Tuesday, March 5, 2019

"இம்மையில் இன்னல்களோடு கூட............ மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான்."(மாற்.10:30)

"இம்மையில் இன்னல்களோடு கூட............ மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான்."(மாற்.10:30)

இயேசு
+++++++++++++(+++(+++++++

இயேசு செல்வந்தர்களையும், இறையரசையும் பற்றி போதித்தபோது

இராயப்பர் அவரிடம், "இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்றோமே" 

என்றார்.

உமக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த எங்களுக்கு  என்ன கிடைக்கும்" என்ற பொருள்பட இவ்வாறு கேட்டார். 

இயேசு உலகில் அனைத்தயும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றுபவர்கட்கு

இவ்வுலகில் இன்னல்களும்

மறுவுலகில் நிலைவாழ்வும் கிடைக்கும் என்றார்.

இவ்வுலக அரசியல்வாதிகள்

தாங்கள் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக

தாங்கள் பதவிக்கு வந்தால் என்னவெல்லாமோ கிடைக்கும் எனப் பொய் கூறி

ஆட்சிக்கு வந்து மக்களுக்கு ஒன்றுமே கொடுக்காமல் ஏமாற்றிவிடுவார்கள்.

ஆனால் விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் அரசராகிய இயேசு

உண்மையைச் சொல்லி நம்மை அழைக்கிறார்.

"என்னைப் பின்பற்றுபவர்கள்

என்பொருட்டு பல இன்னல்கட்கு உள்ளாவார்கள்,

ஆனால் மறுவுலகில் நித்திய பேரின்பத்தை அடைவார்கள்"

என்ற உண்மையைக்கூறி, தன்னைப் பின்பற்ற அழைக்கிறார்.

நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இயேசு இவ்வுலகில்மனிதனானதே நாம் செய்த பாவங்கட்குப் பரிகாரமாகப் பாடுபபட்டு மரிக்கவே.

யாருடைய சீடர்கள் என்பதில் நாம் பெருமை கொள்கிறோமோ அவரே நமக்காகத் துன்பங்கள் பட்டபோது,

அவரது சீடர்கள் என்பதற்காக நாம் துன்பப்படுவது நமக்குப் பெருமைதானே!

ஆகவே வாழ்வில் இன்னல்கள் வரும்போது நாம் கலங்கத் தேவையில்லை.

நமக்காகக் காத்திருக்கும் நித்திய பேரின்பத்தை நினைத்து மகிழ்வோம்.

சிலுவைக்குப் பிறகு உயிர்ப்பு உறுதி!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment