Thursday, March 14, 2019

அன்பு, அன்பு, அன்பு, அன்பு, அன்பு, அன்பு, அன்பு, அன்பு.

அன்பு, அன்பு, அன்பு, அன்பு, அன்பு, அன்பு, அன்பு, அன்பு.

*****************************

ஒரே மலர் ஒரே நேரத்தில் நறுமணமும், துர்மணமும் வீசமுடியுமா?

தம்ளரிலுள்ள பால் ஒரே நேரத்தில் சூடாகவும், குளிராகவும் இருக்கமுடியுமா?

எதிர் எதிர் குணங்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருக்கமுடியாது.

கடவுள் அளவற்ற அன்புள்ளவர்.

கடவுள் அன்பு ஆனவர்.

God is love.

அன்பு என்றால் அன்புதான்.

அன்போடு ஒத்துவராத எந்த குணமும் அன்புடன் இருக்கமுடியாது.

கடவுளுடைய நீதியும் அன்புமயமானதுதான்.

அதனால்தான் நாம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக தன்னையே சிலுவையில் பலியாக்கிக்கொண்டார்.

அவரது ஞானமும் அன்புமயமானதுதான்.

ஆகையினால்தால் அவரது அளவுகடந்த அறிவையும், ஞானத்தையும் நம்மை பாவத்திலிருந்து மீட்கப் பயன்படுத்தினார்.

அவரது வல்லமையும் அன்புமயமானதுதான்.

ஆகையினால்தான்

தன்னையே நமது ஆன்மீக உணவாகத் தருவதற்காக 

தனது அளவுகடந்த சக்தியை

சாதாரண அப்பத்தையும், இரசத்தையும் தன்

உண்மையான உடலாகவும், ரத்தமாகவும் மாற்றப்

பயன்படுத்துகிறார்.

ஆக, சர்வேஸ்வரன் சர்வமும் அன்பு மயமானவர்.

அவரது அன்பு நித்தியமானது,

அவரது அன்பு மாறாதது,

அவரது அன்பு குறையாதது.

முழுவதும் அன்பாயிருப்பதால்

அதோடு ஒத்துவராத

வெறுப்பு,

கோபம்,

பொறாமை,

வன்மம்,

பழிவாங்கும் குணம் போன்றவை

அணுவளவுகூட

அவரிடம் இருக்கமுடியாது.

சிலர் பழைய ஏற்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டு,

"கடவுளுக்கு கோபம் வந்திருக்கிறது,

இஸ்ராயேல் மக்களின் மக்களின் வரலாற்றை வாசித்துப் பாருங்கள்"

என்று கூறுவார்கள்.

ஆனால் சில அடிப்படை உண்மைகளை மனதில் வைத்துக்கொண்டு பழைய ஏற்பாட்டை வாசித்தால்தான் கடவுளைப்பற்றிய உண்மையான பண்பு தெரியும்.

1.புதிய ஏற்பாட்டின் கடவுளாகிய இயேசுதான் பழைய ஏற்பாட்டின் கடவுள்.

கடவுள் மாறாதவர் மட்டுமல்ல, மாறமுடியாதவர்.

இயேசு பழைய ஏற்பாட்டில் கோபக்காரராக இருந்து,

புதிய ஏற்பாட்டில் அன்பின் கடவுளாக மாறிவிட்டாறா?

பழைய ஏற்பாட்டில் எதிரிகளோடு போரிட்டு அவர்களை அழிக்கும்படி  யூதமக்களுக்குச்
சொல்லிவிட்டு

புதிய ஏற்பாட்டில் மனம் மாறி எதிரிகளை நேசிக்கச் சொன்னாரா?

இல்லை.

இயேசுவின் அன்பு என்றும் மாறாது.

பழைய ஏற்பாட்டைப் புரிந்து வாசித்தால் இது புரியும்.

2.அரூபியாகிய கடவுள் தனது நித்திய திட்டப்படி மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக நம்மைப்போல் மனிதனானார். 

இயேசு மனிதருக்குப் புரியும் மனித மொழியில்  போதித்தார்.

அவரது சமகாலத்தவர்கள் புதிய ஏற்பாட்டை எழுதினார்கள்.

பழைய ஏற்பாட்டில் இயேசு தேவசுபாவத்தில் தீர்க்கரிசிகள் மூலமாகப் பேசினார்.

பழையஏற்பாட்டை எழுதியவர்கள்,

இறைவன் தங்களுக்கு அறிவித்ததை

மக்கள் அறியும்படி எழுதியவர்கள்

எழுத கையாண்ட முறைகளை நாம் கண்டுபிடிக்காததுதான்

பிரச்சனைகட்குக் காரணம்.

அவர்கள் தாங்கள் கூறியதை

கேட்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக

கடவுளுக்கு நமது ஐந்து புலன்களையும்

நமது சில பண்புகளையும் கொடுத்து,

கடவுள் பேசினார், கண்டார், கோபித்தார், மனம் மாறினார் என்றெல்லாம் எழுதினார்கள்.

மக்கள் பேசும் முறையில் பேசினால்தான் மக்களுக்குப் புரியும்.

இதெல்லாம் தாங்கள் சொல்லவந்ததை

அழுத்தம் கொடுத்து சொல்வதற்கு அவர்கள்

கையாண்ட யுக்தி.

உண்மையில் கடவுள் உருவம் அற்றவர்.

கோபம் போன்ற பண்புகள் அவரிடம் இருக்கமுடியாது.

நான் ஒரு ஆசிரியர்.

மாணவர்கள் பாடத்தை நன்கு படிக்கவேண்டுமென்பதற்காக,

"நாளை பாடத்தை தவறு இல்லாமல் ஒப்பிக்காவிட்டால்

கொன்னுப்புடுவேன்,

தொலிய உறிச்சிறுவேன்,

அப்பனுக்குப் பிள்ளையாய் போய்க்கிடமாட்ட"

என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன்.

மாணவர்கட்கு நான் சொல்வதன் அருத்தம் புரியும்.

நன்கு படிக்கவேண்டும் என்பதை அழுத்த

ஆசியர்கள்

நான் மாணவனாயிருந்த காலத்திலிருந்தே

கையாண்டு வந்த யுக்தி இது.

ஆனால் இப்போது அந்த யுக்தியைக் கையாண்டால் மாணவர்கள் ஆசிரியர்மேல் கொலை மிரட்டல் கேஸ் போட்டு விடுவார்கள்.

அந்த மாணவனுக்குத் தற்செயலா ஏதும் நடந்துவிட்டால்கூட ஆசிரியர் மேல் பழியைப்  போட்டுவிடுவார்கள்.

3.அடுத்து பழைய ஏற்பாட்டை எழுதியவர்ள் கையாண்ட யுக்தி

இஸ்ரயேல் மக்களும், மற்ற மக்கள் செய்த அநேக காரியங்களுக்கு

கடவுளைக் காரணர் ஆக்கியது.

முதலில் ஒரு Analogy கொடுத்துவிடுகிறேன்.

ஒரு நான் என் மகன்வீட்டிற்குச் சென்றபோது என் பேரன்மார் இருவரும்

பயங்கரமாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்தவுடன் சண்டையை நிறுத்திவிட்டு என்னிடம் சண்டைக்கான காரணத்தைக் கூற ஆரம்பித்தார்கள்.

கூறி முடித்தவுடன்,

"தாத்தா, நீங்கள் கூறுங்கள், எங்கள் சண்டைக்கான காரணம் யார்? "

நான் கூறினேன்,

"சண்டைக்கான காரணம் நான்தான்.

நான் உங்கள் பாட்டியைக் கல்யாணம் செய்திருக்காவிட்டால்

உங்கள் அப்பாவும் பிறந்திருக்கமாட்டான்,

நீங்களும் பிறந்திருக்கமாட்டீர்கள்.

ஆகையினால் நான்தான் காரணம்" என்றேன்

பேரன்மார் சண்டையை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பழைய ஏற்பாட்டை எழுதியவர்கள் எழுதிய முறை இதுதான்.

உலகோர் செய்யும்  எல்லா செயல்களுக்கும்

ஆதி காரணர்

அதாவது

முதற்காரணர்  (Primary Cause) கடவுள்.

ஏனெனில் செயலைச் செய்தவர்களைப் படைத்தவர் அவர்தான்.

இரண்டாம் அல்லது உடனடிக் காரணர்(Secondary cause) செயலைச் செய்தவர்கள்.

செயலுக்குப் பொறுப்பு ஏற்கவேண்டியவர்கள் செயலைச் செய்த இரண்டாம் காரணர்தான்,

ஏனெனில்

இறைவன் அளித்த சிந்தனை, தேர்வு, செயல் சுதந்திரத்தை

(freedom of thought, choice and action)

சரியாகவோ, தவறாகவோ

பயன்படுத்துபவர்கள் அவர்கள்தான்.

பிரச்சனை என்னவென்றால் எழுதியவர்கள் ஆதிகாரணரை செயலுக்குக் காரணமாக எழுதியதுதான்.

உதாரணம்:


    

"ஆனால், நாம் பாரவோனுடைய இதயத்தைக் கடினப்படுத்தி, "
(யாத்.7:3)

"ஆண்டவர் பாரவோனின் நெஞ்சைக் கடினப் படுத்தியமையால், அவன் இஸ்ராயேல் மக்களை அனுப்பிவிட்டானில்லை."
(யாத்.10:20)

இவ்வசனங்களில் ஆண்டவர்தான் பாரவோனின் நெஞ்சைக் கடினப்படுத்தியதாக எழுதியவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை அப்படியே, Literally, பொருள் கொண்டால் நாம் நம் அன்புக்கடவுளைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஆவோம்.

உண்மையில் கடவுள் நெஞ்சைக் கடினமாக்கவில்லை.

அவர் முதற்காரணர், அதாவது, பாரவோனைப் படைத்தவர்.

பிள்ளை செய்த தவற்றுக்கான காரணத்தை பெற்றவர் மேல்போடுவதுபோல்.

இவ்வாறே இஸ்ராயேலர் ஜெரிக்கோ நகரைக் கைப்பற்ற செய்த கொலைகளுக்கும் கடவுளையே காரணமாகக் காட்டியிருப்பார் எழுதியவர்.

ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "இதோ நாம் எரிக்கோவையும் அதன் அரசனையும் போர்வீரரையும் உன் கையில் ஒப்படைத்தோம்.
(யோசுவா6:2)

இவ்விதமாய் ஆண்டவர் யோசுவாவோடு இருந்தார். அவருடைய புகழ் நாடு முழுவதும் பரவிற்று.(யோசுவா6:27)

"கொலை செய்யாதிருப்பாயாக"

என்று சீனாய்  மலையில் கட்டளை கொடுத்த கடவுள்

ஜெரிக்கோ நகரிலுள்ள அவர் பிள்ளைகளைக் கொலை செய்யச் சொல்லுவாரா?

இந்நாட்களில்கூட நிறைய பெற்றோர்

பிள்ளைகள் செய்யும்  அட்டூழியங்களுக்கான பழியைச் சுமப்பதைப் பார்க்கிறோம்.

பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது எனக்கு கடவுள்மேல்தான் பாவமாயிருக்கிறது.

எழுதியவர்கள்தான் என்ன செய்வார்கள்,

அவர்கட்குத் தெரிந்த யுக்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அன்பு மிகுதியால்

அன்பை எதிர்பார்த்து

படைத்த கடவுள்  எப்போதும் நம்மோடு இருக்கிறார்,

நம்மை பராமரிக்கிறார் என்ற கருத்தை வலியிருத்திக் கூறுவதற்காகவே

இஸ்ராயேலர் செய்த வேண்டாத செயல்களுக்கும் அவரைக் காரணராக்கிவிட்டார்கள்.

பழைய ஏற்பாட்டைச் சரியாகப் புரிந்துகொள்வோம்.

கடவுள் அன்பு மயமானவர்.

God is love.

அன்பு செய்வதைத் தவிர
வேறெதுவும் செய்யத் தெரியாதவர் எல்லாம் வல்ல கடவுள்!

நாம் செய்த பாவங்களுக்கான பழியைக்கூட தானே ஏற்று,

அதற்கான பரிகாரத்தைச் செய்ய தன் இன்னுயிரையே பலி கொடுத்த அன்பின் வடிவம் கடவுள்!

இன்றும்

நமது அன்பை எதிர்நோக்கி

ஒரு சாதாரண திவ்ய நற்கருணைப் பேழைக்குள்

அல்லும் பகலும்

காத்துக்கொண்டிருப்பவர் கடவுள்!

அவருக்கு ஏற்படும் அவமரியாதைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு

தினமும் தன்னையேநமது ஆன்ம உணவாகத் தந்து கொண்டிருக்கிறார்!

நாம் செய்யும் தவமுயற்சிகட்கும்,

தான தருமங்களுக்கும்,

பக்தி முயற்சிகட்கும்

உயிர் அன்பு.

அன்பு இல்லையேல் எல்லாம் வீண். 

நாம் வாழ்வதே

இறைவனையும்,

அயலானையும்

சிந்தையாலும்,

சொல்லாலும்,

செயலாலும்

அன்பு செய்வதற்கே,

அன்பு செய்வதற்கு மட்டுமே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment