Friday, March 1, 2019

நாம் ஏன் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்?

நாம் ஏன் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்?
****-*********************

நமது சிந்தனைக்கு இரண்டு கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.

As many heads so many opinions.

ஆளுக்கு ஆள் சிந்தனைகள் மாறுபடும்.

நான் என் சிந்தனைகளைப் பதிவு செய்கிறேன்.

கேள்விகள்:

1நாம் ஏன் கிறிஸ்தவர்களாக
இருக்கிறோம்?

2.நாம் ஏன் கிறிஸ்தவர்களாக
இருக்கிறோம்?

முதல் கேள்வி "நாம் ஏன் இந்தியர்களாக இருக்கிறோம்.?" என்ற கேள்வி மாதிரி.

இதற்கு ஒரே பதில்தான்:

நாம் இந்தியாவில் பிறந்ததால்
இந்தியர்களாய் இருக்கிறோம்.

இதே மாதிரி

நாம் ஏன் கிறிஸ்தவர்களாக
இருக்கிறோம்?

என்று கேட்டால் என்ன பதில் வரும்?

நாம் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்.

அதாவது, கிறிஸ்தவனாக வாழவேண்டுமென்பதற்காக அல்ல

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்.

இது கேள்விக்கு உரிய பதிலாய் இருக்கலாம்         

உண்மையான பதிலாகக்கூட இருக்கலாம்.

ஆனால் வாழவழிகாட்டும் பதில்அல்ல.

"கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்ததால் ஞானஸ்நானம் பெற்றோம்.

கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்ததால் கோவிலுக்குப் போகிறோம்,

கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்ததால் கோவில் வரிக் கட்டுகிறோம்,

கோவிலில் விழாக்கள் கொண்டாடுகிறோம்,

கோவிலை புதுப்புது டிசைனில் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கிறோம்

விழாக்காலங்களில் புதுசுபுதுசாய் ட்ரஸ் போடுகிறோம்,

சப்பரம் இழுக்கிறோம்

விழாக்காலங்களில் விருந்தினர்களுடன் விருந்து உண்கிறோம்,

சாமியார் கோவில் காரியங்களுக்காய் நன்கொடை கேட்டால் ஆயிரக்கணக்காய் அள்ளிக்கொடுக்கிறோம்

இதெல்லாம் கிறிஸ்தவனின் அடையாளமில்லையா?"

"அடையாளம்தான்.

வெறும் அடையாளம் நம்மைக்  கிறிஸ்தவனாக்கி விடாது.

யூனிபார்ம் அணிந்து பள்ளிக்கூடம் போகின்றவர்களெல்லாம் மாணவர்கள் ஆகிவிட முடியாது.

வெளி அடையாளங்கள் நம்மை கிறிஸ்தவர்களாக ஆக்காது.

கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால்தான்

நாம் கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்துவை நம் வாழ்வின் வழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்து தன் தந்தையை நேசிக்கிறார், நம்மையும் நேசிக்கிறார்,

நாமும் இறைவனையும், நம் அயலானையும் நேசிக்கவேண்டும்.

நம் அயலானை இறைவனுக்காக நேசிக்கவேண்டும்.

இறைவனுக்காக நேசித்தால்தான் விண்ணகத்தில் சன்மானம் உண்டு.

இயேசு தன்னைப் பகைத்தவர்களையும் நேசித்தார்.

தன்னைக் காட்டிக்கொடுத்தவனை 'நண்பா' என்று அழைத்தார்.

தன் மரணத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தன் தந்தையிடம் வேண்டினார்.

நாமும் நம்மைப் பகைப்பவர்களையும் நேசிக்கவேண்டும்.

நமது அதிகாரத்தின் கீழ் உள்ளவர்கள் நமக்கு விரோதமாகச் செயல்பட்டாலும்,

நம்மை அவமானப் படுத்தினாலும்

அவர்ளை மன்னித்தால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

அவர்களை நம் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தண்டிப்பது கிறிஸ்தவப் பண்பு அல்ல.

அது  அரசியல்வாதிகளின் பண்பு.

நமது பிறரன்பு நினைவோடும், சொல்லோடும் நின்றுவிடாமல் செயலிலு ம் வெளிப்பட்டால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

இயேசுவால் நிறுவப்பட்ட தேவத்திரவிய அனுமானங்களை ஒழுங்காகப் பெறுபவர்கள்
உண்மையான கிறிஸ்தவர்கள்.
(Underline ஒழுங்காக)

முதலில் நமது சென்மப்பாவத்தை நீக்கி நம்மை திருமறைக்குள் ஏற்று

இறை உறவை ஆரம்பித்து வைப்பது ஞானஸ்நானம்.

திருமறைக்குள் நுழைவது வேடிக்கை பார்ப்தற்காக அல்ல.

திருமுழுக்கு அன்று குருவானவர் நம்மீது வெண்ணிற ஆடை ஒன்றைப் போர்த்துவார்.

வெண்ணிறம் நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தின் அடையாளம்.

நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தை

நாம் விண்ணகத்திற்குள் நுழையும்வரை

மாசுபடாமல் பாதுகாத்து,

அதைப் புண்ணியங்களால் அலங்கரிப்பதுதான்

திருமறைக்குள் நமது வேலை.

இந்த வேலையை ஒழுங்காகச் செய்ய

நமக்கு உதவியாய் நம்முடன் இருப்பது

நாம் யாருக்காக வாழ்கிறோமோ

அதே இயேசு,

பங்கு சுவாமியார் உருவத்தில்.

இயேசு

நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தில் மாசு படநேர்ந்தால்

பாவசங்கீத்தனம் மூலம் அதைக் கழுவி சுத்தப்படுத்துவார்.

தன்னையே நம் ஆன்மீக உணவாய்த் தந்து நம்மைப் பலப்படுத்துவார்.

தேர்வுக்காகப் பாடங்கள் படித்துக் கொண்டிருக்கும் பையனிடம் சமையல் உட்பட எல்லா வீட்டு வேலைகளையும் கொடுத்தால் அவன் என்ன செய்வான்?

படிக்க நேரம் இருக்காது.

"ஏன் தம்பிபாடம் படிக்கவில்லை?" என்று கேட்டால் அவன் என்ன சொல்வான்?

"எங்கே  படிக்கவிட்டீர்கள்."
என்றுதான் சொல்லுவான்.

திருச்சபை ஊழியர்களின் பணி முழுக்க முழுக்க ஆன்மீகப் பணி.

சுமார் 14வருடங்கள்  கஷ்டப்பட்டு ஆன்மீகப் பயிற்சி  கொடுத்து,

குருப்பட்டமும் கொடுத்துவிட்டு

ஆன்மீகப்பணியோடு

பள்ளிக்கூட நிருவாகம்,

நில  நிருவாகம்,

பண நிருவாகம் போன்ற

நேரம் விழுங்கி நிருவாகங்களையும் கொடுத்தால்

அவர்கட்கு ஆன்மீக வேலைக்கு நேரம் எங்கே இருக்கும்?

நம்மைப் பொறுத்தமட்டில்  பங்குத் தந்தை கிறிஸ்துவாக இருந்து,

நமக்கு நற்செய்தியை அறிவித்து,

நமது பாவங்களை மன்னித்து,

நமக்கு ஆன்மீக உணவு ஊட்டி,  

நம்மை மோட்சபாதையயில் வழி நடத்த வேண்டியவர்.

கிறிஸ்துவாக வாழ்ந்துகொண்டிருக்கும்  நமது குருக்களின் துணை கொண்டு

இயேசுவின் பண்புகளை அறிந்து,

அவற்றை நமதாக்கி,

'கிறிஸ்து என்னில் வாழ்கிறார்'

என்று கூறும் அளவிற்கு

கிறிஸ்துவாக
வாழவே

நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்.

We are Christians to live Christ.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment