நோக்கமும் செயலும்.
*************************
நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்று போல் இருக்க வேண்டும்.
சிந்திப்பதைச் சொல்லி
சொல்வதைச் செய்ய வேண்டும்.
Honest people are those whose thought, word and action tally with one another.
சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒத்துவராதவர்கள் வெளிவேடக்காரர்கள்.
(Hypocrites)
நமது செயலின் தன்மையைத் தீர்மானிப்பது நமது சிந்தனையில் பொதிந்திருக்கும் நோக்கம்தான்.(intention)
செயல் ஒன்று.
அது நல்ல செயலா
அல்லது
கெட்ட செயலா
எனத்தீர்மானிப்பது நமது நோக்கம்தான்.
நமது நோக்கம் மனதில் இருப்பதால் அது கடவுளுக்கும், நமக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
நமது செயலைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.
கடவுள் என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம்
இயேசு சொல்கிறார்,
"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."(மத்.6:1)
அதாவது நாம் செய்யும் நற்செயல்கள் மற்றவர்கள் பார்க்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக,
அதாவது
நம்மை மற்றவர்களிடம் விளம்பரப்படுத்திக்
கொள்வதற்காகச் செய்யப்படக்கூடாது.
அதாவது, நாம் சுயவிளம்பரத்திற்காகவும், தற்புகழ்ச்சிக்காவும் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.
செய்தால் மறுவுலகில் அதற்குச் சன்மானம் கிடைக்காது.
மற்றவர்கள் புகழ்வதுமட்டுமே அதற்குரிய சன்மானம்.
தபசுகாலத்தில் ஒறுத்தல் செய்கிறோம், நோன்பிருக்கிறோம், தர்மம் செய்கிறோம்.
ஆனால் மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பாராட்டவேண்டும்
என்பதற்காகச் செய்தால் இறைவனின் பாராட்டு கிடைக்காது.
அதே சமயத்தில் நாம் மற்றவர்கட்கு முன்மாதிரிகையாக விளங்கவேண்டும் என்றும் இயேசு விரும்புகிறார்.
"அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக.("மத்.5:16)
அதாவது உங்கள் நற்செயல்களை மக்கள் காணவேண்டும்.
இயேசுவுக்காகச் செய்யப்படும் நற்செயல்களைக் கண்டு மக்கள் இறைவனை மகிமைப்படுத்தவேண்டும்.
ஆக,
"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள். இல்லையேல், வானகத்திலுள்ள உங்கள் தந்தையிடம் உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது."
(மத்.6:1)
16 "அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக."(மத்.5:16)
"நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி"
"மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு,"
என்ற இரண்டு வசனங்களும் மேலோட்டமாய்ப் பார்த்தால் முறண்படுவதுபோல் தோன்றும்.
ஆனால், எந்த முறண்பாடும் இல்லை.
நற்செயல்கள் மனிதர்களுக்குச் செய்யப்படுகின்றன.
அவற்றிற்கு இறைவனின் அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென்றால்
நமது நோக்கம்
'இறைவனின் மகிமைக்காக' என்று இருக்க வேண்டும்.
தற்பெருமைக்காகவோ, தற்புகழ்ச்சிக்காகவோ இருக்கக்கூடாது.
இறைப்புகழை நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் நற்செயல்களுக்கு மட்டுமே இறைவனின் சன்மானம் கிடைக்கும்.
எல்லாம் இறைவனின் அதிமிக மகிமைக்கே.
Ad maiorem Dei gloriam
"For the greater glory of God."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment