"அனேக இயற்கை நிகழ்வுகளுக்கு மனிதன்தான் காரணம் என்று சொல்கிறீர்கள்.
மனிதன்தான் காரணம் என்பது உண்மையானால் அவை இயற்கை நிகழ்வுகள் இல்லையே!"
"'Global warming பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?"
"கேள்விப்பட்டிருக்கிறேன். மனிதனுடைய செயல்பாடுகளின் காரணமாக பூமியின் வளி மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை மாற்றத்தை தான் Global warming என்கிறோம்."
"'இமயமலையில் உள்ள
பனிக்கட்டி உருகி அதன் விளைவாக வட இந்தியாவில் மூன்று வற்றாத ஜீவ நதிகள் பாய்வது இயற்கை நிகழ்வு.
மனிதனுடைய செயல்பாடுகளின் காரணமாக ஏற்பற்றுள்ள Global warming காரணமாக
பனிக்கட்டி உருகுவதின் அளவு அதிகரித்திருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா?"
"தெரியும்."
"'அதிகமாக உருகும் நீர் ஆறுகளின் வழியாக கடலை சென்று அடைகிறது என்பது உனக்குத் தெரியுமா?"
"தெரியும்."
"'இதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்திருப்பது என்பது உனக்குத் தெரியுமா?"
"தெரியும்."
"'நீர்மட்ட உயர்வினால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடலை அடுத்துள்ள நிலப்பகுதிகள் கடலுக்குள் சென்றுவிட்டது உனக்குத் தெரியுமா?"
"தெரியும்."
"'கடல் அரிப்பு என்ன நிகழ்வு?"
"இயற்கை நிகழ்வு."
"'மனிதன் படைக்கப்படுவதற்கு முன்னால் ஏற்பட்ட கடல் அரிப்பு இயற்கை நிகழ்வாக இருந்திருக்கலாம்.
ஆனால் மனிதனின் செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிலஅரிப்பை எப்படி இயற்கை நிகழ்வு என்று சொல்லலாம்?
மனிதன் காரணமாய் இருந்துவிட்டு தான் செய்த தவற்றின் பழியை இயற்கை மீது போட்டிருக்கிறான்."
"தாத்தா, மனிதன் வாழ்வதற்காக தானே கடவுள் இயற்கையைப் படைத்தார்.
இயற்கையைப் பயன்படுத்தாமல் எப்படி மனிதன் வாழ முடியும்?
மனிதனின் இன்றைய நாகரிகத்துக்குத் தொழில் புரட்சி தான் காரணம்.
தொழில் புரட்சிக்காக அவன் கண்டு பிடித்து பயன்படுத்திய கருவிகள் தான் வளி மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை மாறுபாட்டுக்கு காரணம்.
மனிதன் நாகரீகமாக வாழ ஆசைப்படாமல் இருந்திருந்தால்,
Global warming ஏற்பட்டிருக்காது.
நாகரீகம் ஏற்படாது இருந்திருந்தால் நாம் இப்போது காடுகளில்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.
இயற்கையைப் பயன்படுத்தாமல் எப்படி நாகரிகமாக வாழ முடியும்?"
"'இயற்கையை பயன்படுத்துவது
(use) சரி.
தவறாக உபயோகிப்பது (Misuse) தவறு.
அணு (Atom) ஒரு இயற்கைப் பொருள்.
ஆனால் மனிதன் அதை யுத்தத்திற்கு உதவக்கூடிய அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தியதால்
உலகில் எத்தனை போர்கள் ஏற்பட்டிருக்கின்றன?
போர்களின்போது மனிதன் பயன்படுத்திய அத்தனை அழிவு கருவிகளும் வளிமண்டல வெப்பநிலை மாற்றத்திற்கு காரணம் என்பது உனக்குத் தெரியாதா?"
"தாத்தா, நான் கேட்டது ஆன்மீகம் சார்ந்த கேள்வி.
நீங்கள் அறிவியல் சார்ந்த பாடத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்."
"'நமது உடல் எப்படி ஆன்மாவை சாகடிக்கும் பாவத்திற்குக் காரணமாக இருக்கிறதோ,
அதே போல் தான் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளும் மனித குல அழிவுக்கு காரணமாக இருக்கின்றன.
நிலநடுக்கங்களுக்குக்கூட
மனிதனின் தொழில் புரட்சிக்கு உதவிய
நிலக்கரி,
பெட்ரோலியம்,
தங்கம்,
வைரம்
போன்ற பொருட்களை பூமிற்குள் இருந்து எடுக்க மனிதன் தோன்டிய சுரங்கங்கள் தான் காரணம் என்று நீ படிக்கவில்லையா?"
"நிலநடுக்கங்களுக்கு காரணம் மனிதனா?"
"'இருக்க வாய்ப்பு இருக்கிறது.
பூமிக்குள் இருக்கும் இயற்கை வளங்களை மனிதன் வெளியே கொண்டு வருவதற்காக
பூமிக்குள் துளையிட்டாலோ,
சுரங்கங்கள் தோண்டினாலோ
அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நோக்கி நில உட்பகுதி நகரும் என்று படித்திருக்கிறாயா?"
"ஆம்."
"'பூமிக்கு அடியில் நகர்வுகள் ஏற்பட்டால் மேற்பகுதியில் என்ன நடக்கும்?''
"நாம் உட்கார்ந்து இருக்கும் இடத்திற்கு அடியில் தோண்டினால் என்ன நடக்குமோ அது நடக்கும்.
மேலே உள்ள நிலப்பகுதி கீழ் நோக்கி நகரும்."
'''மேலே உள்ள நிலப்பகுதி கீழ் நோக்கி நகர்ந்தால் மேலே உள்ள கட்டடங்கள் என்ன செய்யும்?"
"அவையும் கீழ்நோக்கி செல்லும்.
அப்படியானால் நிலநடுக்கங்களுக்கு மனிதன் தான் காரணம் என்கிறீர்களா?"
"'கடவுள் மனிதன்
சுரங்கங்கள் தோண்ட வேண்டும் என்று கட்டளை கொடுக்கவில்லையே."
''ஆனால் பூமிக்கு அடியில் பெட்ரோலியம்,நிலக்கரி போன்ற வளங்கள் இருப்பதற்கு காரணம் கடவுள்தானே!"
"'உனது உடலுக்கு உறுப்புகளைக் கொடுத்திருப்பது கடவுள்தான்.
பசித்தால் அவற்றை வெட்டி கறி வைத்துச் சாப்பிடுவாயா?
இயற்கைக்கு எந்தவித பங்கமும் ஏற்படாமல் பூமியின் மேல் உள்ள இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி மனிதன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
பூமியைத் தோண்டி தான் வாழ்வேன் என்று நினைத்தால் அதன் விளைவை அனுபவிக்க வேண்டும்.
மனிதன் செய்யும் காரியங்களின் விளைவை மனிதனே அனுபவிக்கிறான்.
மரம் வெட்டும் ஒருவன் உச்சி மரத்தில் இருந்து கொண்டு அடிமரத்தை வெட்டினால்
அவன் கீழே விழுவது உறுதி.
அதற்கு காரணம் அவனே தான்."
"தயவு செய்து ஆன்மீகத்திற்கு நேரடியாக வாருங்கள்."
'''உண்ணும் உணவை வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட பணத்தைக் கொண்டு,
எவ்வாறு மதுபானம் வாங்கி குடிப்பது தவறோ,
அவ்வாறே,
இறைவனது சேவையில் பயன்படுத்த வேண்டிய இயற்கைப் பொருள்களை
மனித குல அழிவுக்காக மனிதனே பயன்படுத்துவது தவறு.
கடவுள் படைத்த இயற்கை விதிகளை,
அறிவியல் மூலமாக மனிதன் கண்டுபிடித்து
அவற்றைத் தனது அழிவுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.
இதை மனிதன் தனது பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி செய்து கொண்டிருப்பதால்
மனித சுதந்திரத்தில் தலையிட விரும்பாத கடவுள் அதை அனுமதிக்கிறார்."
"ஆக இயற்கை நிகழ்வுகள் மனிதனை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்கிறீர்கள், அப்படித்தானே?"
"'இயற்கையின் எந்த நிகழ்வும் ஆன்மீக ரீதியாக எதிர்மறையில் மனிதனைப் பாதிக்காது.
நாம் கடவுளின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறோம்.
கடவுள் எங்கும் இருக்கிறார்.
விண்ணிலும் இருக்கிறார் மண்ணிலும் இருக்கிறார்.
நாம் மண்ணில் வாழ்ந்தாலும்,
விண்ணில் வாழ்ந்தாலும்
இறைவனின் கரங்களில் தான் வாழ்கிறோம்.
நாம் விசுவசிக்கிறபடி நாம் கடவுளின் கரங்களில் வாழும்போது
இயற்கை நிகழ்வுகளால் நம்மை கடவுளை விட்டு பிரிக்க முடியாது.
இயற்கை நிகழ்வுகள் நம்மை நாம் வாழும் உலகத்திலிருந்து பிரிக்கலாம், ஆனால் கடவுளை விட்டு பிரிக்க முடியாது.
விசுவாசக் கண் கொண்டு பார்த்தால் நடப்பதெல்லாம் நமது நன்மைக்கே."
"இப்போது புரிகிறது. மனிதன் இயற்கையைப் பயன்படுத்தி வாழ வேண்டும்.
அழித்து வாழ ஆசைப்பட்டால் தானும் அழிய நேரிடும்.
இயற்கை நிகழ்வுகளால் நமது ஆன்மீகத்துக்கு எந்தவித ஆபத்தும் இல்லை."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment