Sunday, March 10, 2019

சோதனை தரும் பாடம்.


சோதனை தரும் பாடம்.
++++++++++++++++++++++
சாத்தான் ஆண்டவரை ஏன் சோதித்தான்?

கடவுள் மனிதனாகப்   பிறக்கப்போகிறார் என்ற விசயம் அவனுக்குத் தெரியும்.

ஆனால் சோதனையின் போக்கைப் பார்த்தால்,

சாத்தானுக்கு ஒரு சந்தேகம் வந்திருப்பது போலவும்,

அதை நிவர்த்தி செய்து கொள்ளத்தான்

இயேசுவைச் சோதித்திருப்பது போலவும்

எனக்குத் தோன்றுகிறது.

இது ஒரு யூகம்தான்,

சரியாகவும் இருக்கலாம்.

தவறாகவும் இருக்கலாம்.

என்ன சந்தேகம்?

இயேசுதான் உலகை இரட்சிக்க வந்த இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனா, இல்லையா?

அதாவது இயேசு கடவுளா? இல்லையா?

இதை எப்படி உறுதிசெய்வது?

தந்திரமாக சோதனை செய்து அவர் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்க வேண்டும்.

அதற்காக பசியாய் இருந்த அவரிடம்,

"நீர் கடவுளின் மகனானால் அப்பமாக மாறும்படி இந்தக் கல்லுக்குச் சொல்லும்"

"நீர் கடவுளின் மகனானால்", இதுதான் அவன் சந்தேகம்.

"மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று" என எழுதி இருக்கின்றதே" 

என்ற இயேசுவின் பதிலில் அவன் சந்தேகத்துக்குப் பதில் இல்லை.

இரண்டாவது சோதனையில்,

உலக அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,

"இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மகிமையையும் உமக்குக் கொடுப்பேன். ஏனெனில், இவை யாவும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளன. "என் விருப்பம்போல் எவருக்கும் இவற்றைக் கொடுக்கமுடியும்."

மனித குலத்தை பாவத்தின் மூலம் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதையும்,

அதை மீட்க கடவுள் மனிதனாகப்போகிறார் என்ற உண்மையையும் நினைத்து

இதற்குரிய பதிலில் தன் சந்தேகம் தீரும் என்று நினைக்கிறான்.

"உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரைமட்டுமே ஆராதிப்பாயாக " 

என்ற பதிலை யார் வேண்டுமானாலும் கூறலாம்.

இதில் அவன் சந்தேகம் தீரவில்லை.

ஆகவே மூன்றாவதாக சோதிக்கிறான்.

மூன்றாவது  சோதனையில்,

அவரை யெருசலேமுக்குக் கூட்டிச் சென்று, கோயிலில் முகட்டில் நிறுத்தி, " நீர் கடவுளின் மகனனானால் இங்கிருந்து கீழேகுதியும்.


10 ஏனெனில், " உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார் " என்றும்,


11 "உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்" என்று எழுதியுள்ளது" 

இயேசு பதிலாக,

"உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே" என்றும் சொல்லியிருக்கிறது.

என்று சொன்னதில் சாத்தானுக்கு அவன் சந்தேகம் தீர்ந்தது.

"உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே"

ஆக அவன் சோதித்துக் கொண்டிருந்தது

"கடவுளாகிய ஆண்டவர்தான்"

என்பது உறுதி ஆகிவிட்டது.

குறித்த காலத்தில் வரலாம் என்று எண்ணி  அவரை விட்டுச் சென்றது.

சாத்தானின் சோதனையிலிருந்து இன்னொரும் பாடமும் கற்கலாம்.

முதல் சோதனை சாப்பாட்டைப் பற்றி.

இரண்டாம்சோதனை அதிகாரம், பகழ் ஆகியவற்றின் மேலுள்ள ஆசை பற்றி.
(இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மகிமையையும் உமக்குக் கொடுப்பேன். )

மூன்றாவது சோதனை  பயனற்ற சாதனை பற்றி.

இயேசு நற்செய்திப் பணியை ஆரம்பிக்கப் போகும்போதுதான் இச்சோதனைகள் வருகின்றன.

கற்கவேண்டிய பாடம்:
1.நற்செய்தி போதிப்பவர்கட்கு இறைவார்த்தைதான்  முதல் உணவு.

2.நற்செய்தி பணியாளர்கட்கு
அதிகார ஆசையோ, பண ஆசையோ கூடாது.

3.பயனற்ற சாதனைகள் தேவை இல்லை.

கோயில் முகட்டிலிருந்து குதிப்பது சாதனையாய் இருக்கலாம்

அதனால் என்ன பயன்?

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment