"எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்."
****************************-
"அண்ணே, சில பேர் பேசறது புரியமாட்டேங்கிறது.
காலையில என் பழைய நண்பர் ஒருவரைப் பார்த்தேன்.
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்னு கேட்டேன்.
அவர் சொன்னார் 'மூன்று பையன்கள். அதில இரண்டுபேர் Brothers'ன்னு சொன்னார்.
அதெப்படி அண்ணே, மூன்று பையன்கள்னு சொன்னா மூன்று பேரும் Brothers'தானே!
புரியல."
"உனக்கு என்ன புரியலைன்னு எனக்குப் புரியல."
"அண்ணே, மூன்று பிள்ளைகள், மூன்றும் பையன்கள், அப்போ மூன்றும் Brothers'தான. அதெப்படி இரண்டு Brothers'?"
"நீ பார்த்த நண்பர் யாருன்னு எனக்குத் தெரியும். மூன்றாவது பையன் யார்னு கேட்டியா? "
"அத நான் கேட்கல. அவர் முதல்ல சொன்ன பதிலே புரியல."
"நீ அதக் கேட்டிருந்தா அவர் பதிலில மயங்கியே விழுந்திருப்ப."
"அப்படி அவர் என்ன சொல்லியிருப்பார்? "
"அவர் ஒழுங்காக, சரியாகத்தான் சொல்லியிருப்பார். உன் புத்திக்கு எட்டாம மயங்கி விழுந்திருப்ப."
"அப்படி என்ன சொல்லியிருப்பார்? "
"அத நீயே கேட்டுத் தெரிஞ்சிக்கோ.
அங்கே பார். அவரே வந்துக்கிட்டிருக்கிறார்.
ஹலோ! வணக்கம்."
"வணக்கம். பல ஆண்டுகட்குப் பிறகு இப்போதான் சந்திக்கிறோம். நண்பரைக் காலையில பார்த்தேன். எப்படி இருக்கீங்க? "
"நான் நல்லா இருக்கேன். இதொ இவர்தான் நல்லாயில்ல."
"ஏன்? என்ன பிரச்சனை? காலையிலகூட பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோமே.
அப்போ அவர் ஒண்ணும் சொல்லலிய ."
"இப்போ பிரச்சனையே நீங்க காலையில பேசிக்கிட்டிருந்ததுதான்."
"ஏன்? நான் ஒண்ணும் தப்பாச் சொல்லலியே! "
"அத அவன் கிட்டேயே கேளுங்க."
'ஹலோ! என்ன பிரச்சனை? "
"நான் நேரடியாகவே விசயத்துக்கு வர்ரேன். உங்க பையங்க மூன்று பேர்ல இரண்டு பேர் ப்ரதர்ஸ்னு சொன்னீங்கள்ல."
"ஆமா."
"அப்போ மூன்றாவது பையன்?"
"Father."
"அவரப் பிடிச்சிக்கிங்க. கீழ விழுந்திடப்போறார்."
"ஏன்? "
"நானே கேட்டிடுதேன்.
உங்ளுக்கு மக்கள் மூன்று பேர்னா மூன்று பேரும் ப்ரதர்ஸ் தான,
அதெப்படி இரண்டு பேர் மட்டும் ப்ரதர்ஸ்?
அதுல மூன்றாவது பையன் Fatherன்னு சொல்றீங்க!"
"இதுதான் பிரச்சனையா?
முதல் இரண்டு பேரும் கப்புச்சின் சபையில Lay brothersஆ இருக்காங்க.
மூன்றாவது பையன் Diocesan priest.
இப்போ புரிகிறதா? "
"முதல்லேயே இவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.
அது சரி உங்கள் பிள்ளைகள் எல்லோரையுமே இறைப்பணிக்கு அனுப்பிவிட்டீர்களே.
அப்புறம் வயதானபோது உங்களுக்கு உதவி தேவைப்படுமே.
என்ன செய்வீர்கள்?"
"முதலில் அவர்கள் இறைவன் பிள்ளைகள்.
நாமும் இறைவன் பிள்ளைகள்தானே.
அவர் கொடுத்த பிள்ளைகளை அவரது பணிக்கு அவரே அழைக்கும்போது அனுப்பவேண்டியது நமது கடமை.
நாமும் அவரது பிள்ளைகள்தானே.
இப்போது நம்மைப் பராமரித்துவரும் அவருக்கு நமது வயது காலத்தில் கவனிக்கத் தெரியாதா?
அதுமட்டுமல்ல,
"எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்."
என்று அவரே கூறியிருக்கிறார்.
அவர் வார்த்தை தவரமாட்டார்.
விண்ணகத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய சன்மானத்தின் அளவு நாம் இப்போது கொடுப்பதைப் பொறுத்துதான் அமையும்."
"ஒரு சின்ன சந்தேகம்.
நீங்கள்
பதிலுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்துதான்
கடவுளுக்குக்கூட கொடுக்கிறீர்களா?"
"மன்னிக்கவும்.
கடவுளுக்கு நான்
எனக்குரியது எதையும்
கொடுக்கவில்லை, கொடுக்கவும் முடியாது.
ஏன்னா எனக்குரியது எதுவும் இல்லை.
இப்போ உங்களைப் பார்த்து நான்
'உங்கள் தலையை உங்களுக்கு என் அன்புப் பரிசாகத் தருகிறேன்'.
என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?"
" 'ஹலோ! ஏற்கனவே இது என் தலைதான், யாரும் தரவேண்டியதில்லை' என்பேன்.
"ஆனால் கடவுள் அப்படிச் சொல்லமாட்டார்.
ஏன்னா உலகமும், அதிலுள்ள அத்தனை பொருட்களும்,
அதில் வாழும் அத்தனை பேரும்,
நாம் உட்பட,
கடவுளுக்குத்தான் சொந்தம்.
ஆகையினால் நாம் அவருக்குக் காணிக்கையாய்க் கொடுக்கும் எந்தப் பொருளும் நம்முடையதல்ல.
இருந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்.
இறைவன் பார்ப்பது பொருளை அல்ல, நமது மனதை.
நாம் பதிலுக்கு ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து எதையும் அவருக்குக் கொடுப்பதில்லை.
இறைவன் நம்மைப் படைத்ததே மறுவுலக வாழ்வுக்காகத்தான்.
அவர் இவ்வுலகத்தில் நம்மை வைத்திருப்பதே
மறுவுலகில் நாம் அனுபவிக்க இருக்கும் சம்பாவனையை
நாமே முயற்சி எடுத்து
அவர் அருள் உதவியுடன் சம்பாதிக்கதான்.
Point by point ஆ:
1.இறைவன் நம்மைப் படைத்தார்.
2.இவ்வுலகில் படைத்தார்.
3.ஆனால் இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்வதற்காக அல்ல.
4.நிரந்தரமான மறுவுலக வாழ்வுக்கு நம்மைத் தயாரிப்பதற்காக.
5.அதற்காகத்தான்
நமக்கு சிந்திக்க, தேர்வு செய்ய, செயலாற்ற
முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
6.இவ்வுலகில் மறுஉலகத் தயாரிப்புக்காக நாம் செய்யயவேண்டிய ஒரே வேலை
சிந்தனை, சொல், செயல் மூலம் அன்பு செய்யவேண்டியது மட்டும்தான்.
7.அன்பின் இயல்பு கொடுப்பது.
இறைவன் தனது சாயலை நமக்குக் கொடுத்தார்.
அதாவது அவரது பண்புகளாகிய அன்பு, நீதி, ஞானம் ஆகியவற்றை நமக்கும் கொடுத்தார்.
8.இறைவனது கொடுத்தல் என்ற குணத்திலும் நமக்கு பங்கு உண்டு.
ஆகவேதான்
"கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்."
என்று இயேசு சொன்னார்.
நாம் பதிலை எதிர்பார்த்துக் கொடுப்பதில்லை,
இயேசு கொடுக்கச் சொன்னார், ஆகவே கொடுக்கிறோம்.
வேறு வார்த்தைகளில் சொன்னால்,
'நாம் கொடுக்கவேண்டும்' என்பது இறைவனின் சித்தம்.
இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை.
ஆகவே கொடுக்கிறோம்.
நாம் பூவுலகில் கொடுத்ததை விண்ணுலகில் ஒன்றுக்கு நூறாய்த் தருவதும் இறைவனின் சித்தம்.
விண்ணகமும், அங்கே நாம் அனுபவிக்க இருக்கும் பேரின்பமும் இறைவன் சித்தப்படி நமக்குத் தரவிருக்கும் பரிசு.
ஆகவே இறைவனுக்குக் கொடுப்பதை
பதிலுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்துதான்
கொடுப்பதாகக் கொச்சைப்படுத்தக்கூடாது."
"Sorry. இறைப்பணியை உலக ரீதியில் பார்க்கக்கூடாது.
இறைப்பணியையும், அதற்காக நாம் பெறப்போகும் விண்ணக வாழ்வையும்
இறைவனின் சித்தம் என்ற நோக்கிலிருந்தே பார்க்க வேண்டும்.
ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறுதல் என்ற வியாபாரக்கண்ணோக்கில் பார்க்கக் கூடாது."
"இதை யார்ட்டச் சொல்ற? "
"எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்."
"சரியாகத்தான் சொன்ன.
கடவுள்ட்ட Business பேசக்கூடாது.
கடவுள் நாம் கொடுக்கும் காணிக்கை நோட்டுக்களைக் கணக்குப் பார்த்து நமக்குத் தரப்போவதில்லை.
அவர் நமது உள்ளத்தைத்தான் பார்க்கிறார்.
எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல,
எப்படிக் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
எந்த அளவையால் அளக்கிறோமோ
அதே அளவையால் நமக்கு அளக்கப்படும்.
எவ்வளவுக்கெவ்வளவு தாராளமாய்க் கொடுக்கிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு தாராளமாய்க் கிடைக்கும், விண்ணகத்தில்.
கணக்குப் பார்க்காமல் கொடுப்போம்,
கணக்கின்றி கிடைக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment