கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது!
:::::::::::::::::::::;;::;::::::::::;;;;;
"கடவுள் நாம் வாழும் உலகை அதனுடைய இயற்கைச் செல்வங்களுடன் படைத்து
கடைசியில் அவற்றைப் பயன்படுத்த மனிதனைப் படைத்தார்.
உலகின் செல்வங்களை அனுபவிக்க மனிதனைத் தவிர வேறு யாரையும் படைக்கவில்லை.
ஆகவே உலகச் செல்வங்களைகளை மனிதன்தான் அனுபவிக்க வேண்டியுள்ளது.
அப்படியிருக்க இயேசு
"கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது! "
என்று ஏன் சொல்கிறார்?"
"உன் கழுத்துல செயினெல்லாம் போட்டிருக்க!"
"ஹலோ! நான் என்ன கேட்கிறேன்? நீ என்ன கேட்கிறே?
"நான் உன் செயினக் கேட்கல. உன் கேள்விக்குப் பதில் அதுக்குள்ளதான் இருக்கு."
"என் செயினுக்குள்ளேயா? "
"ஆமா."
"இது என் மனைவியுடைய செயின். என் கழுத்துல போட்டுவச்சிருக்கா."
"இத நான் கேட்டா தருவியா?"
"நிச்சயமா தரமாட்டேன்."
"நீ தராவிட்டால் நமக்கு இடையே உள்ள நட்பு போயிடும்."
"போகட்டும். செயினுக்காகத்தான் நட்பு ஏன்றால் அப்படிப்பட்ட நட்பு தேவை இல்லை."
"Suppose, உன் மனைவி சொல்றா,
'தங்கச்சிக்குக் கல்யாணம் கூடியிருக்கு.
தங்கம் கொஞ்சம் குறையுது.
இந்த செயினக் கொடுப்போமே' ன்னு.
செயினக் கொடுக்கச் சொன்னா கொடுப்பாயா? "
"நிச்சயம் கொடுக்கமாட்டேன்."
"உன் மனைவியைவிட உன் செயின்தான் பெரிசா? "
''ஆமா."
" உன் மனைவி உன்னிடம் 'உங்கள் வேலை, சம்பளம், சொத்து எல்லாத்தையும் விட்டுவிட்டு எங்கிட்ட வந்து நான் சொன்னத செய்யுங்கன்'னு சொன்னா என்ன செய்வ? "
"நான் எதையும் விடமாட்டேன், மனைவியிட்ட வெறுங்கையனா போகவும் மாட்டேன்."
"இப்போ, உன் நிலைமை :
கடவுள் உன்னைப் பார்த்து,
' 'உனது வேலை, சம்பளம், சொத்து எல்லாத்தையும் விட்டுவிட்டு எங்கிட்ட வந்து நான் சொன்னத செய்ன்னு சொன்னா,
நீ கடவுளிடம், 'நான் எதையும் விடமாட்டேன், உங்ககிட்ட வெறுங்கையனா வரவும் மாட்டேன்'னு சொல்லுவ. சரியா?"
"நான் என்னுடைய மனைவியிடம் சொல்லுவேன்னு சொன்னத கடவுளிடம் சொல்லுவேன்கிற?"
"ஏன்னா அதுதான் உன் குணம்.
பணம், சொத்து இவற்றை விட்டு உன்னால் கடவுளிடம் போகமுயாது.
உன்ன மாதிரி குணம் உள்ளவங்களைப் பார்த்துதான் இயேசு,
'கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது!
என்று சொன்னார்."
"எல்லாரிடமும்தான் பணமும், சொத்தும் இருக்கு.
சாமிமாரிடமும் இருக்கு, திருச்சபையிடமும் இருக்கு.
அப்படீன்னா யாருமே மோட்சத்துக்குப் போகமுடியாது!"
"இறையரசை நோக்கி பயணிக்கும் பாதைதான் இவ்வுலகும் அதன் செல்வங்களும்.
ஆனால் நாம் இவ்வுலகையோ, அதன் செல்வங்ளையோ சார்ந்தவர்கள் அல்ல, இறையரசைச் சார்ந்தவர்கள்.
இவ்வுலகச் செல்வங்கள் நாம் மறு உலகிற்குச் செல்ல உதவ வேண்டும்.
நாம் இறையரசிற்காகப் படைக்கப்பட்டவர்கள்,
இவ்வுலகச் செல்வங்களுக்காக அல்ல.
நமக்கு இறையரசின்மீது மட்டுமே பற்று இருக்கவேண்டும்,
இவ்வுலகச் செல்வங்கள்மீது பற்று இருக்கக்கூடாது.
நமது இறையரசிற்காக
இவ்வுலகச் செல்வங்களை இழக்கத் தயாராக இருக்கவேண்டும்.
ஆண்டவர் ஒரு பணக்காரனைப்பார்த்து
'உனக்குள்ளதை விற்று ஏழைகட்குக் கொடுத்துவிட்டு என்னைப் பின்செல்'
என்றார்.
ஆனால் செல்வத்தை விட்டு விட அவனுக்கு மனதில்லை.
அந்த சந்தர்ப்பத்தில்தான்
இயேசு,
'கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது! '
என்றார்.
தங்களை முழுவதும் பணத்திற்கு அடிமையாக்கிக் கொண்டவர்களால் இறைவனுக்குப் பணி புரிய முடியாது,
ஏனெனில் அப்படிப்பட்டவர்கள்
'கடவுளா. பணமா?' என்ற கேள்வி வந்தால்,
பணத்தை வைத்துக்கொண்டு
இறைவனை விட்டுவிடுவார்கள்.
இறைப்பற்று உள்ளவர்களிடம் இதே கேள்வியைக் கேட்டால்
பணத்தை விட்டுவிட்டு இறைவனைப் பின்பற்றுவார்கள்.
நீ சொன்னாயே பணம்
'சாமிமாரிடமும் இருக்கு, திருச்சபையிடமும் இருக்கு
என்று.
அவர்கள் அதை இறைப்பணிக்காகச் செலவழிக்கிறார்கள்.
அவர்கள் இறைவனுக்காக பணத்தை மட்டுமல்ல,
தங்கள் உயிரையும் விடத் தயாராக உள்ளார்கள்.
புரிகிறதா?"
"புரிகிறது. இறைவனுக்காக வாழவேண்டும்,
பணத்திற்காக அல்ல.
விண்ணகத்திற்காக வாழ வேண்டும்,
மண்ணகத்திற்காக அல்ல."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment