Thursday, April 13, 2023

"உங்களுக்குச் சமாதானம்"(லூக்.24:36).

"உங்களுக்குச் சமாதானம்"
(லூக்.24:36).

"தாத்தா, இயேசுவின் நற்செய்திக்கும், உயிர்த்த பின் அவர் சீடர்களை வாழ்த்திய   சமாதானத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்."

"'உனது அப்பாவுக்கும், அம்மாவின் கணவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதோ?"

"தொடர்பா? இருவரும் ஒருவர் தான்."

"'அப்படித்தான் சமாதானமும், நற்செய்தியும்.

நற்செய்தியின் நாயகன் இயேசு பிறந்த அன்று விண்ணவர் பாடிய பாடல் ஞாபகத்தில் இருக்கிறதா?"

"வானதூதர்    தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக் கொண்டிருந்த இடையர்களைப் பார்த்து,

" அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார்."

என்று சொன்னவுடன் 

வானோர் படைத்திரள் அத்தூதரோடு சேர்ந்து,

 " உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. உலகிலே நன்மனது உள்ளவரகளுக்கு சமாதானம் உண்டாகுக! "

என்று பாடினார்கள்."

"'அவர்கள் கொண்டு வந்த நற்செய்தி என்ன?"

"தாவீதின் ஊரில் மீட்பர் பிறந்திருக்கிறார்.

விண்ணகத்தில் கடவுளுக்கு மகிமையும்,

பூமியில் நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானமும் உண்டாகட்டும்."

"'மீட்பர் எதற்காகப் பிறந்துள்ளார்?"

"கடவுளை மகிமைப் படுத்தவும்,
உலகில் சமாதானத்தை ஏற்படுத்தவும்."

"'கடவுள் மனிதனைப் படைக்கும் போது இருவருக்கும் இடையே சமாதானமான உறவு இருந்தது.

மனிதன் செய்த பாவத்தினால் 
சமாதான உறவு முறிந்தது.

முறிந்த உறவை மீண்டும் ஏற்படுத்தவே இறைமகன் மனிதனாய்ப் பிறந்தார்.

அவர் போதித்த நற்செய்தி சமாதானத்தின் நற்செய்தி.

அன்பு மட்டும்தான் சமாதானத்திற்கு உயிர்.

இயேசுவின் போதனையின் அடிப்படை அன்பு மட்டும் தான்.

அன்பு மட்டும் தான் இறைவனுக்கும் நமக்கும்  இடையே உள்ள சமாதான உறவையும்,

அயலானுக்கும் நமக்கும் இடையே உள்ள சமாதான உறவையும் காப்பாற்றுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிக்க வேண்டும் என்பதும்,

நம்மைப் போல நமது அயலானை நேசிக்க வேண்டும் என்பதும் சமாதான நற்செய்திதானே.

நம்மைப் பகைப்பவர்களையும் அன்பு செய்ய வேண்டும் என்பதும் சமாதான நோக்கத்தோடுதானே.

நமக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்வதும் சமாதானமாக வாழ்வதற்காகத்தானே.

நற்செய்திப்படி வாழ்பவன் நல்ல மனம் உள்ளவனாக இருப்பான்.

நல்ல மனம் உள்ளவனாக இருப்பவன் சமாதானம் உள்ளவனாக இருப்பான்."

"இப்போது நாம் யாரையாவது முதல் முதல் சந்திக்கும் போது,

'Praised be Our Lord Jesus Christ' என்கிறோம்.

"உங்களுக்குச் சமாதானம்" என்று சொல்வது சிறந்ததா?

Praised be Our Lord Jesus Christ' என்று சொல்வது சிறந்ததா?"

"'இரண்டுமே சிறந்ததுதான்.

"உங்களுக்குச் சமாதானம்" 
என்பது ஆண்டவர் சொல்லித் தந்தது.

அப்படி வாழ்த்தும் போது,

"ஆண்டவர் தனது பாடுகளாலும், மரணத்தாலும் பெற்றுத் தந்த சமாதான உறவு நம்மிடையே இருப்பதாக" என்று வாழ்த்துகிறோம்.

Praised be Our Lord Jesus Christ' என்று வாழ்த்தும் போது 

"இறைவன் இயேசுவுக்கு மகிமை உண்டாகுக என்று வாழ்த்துகின்றோம்.

இரண்டுமே இயேசு பிறந்த அன்று வானவர் பாடிய கீதங்கள் தான்.

இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்."

"இயேசுவுக்கு மகிமையும், நமக்குள் சமாதானமும் நிலவுவதாக!''

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment