"சொன்னவுடன் கீழ்ப்படிபவர்!"
*********************-*-****
"அண்ணே, கொஞ்சம் நில்லுங்க. உங்களோடு கொஞ்சம் பேசணும்.''
"நானே உன்னப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீயே வந்துட்ட. சந்தோசம். "
"உண்மையாகவா? எதுக்காக என்னப் பார்க்க ஆசைப்பட்டீங்க?"
"நீ எதையாவது கேட்கணும், நான் சொல்லணும். இண்ணைக்கு என்ன சந்தேகம்? "
"நேற்று சூசையப்பர் திருநாள். அவரைப் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்லுங்களேன்."
"சொன்னவுடன் கீழ்ப்படிபவர்!"
"மறுவார்த்தை சொல்லாமல் அவர் கீழ்ப்படிந்ததைப் பார்க்கும்போது ஆச்சரியாமாயிருக்கிறது!
'ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்'
ஏற்றுக்கொண்டார்.
'பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம்.'
'பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்.'
'தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும். '
'அவர் எழுந்து பிள்ளையையும் தாயை'யும் கூட்டிக்கொண்டு, இஸ்ராயேல் நாட்டுக்கு வந்தார்.'
சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் ஒரு வார்த்தை கிடையாது! "
"இதற்கு தற்காலத்தில் 'Blind obedience' என்று பெயர்.
நமது சந்நியாச சபைகளில் (Religious orders) இப்படிப்பட்ட கீழ்ப்படிதலைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
இத்தகைய கீழ்ப்படிதலுக்கு அடிப்படை
1. கட்டளை இடுபவர்மீது இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை.
2.தன் பணி கீழ்ப்படிந்து நடப்பது மட்டும்தான்.
அன்பு, சேவை etc. அதற்குள் அடக்கம்.
'Love.'
'I love.'
'Serve.'
'I serve.'
'Sacrifice'
'I sacrifice'
'Obey my commandments.'
'I obey.'
'இதோ ஆண்டவருடைய அடிமை.
உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்.'
என்ற நமது தாயின் வார்த்தைகள்தான் உண்மையான இறையன்பர்கட்கு பைபிள்! "
"பழைய ஏற்பாட்டில் ஒருவர் இருந்தாரே.
'நாம் உனக்குக் காட்டவிருக்கிற நாட்டிற்குப் போகக்கடவாய்.'
'ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டவாறு ஆபிராம் புறப்பட்டான். '
'நீ அதிகம் அன்பு செய்யும் உன் ஒரே புதல்வனான ஈசாக்கைத் தரிசனைப் பூமிக்குக் கூட்டிக் கொண்டு போய், அங்கே நாம் உனக்குக் காட்டும் ஒரு மலையின் மீது அவனைத் தகனப்பலியாக ஒப்புக் கொடுப்பாய்.'
'அவ்வாறே ஆபிரகாம் இரவில் எழுந்து தமது கழுதைக்குச் சேணம் போட்டு, தம்மோடு இரண்டு ஊழியரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு போய்த்தகனப் பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டின பின் கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தைக் நோக்கிப் பயணமானார்.'
ஆச்சரியாமாக இல்லை? "
"ஆச்சரியாமாகவே இல்லை.
ஏனெனில்,
ஆபிரகாம் கடவுளை விசுவாசித்தார்.
'உனக்குத் தரவிருக்கிற புதல்வனையும் ஆசீர்வதிப்போம்.
இவன் பல மக்களுக்கும் முதல்வனாவான்:
எல்லா இனத்தவரின் அரசர்களுக்கும் தந்தையாவான் என்றருளினார். '(ஆதி.17:16)
என்ற இறைவனின் வாக்குறுதியை விசுவசித்தார்.
'ஏனென்றால் ஈசாக்கிடமிருந்து உனக்குச் சந்ததி தோன்றும்.'
என்ற இறைவனின் சொற்களை விசுவசித்தார்.
இறைவன் தன் சொல்லைக் காப்பாற்றுவார் அபிரகாமுக்குத் தெரியும்.
தன் மகன் மூலம் தனது சந்ததி பிறக்கும்
என்ற இறைவவனின் வாக்குறுதியில்
அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கும்போது
இறைவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிய ஏன் தயங்கவேண்டும்?
எப்படியும் தனக்கு பேரனைப் பெற்றுத்தர மகனை இறைவனே காப்பாற்றுவார்
என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்திருக்காதா?"
"Suppose இறைவன் அவரை தடுக்காதிருந்திருந்தால்?"
"தடுக்காதிருந்திருந்தால் ஓங்கிய கையைப் பின்வாங்காமல் வெட்டியிருப்பார்.
இறைவன் சர்வ வல்லவர் என்று அவருக்குத் தெரியும்.
புதிய ஏற்பாட்டில் இறந்து அடக்கம் செய்யப்பட்ட இலாசரை உயிர்ப்பித்த அதே கடவுள்தான்
பழைய ஏற்பாட்டின் கடவுள் என்பதை மறந்துவிடாதே."
"மறக்கவில்லை. சில சமயங்களில் சில விசயங்கள் ஞாபகத்துக்கு வரவேண்டிய நேரத்தில் வராது.
அபிரகாமைப்போல சூசையப்பரும் விசுவாசத்தின் தந்தைதான்.
சம்மனசு அவரது கனவில் தோன்றி மாதாவைப்பற்றி கூறியதை ஏன் நம்பினார்?
சம்மனசு கடவுளின் தூதர் என்று விசுவசித்தார்.
கடவுள் உண்மையைத்தான் சொல்வார் என்பதையும் விசுவசிதார்."
அபிரகாமைப்போல்,
புனித சூசையப்பரைப்போல்
விசுவசிப்போம்,
வெற்றி பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment