Saturday, March 16, 2019

பிரச்சனையில மாட்டிக்கிட்டேன்.


பிரச்சனையில மாட்டிக்கிட்டேன்.
******************************

"அண்ணே! நான் ஒரு பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டேன்.
வெளியே வர வழி சொல்லுங்களேன்."

"ஏண்டா, ஏதோ எலிப்பொறிக்குள்ள மாட்டிக்கிட்ட எலி மாதிரி துள்ளுத!  விசயத்தைச் சொல்லு."

"எதிரிகளை நேசியுங்கள்"னு ஆண்டவரும் சொன்னாரு. சாமியாரும் அதையே பிரசங்கத்திலும் சொன்னாரு."

"அதுக்கு நான் என்ன செய்யணும்?  சாமியார்ட்டப்போய் போய் சண்டை போடட்டுமா,  'ஆண்டவர் சொன்னத நீங்களும் ஏன் சொல்றீங்கன்னு."

'அண்ணே, நான் சீரியசா பேசிக்கிட்டிருக்கேன், நீங்க நக்கல் பண்ணிக்கிட்டிருக்கீங்க.

எனக்கு எதிரிகள் யாரும் இல்லையே!

இப்போ நான் என்ன செய்யட்டும்?

ஆண்டவருடைய கட்டளைய எப்படி நிறைவேற்றுவேன்?

ஒரு வழி சொல்லுங்களேன்."


"நானும் சீரியசாக் கேட்கிறேன். உனக்கு உண்மையிலேயே எதிரிகள் யாரும் இல்லையா?'

"சத்தியமா இல்ல."

"அப்போ ஒண்ணு செய். இண்ணைக்குச் சாயங்காலம் உன் பக்கத்து வீட்டுக்குப் போ. அந்த வீட்டுத் தம்பிட்ட,

'தம்பி வா.ஒரு ஜெபமாலைச் சொல்லிட்டு வருவோமா?'ன்னு கேளு."

"அதாவது நான் பக்கத்து வீட்டுக்காரன்கூட சமாதானமாய் இருக்கிறது உனக்குப் பிடிக்கல! "

"நான் சண்டைக்குப் போன்னு
சொன்னேனா?"

"சண்டைக்குப் போன்னு  சொல்லணுமாக்கும்.

மாதா சம்பந்தமா எதைச் சொன்னாலும் அவன் சண்டைக்கு வந்திடுவான்."

"அதாவது அவன் நம் அம்மாவை எதிர்க்கிறான்."

"எதிர்க்கிறான் மட்டுமல்ல, அம்மாவை எதிர்க்கிறதையே வாழ்வின் இலட்சியமா வச்சிருக்கான்.'

"அம்மாவை எதிர்த்தால் பிள்ளையையும் எதிர்க்கிறது மாதிரிதானே! "

"ஓ! நீ அந்த ரூட்ல போரியோ!  அப்படிப் பார்த்தா நாட்டில கோடிக்கணக்கான எதிரிகள் இருக்காங்களே! இப்ப என்ன செய்யலாம்?"

"என்ன செய்யணும்னு ஆண்டவரே சொல்லியிருக்காறே.

1. உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்.

2..உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.

3.உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்.

இயேசு தன்னை நேசிப்பவர்கட்காக மட்டுமல்ல,

தன்னை வெறுப்பவர்கட்கும் சேர்த்துதான் பலியானார்.

தனது சிலுவைப் பாதையில்

தன்னைக் காட்டிக் கொடுத்தவன்,

தன்னைக் கைது செய்தவர்கள்,

தான் கொல்லப்பட வேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள்,

தன்னைக் கசையால் அடித்தவர்கள்,

தனக்கு முள்முடி சூட்டியவர்கள்,

தனது முகத்தில் துப்பியவர்கள்,

தன்னைச் சாவுக்குத் தீர்ப்பிட்டவன்,

தன்மேல் சிலுவையை ஏற்றியவர்கள்,

தன்னைச் சிலுவையில் அறைந்தவர்கள் 
ஆகிய அனைவரையுமே

இயேசு நேசித்தார்,

  அவர்களும் மீட்பு பெறவே அவர்கள்  கையாலேயே மரணம்  அடைந்தார்.

தன் மரணத்திற்குக் காரணமாக இருந்தவர்களை எல்லாம் மன்னிக்கும்படி தனது தந்தையிடம் வேண்டினார்.

நாமும் நாம்  செய்த பாவங்களினால் இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்கன்தான்.

நம்மையும் இயேசு அளவு கடந்தவிதமாய் நேசிக்கிறார். 

நாமும்  இயேசுவைப் பின்பற்றி  அனைவரையும், 

விசேசமாய்,

அவரை வெறுப்பவர்களையும் நேசிப்போம்,

அவர்கள் மனம்திரும்பி இயேசுவைத்  தேடி வர அவர்களுக்காகத் தினமும் செபிப்போம்.

இப்படிச் செய்து ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றலாமே! "

"இன்னொரு யுக்தியையும் கையாளலாம். 

அதற்கு  முதலில் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அப்புறம் விசுவாசம் இல்லாதவர்களோடு நெருங்கிப் பழகவேண்டும்.

கிறிஸ்தவ அன்புகொண்டு அவர்களை நம் நண்பர்கள் ஆக்கிக்கொள்ள வேண்டும்.

அப்புறம் நமது நன்மாதிரிகையான வாழ்க்கைமூலம் அவர்கட்கு விசுவாசத்தை ஊட்ட வேண்டும்.   

இதில் கவனிக்க வேண்டியது  அவர்களை நம்மை நோக்கி இழுக்க வேண்டும்.

நாம் அவர்களை நோக்கி நாம்

நகர்ந்துவிடக்கூடாது.

அதற்கு நம் விசுவாசம் உறுதியாய் இருக்க வேண்டும்."

"Very good idea. 

முதலில் பக்கத்து வீட்ல இருந்து ஆரம்பி.

Wish you all success."

"Thank you! "

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment