"பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்"
+++++++++++++++++++++++++
பாவிகளாகிய நாம் பாக்கியவான்கள்,
ஏனெனில் நம்மைத் தேடிவந்திருப்பவர் சாதாரண ஆள் அல்ல.
இப்பிரபஞ்சத்தையே (The whole universe)
'ஆகுக' என்னும் ஒரே சொல்லால் படைத்து ஆண்டு நடத்திவரும் சர்வ வல்லப தேவன்.
அது மட்டுமல்ல நாம் பாவிகள் என்பதற்காகவே நம்மைப் பார்க்க வந்தார்.
பாவிகள் என்றால் பாவம் செய்தவர்கள் என்று பொருள்.
அதுவும் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்.
விரோதமாகச் செயல்படுபவன் விரோதி.
பாவத்தின் காரணமாக விரோதிகளாக மாறிவிட்ட நம்மை பாவமே செய்ய முடியாத பரிசுத்தர் ஏன் பார்க்க வந்தார்?
ஏனெனில் நாம்தான் பாவத்தால் விரோதிகளானோம்.
ஆனால் பரிசுத்தராகிய அவர் என்றும் நண்பர்தான்.
நமது பாவங்களை மன்னித்து நம்மைத் தன் நண்பர்களாக மாற்றவே நம்மைத் தேடிவந்தார்.
இவ்வளவுக்கும்நம்மை நம்மைத் தன் நண்பர்களாக மாற்றுவதில் அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை.
நமக்குதான் ஆதாயம்.
நமது பாவகள் மன்னிக்கப்பட
வேண்டுமானால் பாவப்பரிகாரம் செய்யவேண்டுமே.
அளவுள்ள நம்மால் அளவற்ற அவருக்கு எதிராகச் செய்யப்பட்ட பாவங்களுக்குப் பரிகாரம் செய்யமுடியாது என்று அவருக்குத் தெரியும்.
ஆகவே அவரே மனிதனாய்ப் பிறந்து மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்யத் தீர்மானித்தார்.
பாவிகளாகிய நமக்காக மனிதனாய்ப் பிறந்து,
நமக்காகப் பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்து,
நமக்காகக் கசைகளால் அடிபட்டு,
நமக்காக முண்முடி சூட்டப்பட்டு,
நமக்காகப் பாரமான சிலுவையைச் சுமந்து,
நமக்காகச் சிலுவையில் அறையப்பட்டு,
நமக்காகவே உயிர் துறந்து
நமது பாவங்ளுக்கு அவரே பரிகாரம் செய்தார்.
இன்றும் பாருங்கள்,
அவர் இறந்து, உயிர்த்து, விண் எய்தி 2000 ஆண்டுகள் ஆன பின்னும்
நம்முடன் இருக்கிறாரே,
திவ்ய நற்கருணையில்,
நாம் எவ்வளவு பெரிய பாக்கியவான்கள்!
உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான குருக்களும், ஆயர்களும் அவருடைய பிரதிநிதிகளாக வலம் வருகிறார்களே, எதற்காக?
நமக்காகத் திருப்பலி நிறைவேற்றவும்,
இறைவனையே உணவாகத் தரவும்,
நமது பாவங்களை மன்னிக்கவும்,
நமக்கு மற்ற தேவத்திரவிய அனுமானங்களை நிறை வேற்றவும்
ஆயிரக்கணக்கான குருக்களையும்,
ஆயர்களையும் பெற்ற நாம் எவ்வளவு பெரிய பாக்கிவான்கள்!
ஆனால் நாம் என்ன செய்கிறோம்?
பள்ளிக்கூட நிர்வாகம்,
நிலபுலன், வரவு, செலவு நிர்வாகம்,
கோடிக்கணக்கில் செலவழித்து கோவில்கள் கட்டி கட்டடங்களைப் பராமரித்தல்,
போன்ற நமது பணிகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு,
பாவமே செய்யாத புண்ணியவான்கள் போல
உலகைச் சுற்றிக் கொண்டிருக்கிறோம்!
பாவசங்கீத்தனங்கள் குறைந்துவிட்டதால் பாவங்கள் குறைந்துவிட்டது என்று பொருளல்ல.
நமது பாவமூட்டைகளை ஆன்மீக வைத்தியராகிய குருவிடம் சென்று
அவிழ்த்துக் கொட்டாமல் நாமே பத்திரமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் பொருள்.
சர்வ வல்லபர் நமது பாவங்களுக்காக தன்னையே உயிர்ப்பலியாக கொடுத்து பரிகாரம் செய்திருக்கிறார்.
நமது பாவங்களை மன்னிப்பதற்காக ஆயிரக்கணக்கான குருக்களையும் தந்திருக்கிறார்.
அவர்களைப் பயன்படுத்தி பாவ மன்னிப்புப் பெற்றால்
நாம்தான் பாக்கியவான்கள்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment