம்.

ஆனால் இடத்திற்கு இடம் சுற்றுப்புறத்தின் தன்மை வித்தியாசமாக இருப்பதால்

 காற்றின் தன்மை மாறுகிறது, சுவாசிப்பதன் தன்மையும் மாறுகிறது, விளைவும் மாறுகிறது.

சுற்றுப்புற சூழ்நிலை அதற்குள் வாழும் மக்களையும் பாதிக்கிறது.

மாசுபட்ட சூழ் நிலையில் வாழ்வோர் அநேக நோய் நொடிகளுக்குப் பலியாகிறார்கள்.

சுத்தமான சூழ்நிலையில் சுகமாக வாழ்கிறார்கள்.

இது உலகியல் வாழ்வில்.

ஆன்மீக வாழ்வில்? 



பங்குக் கோவில். 

பங்கு மக்கள் அனைவரும் ஞாயிறு வழிபாட்டிற்காக அதே கோவிலுக்குதான் போகிறோம்.

அதே பங்குச் சாமியார் வைக்கும் திருப்பலியில்தான் அனைவரும் கலந்து கொள்கிறோம்.

அதே பிரசங்கத்தைத்தான் கேட்கிறொம்.

அதே திருவிருந்தில்தான் அனைவரும் பங்கேற்கிறோம்.

அதே பரிசுத்த ஆவிதான் அனைவரிலும் செயல் புரிகிறார்.

ஆனால் திருப்பலி காண்பதின் விளைவு எல்லோருக்கும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை.

எல்லோரிடத்திலும் மாற்றம் இருக்கும். ஆனால் மாற்றத்தின் தன்மையும் அளவும், ஆளுக்கு ஆள் மாறுபடும்.

பெறும் அருள் வரங்களின் அளவில் மாற்றம் இருப்பது மட்டுமல்ல 

ஆன்மாவின் நிலையிலும் மாற்றம் இருக்கும்.

சிலர் பாவிகளாய் நுழைந்து பரிசுத்தவான்களாய்
 வெளியேறுவவார்கள்.

சிலர் பரிசுத்தவான்களாய் நுழைந்து அதில் கொஞ்சம் இழந்து வெளியேறுவவார்கள்.

 

போனபடியே யாரும் திரும்புவதில்லை.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

அல்லது,

யார் காரணம்?

உலகியல் சூழ்நிலையின் மேல் பழியைப் போடுவதுபோல் 

ஆன்மீகவியலில்  போடமுடியாது.

அவரவர் செயலுக்கு அவரவர்தான் பொறுப்பு.

இறுதி நாளில் கடவுள் கணக்குக் கேட்கும்போது

ஆதாம் ஏவாள் மேலும், ஏவாள் பாம்பின்மேலும் பழியைப் போட்டதுபோல 

நாமும் யார்மேலேயும் பழியைப்போடமுடியாது.

கடவுள் ஒவ்வொரு மனிதனையும் தனித்தன்மையுடன் (Uniqueness) படைத்திருக்கிறார்.

Suppose, நாம் ஆண்டவரிடம் 

"ஆண்டவரே, 

நான் உம் கட்டளைகளின்படி தான் நடக்க ஆசைப் படுகிறேன்,

ஆனால், என்னை சுற்றி வாழ்ந்தோரின் ஆதிக்கத்தினால் என்னால் நான் நினைத்தபடி நடக்க இயலவில்லை. 

முடியாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?" என்று சொன்னால்

 அவர் இப்படிச் சொல்வார்,

"நான் மனுக்குலத்தை மொத்தமாகப் படைக்கவில்லை.

ஒவ்வொருவரையும் தனித்தனியே படைத்தேன்.

ஒவ்வொருவரையும் என் சாயலாகப் படைத்தேன்.

ஒவ்வொருவருக்கும் முழுச் சுதந்திரத்தைக் கொடுத்தேன்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மனசாட்சியைக்
கொடுத்தேன்.

ஒவ்வொருவரும் எனக்குதான் பதில் சொல்ல வேண்டியவர்கள், சூழ் நிலைக்கு அல்ல.

நான் யாரையும் 'எப்படியாவது வாழுங்கள்' என்று படைக்கவில்லை.

'இப்படித்தான் வாழவேண்டும்' என்ற கட்டளையோடுதான் ஒவ்வொருவரையும் படைத்தேன்.

படைத்து தனியே யாரையும் விட்டுவிடவில்லை.

எப்போதும் ஒவ்வொருவருடனும் இருக்கிறேன். 

எதற்காக?  

வேடிக்கை பார்க்கவா?

இல்லை, உதவி செய்வதற்காக.

கட்டளைப்படி வாழக் கஸ்டமாக இருந்தால் என்னிடம் உதவி கேட்கவேண்டியதுதானே!

நான் என் அருள் வரங்களால் ஒவ்வொருவருக்கும் உதவ ஒவ்வொரு வினாடியும்  காத்துக்கொண்டிருக்கிறேன்.

உன் நடத்தைக்கு சூழ்நிலை மேல் பழிபோடுவதை விட்டுவிட்டு  என்னிடம் வந்து உதவி கேள்.

எந்தச் சூழ்நிலையிலும் உன்னைப் பத்திரமாகப் பாதுகாத்து,


எதிர்ப்புகள் மத்தியில் வெற்றி நடை போடவைப்பேன்."

இயேசு காலத்தில் வாழ்ந்த ஒரு 
ஏழைக் கைம்பெண்.

அவள் வாழ்ந்ததும் ஒரு சமூகச் சூழ்நிலையில்தான்.

ஆனாலும், அவள் கோவிலில் காணிக்கை போட்ட விதத்தைப் பார்க்கும்போது 

அவள் வாழ்ந்த சமூகச் சூழ்நிலை அவளை எந்த விதத்திலும் பாதித்திருப்பதாகத் தெரியவில்லை.

பணக்காரர்கள் காணிக்கை போட்டார்ள்.

அவர்கள் எவ்வளவு போட்டார்கள் என்பது பிரச்சனை இல்லை.

அவர்கள் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து

ஒரு பகுதியை எடுத்து

 கடவுளுக்குக் காணிக்கை போட்டனர்.

ஆனால் ஏழைக்கைம்பெண் 
இரண்டு செப்புக்காசுகள் போட்டாலும் 

 வறுமையிலும் தன் பிழைப்புக்கானது முழுவதையுமே போட்டுவிட்டாள்.

 உண்மையில்  அவள் மற்ற எல்லாரையும்விட அதிகம் போட்டாள். 

செல்வந்தர்கள் காணிக்கையாகப் போட்டது அவர்கள் கையிலிருந்த பணம்.

ஆனால் ஏழைக் கைம்பெண் காணிக்கையாகப் போட்டது அவளது வாழ்க்கை.

செல்வந்தர்களைப் பொறுத்த மட்டில் மறுநாள் செலவிற்கான பணம் அவர்கள் கையில் இருந்தது.

ஆனால்  ஏழைக் கைம் பெண்ணைப் பொறுத்த மட்டில் மறுநாள் செலவிற்கான பணம் கடவுளிடம் இருந்தது.

ஏனெனில் கையில் இருந்ததை எல்லாம் கடவுளிடம் ஒப்படைத்து விட்டாள்.

"அன்றன்றுள்ள அப்பம் எங்களுக்கு இன்று தாரும்"

"Give us this day our daily bread." என்று செபிக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம். 

அதன்படி இன்றைய கவலை இன்றைக்கு, நாளைய கவலை நாளைக்கு.

நாளையைப் பற்றி இன்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அன்றன்றையக் கவலையை அன்றன்று கடவுளே தீர்த்து வைப்பார் என்று அசையாத நம்பிக்கை உள்ளவர்கள்தான்

மறுநாளைக்காக சேர்த்து வைக்காமல் அன்றன்று செலவு போக மீதி இருப்பதை முழுவதும் கடவுளிடம் கொடுத்து விடுவார்கள்.

இவர்களுக்கு சூழ்நிலையைப் பற்றிக் கவலை இல்லை.

மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் கவலை இல்லை.

தங்களுக்குத் தேவையானது எல்லாம் கடவுளிடம் இருக்கிறது, 

அன்றன்றைய தேவையை அன்றன்றே கடவுள் நிறைவேற்றுவார் என்பது இத்தகையோரின் அசையா நம்பிக்கை.

நமது உழைப்பும் ஊதியமும்
உழைக்க சக்தியைக் கொடுத்த இறைவனுக்கே சொந்தம்.


'அவருக்காக உழைக்கிறோம்,

 அவருக்காகவே ஊதியம் பெறுகிறோம், 

அவருக்காகவே செலவு செய்கிறோம், 

மீதியை அவரிடமே கொடுத்து விடுகிறோம்.'

என்ற பாடத்தை அந்த ஏழையிடமிருந்து கற்றுக் கொள்கிறோம்.

உண்மையில் கடவுளிடம் விசுவாசம் உள்ள ஏழைகள்தான் மிகப்பெரிய பணக்காரர்கள்.

ஏனெனில், அவர்கள் உலகின் எல்லா செல்வங்களுக்கும் உரிமையாளரான கடவுளின் பிள்ளைகள். 

கிறிஸ்தவ மதிப்பீடுகள் (Christian values) பற்றி நிறைய பேசுகிறோம்.

ஆனால் அவற்றைக் கடைப் பிடிப்போரை பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இயேசு சுட்டிக்காட்டிய ஏழைக் கைம்பெண்ணின் பணம் பற்றிய மதிப்பீடு கிறிஸ்தவ மதிப்பீடு.

"எல்லாப் பணமும் இறைவனுக்கே சொந்தம்."

நம்மில் எத்தனை பேர் அன்றன்றய உழைப்பில் மிஞ்சுவதை 

நாளைக்கென்று சேர்த்து வைக்காமல்

 தேவைப்படுவோரோடு பகிர்ந்து கொள்கிறோம்?

தேவைப்படுவோருக்குக் கொடுப்பதும் இறைவனுக்குக் கொடுக்கும் காணிக்கைதான்.

துன்பங்கள் நமது விண்ணக வங்கியில் ஆன்மீகச் செல்வங்களைச் சேர்க்க உதவும் சிலுவைகள் என்பது கிறிஸ்தவ மதிப்பீடு.

நம்மில் எத்தனை பேர் துன்பங்கள் வரவேண்டும் என்று செபிக்கிறோம்?

இயேசுவே துன்பங்களைத் தேடிதான் உலகிற்கு வந்தார்.

நமக்கு துன்பங்கள் வரும்போது,

"துன்பங்களைத் தேடி உலகிற்கு வந்த இயேசுவே,

 'இதோ என் துன்பங்கள்,

 அவற்றை எல்லாம் நீரே எடுத்துக்கொள்ளும்''

 என்றுதானே செபிக்கிறோம்!!


"இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."
(மத்.10:8)

"பெறுவதில் விட கொடுப்பதில்தான் மகிழ்ச்சி அதிகம்."

நம்மில் எத்தனை பேர் இந்த மகிழ்ச்சியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறோம்? 

ஒருநாள்
திருப்பலியின்போது குருவானவர், "நமது சமாதானத்தை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்வோம்." என்று சொன்னபோது 

 நண்பர் ஒருவர் எதுவும் செய்யாமல் இருந்தார்.

பூசை முடிந்து வெளியே வந்தபின் அவரிடம்,

"ஏன் சார், உங்க சமாதானத்தில எனக்குக் கொஞ்சம் தரக்கூடாதா?" என்றேன்.

"அட போங்க சார், இல்லாததை எப்படித் தரமுடியும்?

வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள்.
பத்தாயிரம் சண்டைகள். சமாதானம் எட்டிக்கூட பார்க்க மறுக்கிறது."

"எல்லோரிடமும் சமாதானம்" என்பது முதன்மையான கிறிஸ்தவ மதிப்பீடு என்று சொல்லலாம்.

இயேசு மனிதன்  ஆனதே நமக்கும் அவருக்கும் இடையில் சமாதானத்தை உண்டாக்கதான்.

சமாதானத்திற்கு அடிப்படை நல்ல மனது.

மற்றவர்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படும் மனதுதான் நல்ல மனது.

"நன்மனதோற்கு சமாதானம்" என்பதுதான் கிறிஸ்மஸ் நற்செய்தி.

இயேசுவின் மனது நல்ல மனது, ஏனெனில் அவர் நமக்கு நல்லது செய்யவே ஆசைப்பட்டார்.

அதற்காகவே வாழ்ந்து, அதற்காகவே உயிர்நீத்தார்.

நாம் அவருக்கு எதிராக ஆயிரம் பாவங்கள் செய்தாலும் அவர் நமக்கு நன்மையையே நினைக்கிறார்.

 நமது அயலான் நமக்கு தீங்கு நினைத்தாலும் 

நாம் அவனை மன்னித்து, நல்லதையே நினைத்தால்

 நம் மனத்தில் சமாதானம் நிலவும்.

நாம் கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் பின்பற்றி வாழ்ந்தால் 

நமது சூழ்நிலை மோசமாக இருந்தாலும் அது நம்மைப் பாதிக்காது.

இயேசு சுட்டிக்காட்டிய ஏழைக் கைம்பெண்ணின் மதிப்பீட்டை பின் பற்றி வாழ்ந்தால்

 நாம் விண்ணகத்தில் மிகப் பெரிய செல்வந்தர்கள்.

லூர்துசெல்வம். 

Wednesday, November 27, 2019

என்றும் நம்மோடு வாழும் இறைவன்.

என்றும் நம்மோடு வாழும் இறைவன்.
*   *    *   *   *    *   *    *    *   *    

இறைவன் நித்திய காலமும் நம்மோடுதான் வாழ்கிறார்.

நித்திய காலம் என்றால் துவக்கமும் முடிவும் இல்லாத காலம்.

இறைவனுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை. சரி.

நமக்குதான் துவக்கம் உண்டே, துவக்கம் உள்ள நாம் எப்படித் துவக்கம் இல்லாத காலத்திலிருந்து வாழ்ந்திருக்க முடியும்?

நமக்கு துவக்கம் உண்டு, ஆனால் நம்மைப் படைத்த இறைவனுக்குத் துவக்கம் இல்லை.

அவருடைய மனதுக்கும் துவக்கம் இல்லை.

துவக்கமும் முடிவும் இல்லாத இறைமனதில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதைப் புரிந்துகொள்ள இதற்கான அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டு நிலைகள் உண்டு.

எண்ண நிலை. (Idea)

உண்மை நிலை.(Reality)

கடவுளுக்குத் துவக்கமும் முடிவும் இல்லாதது போலவே

 அவரது திட்டங்களுக்கும் துவக்கமும் முடிவும் இல்லை.

நாம் ஒவ்வொருவரும் அவரது நித்திய திட்டத்திற்கு உட்பட்டவர்கள்தான்.

அதாவது நம் ஒவ்வொருவரைப் பற்றியும் கடவுள் நித்திய காலமாக திட்டமிட்டு,

திட்டத்தைச் செயல்படுத்துகிறார்.

திட்டமிடும்போது அவரது உள்ளத்தில் நாம் எண்ண நிலையில் , Idea, இருக்கிறோம். 

திட்டத்தைச் செயல் படுத்தும்போது நாம் உண்மை நிலையில், Reality, இருக்கிறோம்.

வேறு வார்த்தைகளில்,

நாம் நம் அன்னையில் வயிற்றில் உண்மையாக கருத்தரிக்குமுன்

இறைவனின்  உள்ளத்தில் எண்ணமாக இருந்தோம்.

நாம் பிறந்தபின்தான் நம்மை நமக்குத் தெரியும்.

கடவுளுக்கு நாம் பிறக்கு முன்பே நம்மைத் தெரியும்.

ஆகவேதான் சொன்னேன்,

"இறைவன் நித்திய காலமும் நம்மோடுதான் வாழ்கிறார்.''

பாவத்தோடு பிறந்த நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக
இறைவன் மனுவுரு எடுத்தார்.

அவர் நம்மைப்போல் மனிதனாக இவ்வுலகில் வாழ்ந்த காலம் 33 ஆண்டுகள்.

இக்காலக்கட்டத்தில் மனிதனோடு மனிதனாக வாழ்ந்தார்.

நற்செய்தியை அறிவித்து,

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு,

சிலுவையில் தன்னையே பலியாக்கி மரித்து,

உயிர்த்து விண்ணகம் செல்ல வேண்டு மென்பது அவர் திட்டம்.

நித்திய காலமும் நம்மோடு வாழவேண்டும் என்று ஆசித்து வாழும் இறைவன்,

தான் இறந்த பின்னும் நம்மோடு உயிருள்ள மனிதனாக வாழ ஆசைப்பட்டார்.

வாழ மட்டுமல்ல தன்னையே நமது ஆன்மீக உணவாகத் தரவும் ஆசைப்பட்டார்.

ஆசைப்பட்டபடி நம்மோடு உயிருள்ள மனிதனாக வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்.

தன்னையே நமக்கு உணவாகத் தந்து கொண்டும் இருக்கிறார்.

உலகில் வாழ்ந்து, இறந்து விண்ணகம் சென்றபின்னும் 

எப்படி அதே உலகில் உயிருள்ள மனிதனாக மனிதரோடு வாழ முடியும்?

எப்படித் தன்னையே உணவாகத் தரமுடியும்?

நம்மால் முடியாது, ஆனால் இறைவனால் முடியும். 

ஏனெனில் எல்லாம் வல்லபர்.

அவரால் முடியாதது எதுவும் இல்லை.

இதற்காகத்தான் இயேசு மரிக்குமுன்பே

பெரிய வியாழக்கிழமையன்று

 திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

தனது சர்வ வல்லமையால் அப்பத்தையும், ரசத்தையும் தனது உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி 

அதைத் தன் சீடர்களுக்கு ஆன்மீக உணவாகக் கொடுத்தார்.

அவர்களும் இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் உணவாக உண்டார்கள்.

அன்றே சீடர்களுக்குக் குருப்பட்டமும் கொடுத்தார்.

திருப்பலி நிறைவேற்றவும்,

 திருப்பலியின்போது அப்பத்தையும், ரசத்தையும் தனது உடலாகவும், ரத்தமாகவும் மாற்றவும்

 வல்லமையைக் கொடுத்தார்.

அன்று முதல் இன்று வரை இயேசு   தன் தாயின் உதரத்தில் எடுத்த அதே உடலோடும், இரத்தத்தோடும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

 திருவிருந்தின்போது உண்மையாகவே நமது ஆன்மீக உணவாகத் தம்மையே நமக்குத் தருகிறார்.

நித்திய காலமாக நம்மை தன் உள்ளத்தில் சுமக்கும் இறைவன் 

மனிதனாக நம்மோடு  வாழ்வதற்கே திவ்யநற்ருணையை நிருவினார்.

திவ்ய நற்கருணைப் பேழையில் நமக்காக இரவும்பகலும் காத்துக்கொண்டிருக்கிறார்.

திவ்நற்கருணையை நினைக்கும்போது 

இறைவன் நம்மீது கொண்டுள்ள அளவில்லா அன்பும், 

சாதாரணமான நம்மோடு தங்கி உறவாடுவதற்கு சர்வவல்லபருக்கு இருக்கும் ஆவலும்,

அந்த ஆவலை நிறைவேற்றுவதற்காக 

நமக்கு உணவாகப் பயன்படக்கூடிய அப்பத்தையும் ரசத்தையும் தனது உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி,

நமது ஆன்மீக உணவாக, நமது உடலாலேயே உண்ணப்பட்டு 

நமது  இரத்த நாளங்களால் நமது உடல் முழுவதும் பரவி

நமது ஆன்மாவோடும், ஆன்மாவோடும் இணைந்து வாழும் பாங்கையும் நினைக்கும்போது

நம்மால் ஆச்சரியப் படாமல் இருக்க முடியவில்லை!

சர்வ வல்லவருக்கு அற்பப் பதராகிய நம்மீது எவ்வளவு ஆசை! 

இதற்காகத்தானே நித்திய காலமாக நம்மையே நினைத்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்!  

நற்கருணைநாதர் நம்மோடு இணைவது 

விண்ணரசில் முடிவில்லா காலம் நம்மோடு இணைந்து

 பேரின்பக் கடலில் நம்மை நீந்த வைப்பதற்கான ஒத்திகை! (Rehearsal!)

நித்திய பேரின்பத்திற்கான முன்சுவை!  (Pretaste!)

ஆனால் எனக்கொரு சங்கடம்.

கணவனும் மனைவியும் சந்திக்கும்போதும், கட்டித்தழுவி முத்தமாரி பொழியும்போதும்

இருவர் உள்ளங்களிலும் அன்புத் தீ பற்றி எரியும்!

அந்தத் தீயில் இருவரும் பற்றி எரிவார்கள்.

ஆசைக் கடல் சுனாமியாக மாறி இருவரையுமே சேர்த்து இழுத்துக் கொண்டு போகும்!

இருவருமே பரபரப்பான உள்ளக் கிளர்ச்சியில்  (Thrilling feeling) திக்குமுக்காடிக் கொண்டிருப்பார்கள்!

அணுகுண்டால்கூட அவர்களைப் பிரிக்க முடியாது!

அழிந்தாலும் சேர்ந்தே அழிவார்களே தவிர

பிரியமாட்டார்கள்.

இறைவன் இயேசு நம்மோடு நம்மாக நற்கருணை மூலம் இணையும்போது

 நாம் இத்தகைய உணர்வை அனுபவிக்கிறோமா? 

இயேசுவுக்கு உள்ள ஆர்வமும், துடிப்பும் நமக்குள்ளுமே இருக்கிறதா?

இயேசு சாதாரணமான நம்மைத் தன் நண்பர்களாக மாற்றி 

உண்மையான நண்பராக

 நம்மோடு நட்பில் ஒன்றிக்கிறாரே,

 அதற்கு ஈடான நட்பு உணர்வு நம்மிடம் இருக்கிறதா?

சந்தேகம்தான்.

சர்வ வல்லவருக்கு சாதாரணர்களாகிய நம்மால் ஈடு கொடுக்க முடியாதுதான்.

ஆனால் அதற்கான உணர்வும், முயற்சியும் நம்மிடம் இருக்கிறதா?

சற்றே கற்பனை செய்து பாருங்கள். 

நாம் நெடுநாள் பார்க்காத நண்பரைக் காண அளவில்லா ஆவலோடும், ஆர்வத்தோடும் அவர் இல்லத்திற்குச் செல்லுகிறோம்.

நாம் வீட்டிற்குள் போனபின்னும் அவர் நம்மைக் கண்டும் காணாதது போலிருந்தால் நமக்கு எப்படி இருக்கும்?

நாமும் அநேக சமயங்களில்

 பார்த்தும் பாராதது மாதிரி நம்மிடம் நடந்து கொண்ட நண்பரை மாதிரிதானே

நம் ஆண்டவரிடம் நடந்து கொள்கிறோம்.

நற்கருணை வாங்கப் போகும்போது நம்மைப் படைத்த எல்லாம் வல்ல தேவனை வாங்கப் போகிறோம்.

நமக்காகச் சிலுவையில் உயிர்விட்ட நம் இரட்சகரை வாங்கப் போகிறோம்.

தன் தந்தையை நமக்குத் தந்தையாகத் தந்து நம்மை அவரது சுவீகாரப் பிள்ளைகளாக மாற்றிய அன்புச் சகோதரரை வாங்கப் போகிறோம்.

ஆனால் நாம் இந்த உணர்வுடனா அவரை வாங்கப் போகிறோம்?

அதுமட்டுமல்ல. நமது இதய வீடாவது பரிசுத்தரை வரவேற்கும்  நிலையில் இருக்கிறதா?

இதயம் பாவ அழுக்கால் நிறைந்திருந்தால்

 பாவசங்கீர்த்தனம் மூலம் அதைச் சுத்தப்படுத்த வேண்டும் 
என்ற அக்கரை அநேகருக்கு இருக்காது.


முன்பெல்லாம் இயேசுவைத் தொடுவதற்கென்றே அர்ச்சிக்கப்பட்ட கரங்களிலிருந்துதான்

 இயேசுவை நாவில் வாங்குவோம்.

முன்பெல்லாம் கடவுள் முன் முழந்தாள் படியிட்டு பயபக்தியுடன் இயேசுவை நாவில் வாங்குவோம்.

ஆனால் இப்போது

அர்ச்சிக்கப்படாத கரங்களும் (காலத்தின் கோலம்) இயேசுவை எடுத்துத் தருகிறார்கள்.

நாமும் கூட்டத்தோடு கூட்டமாய் நடந்து சென்று,

தின்பதற்கு தின் பண்டம் வாங்குவதைப் போல கையில் வாங்கி,

 வாயில் போட்டுவிட்டு

 இடத்தில் போய் அமர்ந்து,

 நமக்குள் நம்மோடு உரையாடக் காத்துக் கொண்டிருக்கும் ஆண்டவரை மறந்துவிட்டு 

கற்பனைக் குதிரை ஏறி, கண்ட இடமெல்லாம் சுற்றிக் கொண்டிருப்போம்.

அப்படியே இயேசுவிடம் பேசினாலும்,

"அதைத் தாரும், இதைத் தாரும்" என்று  விண்ணப்பங்களை அவர் முன் அடுக்கிக் கொண்டிருப்போம்.

அவரைப் பேச விட மாட்டோம்.

இயேசுவுக்கு நம்மேல் உள்ள ஆர்வமும் அக்கரையும் அவர்மேல் நமக்கு இல்லை.

இது மிகப் பரிதாபகரமான நிலை.

இயேசு கடவுள் என்று நமக்குத் தெரியும்.

நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாகப் பிறந்தார் என்ற விபரமும் நமக்குத் தெரியும்.

கடவுளிடம் எந்த அளவுக்குப் பயபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற விபரமும் நமக்குத் தெரியும்.

பயபக்தி என்றால் பயம் (Fear) கலந்த பக்தி (Love).

நாம் பக்தி, அதாவது அன்பு , பற்றி அதிகம் பேசுவதால் அநேகருக்கு பயத்தைப் பற்றிய எண்ணமே வரவில்லை.

தெய்வ பயமே ஞானத்தின் ஆரம்பம்.

Fear of God is the beginning of wisdom.

'பயம்' முதலாளியைப் பார்த்து வேலைக்காரன் பார்த்துப் படும் பயத்தைக் குறிக்காது.

It is not servile fear. 

'தந்தையின் மனதை எந்த வகையிலும் புண்படுத்திவிடக்கூடாதே'

என்று பயத்துடன் மகன் செயல்படுகிறானே அந்த பயம்.
(Filial fear)

இந்த பயம் அன்போடு இணைந்து செல்லும்.




ஒரு பையனுக்கு அப்பா மேல்.  அன்பு இருக்கிறது,  

அப்பா சொல்லுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அப்பாவின் மனம் புண்படும்.

அப்பாவின் மனம் புண்படாமல் வாழ்வதே அன்புள்ள பிள்ளைக்கு அடையாளம்.

இயேசுவின்பால் உண்மை யான அன்பு உள்ளவன்

 அவருக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகப் 

பாவமே செய்யமாட்டான்.

 தப்பித் தவறிப் பாவம்  செய்துவிட்டால்


 பாவசங்கீர்த்தனம் மூலம் 

தன் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி விட்டுதான்

  நற்கருணை மூலம் அவரைத் தன்னுள் வரவேற்பான்.

இயேசுவுக்குக் கடவுளுக்குரிய மரியாதை கொடுக்க வேண்டும்.

மரியாதை என்பது சாதாரண வார்த்தை, இறைவனுக்காக பயன்படுத்த இதை விட உயர்ந்த வார்த்தை நம்மிடம் இல்லை. 

அதனால்தான் இந்த வார்த்தையைப் பயன்டுத்தி யிருக்கிறேன்.

 மரியாதை முதலில் மனதில் இருக்க வேண்டும்.

மனதில் உள்ள மரியாதையைக் காட்ட அதன் அளவிற்கு ஏற்றபடி சில வெளி அடையாளங்கள் உள்ளன.

அடையாளங்கள் மாறும்போது மரியாதையின் அளவும் மாறும்.

சில அடையாளங்கள் மனிதருக்குப் பொதுவானவை.

பெரியவர்கள் வந்தவுடன் எழுவது, கை கூப்புவது போன்றவை.

நம் ஆலயங்களில் 

திவ்ய நற்கருணைக்கு முன்னால் முழங்கால் படியிடுவது (Genuflection)

 இறைவனுக்குச் செய்யும் மரியாதையாக 

தொன்று தொட்டு பழக்கத்தில் இருந்தது.

திவ்ய நற்கருணை இல்லாத ஆலயகளில் பாடுபட்ட சுரூபத்துக்கு தலை வணங்குவது பழக்கத்தில் இருந்தது.  

ஆனால் சமீப காலத்திலிருந்து 

திவ்ய நற்கருணைக்கு
முன்னும் தலை வணங்கும் பழக்கத்தை நம்மை ஆளும் திருச்சபை அதிகாரிகள் புகுத்தி உள்ளனர்.

ஏன் தலை வணங்கும் பழக்கம் புகுத்ப்பட்டது?

திவ்ய நற்கருணையில் இயேசுவின் உண்மைப் பிரசன்னத்தை (Real presence) மறந்து விட்டனரா

 அல்லது.....கேட்கவே பயமாக இருக்கிறது.

பாடுபட்ட சுரூபத்தில் இயேசுவின் உண்மைப் பிரசன்னம் இல்லை.

ஆகவே தலை வணங்குகிறோம்.

திவ்ய நற்கருணையை பாடுபட்ட சுரூபத்தின் நிலைக்கு தாழ்த்தியது ஏன்?

என்ன செய்தாலும் ஆண்டவர் அமைதியாய் இருப்பதுதான் காரணமா?

வசீகரிக்கப்பட்ட அப்பத்தை எத்தனை துண்டுகளாக பிரித்தாலும்

 ஒவ்வொரு துண்டிலும் ஆண்டவர் முழுமையாக இருக்கிறார்.


குருவானவர் நற்கருணையைக் கொடுக்க ஓஸ்தியைக் கையில் எடுக்கும்போது 

அதிலிருந்து துகள்கள் விழ வாய்ப்பு இருக்கிறது.

 ஒவ்வொரு துகளிலும் ஆண்டவர் முழுமையாக இருக்கிறார்.

 ஆகவே துகள்கள் கீழே விழாதிருக்கும்படி 

பீடச்சிறுவன் நற்கருணை  வாங்கும் நமது வாய்க்குக் கீழே

 ஒரு தட்டைப் பிடிக்கிறான்.


இப்போது விருப்பப்பட்டவருக்கு நற்கருணையைக் கையில் கொடுக்கும் பழக்கம் புகுத்தப்பட்டுள்ளது.

நமது கலாச்சாரத்திற்கே எதிராக  நற்கருணையை இடது கையால் வாங்குகின்றனர்.

பிறகு வலது கையால் எடுத்து உண்கின்றனர்.

நற்கருணையைக் கையில் வைக்கும்போது துகள்கள் கையில் விழும்.

வாங்குபவர்கள் அதைப் 
பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். 

போகிறபோக்கில் கையை உதறிவிட்டுப் போவார்கள்.

துகள்கள் தரையில் விழும். 

வருவோர் போவாரால் மிதிபடும்.

ஒவ்வொரு துகளிலும் ஆண்டவர் முழுமையாக இருக்கிறார்.

ஆண்டவர் சிலுவைப் பாதையில் ரோமை படை வீரரால்  பட்ட மிதிகளை எல்லாம் 

திரும்பவும் படுவார் நம் கால்களாலேயே!

ஆண்டவருக்கு எவ்வளவு அவசங்கை!

எவ்வளவு அவமரியாதை!

இதற்கெல்லாம் காரணர் யார்?

நற்கருணையை கையில் வழங்குபவர்களும், அதற்கு அனுமதி கொடுத்தவர்களும்தான்!

ஆண்டவரை அவமதிக்கவா பட்டம் பெற்றார்கள்! 

நாம் தேவசாஸ்திரம் படிக்காதவர்கள், பக்தியோடு பயமும் உள்ளவர்கள்  

ஒன்றை மட்டும் புரிந்து கொள்வோம்,

உலகம் முடியும் வரை
நம்மோடு மனித உருவிலும் வாழ்வற்காகத்தான் இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார். 

நித்திய காலமும் இறைவன் நம்மோடு வாழ்கிறார்.

நாம் அவரோடு வாழ்கிறோமா?


லூர்துசெல்வம்.

Friday, November 22, 2019

அருள் நிறைந்த மரியே, எங்களைக் குழப்புபவர்களுக்காக அதிகமாக வேண்டிக்கொள்ளுங்கள்!




அருள் நிறைந்த மரியே, எங்களைக் குழப்புபவர்களுக்காக அதிகமாக வேண்டிக்கொள்ளுங்கள்!

*   *    *   *   *    *   *    *    *   *   *


நேற்று, YouTube. Video வில ஒரு பிரிவினை சபை


( எந்தப் பிரிவினை என்று தெரியவில்லை. இருப்பது ஒன்றா?  இரண்டா?)


Pastor ஒருவர் பேசுவதைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது.


அவர் அன்னை மரியாளைப் பற்றிப் பேசிய வார்த்தைகள்  என்னை மிகவும் புண்படுத்திவிட்டடன.


அவர்களுக்குத் தாய் தேவை இல்லாமல் இருக்கலாம்.


நமக்கு அப்படி அல்ல. தாய் இல்லாமல் நாம் இல்லை.


நமக்கு இரட்சகரைப் பெற்றுத் தந்தவள் அவள்.


நமது இரட்சகர் நமக்குத் தந்த தாயும் அவள்தான்


அவளைப் பற்றிக் குறைவாகப் பேசுவதைக்  கேட்க முடியவில்லை.


அவர் சொன்னார்,


"இயேசு மரியாளின் வயிற்றில் பிறந்திருக்லாம்.


ஆனால் அதற்காக அவளை மாசு மருவற்றவள் என்று கூற முடியாது.


ஆதாம் செய்த பாவத்திற்காக நாம் எல்லோருமே, மரியாள் உட்பட, சென்மப் பாவத்தோடு பிறந்தோம்.


மரியாள் சென்மப் பாவம் இல்லாமல் உற்பவித்தாள் என்பதற்கு பைபிளில் எந்த ஆதாரமும் கிடையாது."


இதை அவர் சொன்னபோது எனக்குக் கோபம்கோபமாய் வந்தது,


அந்த பாஸ்டர் மீது அல்ல, பாவம், அவர் என்ன செய்வார்,

அவர் பிரிந்து சென்றவர், அப்படித்தானே பேசுவார்.


எனக்கு கோபம் வந்தது நம்ம ஆட்கள் மீது.


ஆதார வசனங்களை அழித்தவர்கள் நம்ம ஆட்கள்தானே!


அதிலும் பெரிய பெரிய படிப்பெல்லாம்  படித்த ஆட்கள்!


மாதாவின் மைந்தனின் திருச்சபையின்  மக்கள்,


வெளிநாடெல்லாம் போய்


பெரிய பெரிய படிப்பெல்லாம்  படித்து விட்டு,


மாதாவின் அமல உற்பவத்தைப் பற்றிய ஆதாரங்களை அழித்த ஆட்களை நினைத்தால் சந்தோசமா வரும்?


நான் சேசுசபையினர் நடத்தும் உயர் நிலைப் பள்ளியில்தான் (St. Mary's,  Madurai) ஞான உபதேசம் படித்தேன்.


மாதாவின் அமல உற்பவத்திற்கு ஆதாரமாக அன்றைய சேசுசபைக் குருக்கள் எங்களுக்குக் காட்டிய பைபிள் ஆதாரங்கள்:


1.அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் பாம்பைப் பார்த்து,


"உனக்கும் பெண்ணுக்கும்,


உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே


பகையை உண்டாக்குவோம்: 


அவள் உன் தலையை நசுக்குவாள்:


நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்"


என்றார்.(ஆதி.3:15)


நமது முதல் பெற்றோரை ஏமாற்றிப் பாவத்தில் விழத்தாட்டிய சாத்தானுக்கு ஆண்டவர் இட்ட சாபம்:


1. உனக்கும் பெண்ணுக்கும்,

பகையை உண்டாக்குவோம்:


2. உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே 

பகையை உண்டாக்குவோம்:


முதல் பகை


சாத்தானுக்கும் மரியாளுக்கும்.


"அவள் உன் தலையை நசுக்குவாள்."


சாத்தானின் தலையை மாதா

நசுக்குவாள்,


ஆகவே சாத்தானால் மரியாளை பாவத்தில் விழத்தாட்ட முடியாது.


பாவத்தால் அவளை நெருங்க முடியாது.


 தாய் வயிற்றில் உற்பவிக்கும்போதே அவள் பரிசுத்தமாய் இருப்பாள்.


சென்மப் பாவம் அவளைத் தொடாது.


"நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்"


சாத்தான் மாதாவை பாவத்தில் விழத்தாட்ட முயலுவான். 


ஆனால் முடியாது.


இது கடவுள் மாதாவுக்குக் கொடுத்த வரம்.


ஆகவே மாதா உற்பவிக்கும்போதும்,


வாழ்நாள் முழுவதும் 


பாவ மாசு மரு இன்றி பரிசுத்தமாய் இருந்தாள்.


அடுத்த பகை


பாவத்துக்கும்  இயேசுவுக்கும் உள்ள பகையை நாம் விளக்க வேண்டியதில்லை. இயேசு பாவத்தை வென்றார் என்பதை யாரும் மறுக்வில்லை.



2.அவள் தாவீது குலத்தவராகிய சூசை என்பருக்கு மண ஒப்பந்தமானவள். அவள் பெயர் மரியாள்.


28 தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்.(லூக்.1:27, 28)


முதல் ஆதாரத்துக்கு வலுவூட்டும் வகையில் இரண்டாவது ஆதாரம் அமைந்துள்ளது.


கபிரியேல் தூதர் மரியாளை வாழ்த்தும்போது,


"அருள் நிறைந்தவளே"  என்று அழைக்கிறார்.


ஒரு பாத்திரம் ஒரு பொருளால் நிறைந்திருக்கிறது என்றால் அந்தப் பாத்திரத்தில் அந்தப்பொருள் தவிர வேறு எதுவும் இருக்க இயலாது.


மரியாள் அருள் நிறைந்தவள்.


அவளிடம் அருளுக்கு எதிரான பாவத்தின் நிழல் கூட இருக்கமுடியாது.


அருள் நிறைந்தவள் = பாவ மாசு மரு அற்றவள்.


இந்த இரண்டு ஆதாரங்களே


மாதா எப்போதும்  மாசு மரு அற்றவள்


என்று நிரூபிக்க போதும்.


ஆனால் இந்த இரண்டு ஆதாரங்களும்,


பிரிவினை சபையினரை உடன் வைத்துக் கொண்டு செய்யப்பட்ட நமது  புதிய  பொது மொழிபெயர்ப்பில் அழிக்கப்பட்டிருக்கின்றன.


பிரிவினை சபையினருக்கு மாதா பக்தி கிடையாது.


அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகத்தான் நம்ம ஆட்கள் பார்த்த வேலையோ இது என்று சந்தேகமாய் இருக்கிறது.


சரி எப்படி அழிச்சிருக்காங்கன்னு பார்ப்போம்.


புதிய மொழிபெயர்ப்பு


பழைய ஏற்பாடு :


உனக்கும் பெண்ணுக்கும்,


உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.


அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்.


நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.






அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்.


'அவள் வித்து' இயேசு.


புதிய பெயர்ப்புப்படி


மரியாள் சாத்தானின் தலையை  நசுக்கவில்லை!


அதுட்டுமல்ல,


நீ அதன் குதிங்காலைக் "காயப்படுத்துவாய்”


பழைய ஏற்பாட்டு ஆதாரம் Out!


புதிய ஏற்பாடு 


28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி,


"அருள்'மிகப்' பெற்றவரே வாழ்க! 


ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.


லூக்கா நற்செய்தி 1:28


'நிறைந்த' போய், 'மிக' வந்திருக்கிறது.


ஒரு பாத்திரத்தில் ஒரு பொருள் மிகுதியாக இருந்தால்,


மீதியுள்ள கொஞ்ச இடத்தில் வேறு பொருள் இருக்கலாம்.


அதாவது, மாதாவிடம்


.999999999999999 அருள் இரருந்தால்கூட

.000000000000001 அற்ப மாசு இருக்கலாம்.


'நிறைந்த போய் 'மிக' வந்ததால் ஏற்பட்ட விளைவு இது!


புதிய ஏற்பாட்டு ஆதாரமும் Out!




பிரிவினை சபையினருக்கு நம்மவர்,


சாதாரண நம்மவர்அல்ல,

மிகப்படித்த நம்மவர்,


புதிய மொழிபெயர்ப்பைச் செய்த நம்மவர்,


எப்படி உதவியிருக்கிறார்கள்

பார்த்தீர்களா!


மாதா மேல இவர்களுக்கு அப்படி என்ன கோபம்?


பழைய மொழிபெயர்ப்பு தவறு என்றால், புதிய மொழி பெயர்ப்பு சரி என்பதற்கு என்ன ஆதாரம்?


அருள் நிறைந்த மரியே எங்கள் எல்லோருக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்.


எங்களைக் குழப்புபவர்களுக்காக அதிகமாக வேண்டிக்கொள்ளுங்கள்.


லூர்துசெல்வம்

"என் வீடு செபவீடாகும்"(லூக்.19:46)

"என் வீடு செபவீடாகும்"
(லூக்.19:46)
*   *    *   *   *    *   *    *    *   *   *

ஒருநாள் இயேசு கோவிலுக்கு வந்தபோது அங்கே வியாபாரிகள்  தங்கள்  விற்பனைத் தொழிலை நடத்திக்கொண்டிருந்தனர்.

கோவில் இறைவனை ஆராதிப்பதற்காகக் கட்டப்பட்ட இடம், வியாபாரத்திற்கான இடமல்ல.

ஆகவே இயேசு 

 அங்கே விற்பவர்களைத் துரத்தத் தொடங்கினார்,

அவர்களை நோக்கி, ""என் வீடு செபவீடாகும்" என்று எழுதியிருக்கிறது. 

நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.


"உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம்.

நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல,

நீங்கள் விலைகொடுத்து வாங்கப்பெற்றீர்கள். 

ஆகவே, உங்கள் உடலில் கடவுளை மகிமைப் படுத்துங்கள்."

இவை புனித சின்னப்பரின் வார்த்தைகள்.

இறைவனால் தனக்காகப் படைக்கப்பட்ட நம்மை

 சாத்தான் பாவத்தின் மூலம் அபகரித்துக் கொண்டு போய் விட்டான்.

இறைமகன்  இயேசு  தனது  விலைமதிப்பில்லாத இரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்டிருக்கிறார். 

இப்போது நாம் இயேசுவுக்குச் சொந்தம்.

இயேசுவுக்கு மட்டும்தான் சொந்தம்.

நம்மில் வாழ்வதற்காக தன் இரத்தத்தை விலையாகக் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

வாங்கியது மட்டுமல்ல, நம்மில்  வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

நாம் இயேசு வாழும் ஆலயம்.

நாம் ஒரு செப வீடு.

நாம்  எப்போதும் செபிக்க வேண்டிய இடம்   'நாம்.'

'செபிக்க வேண்டிய இடம்     நாம்'  என்றால்,கோவில்?

பொது வழிபாட்டிற்காக பொதுவான ஆலயத்துக்கு  செல்லுகிறோம்.

பொது ஆலயத்துக்குச் செல்லும்போதும் நாம் இயேசு  வாழும் ஆலயமாகத்தான் செல்லுகிறோம்.

ஆலயத்திற்குள் ஆலயம்.

ஆலயமாகிய நம்மை முழுமையான வழிபாட்டு இடமாக மாற்றி,

அதாவது, 

வழிபாட்டிற்கு  எதிரான, இடைஞ்சலான அத்தனையையும்  வெளியேற்றிவிட்டு,

அதை இயேசுவுக்குப் பிடித்தமான ஆலயமாக மாற்றி

 அங்கே  வீற்றிருக்கும் இயேசுவை ஆராதிக்க வேண்டும். 

அப்புறம்   திவ்யநற்கருணைப்  பேழையை ஏறிட்டுப்பார்த்தால்

 நம்முள் இருக்கும் அதே  இயெசுதான் அங்கும் இருப்பார்.

இப்போது நாமாகிய ஆலயம்

பொது ஆலயத்தோடு ஒன்றித்திருக்கும். 

இரண்டிலும் இருப்பது அதே இயேசுவே.

 நமது உள்ளத்துக்கும்,  திவ்யநற்கருணைப்  பேழைக்கும் இடை யில்

 இடைஞ்சல்  எதுவும் இருக்காது. 

இடையூரின்றி ஆண்டவரோடு இணைந்து செபிக்கலாம்.

கோவிலில் இருந்து செபித்தாலும்,

வெளியே இருந்து செபித்தாலும்

நாம் செப வீடுதான்.



எதிர் எதிரான இரண்டு  ஆட்கள் ஒரே இடத்தில் இருந்தால்  அங்கே சமாதானம் இருக்காது.

நமக்குள்ளும் இயேசுவுக்குப் பிடித்த உணர்வும்( அன்பும்)

பிடிக்காத உணர்வும் (வெறுப்பும்) இருந்தால் நமக்குள் எப்படி சமாதானம். இருக்கும்? 

நமது இருதயம் பாவமோ பாவநாட்டமோ இன்றி சுத்தமாக இருக்க வேண்டும்.

இயேசுவுக்குப் பிடித்தமான புண்ணியங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்க வேண்டும்.

அன்பு,

தாழ்ச்சி,

 இரக்கம், 

விவேகம்,

பொறுமை,

மட்டசனம்,  

 கற்பு

ஆகியவை இயேசுவுக்குப் பிடித்தமான புண்ணியங்கள்.

பாவமின்றி, பரிசுத்தமான,

புண்ணியங்களால் அலங்கரிக்கப்பட்ட நமது இருதயமான செபக்கூடத்தில்

 நாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் 

இயேசுவோடு செபத்தில் இணைந்திருக்க வேண்டும்.

இருதயத்தைச் சுத்தமாக வைத்திருப்பது சரி.

புண்ணியங்களால் அலங்கரிப்பதும் சரி.

அதெப்படி 24 மணி நேரமும் செபத்தில் இணைய முடியும்?

செபம் என்றால் என்ன என்று தெரியாதவர்கட்கே இந்த சந்தேகம் வரும்.

அநேகர் வார்த்தைகளைப் பயன்படுத்தி வாயினால் சொல்லப்படுவது மட்டுமே செபம் என்று எண்ணுகிறார்கள்.

அதுவும் செபம்தான்,

ஆனால், வாயோடு உள்ளமும் இணைந்திருந்தால்   மட்டுமே.

மனதை எங்கோ அலைய விட்டுவிட்டு வாயிலிருந்து வார்த்தைகளை உதிர்ப்பது செபம் அல்ல.

உண்மையில் இருதயங்கள், 

 நமது இருதயமும், இறைவனின் இருதயமும்

 இணைவதுதான் செபம்.

நாம் இறைவனோடு ஒன்றித்து வாழ்வது வாழ்க்கை என்னும் செபம்.

இறைவனோடு ஒன்றித்து என்றால்,

இறைப் பிரசன்னத்தில்,

இறைவனுக்காக

வாழ்வது.

ஒரு இரண்டு வயதுக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு 

அம்மா வெளியூருக்குச் சென்றுவிட்டால் 

அது அம்மாவைத் தேடி அழும்.

ஆனால் அம்மா வீட்டில் இருக்கும்போது 

குழந்தை அடுத்த அறையிலோ,

வீட்டிற்கு வெளியே கூட

 அம்மாவைப் பார்க்காமலே விளையாடும். 

ஏனைனில் அம்மா வீட்டில்தான் இருக்கிறாள் என்று அதற்குத் தெரியும். 

சில குழந்தைகள் அப்பப்போ வந்து அம்மாவை எட்டிப் பார்த்துவிட்டுப் போய் விளையாடும். 

குழந்தை அம்மாவின் பிரசன்னத்தில்,

அதாவது,

அம்மா அருகில் இருக்கிறாள் என்ற உணர்வோடு விளையாடும்.


நாமும் இறைவன் நம்மோடு இருக்கிறார் 

என்ற உணர்வோடு வாழ்வதுதான் 

இறைப் பிரசன்னத்தில் வாழ்வது.

அடுத்து நாம் இறைவனுக்காக வாழ வேண்டும்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவனுக்காக செய்ய வேண்டும்.

நாம் எழுவது, 
காலைக் கடன்களைச் செய்வது,
உண்பது,
உடுப்பது, 
வேலைக்குப் போவது' விளையாடுவது,
ஓய்வு எடுப்பது ,
இரவில் தூங்குவது 

போன்ற எல்லா செயல்களையும் இறைவனுக்காகச் செய்தால்

 அவை செபமாக மாறிவிடுகின்றன.

நமது இறுதி நேரத்தில் நமது மரணத்தை கடவுளுக்கு ஒப்புக் கொடுத்துவிடால்

மரணமும் செபமாக மாறிவிடுகிறது.

இதே போன்று நமது வாழ்நாள் முழுவதும் இறைவனது சன்னதியில், இறைவனுக்காக வாழ்வதே

வாழ்நாள் முழுவதும் செபிப்பது.

ஆக 'நாம்' ஆகிய செபக்கூடத்தில் எப்போதும்  செபம் நடந்து கொண்டே இருக்கும்.

  பாவங்களாகிய வியாபாரிகள் உள்ளே நுழைய முடியாது.

நாம் செபித்துக் கொண்டே வாழ்ந்து,

செபித்துக் கொண்டே மரித்து,

செபித்துக் கொண்டே விண்ணுலகில் நுழைந்து

செபித்துக் கொண்டே நித்திய வாழ்வு வாழ்வோம்.

லூர்துசெல்வம். 

Thursday, November 21, 2019

"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" (மத்.12:50)

"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்"(மத்.12:50)
*    *    *    *    *    *    *    *    *    *

   ஏற்கனவே   தங்கள் மனதில்  தாங்களே உருவாக்கிய கருத்திற்கு (Preconceived idea) பைபிளில் ஆதாரம் தேடி அலைபவர்கள்

ஏதாவது ஒரு வசனத்தைப் பிடித்துக்கொண்டு,

"இதோ ஆதாரம்" என்பார்கள்.

ஆனால் உண்மையில் அவர்களுடைய கருத்துக்கும், வசனத்துக்கும் சம்பந்தமே இருக்காது.


கணக்கிற்கு விடை தேடாமல் 
ஏதோ ஒரு  விடைக்கு கணக்கைத் தேடுவது எப்படி? 

அப்படிப்பட்டவர்கள் கையில் இவ்வசனம் மாட்டிவிட்டது.

1. யார் அவர்கள்?

2. ஏற்கனவே அவர்களாகவே கற்பனை செய்துள்ள கருத்து எது?

3. வசனத்திற்குரிய விளக்கம் என்ன?

1.நமது சகோதரர்கள்தான்.

 நம்மை விட்டுத் தனிக்குடித்தனம் போனவர்கள்.

இவர்கள்தான் அவர்கள்.

2. அவர்கட்கு நமது அம்மாவைப் பிடிக்காது.

நமக்கு அம்மாவைப் பிடிக்கிறதுவும் அவர்களுக்குப் பிடிக்காது.

அவர்களுக்கு இயேசுவைப் பிடிக்கும்.

பைபிளையும் பிடிக்கும்.

பைபிள் வசனங்களுக்கு தங்கள் இஸ்டம்போல் விளக்கம் கொடுப்பதும் பிடிக்கும்.

பைபிள் இயேசுவுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது அவர்கள் கருத்து.

மரியாள் இயேசுவைப் பெற்றாள் என்பதைத் தவிர அவளுக்கு வேறு முக்கியத்துவம் இல்லை,

மற்ற பெண்மணிகளைப்போல மரியாளும் ஒரு சாதாரண பெண்மணிதான் என்பது அவர்கள் கருத்து.

'மரியாள் இயேசுவின் தாய், இறைவனின் தாய்

 என்ற ஒரு உண்மையே போதும் அவள் மற்ற எல்லோரையும் விட மேலானவள் என்று கூற. 

ஆனால் அது அவர்களுக்குப் புரியவில்லை.

இயேசுவின் தாய் என்றால் ஏற்றுக்கொள்வார்கள்,

இறைவனின் தாய் என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பிறந்து 30 வருடம் கழித்து ஒருவன் கலெக்டர் ஆகியிருப்பான்,

அவன் தாயைக் கலெக்டரின் அம்மா என்றால் ஏற்றுக்கொள்வார்கள்.


பிறந்து 25 வருடம் கழித்து ஒருவன் டாக்டர் ஆகியிருப்பான்,

அவன் தாயைக் டாக்டரின் அம்மா என்றால் ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் மனுவுரு எடுக்கு முன்பும் கடவுள்,

மனுவுரு எடுக்கும்போதும் கடவுள்,

மனுவுரு எடுத்த பின்பும் 
 கடவுள்,

பிறக்கும்போதும் கடவுள்,

பிறந்தபின்னும்  கடவுள்,

மரித்தபோதும் கடவுள்,

உயிர்த்தபோதும் கடவுள்,

இப்போதும் கடவுள், 

எப்போதும் கடவுள்.

அவரைப் பெற்றவளைக் கடவுளின் தாய் என்றால்

ஏற்றுக்கொள்ள மாட்டாகள்! 

மனித சுபாவத்திற்குத்தானே
தாய் என்பார்கள்.

சுபாவம் தனியே இருக்காது, ஒரு ஆளுக்குதான் சொந்தமாய் இருக்கும்.

இயேசுவின் மனித சுபாவம் இறைமகன் என்னும் தேவ ஆளுக்கு உரியது.

இறைமகனுக்கு மனுவுரு எடுத்தபின் இரண்டு சுபாவங்கள், தேவ சுபாவம், மனித சுபாவம்.

இறைமகன் 

அதாவது இயேசு 

அதாவது கடவுள்

தன் மனித சுபாவத்தில் பாடுபட்டு மரித்தார்.

கடவுள் 

(மனித சுபாவத்தில்)

பாடுபட்டு மரித்தார்.

(மனித சுபாவத்தில்) 
பாடுபட்டு மரித்த 'கடவுளின் தாய்'  மரியாள்.

'கடவுளின் தாய்'  மரியாள்.

'கடவுளின் தாய்' என்ற ஒரு பட்டமே மரியாளுக்கு மனுக்குலத்திலேயே மிக உயர்ந்த அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறது.

இந்த அந்தஸ்தை மரியாளுக்கு
கொடுத்தது இயேசு!

இவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்வார்களாம்,

அவர் கொடுத்த அந்தஸ்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்.

அவர்களுக்கு பைபிள்தான் முக்கியம்.

இயேசுவைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறதோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள்.

அதாவது புதிய ஏற்பாடு எழுதப்படுவதற்கு முன் இவர்கள் பிறந்திருந்தால் 

மத்தேயுவோ, அருளப்பரோ
'இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்' என்று சொல்லும்போது

'எங்கே பைபிள்?  எங்கே ஆதாரம்?' என்று கேட்டிருப்பார்கள்!!! 

"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்."

என்ற இறைவாக்கை 

எவ்வாறு மாதாவுக்கு எதிரான

 தங்கள் கொள்கைக்கு ஆதாரமாக 

இவர்கள் காட்டுகிறார்கள்? 

இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது
ஒருவன் அவரிடம்,

"இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மோடு பேச வெளியே காத்துக்
கொண்டிருக்கின்றனர்."

என்றான்.

இயேசு

"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ 

அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.

இவர்களுடைய வாதம்,

" தந்தையின் விருப்பப்படி நடக்கிறவனே என் தாய்" என்று இயேசு சொல்கிறார்.

ஆகவே பெற்ற தாயை விட சீடர்களுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

இயேசுவே முக்கியத்துவம் கொடாத மரியாளுக்கு நாம் ஏன் கொடுக்க வேண்டும்?"

இறை வசனத்தை தங்கள்  கருத்துக்கு ஏற்றபடி  வளைக்கும் அவர்களின் பழக்கத்திற்கு இது ஒரு உதாரணம்.

3.இறை வசனம் குறிப்பது அவர்களது கருத்தை அல்ல.

இயேசு தன் தாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடாதவராய் இருந்திருந்தால்

தனது 33 வயது வாழ்க்கையில் 30 ஆண்டுகளைத் தன் தாய்க்குக் கீழ்ப்படிந்து நடப்பதிலே கழித்திருக்க மாட்டார்.

நற்செய்தியாளர் மத்தேயு சீடத்துவத்தின் முக்கியத்தை வலியுறுத்த மாதா மகனைப் பார்க்க வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

இயேசுவின் வார்த்தைகள் அவருக்கு உதவியாய் இருந்தன.

இயேசு  புவியில் மனுவுரு எடுத்தது தன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற.

அவருக்கு உதவியாய் இருந்தவர்கள் 

முதலில் அவருடைய அன்னை.
அவள் மூலம்தான் இயேசு பிறந்தார்.

அடுத்து அவருடைய சீடர்கள்.
அவர்கள் மூலம்தான் அவருடைய நற்செய்தி உலகெங்கும். அறிவிக்கப்பட்டது.

அவர் மனுவுரு எடுக்குமுன் கபிரியேல் தூதரை மரியாளிடம் அனுப்புகிறார்.

பிதாவின் சித்தம் இயேசு மனிதனாய்ப் பிறந்து,   மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுபட்டு மரிக்க வேண்டும்.

மனிதனாய்ப் பிறக்க ஒரு தாய் வேண்டும்.

கடவுள் மனிதனுடைய சுதந்திரத்தை எப்போதும் மதிப்பவர்.

ஆகவே தனக்குத் தாயாக ஒரு கன்னிப் பெண் முழு மனதுடன் சம்மதிக்க வேண்டும்.

அந்தச் சம்மதத்தைப் பெறவே கபிரியேல் தூதரை மரியாளிடம் அனுப்பினார்.

மாதாவும்,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது"

என்று கூறி,

தந்தையின் சித்தத்தை
 நிறைவேற்றவேண்டிய பணியில் ஒத்துழைக்கத் தன் முழுச் சம்மதத்தைத் தெரிவிக்கிறாள்.

இயேசு மனுவுரு எடுக்கிறார்.

இயேசுவைப் பொறுத்த மட்டில் யாரெல்லாம் தன் தந்தையின் சித்தத்தை நிறை வேற்ற உதவுகிறார்களோ

அவர்களெல்லாம் தன் தாய்க்குச் சமம்.

மரியாள் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற உதவினாள்.

தன் அன்னை செய்ததைச் செய்பவர்களையும் தன் அன்னையாகவே நினைக்கிறார்.

ஒருவரைப் பற்றி பெருமையாய் பேச எண்ணும்போது  உயர்ந்த நிலையில் உள்ளவர்களோடுதான் ஒப்பிடுவோம்.

தன் தாயை மிக உயர்ந்த நிலையில் வைத்திருப்பதால்தான்

தன் சீடர்களைப் பெருமைப்படுத்த தன் தாயோடு ஒப்பிடுகிறார்.

இந்தத் தனது கருத்தைத்தான்

 தன் தாய் தன்னைப் பார்க்கவந்த செய்தியை ஒருவர் அவரிடம் தெரிவித்தபோது 

தன் போதகத்தைக் கெட்டுக் கொண்டிருந்த மக்களிடம் 

தன் சீடர்களைக் காண்பித்துக் கூறினார்.

எந்தவிதத்திலும் தன் தாயைக் குறைத்துப் பேசவில்லை. 

மாறாக தன் சீடர்களைத் தன் தாயின் ஸ்தானத்திற்கு உயர்த்திப் பேசினார்.

அவரது வார்த்தைகளை விளக்க வேண்டுமானால்,
இப்படிக் கூறவேண்டும்:

"யார் என் தாய்? 

என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுபவரே என் தாய்.

என்னைப் பெற்ற தாயும் என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றினாள்.

என் சீடர்களும் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள் என்னைப் பின்தொடர்வதன்மூலமும்
என்னை உலகிற்கு அளிக்கயிருப்பதன்மூலமும்.

 என்னைப் பெற்றவள் ஆரம்பித்து வைத்த நற்செய்திப் பணியை என் சீடர்கள் தொடர்வார்கள்.

என் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதால் என் சீடர்களும் என் தாய்தான்." 

இயேசு தன் சீடர்களை எந்த ஸ்தானத்தில்  வைத்திருந்தார் என்பதை விளக்கவே மத்தேயு இந்நிகழ்வை தன் நற்செய்தி நூலில் பதிவு செய்திருக்கிறார்.

நாமும் இறைவன் சித்தத்தை நிறைவேற்றினால் இயேசுவின் தாயாக மாறுவோம்.

இயேசுவை உலகிற்கு அளிப்போம்,
உன்னதரின் தாயாக மாறுவோம்.

லூர்துசெல்வம். 

.

Wednesday, November 20, 2019

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்""(லூக்.19:26)

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்""
(லூக்.19:26)
*   *   *   *   *   *   *   *   *   *   *   *

இயேசு தனது செய்திகளை (Messages) நேரடியாகக் கொடுக்காமல் கதைகள் மூலம் கொடுக்கிறார்.

அவருடைய போதனைகளில் கதைகள் செய்திகளைச் சுமந்து வருகின்றன.

நாம் எடுக்க வேண்டியது செய்திகளை.

ஒவ்வொரு செய்தியும் ஒரு நற்செய்தி.

நற்செய்தி இறைவனிடமிருந்து வருவது.

இறைவனுக்கும் நமக்கும் இடையே ஆன்மீக உறவை ஏற்படுத்தவும், வலுப்படுத்தவும் தரப்படுவது நற்செய்தி.

இயேசு சொன்ன கதைகள் யாவும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை.

அதில் ஆன்மீகச் செய்திகள் இருக்குமே தவிர இவ்வுலகச் செய்திகள் இருக்காது.

நற்செய்தி அருளப்படுவது விண்ணுலகை அடைய,

மண்ணுலகைக் காக்க அல்ல.


இயேசு சொன்ன   பொற்காசுகள் கொடுக்கப்பட்ட கதையை ஒரு நண்பரிடம் சொல்லி,

"இக்கதை வழியாக இயேசு என்ன போதிக்க விரும்புகிறார்?" என்று கேட்டேன்.

அவர் சொன்னார், "கடவுள் நமக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு வியாபாரமோ, Business ஓ செய்து பெரிய பணக்காரனாக மாற வேண்டும். அப்படிச் செய்யாதவன் உள்ளதையும் இழந்து பரம ஏழையாகிவிடுவான்!"

நான் சிரித்தேன்.

"ஏன் சிரிக்கிறீங்க?"

"என்னமோ இயேசு வியாபாரமும், தொழிலும் செய்ய மனித அவதாரம் எடுத்தது மாதிரி  பேசறீங்க!"

" சார்,அவர் சொன்ன கதையில் கொடுக்கப்பட்டது பொற்காசுதானே சார்!

'நீ ஏன் என் பணத்தை வட்டிக்காரரிடம் கொடுத்துவைக்கவில்லை?

நான் வந்து வட்டியோடு திரும்பப்பெற்றிருப்பேனே'

என்று கதாநாயகன் சொல்லுகிறானே!

வட்டிக்கடை தொழில்தானே!"

"இயேசு சொன்னது கதை, பாட்டி வடை சுட்ட கதை மாதிரி!

அக்கதை சொல்லும் கருத்து என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும்."

"அப்போ நீரே சொல்லும்."

"மனித உறவுகளுக்குள்ளே கொடுக்க வாங்க பயன்படுவது காசு.

யாருக்காவது உதவி செய்யணும்னா காசுதான் கொடுப்பாங்க.

எவ்வளவுக்கெவ்வளவு காசு இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஒருவன் ஏழை அல்லது பணக்காரனாக கருதப்படுகிறான்.

உலகினர் தங்களிடம் இருக்கும் பணத்தை அதிகப்படுத்துவதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ளனர்.

அதற்காகத்தான் உத்தியோகம், பதவி, வியாபாரம், தொழில்  எல்லாம்.

மனிதருக்குத் தெரிந்த பணப்பழக்கத்தை கதையாகச் சொல்லி

தெரியாத, தெரியவேண்டிய இறை,மனித உறவு பற்றிய செய்தியை இயேசு கொடுக்கிறார்."

"அதாவது  தெரிந்ததைச்  சொல்லி தெரியாததை விளக்குகிறார்."

"அப்படியேதான்."

"அப்போ நீங்க விட்டதிலிருந்து
நான் தொடரலாமா? "

"விட்டதிலிருந்தா? நான் இன்னும் விடவேயில்லையே!

இனிமேதானே ஆரம்பிக்கப் போகிறேன்."

"நான் ஒரு பழமொழி சொல்லலாமா?  கதையோடு சம்பந்தப்பட்டதுதான்."

"சொல்லுங்க."

"பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை,

அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை."

"Caught the point! Now you are fully qualified to continue. "

"Thanks!

கதையில் வரும் பெருங்குடி மகன் தன் ஆட்களிடம் பொருளைக் கொடுக்கிறான், அதை வைத்து அதிகம் சம்பாதிப்பதற்கு.

இறைவன் தன் அடியாருக்கு அருளைக் கொடுக்கிறார் அதிக அருளைச் சம்பாதிப்பதற்கு.

இறையருள்தான் ஆன்மீக வாழ்வின் உயிர்நாடி.

இறைவனின் அருள் இல்லாதவர்கள் ஆன்மீக வாழ்வே இல்லாதவர்கள்.

ஆன்மீக வாழ்வே இறையருளை ஈட்டதான்.

எல்லோருக்கும் ஒரே அளவு அருளைக் கொடுப்பதில்லை.

அவருடைய அன்னைக்குக் கொடுத்த அளவு வேறு யாருக்கும் கொடுக்கவில்லை.

தேவ இஸ்டப்பிரசாதம் என்னும் அருள் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உறவை ஏற்படுத்துகிறது.

உதவி வரப்பிரசாதம் என்னும் அருள் நாம் நற்செயல்கள் செய்ய உதவுகிறது.

எல்லோருக்கும்  ஒரே அளவு அருள் கொடுக்கப் படாவிட்டாலும் கிடைத்த அருளை நாம் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

கதையில் வருபவன் பத்து காசை அதிகப் படுத்துவதைப்போல

நாம் இறைவனிடமிருந்து பெற்ற அருளை அதிகப்படுத்த வேண்டும்.

எவ்வளவுக்கெவ்வளவு பெற்ற அருளை அதிகப் படுத்துகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நாம் ஆன்மீகத்தில் வளர்கிறோம்.

உண்மையில்,  பெற்ற அருளை அதிகப்படுத்தவே வாழ்கிறோம்.

நாம் ஈட்டும் இறையருளின் அளவிற்கேற்ப விண்ணுலகில் நமது பேரின்பத்தின் அளவும் இருக்கும்.

அருளை எப்படி அதிகப்படுத்துவது?

அருள் ஒரு வியாபாரப் பொருளல்ல.

அருளின் ஊற்று இறைவன் மட்டுமே.

இறைவனிடம் இருந்துதான் அருளைக் கேட்டுப் பெறவேண்டும்.

நமது செபம், தவம், நற்செயல்கள், தேவத்திரவிய அனுமானங்கள் மூலம் இறை அருளைப் பெறுகிறோம்.

  இறையருளைப் பெற   இடைவிடாது செபிக்க வேண்டும்.

நமது வாழ்வையே செபமாக மாற்ற வேண்டும், கடவுளுக்காக வாழ்வதன்மூலம்.

தவசு காலத்தில் மட்டுமல்ல வாழ்நாழ் முழுவதுமே தவமுயற்சிகள் செய்யவேண்டும்.

மேலும் நற்செயல்கள் மூலம் இறையருளை ஈட்ட வேண்டும்.

நமது அயலானுக்கு இறைவன் பெயரால் செய்யும் எல்லா உதவிகளும் நற்செயல்கள்தான்.

இறைவன் தரும் அருள் உதவியால் நற்செயல் புரியும்போது மேலும் அருள் கிடைக்கிறது.

தேவத்திரவிய அனுமானங்கள் பெறும்போதெல்லாம் நம்மேல் அருள் மழை பொழிகிறது.

அடிக்கடி,

முடிந்தால் தினமும்,

திருப்பலியில் கலந்து கொண்டு, திருவிருந்திலும் பங்கேற்கவேண்டும்.

திருவிருந்தின்போது அருளின் ஊற்றே நம்மிடம் வருகிறார்.

பாவசங்கீர்த்தனம் செய்யும் போதெல்லாம் நமக்கு நிறைய இறையருள் கிடைக்கிறது.

ஆனால் முதலில் தரப்படுகின்ற அருளைப் பயன்படுத்தாமல்,

செபம், தவம், நற்செயல்கள், தேவத்திரவிய அனுமானங்கள் போன்ற எதிலும் கலந்து கொள்ளாமல்

மனம் போன போக்கில் வாழ்பவன் பாவத்தில் வீழ்ந்து முதலில் கிடைத்த அருளையும் இழந்துவிடுவான்."

"அதுசரி,

கதையின் கடைசியில்

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்"

என்று இயேசு சொல்கிறாரே.
அதன் பொருள் என்ன?"

"கொஞ்சம் யோசித்துதான் சொல்ல வேண்டியிருக்கு.

நான் சொல்வது சரியான விளக்கமாக இல்லாவிட்டாலும் அது சரியான விளக்கம்தான்."

"அதென்ன புதிர்?"

"புதிர் ஒன்றுமில்லை. தன்னிலேயே அது சரியான விளக்கம்தான்.

ஆனால் இந்த இடத்திற்குரிய விளக்கமா என்பது புரியவில்லை.''

"முதலில் சொல்லுங்க."

"இப்போ இறைவன் தரும் அருளைப்பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

அப்படியானால்

'உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும்,'

என்பதில் 'உள்ளவன்' என்றால் 'அருள் உள்ளவன்.'

இங்கே அருள் தேவ இஸ்டப்பிசாதத்தைக் (Sanctifying grace) குறிக்கிறது.

இந்த அருள்தான் நமக்கும் இறைவனுக்கும் இடையில் உறவை ஏற்படுத்துகிறது.

இறைவனோடு உறவில் இருந்தால்தான் அவரிடமிருந்து வேண்டிய அருளைப் பெறலாம்.

நாம் சாவான பாவம் செய்தால்
இந்த அருளை இழந்து விடுவோம்.

அருளை இழந்தால் இறைவனோடு உள்ள உறவு அறுந்துவிடும்.

உறவு அறுந்து விட்டால் நம்மால் நற்செயல் எதுவும் செய்ய இயலாது,

அதாவது நாம் செய்யும் எந்த செயலுக்கும் அருள் கிடைக்காது.

சாவான பாவ நிலையில் நமது ஆன்மா விண்ணகம் செல்லும் நிலையை இழந்துவிடும்.

அந்த வாக்கியத்தை இப்படிச் சொல்லலாம்:

'தேவஇஸ்டப்பிரசாத அருள் நிலையில் 'உள்ளவனுக்கு' சகல வித அருள் வரங்களும் கொடுக்கப்படும்.

சாவான பாவத்தினால்
தேவஇஸ்டப்பிரசாத அருளை இழந்தவனிடமிருந்து,

அதாவது இறையுறவு 'இல்லாதவனிடமிருந்து'

ஏற்கனவே இருந்த அருளும் எடுக்கப்படும்.
(Loss of all the merits acquired (through good deeds) in previous life, regardless of how saintly it was.)

சரியா?"

"Correct.

தேவஇஸ்டப்பிரசாதத்தை இழந்தவன் ஆன்மீக வாழ்வே
'இல்லாதவன்'.

ஆனால் ஆன்மீக வாழ்வை இழந்தவன்

நல்ல பாவசங்கீர்த்தனம்  செய்தால்

இழந்த இறையுறவை மீண்டும் பெறுவான்.

இறைவன் தரும் அருளைப் பயன்படுத்தி இறை உறவில் நீடிக்க வேண்டும்.

நாம் இவ்வுலகில் வாழ்வதே விண்ணுலக வாழ்விற்கு வேண்டிய அருள் வரங்களை மிகுதியாக ஈட்டதான்.

ஈட்டியதை ஒரு சாவான பாவத்தினால் இழந்து விடக்கூடாது."

ஆண்டவர் நமக்குத் தந்த அருளை நமது

செப, தவ வாழ்வினால்,

நற்செயல்களால்,

தேவதிரவிய அனுமானங்களினால்,

திருப்பலி காண்பதினால்,

திருவிருந்தில் கலந்து கொள்வதினால்

மிகுதியாக்குவோம்.

இறுதி நாளில் இறைவனைச் சந்திக்கும்போது

நாம் ஈட்டிய அருளுக்குப் பரிசாக

 விண்ணுலகையே   அளிப்பார்.

முடிவில்லா காலம் இறைவனோடு இணைந்து பேரின்பத்தில் வாழ்வோம்.

லூர்துசெல்வம். 

Tuesday, November 19, 2019

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்"(லூக்.19:5)

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்"
(லூக்.19:5)
*  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  *

சக்கேயுவுக்கு இயேசுவை யாரென்று பார்க்கமட்டுமே ஆசை.

இயேசுவைப் பார்க்க ஆசைப்படுவதற்கும்

யாரென்று பார்க்க ஆசைப்படுவதற்கும்

வித்தியாசம் இருக்கிறது.

பார்க்க ஆசைப்படுபவன்

 அவரால் ஈர்க்கப்பட்டு, 

எதாவது காரியத்தைச் சாதிக்க விரும்புவான்.



யாரென்று பார்க்க ஆசைப்படுபவன் சும்மா ஆள் யாரென்று பார்க்க விரும்புவான்.

இயேசுவைத் தன் வீட்டிற்கு அழைக்க வேண்டுமென்றோ,

அவருக்கு விருந்து கொடுக்க. வேண்டுமென்றோ,

அவரைத் தன் வீட்டில் தங்க வைக்க வேண்டுமென்றோ

அவன் நினைக்கவில்லை.

அவர் யாரென்றே பார்க்கவே ஆசைப்பட்டான்.

ஆனால் இயேசு கடவுள். 

அவர் உலகிற்கு வந்ததே பாவிகளைத் தேடித்தான்.

 ஆகவே சக்கேயுவின் எண்ணத்தை அறிந்திருந்தமையால்

 அவராகவே சக்கேயுவை
அழைக்கிறார்.


"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா.

 இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்."

சக்கேயுவின் ஆசைக்கு இயேசு பல மடங்கு சன்மானம் தருகிறார்.

சக்கேயு பார்க்க மட்டும்தான் ஆசைப்பட்டான்.

இயேசுவோ 

அவன் வீட்டுக்குச் செல்கிறார்.

விருந்து உண்கிறார்.

அவனது பாவங்களை மன்னிக்கிறார்.

அவன் வீட்டிலுள்ள அனைவருக்கும் இரட்சண்யம் அளிக்கிறார். 
(இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று.)

அவனோடு தங்குகிறார்.

இயேசு தனது பண்புகளில் அளவற்றவர் மட்டுமல்ல,

தன்னிடம் உள்ளதைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடியவர்.

நாம் வாயைத் திறந்தாலே போதும், வயிறார ஊட்டி விடுவார்!

அவரை ஏக்கத்தோடு பார்த்தாலே போதும், கேட்காமலே நமக்கு வேண்டியதை எல்லாம் தந்து விடுவார்.

திவ்ய நற்கருணைப் பேழையில் வீற்றிருக்கும் இயேசுவைச் சந்திக்கச் செல்லும்போது

அவரோடு வார்த்தைகளால் பேச வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை.

மனதில் அன்போடு அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும்.

அவருக்கு வேண்டியது நமது வார்த்தைகள் அல்ல, நமது மனது, திறந்த மனது.

திறந்த மனதோடு அவரை பார்த்துக் கொண்டே இருந்தால் தனது அருள் வரங்களால் நமது மனதை நிறப்புவார்.

ஒரு ஏழை விபசாயி தினமும் காலையில் வேலைக்குப் போகுமுன் கோவிலுக்குச் சென்று, 

திவ்யநற்கருணைப் பேழையைப் பத்து நிமிடங்கள் பார்த்துக் கொண்டே நின்று விட்டு வேலைக்குப் போவான்.

இதைத் தினமும் கவனித்துக் கொண்டிருந்த பங்குத் தந்தை அவனிடம் கேட்டார்:

"தினமும் காலையில் ஆண்டவரிடம் என்ன வேண்டுவாய்?"

"எனக்கு வேண்டியதெல்லாம் அவருக்குத் தெரியுமே, சாமி.

நான் அவரைப் பார்ப்பேன், அவரும் என்னைப் பார்ப்பார், அவ்வளவுதான்."

உண்மையில் கண்களின் மௌன மொழியைவிட சக்தி வாய்ந்த மொழி எங்கும் இல்லை.

சக்கேயுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

சக்கேயு ஒரு பாவி, நாமும் பாவிகள்.

உண்மையில் பாவிகள்தான் இயேசுவை வரவேற்க முழுத்தகுதி பெற்றவர்கள்.

ஏனெனில் அவர்களுக்குதான் அவருடைய உதவி அதிகம் தேவை.

Sinners are the most qualified people to welcome Jesus, because it is they who need Him most. 

சக்கேயுவுக்கு இயேசு யாரென்று பார்க்க ஆசை.

நமக்கு இயேசு யாரென்று தெரியும். நாம் அவரைப் பார்க்க மட்டுமல்ல, பார்த்துக் கொண்டே இருக்க ஆசைப்படுவோம்.

எப்படி எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பது?

'யாருக்கு எதைச் செய்தாலும் அதை எனக்கே செய்கிறீர்கள்' என்று இயேசு சொல்லி இருக்கிறார்.

ஆகவே நாம் யாரைப் பார்த்தாலும் அவரில் இயேசுவைக் காணவேண்டும்.

நமது உற்றார் உறவினர்களாய் இருந்தாலும் சரி,

தெரியாதவர்களாய் இருந்தாலும் சரி,

பாவிகளாய் இருந்தாலும் சரி,

விரோதிகளாய் இருந்தாலும் சரி

எல்லோரிடமும் நாம் இயேசுவைக் காணவேண்டும்.

குறிப்பாக யாரெல்லாம் நம்மை வெறுக்கிறார்களோ அவர்களிடமும் இயேசுவைக் காணவேண்டும்.

அப்படிக் காணும்போது இயேசுவை நேசிக்கும் நாம் அவர்களையும் நேசிப்போம்.

அவர்களை வெறுத்தால் அவர்களோடு இருக்கும் இயேசுவையும் வெறுக்கிறோம்.

அந்த உணர்வு நம்மிடம் இருந்தால் நாம் யாரையும் வெறுக்க மாட்டோம்.

இயேசுவை வெறுப்பவர்களைக்கூட நாம் நேசிப்போம், ஏனெனில் இயேசுவும் அவர்களை நேசிக்கிறார்.

நாமும் எல்லோரையும் நேசிப்போம்.



இயேசுவை வரவேற்றவுடன், அதுவரை பண ஆசை பிடித்திருந்த அவன் மனம் மாறியது.

இரு எசமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்பதை உணர்ந்தான்.

இயேசுவின் மீது பற்று ஏற்பட்டதால் பணப்பற்று விட்டது.

இனி அவன் இயேசுவுக்கு மட்டுமே ஊழியன்.

ஆகவே
 தன் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கவும்,

 எவனையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுக்கவும்

தீர்மானித்தான்.

நாம் எப்படி?

பணப்பற்று கூடாது என்று சொல்கிறோம்.

உண்மையாகவா அல்லது வாயளவில் மட்டும்தானா?

ஏதாவது ஒரு பொருள் தொலையும்போது நமக்குள் ஏற்படும் Reactionனின் அளவு = பொருட்பற்றின் அளவு.

வருத்தம் அதிகம் = பற்றும் அதிகம்.

கவலையில்லை = பற்றில்லை.

லௌகீக வாழ்க்கையில் மட்டுமல்ல, திருச்சபையின் வாழ்விலும்கூட பணம் தேவைதான்.

ஆனால் பணம்தான் வாழ்வல்ல.

பணவிசயத்தில் தப்பு செய்திருந்தால் நாமும் சக்கேயுவைப் பின்பற்றுவோம்.

எல்லோரையும் நேசிப்பதில்
இயேசுவைப் பின்பற்றுவோம்.

இயேசுவை நினைப்போம்.
அவர் நம்மை நிறைப்பார்.

லூர்துசெல்வம். 

Monday, November 18, 2019

"இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்"(லூக்.18:38)

"இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்"
(லூக்.18:38)
* * * * * * * * * * * * * * * * * * * * *
வழியோரத்தில் அமர்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்த ஒரு குருடன் இயேசுவைப் பார்க்காமலேயே,

"இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்"

என்கிறான்.

அவன் தன் உடலிலுள்ள பார்வையற்ற  கண்கள் பார்வை பெறுவதற்காக இந்த சிறிய செபத்தைச் சொல்லுகிறான்.

அவன் செபம் கேட்கப்படுகிறது.

அவன் பார்வை பெறுகிறான்.

அவனும் கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தான்.

அநேக சமயங்களில் நமது ஆன்மீகக் கண்களின் பார்வை இன்மை (Spiritual blindness) காரணமாக நம்மால் ஆன்மீக உண்மைகளைக் காணமுடிவதில்லை.

பைபிள் வசனங்களை வாசிப்போம், அர்த்தம் தெரியாது.

அர்த்தம் தெரியாவிட்டால்கூட பரவாயில்லை, தவறான அர்த்தம்  தோன்றும்.

தெரியாததைவிட தவறாகத் தெரிவது ஆபத்து.

கம்பு என்று நினைத்துக் கொண்டு பாம்பைக் கையில் எடுத்தால் எப்படி இருக்கும்?

இன்று பைபிளை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு,
வெளியே சென்றுள்ள பிரிவினை சபைகள் ஏராளம்.

ஒவ்வொரு சபையினரும் ஒவ்வொரு விதமாகப் பைபிளுக்கு  விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு அர்களுடைய ஆன்மீகப் பார்வை இன்மைதான் (Spiritual blindness) காரணம்.
     *          *         *

இயேசுவே, தாவீதின் மகனே, உம்மைப் பின்பற்றும் எங்கள் மேல் இரக்கம்வையும்.

உமது வார்த்தைகளுக்குச் சரியான பொருள் காண எங்கள் ஆன்மீகக் கண்களுக்கு ஒளிதாரும்.
           *          *         *

நம்மைப் படைத்த எல்லாம் வல்ல இறைவன்

நம்மை எந்த நோக்கத்திற்காகப் படைத்தாரோ

அந்த நோக்கத்தை நாம் அடைய

தனது பராமரிப்பின் மூலம் நம்மை வழி நடத்துகிறார்.

நாம் அநேக சமயங்களில் அவரது  வழி நடத்துதலைப் புரிந்து கொள்ளாமல், 

எங்கே அவர் நம்மைக் கவனிக்காமல் இருக்கிறாரோ எனப் பயப்படுகிறோம்.

இதற்குக் காரணம் நமது ஆன்மீகப் பார்வை இன்மைதான்.

உதாரணத்திற்கு, ஏதோ ஒரு வேலையை (Job) மனதில் வைத்துக் கொண்டு அதைப் பெற முயற்சிகள் செய்வதோடு

நம் முயற்சிகள் வெற்றி பெற இறைவனை இடைவிடாது வேண்டுகிறோம்.

ஆனால் நமது முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிகின்றன.

கடைசியில் நாம் விரும்பாத ஒரு பணியில் அமர நேர்கிறது.

இந்நிகழ்வை இரண்டு கண்ணோக்கில் நோக்கலாம்.

1.நாம் எவ்வளவோ செபித்தும் கடவுள் நமது செபத்திற்கு செவி சாய்க்க மறுத்து விட்டார். இனி அவரை நம்பிப் பயனில்லை. (ஆன்மீகப் பார்வை இன்மை)

2. நாம் வேலையைப் பெறுவதற்காக இடைவிடாது செபித்தோம்.

நமக்கு எதிர்காலம் தெரியாது.

ஆனால் நம்மைப் படைத்தவர் நமது எதிகாலத்தை  நமது நன்மையைக் கருத்தில் கொண்டே திட்டம் இடுகிறார்.

அவர் என்ன செய்தாலும் நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.

ஆகவே நமது முயற்சிகள் தோல்வியில் முடிவதும் நமது எதிர்கால வெற்றிக்கே.

வெற்றியோ, தோல்வியோ, இறைவனுக்கு நன்றி.
     *          *         *

இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் வையும்.

நீர் என் வாழ்வில் என்ன செய்தாலும் அது என் நன்மைக்கே என்ற உண்மையைக் காண

என் ஆன்மீகக் கண்களுக்கு ஒளி தாரும்.
      *          *         *

நமது தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல

பொது வாழ்விலும் கூட நம்மால் உண்மையை உணர முடியாத அநேக நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நமது தாய்த் திருச்சபையில்
இன்று

பழமைவிரும்பிகளுக்கும் (Conservatives),

புதுமை விரும்பிகளுக்கும் (progressives)

இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம்

எங்கே பிரிவினையில் (schism)
முடிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கும்போது

இந்தப் பயம்கூட உண்மையை அறிய முடியாத ஆன்மீகப் பார்வை இன்மையின் காரணமாகத்தான் என்று தோன்றுகிறது.

ஏனெனில் திருச்சபையை நிறுவியர் எல்லாம் வல்ல கடவுள்.

"நான் உனக்குச் சொல்லுகிறேன். உன் பெயர் "பாறை."

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா."
(மத்.16:18)

இராயப்பர் என்ற பாறைமேல் கட்டப்பட்ட திருச்சபையைமீது

அழிவு சக்திகள் மோதலாம், 

ஆனால் அசைக்க முடியாது.

இராயப்பரே முயன்றால் கூட அதை அதை அசைக்க முடியாது.

ஏனெனில் அதைக்கட்டியவர் சர்வ வல்லப தேவன்.

அதைக் காப்பதற்காகவே

தனது ஆன்மாவோடும், சரீரத்தோடும்

உண்மையாகவே

நம்மோடு திவ்ய நற்கருணையில் தங்கியிருக்கிறார் இயேசு!

'திருச்சபைக்கு எதுவும் ஆகிவிடுமோ' என்று பயந்தால்

அது இயேசுவின் வல்லமையையே சந்தேகப் படுவது மாதிரி!

சாத்தான் இயேசு மேலேயே மோதிப் பார்த்தான்.

இப்போது அவரது திருச்சபை மீது மோதிப்பார்க்கிறான்.

ஆனால் 'நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ள முடியாது.'
     *             *          *

இயேசுவே! தாவீதின் மகனே!
உமது பிள்ளைகளாகிய எங்கள் மேல் இரக்கம் வையும்.

உமது திருச்சபையின் பிள்ளைகள் நாங்கள்.

உமது திருச்சபைக்கோ, எங்களுக்கோ
எந்த தீய சக்தியாலும்

எதுவும் செய்ய இயலாது என்று உறுதியாக நம்புகிறோம்.

இருந்தாலும் ஒரு வேண்டுகோள்.

நவீனவாதிகளுக்கு (modernists) நல்ல புத்தியைக் கொடும்."

      *             *          *

ஒரு லட்டுவையும், ஒரு கழுதை விட்டையையும் அருகருகே வைத்து,

ஒரு குருடனை அழைத்து வந்து,

"உன் முன்னால் இரண்டு பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை எடுத்து வாயில் போடு."

என்று சொன்னால்,

அவன் என்ன செய்வான்?

அவன் புத்தி உள்ளவனாக இருந்தால்,

"முதலில் எண் கண்ணுக்கு வைத்தியம் பாருங்கள்.அப்புறமாக எடுக்கிறேன்" என்பான்.

நமது தேர்வுக்காக நம்முன் இரண்டு வித வாழ்க்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்று முடியக்கூடிய சிற்றின்பம் நிறைந்த மண்ணுலகம்.

அடுத்தது முடிவில்லா பேரின்பம் நிறைந்த விண்ணுலகம்.

இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இரண்டில் சிற்றின்பம் நிறைந்த மண்ணுலகம் நமது
கண்ணுக்குப் புலப்படுகிறது.

பேரின்பம் நிறைந்த
விண்ணுலகம் நமது
கண்ணுக்குப் புலப்படவில்லை.

இப்போது நாம் ஆண்டவரை நோக்கி வேண்டுவோம்:

"இயேசுவே, தாவீதின் மகனே,
என் மேல் இரக்கம் வையும்.

நான் மண்ணுலகில் இருப்பதால்  அதன் சிற்றின்பங்கள் எனது கண்களுக்குப் புலப்படுகின்றன.

அவை என்னைக் கவர்ந்து இழுக்கின்றன.

ஆனாலும் அவை எல்லாம் முடிவுக்கு உரியன என்பதால் அவற்றின் மீது எனக்கு அக்கரை இல்லை.

ஆனால் முடிவில்லா பேரின்பம் உள்ள விண்ணுலகைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

காரணம் எனது அகக்கண்களில் போதிய ஒளி இல்லை.

இறைவா, எனது அகக் கண்களை முற்றிலும் திறந்தருளும்.

அவற்றை உமது தெய்வீக ஒளியால் நிறப்பியருளும்.

அவ்வொளினால் நாம் மறுவுலக வாழ்வைப் பற்றி முற்றிலுமாக உணர்ந்து

அதற்காகவே வாழ உமது அருள் உதவியை அள்ளிஅள்ளித் தாரும்.

என் மீது இரங்கி என் அகக் கண்களைத் திறந்தருளும் ஆண்டவரே. ஆமென்."

லூர்துசெல்வம்.



"எனக்கு நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்." (லூக்.21:13)


"எனக்கு நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்." (லூக்.21:13)
*   *   *   *   *   *   *   *   * *  * *  *
இயேசு தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன நேரிடும் என்பதை முன் அறிவிக்கின்றார்:

" என் பெயரின்பொருட்டு

 உங்களைப் பிடித்து, செபக்கூடங்களுக்கும்

 சிறைச்சாலைகளுக்கும் இழுத்துச் சென்று,

 அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் உங்களைக் கையளித்துத்

 துன்புறுத்துவர்."

இழுத்துச் செல்லப்படுதல்,

கையளிக்கப்படுதல் 

துன்புறுத்தப்படுதல் 

ஆகியவை  இயேசுவைப் பின்பற்றுவதற்காக இவ்வுலகில் நமக்குக் கிடைக்க இருக்கும் பரிசுகள்.

இயேசுவின் மொழியில் சொல்ல வேண்டுமானால் 

நாம் சுமப்பதற்காக  நமக்கு கிடைக்கவிருக்கும் சிலுவைகள்.

இவைதான்

 இயேசுவுக்கு நாம் சாட்சியாயிருப்பதற்கு

 நமக்கு அளிக்கப்படும் வாய்ப்புகள். 

நாம் இயேசுவின் சாட்சிகள் என்பதற்கு அடையாளமாய் இருப்பது இயேசுவுக்காக நாம் அனுபவிக்கும் துன்பங்கள்தான்.

இயேசு நம்மை மீட்பதற்காக

 எதிரிகளிடம் கையளிக்கப்பட்டு

தாங்கவொண்ணா பாடுகள் பட்டு,

சிலுவை மரத்தில் தன்னைப் பலியாக்கினார்.

நாம் எதிரிகளிடம் கையளிக்கப் பட்ட இயேசுவின் சீடர்கள்.

தாங்கவொண்ணா பாடுகள் பட்ட  இயேசுவின் சீடர்கள்.

சிலுவை மரத்தில்  பலியான இயேசுவின் சீடர்கள்.

தாயைப் போலவே பிள்ளை என்பதைப்போல

எசமானைப் போலவே சீடர்கள்.

இயேசுவின் சிலுவை மரணத்திற்குப்பின் எப்படி உயிர்த்தாரோ

அதே போலவே நாமும் உயிர்ப்போம்.

அவரது மரணத்திலும், உயிர்ப்பிலும் பங்கு பெற்ற நாம்

அவரது முடிவில்லா பேரின்பத்திலும் பங்கு பெறுவோம்.

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பது
மிகப் பெரிய சோதனை காலம்.

"கிறிஸ்தவ சமயத்தை அழித்தே தீருவோம்" என்று கங்கணங்கட்டிக் கொண்டிருப்போர் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் இயேசுவுக்குச் சாட்சிகளாய் வாழ்ந்து,

அவருக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்!

இதற்காக வரும் துன்பங்களை மட்டுமல்ல 

நமக்கு வரும் சகலவிதத் துன்பங்களையும் இயேசுவுக்காக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


நமக்குத் துன்பங்கள் வரும்போது அவற்றிலிருந்து தப்பிக்கவே முயல்கிறோம்.

துன்பங்களிலிருந்து தப்பிக்க முயல்வது

 இன்பத்திலிருந்தும்
 தப்பிக்க முயல்வதற்குச் சமம்.

கடைக்குச் சென்று காசு கொடுத்தால்தான் பொருள் வாங்கலாம்.

'காசு கொடுக்க மாட்டேன், ஆனால் பொருள் வேண்டும்' என்று கூறுபவன் எப்படிப் பட்டவனோ

அப்படிப்பட்டவன்தான் 

'இவ்வுலகில் சிலுவை எதுவும் வேண்டாம், மறுவுலக பேரின்பம் மட்டும் வேண்டும்'
என்பவனும்.

அப்படியானால் வியாதி மற்றும் சங்கடங்கள் வரும்போது அவற்றிலிருந்து விடுதலை பெற இறைவனிடம் கேட்கக் கூடாதா?

கேட்கலாம். தப்பில்லை.

ஆனால் உண்மையான விசுவாசி இப்படிக் கேட்பான்:

"தந்தையே, உமக்குச் சித்தமானால் எனக்கு ஏற்பட்டிருக்கும் வியாதியிலிருந்து விடுதலை தாரும்.

நான் துன்பப்பட வேண்டும் என்பது உமது சித்தமானால், அதை நல்ல மனதுடன் தாங்க வேண்டிய மன வலிமையைத் தாரும்."


நமக்கு வரும் துன்பங்களை ஏற்று அவற்றை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தால்

அவை நாம் இறைவனுக்குச் செலுத்தும் பலிப் பொருளாக மாறிவிடுகின்றன.

இறைவன் தன்னையே சிலுவை மரத்தில் பலியாக்கினாரே,

அதற்குப் பதிலாக நாம் ஒரு சிறிய பலியை ஒப்புக் கொடுக்கக் கூடாதா? 

நாம் அனுபவிக்கும் துன்பங்கள்தான் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்குச் சாட்சிகள்.

நாம் அனுபவிப்பதோ முடிவுள்ள துன்பம்.

அனுபவிக்கப் போவதோ முடிவில்லா பேரின்பம்!

நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்காக மற்றவர்கள் நம்மை துன்புறுத்தும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டால்

அதுவே நாம் ஆற்றும் மிகப் பெரிய நற்செய்திப் பணி! 


லூர்துசெல்வம்.

Sunday, November 17, 2019

"ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ?"(லூக்.18:8)

"ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ?"
(லூக்.18:8)
**     **    **    **    **   **  **   **
"ஏங்க! ..."

..."ஒரு வசனம்....விளக்கம், அவ்வளவுதான?"

"அத எப்படி அவ்வளவு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?"

..."ஏண்டி, 'இன்னொரு இறைவசனத்திற்கு விளக்கம் வேண்டும், நாளைக்கு.'ன்னு நீதான சொன்ன,  நேற்று!"

"பரவாயில்லையே நேற்று சொன்னதை இன்று வரை ஞாபகத்தில் வச்சிருக்கீங்களே!

ஆண்டவர்,

"ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ?"

என்று இயேசு என்ன பொருளில் கூறினார்?"

..."இதில் ஒன்றும் மறைமுகமான பொருள் இல்லையே!

இயேசு கூறிய சந்தர்ப்பத்தை நோக்கினாலே பொருள் விளங்கிவிடுமே!

இயேசு எந்த சந்தர்ப்பத்தில் இவ்வசனத்தைக் கூறினார்?"

"இடைவிடாது செபிக்க வேண்டியதின் அவசியத்தை விளக்குவதற்காக இயேசு ஒரு உவமை கூறினார்.

விதவைப் பெண் ஒருத்தி தனக்கு நீதி வழங்கும்படி ஒரு
நடுவனிடம் முறையிடுகிறாள்.

அவன் கடவுளுக்கும் அஞ்சாதவன். 

மனிதனையும் மதிக்காதவன். 

அவன்  வெகுகாலம் நீதி வழங்காமல் காலம் கடத்திக் கொண்டே வந்தான்.

 என்றாலும், இக்கைம்பெண் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்ததால் நீதி வழங்கினான்.

கடவுளுக்கே அஞ்சாத அந்த நடுவனே இடைவிடாது தொந்தரவு செய்து கொண்டிருந்த கைம்பெண்ணுக்கு நீதி வழங்கினான் என்றால் 


 'தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ? 

அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?'

விரைவிலேயே அவர்களுக்கு நீதி வழங்குவார் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.'

என்று இயேசு சொன்னார்.

மனந்தளராமல் எப்பொழுதும் செபிக்க வேண்டும்
என்பதற்காக அவர் இந்த உவமையைச் சொன்னார்.

ஆனால் உவமையைச் சொல்லி முடித்தபின்,

"ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ ?" என்றார்.

மனந்தளராமல் செபித்தால் கேட்டது கிடைக்கும் என்று கூறி விட்டு, 

இந்த வசனத்தை ஏன் கூறினார் என்பது புரியவில்லை."

"உனக்கு ஏன் புரியவில்லை என்பதுதான் என்பது எனக்குப்
புரியவில்லை.

விசுவாசத்துக்கும், செபத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கத்தான் இந்த உவமையயை இயேசு சொன்னார்.

கைம்பெண் நடுவன் தன்  தொந்தரவுக்கு செவி சாய்ப்பான் என்ற உறுதியான நம்பிக்கையுடன்தான் அவனைத் தொந்தரவு செய்தாள்.

நாமும் இறைவனிடம் வேண்டும்போது கேட்பது கிடைக்கும் என்று உறுதியாக நம்ப வேண்டும்.

நமது நம்பிக்கைக்கு ஆதாரமாய் இருக்க வேண்டியது 

இறைவன்மீது நாம் கொண்டிருக்க வேண்டிய ஆழமான விசுவாசம்.

குழந்தை ஏன் தன் தாயிடம் பால் கேட்டு அழுகிறது?

முதலில் அதற்கு அவள் தாய் என்று 'உறுதியாகத் தெரியும்.'

அடுத்து தொடர்ந்து அழுதால் பால் கிடைக்கும் உறுதியாக நம்புகிறது.

குழந்தைக்குத் தெரியும் என்றுதான் சொன்னேன், 'விசுவசிக்கிறது' என்று சொல்லவில்லை.

ஏனெனில் விசுவாசம் தேவ சம்பந்தமான புண்ணியம்.
(Theological virtue)

இறைவனைத் தன் தந்தை என்று விசுவசிப்பவர்களுக்கு மட்டுமே அவர்மீது நம்பிக்கையும் பாசமும் வரும்.

நம்மிடம்  விசுவாசம் இருக்கிறது, ஆனால் ஆழமாக இருக்கிறதா?

ஆழமான விசுவாசத்தால்தான் காரியங்களைச் சாதிக்க முடியும்.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள்தான் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஒருவன் 35% மார்க் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறான்.

இன்னொருவன் 50% மார்க் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறான்.


மற்றும் ஓருவன் 99% மார்க் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறான்.

மற்றும் ஓருவன் 100% மார்க் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறான்.

நால்வரும் வெற்றி பெற்றவர்கள்தான்.

நால்வரும் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்."

"100% எடுத்தவனுக்குதான்.

நான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் எனக்குத் தெரிந்ததையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். 

"நான் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பேனோ" என்ற சந்தேகம் ஏன் இயேசுவுக்கு வருகிறது? "

..."ஏடி, இயேசு  கடவுள். அளவற்ற ஞானம் உள்ளவர். நித்திய காலமாக அவருக்கு எல்லாம் தெரியும்.

சந்தேகம் ஒன்றும் வராது.

நமது மனித மொழியில் பேசுவதால் நமது பேச்சு வழக்கைப் பின்பற்றுகிறார்.

நாம் வகுப்பில் சொல்வதில்லை?

"இப்படிப் படித்தால் பாஸ் பண்ணுவாயாடா? " என்று.

இதற்கு

'நல்லா படிச்சா பாஸ் பண்ணுவன்னு' அர்த்தம்.

'விசுவாசத்தைக் காண்பாரோ' என்பதை 

இயேசு விசுவாசத்தைக் காண ஆசைப்படுகிறார் 

என்று Positive ஆ எடுத்துக்கொள்வோமே! 

நமது விசுவாசத்தின் அளவு
இயேசுவுக்கு உறுதியாகத் தெரியும்.

இயேசுவின் இரண்டாம் வருகைக் காலம் நெருங்கி விட்டது என்று பலர் கூறுகிறார்கள்.

ஆனால் கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் எப்போது இறுதிக்காலம் வரும் என்று.

நாம் வயதில் வளரவளர சாவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்

அதே போல உலகமும் முடிவை  நெருங்கிக் கொண்டுதான் இருக்கிகிறது.

ஆனால் எவ்வளவு நெருங்கி விட்டது என்று யாருக்கும் தெரியாது.

இப்போது பிறக்கிற குழந்தை நூறு ஆண்டுகள் வாழும் என்று வைத்துக்கொண்டால்

அதற்கு ஒரு வயது ஆகும்போதே அது சாவை நோக்கி ஒரு ஆண்டு நெருங்கிவிட்டது என்று கூறலாமே?"

"இங்கே பாருங்க, நான் அந்த விளக்கம் எல்லாம் கேட்கவில்லை.

உலகம் முடிய இன்று 1,000 என்ன
10,000 ஆண்டுகள் வேண்டுமானாலும் ஆகி விட்டுப் போகட்டும்.

நான் கேட்கிற கேள்வி, இப்போது விசுவாச நிலை எப்படி இருக்கிறது?".

..."ரொம்ப பரிதாபகரமான நிலையில இருக்கு!"


"ஏன் அப்படிச் சொல்றீங்க?"

..."உண்மையான விசுவாசம் உள்ளவங்க யாருக்காக, எதுக்காக வாழ்வாங்க?"

"உண்மையான விசுவாசம் உள்ளவங்க யாரை விசுவசிக்கிறாங்களோ அவருக்காக, அவரைத் திருப்திப் படுத்துவதற்காக,

அதாவது கடவுளுக்காக வாழ்வார்கள்!"

..."கடவுளுக்காக மட்டும் வாழ்பவர்கள், 

(மற்றவர்களைக் கணக்கில் சேர்க்கவேண்டாம், அவர்களிடம் விசுவாசம் இல்லை)

கிறிஸ்தவர்களில் எத்தனை பேர் இருப்பார்கள்?"

"தங்களுக்காக வாழ்ந்து கொண்டு,

தங்கள் உதவிக்காக  இறைவனை அழைப்பவர்களின் எண்ணிக்க்கைதான் அதிகம் இருக்கும்."


..."உள்ளூரில் கோவில் இருக்கும். அங்கு போக நேரம் இருக்காது.

ஆனால் குழந்தை வரம் கேட்டு வேளாங்கண்ணிக்குப் போவார்கள்.


உண்மையான விசுவாசிகள்

இறைவனைத் தங்களுக்காக அல்ல, 

தங்களை இறைவனுக்காகப் 
பயன்படுத்துவார்கள்."

"உலகமென்கிலும் இதே கதைதான்.

கோவிலுக்குப் பூசைக்கு வருவோர் எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகக் குறைந்து கொண்டே வருகிறது.

பாவசங்கீர்த்தனம் செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து விட்டது.

தேவ அழைத்தலை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

குருக்களின் பற்றாக்குறை காரணமாக 
தென்னமெரிக்க நாடுகளில்

 திருமணமான வயதானவர்களுக்குக் குருப்பட்டம் கொடுக்கும்டி

 வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் பேரவையில்

 பாப்பரசரிடம் விண்ணப்பித்துள்ளனர்.

இதை மற்ற நாடுகளும் ஆசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

குருக்கள் மத்தியிலும் நற்செய்திப் பணிக்கான ஆர்வம் அதிகரிப்பதாகத் தெரியவில்லை.

சில துறவற சபைக் குருக்கள் பள்ளிக்கூடப் பணியில் காட்டும் ஆர்வத்தை 

நற்செய்திப் பணியில் காட்டுகிறார்களா? 

ஆடம்பரத் திருழாக் கொண்டாட்டத்தில் உள்ள ஆர்வம்

மக்களுக்கு ஆன்மீக வாழ்வில் இருக்கிறதா?

ஏழ்மையில் பிறந்த இறைமகனின் கிறிஸ்மஸ் விழாக்களில் காணப்படும் பணக்காரத்தனமும்,

 ஆடம்பரமுமே 

நமது விசுவாச ஏழ்மையின் கண்ணாடி.

திருவிழாவின் வெற்றி 
பிரியும் காணிக்கையை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது.

செபக்கூட்டங்களில்கூட குணமளிக்கும் செபத்தைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்."

..."ஏண்டி, ஒண்ணும் தெரியாதது மாதிரி முழிச்ச

இவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்க.

இப்போ சொல்லு, இப்போ ஆண்டவர்  உலகிற்கு வந்தார்னா விசுவாசத்தைக் காண்பாரா?"

"சந்தேகம்தான். யாருக்கும் விசுவாசம் இருக்கிறது மாதிரி தெரியல, 

அதாவது வெளியே தெரியற அளவுக்கு இல்ல.


யாரிடமும் அர்ப்பண வாழ்வு இல்ல,

அற்ப பண வாழ்வுதான் இருக்கு.


செபம் சொன்னாக்கூட இவ்வுலகு சம்பந்தப்பட்ட பொருட்களுக்காகத்தான் சொல்றாங்க."

..."ஆனால் அர்ப்பணவாழ்வு உள்ளவங்க யாருமே இல்லைன்னு சொல்ல முடியாது.

இருக்காங்க. ஆனால் உலகம் அவங்கள மதிக்கிறதில்ல."

"உண்மைதான். 

உலகம் பணம் உள்ளவங்களையும் அதிகாரம் உள்ளவங்களையும்தான் மதிக்கிறது."

..."நாம் யாருடைய மதிப்பையும் சம்பாதிப்பதற்காக உலகில் பிறக்கவில்லை.

நமது பிறப்பின் ஒரே நோக்கம் இறைவன் மட்டும்தான்.

இறைவனை அடைவதற்கு இவ்வுலகைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வுலக காரியங்களுக்காக மட்டும் இறைவனை அணுகி,

நமது உண்மையான நோக்கத்தை மறந்து விடுவோமானால் 

நமது  விசுவாசத்தினால் நமக்குப் பயனில்லை, அது இல்லாதது மாதிரிதான்.

இறைவன் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வதுமட்டும் முழுமையான விசுவாசம் அல்ல.

 இறைவனுக்காக நம்மை முழுவதும் அர்ப்பணிப்பதே முழுமையான விசுவாசம். 

ஆகவே,

விசுவசிப்போம்,

அர்ப்பணிப்போம்,

வாழ்வடைவோம்.

"ஆண்டவரே, நீர் வரும் நாளில் விசுவாசத்தைக் காண்பீர்"

என அவருக்கு உறுதி அளிப்போம்! 

லூர்துசெல்வம்