Monday, April 17, 2023

"விசுவாசம் அற்றவனாயிராதே, விசுவாசங்கொள்." (அரு20:27)

"விசுவாசம் அற்றவனாயிராதே, விசுவாசங்கொள்." (அரு20:27)

புனித தோமையாரைப் பார்த்து இயேசு சொன்ன வார்த்தைகள்.

இயேசு உயிர்த்து விட்டார் என்று மற்ற அப்போஸ்தலர்கள் சொன்னதை நம்பாத தோமையார், 

இயேசு தோன்றி, தனது ஐந்து காயங்களையும் காண்பித்த பிறகே நம்பினார்.

அப்போது இயேசு அவரைப் பார்த்து, 

"விசுவாசம் அற்றவனாயிராதே, விசுவாசங்கொள்." என்றார்.

நம்மைப் பார்த்தும் இயேசு இதே வார்த்தைகளைக் கூற சந்தர்ப்பங்கள் அதிகரித்துக் கொண்டு வருவது போல் தெரிகிறது.

நம்மைப் பொறுத்த மட்டில் நாம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான வேலைகள் காத்துக் கொண்டிருப்பதாக நாம் நினைக்கிறோம்.

ஒவ்வொரு வேலையையும் எப்படி செய்வது என்று திட்டம் போடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.

கடவுளைப் பற்றி நினைக்கிறோமா?

நினைக்கிறோம்.

 ஆனால் நமது திட்டத்தின் ஒரு பகுதியாகவே நினைக்கிறோம்.

 அதாவது நமது திட்டங்கள் நாம் நினைக்கிற படி நிறைவேற கடவுள் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். 

அதற்காகவே அவரிடம் வேண்டுகிறோம்.

நமக்காக ஆயிரம் வேலைகள் காத்துக்கொண்டிருக்கும் போது கடவுளுக்கு ஒரே ஒரு வேலை தான்.

நம்மைக் கண்காணிப்பதும், பராமரிப்பதும் மட்டுமே அவர் வேலை.

நாம் நமது வேலைகளில் அவ்வப்போது கடவுளை நினைப்போம்.

ஆனால் கடவுள் ஒவ்வொரு வினாடியும் நமது நினைவாகவே இருக்கின்றார்.

நாம் நம்மைப் பற்றி நினைப்பதற்கும்,

கடவுள் நம்மைப் பற்றி நினைப்பதற்கும்,
 வித்தியாசம் இருக்கிறது.
 
நமது திட்டங்கள் நாம் விரும்புகிறபடி நிறைவேற வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.

ஆனால் கடவுள் அவர் விருப்பப்படி நாம் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று ஆசைப் படுகிறார்.

நமது செயல்பாடுகளில் ஏதாவது பிரச்ச்னைகள் ஏற்பட்டால், நாம் உடனே நினைக்க வேண்டியது கடவுளைத்தான்.

கடவுளை நினைத்தால் அவரது குரல் நமது மனதில் ஒலிக்கும்:

"விசுவாசம் அற்றவனாயிராதே, விசுவாசங்கொள் ."

"நான் உன்னைப் படைத்தவர்.
நீ செயல்பட வேண்டியது என் விருப்பப்படி, உனது இஷ்டம் போல் அல்ல."

கடவுளது விருப்பத்துக்கு ஏற்ப நமது செயல் திட்டங்களை மாற்றிக் கொண்டால்,

அவரது விருப்பத்திற்கு ஏற்ப எல்லாம் வெற்றிகரமாய் நடக்கும்.

நமது வாழ்க்கைத் திட்டங்களில் பிரச்சினை எதுவும் ஏற்படாலிருக்க வேண்டுமானால்

திட்டங்கள் தீட்டு வதற்கு முன்பேயே,

இறைவனை வேண்டி,

அவரது சித்தத்தை அறிந்து திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

அதன்பின், ஒவ்வொரு விநாடியும் அவர் நம்மைக் கண்காணித்து வருவது போல,

நாமும் ஒவ்வொரு விநாடியும் அவரது பிரசன்னத்திலேயே வாழ வேண்டும்.

அப்படி வாழ்ந்தால் கடவுளுக்கு எதிரான எந்த பிரச்சனையும் நமது வாழ்வில் ஏற்படாது.

இறைவனை விசுவசிப்போம்.

அதன்படி வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment