(மாற்கு. 8:36)
"தாத்தா, இதோ இதை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்."
"'என்ன அது?"
"எனது நண்பன் எனக்கு எழுதிய கடிதம்."
"'உனக்கு வந்த கடிதத்தை நான் ஏன் வாசிக்க வேண்டும்?"
"முதலில் வாசியுங்கள், அப்புறம் சொல்லுகிறேன்."
"அன்புள்ள நண்பனுக்கு,
நான் இங்கு நலம். நீ எப்படி இருக்கிறாய்? எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். இன்னும் சரியாகவில்லை."
இப்போது புரிகிறது. ஏன் வாசிக்க சொன்னாய் என்று."
"இப்படித்தான் முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதும் பேசுவதும் நமக்கு பழக்கம் ஆகிவிட்டது.
ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு ஒருவருடைய கையில் மைக்கைக் கொடுத்து விட்டால்,
"அன்பார்ந்த பெரியோர்களே," என்று ஆரம்பிப்பார்.
ஆனால் உண்மையில் அங்கு உள்ளவர்களில் யாரையும் அவருக்குத் தெரியாது.
தெரியாத ஆள் மீது எப்படி அன்பு இருக்கும்?"
"'இப்போது உன்னிடம் ஒரு உண்மையை சொல்லட்டுமா?
நமது நாட்டில் உள்ளவர்களில் யாருமே நலமாக இல்லை."
"எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?
நான் நலமாகத் தானே இருக்கிறேன்.
என் உடலில் எந்த பிரச்சனையும் இல்லையே?"
"'உடலில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் உனது ஆன்மாவில் ஒரு சிறு குற்றம் குறை கூட இல்லையா?"
"பாவம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். குற்றம் குறைகள் இல்லை என்று கூற முடியாது."
""குற்றம் குறைகள் இருந்தால் நலம் இல்லை என்று தானே அர்த்தம்."
"அதெப்படி? கொலை, களவு போன்ற பெரிய பாவங்கள் செய்திருந்தால் நலமில்லை என்று சொல்லலாம்.
சிறு குறைகள் இருந்தாலும் நலமென்று சொல்லக்கூடாதா?"
"'பேரப்புள்ள, பெரிய பாவங்கள் செய்திருந்தால் ஆன்மா. இறந்து விட்டது என்று அர்த்தம்."
"என்ன சொன்னீங்க? இறந்து விட்டது என்று அர்த்தமா?
கொலை, களவு செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் உலகில் உயிரோடு உலவிக் கொண்டுதானே இருக்கிறார்கள்."
"'அவர்கள் உலவிக் கொண்டிருக்கலாம், ஆனால் உயிர் இல்லாத ஆன்மாக்களோடு."
"நீங்கள் சொல்வது புரியவில்லை. செத்தவர்கள் எப்படி உலவ முடியும்?"
'"நான் அவர்களுடைய ஆன்மாக்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு ஆன்மா உயிரோடு இருக்க வேண்டுமென்றால் அதில் தேவ இஷ்ட பிரசாதம் (Sanctifying grace,) என்ற அருள் வரம் இருக்க வேண்டும். அதுதான் ஆன்மாவின் உயிர்.
சாவான பாவம் இல்லாத ஆன்மாவில் மட்டுமே அந்த அருள் இருக்கும்.
சாவான பாவம் செய்த வினாடியே ஆன்மாவின் உயிர் போய்விடும்.
பாவசங்கீர்த்தனத்தின் மூலம் பாவ மன்னிப்புப் பெற்றால் இழந்த தேவ இஸ்டப் பிரசாதம் திரும்பவும் கிடைக்கும். இறந்த ஆன்மா உயிர் பெறும்.
ஆனால் இறந்த ஆன்மாவோடு ஒருவன் மரணம் அடைய நேரிட்டால் அந்த ஆன்மா நித்திய காலமும் நரக வாழ்வு வாழ வேண்டியிருக்கும்."
"அதாவது, களவு செய்வதன் மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துக் கொண்டு
பெரிய மனிதர்கள் என்று பெயரோடு வாழ்பவர்கள் எல்லாம்
உண்மையில் ஆன்மீக ரீதியாக இறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள்."
"'Exactly. பெரிய பெரிய பாவங்கள் செய்து ஆன்மாவை சாகடித்து
அதன் மூலம் உலகம் முழுவதையும் தங்களுக்கு உரிமை ஆக்கிக் கொண்டாலும்
அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. "
"அதாவது
உலகில் பெரியவர்கள்.
கடவுள் முன் பிணங்கள். "
"'சரியாகச் சொன்னாய்.
ஒருவன் 12 ஆண்டுகள் பள்ளிக் கூடத்தில் படித்துவிட்டு +2 தேர்வில் 0% மதிப்பெண் வாங்கினால், அவன் அத்தனை ஆண்டுகள் படித்து அவனுக்கு என்ன பயன்?
ஆன்மாவைச் சாகடிப்பதின் மூலம் உலகத்தின் தலைவர்களாக மாறினால் அவர்களுக்கு அதனால் என்ன பயன்?
நித்தியத்திற்கும் நிலைவாழ்வை இழப்பது மட்டுமே பாவ வாழ்வின் விளைவாக இருக்கும்
சாவான பாவத்தால் இறந்து போன ஆன்மாவோடு நூறு ஆண்டுகள் வாழ்பவனை விட,
பாவம் இல்லாத ஆன்மாவோடு நூறு நாட்கள் மட்டுமே உலகில் வாழ்பவன் பாக்கியசாலி.
ஒருவன் எத்தனை ஆண்டுகள், எத்தனை பதவிகளோடு உலகில் வாழ்ந்தான் என்பது
அவனது நித்திய வாழ்வை தீர்மானிக்காது.
அவன் மரணம் அடையும் போது அவனது ஆன்மா என்ன நிலையில் இருந்தது என்பதே அவனது நித்திய வாழ்வைத் தீர்மானிக்கும்.
பணம் சம்பாதித்து வாழ்வதைவிட பாவம் இல்லாமல் வாழ்வதுதான் முக்கியம்."
"பாவமே செய்யாமல் நமது ஆன்மாவை காப்பாற்றுவது எப்படி தாத்தா?"
"'அது மிக எளிது.
கடவுள் நமது ஆன்மாவை தனது சாயலில் படைத்தார்.
கடவுளைப் போலவே நம்முடைய ஆன்மாவும் ஒரு ஆவி.
கடவுள் தனது எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.
அவரால் ஒரே நேரத்தில் தன்னுடைய அனைத்து படைப்புகளிடனும் தொடர்பில் இருக்க முடியும்.
உலகில் உள்ள அத்தனை மனிதர்களோடும் ஒரே நேரத்தில் தனித்தனியாக கடவுளால் பேச முடியும்.
அவர் ஆவியாகையால் இடத்துக்கும் நேரத்துக்கும் கட்டுப்பட்டவர் அல்ல.
நமது உடல் சடப் பொருள். அதனால் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் தான் இருக்க முடியும்.
அமெரிக்காவில் இருக்கும் உடல் அதே நேரத்தில் இந்தியாவில் இருக்க முடியாது.
கடவுள் இடத்துக்கும் நேரத்துக்கும் கட்டுப்படாத தனது பண்பை அவரைப் போல் ஆவியாக உள்ள நம் ஆன்மாவுடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விண்ணகத்தில் உள்ள அவரோடு மண்ணகத்தில் வாழும் நமது ஆன்மா எப்போதும் ஐக்கியமாக இருக்க முடியும்.
கடவுளோடு ஐக்கியமாக இருப்பதைத்தான் செபம் என்கின்றோம்.
Prayer is union with God.
சகல புனிதர்களும் விண்ணகத்தில் தான் வாழ்கின்றார்கள்.
அவர்களும் நேரத்துக்கும் இடத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.
''விண்ணகத்தில் வாழும் சகல புனிதர்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்"
என்று வேண்டும்போது அனைத்துப் புனிதர்களுக்கும் நமது வேண்டுதல் வேண்டும் போதே சென்று சேரும்.
"அருள் நிறை மரியே வாழ்க"
என்று அன்னை மரியாளை வாழ்த்தும்போதே நமது வாழ்த்துக்கள் வாழ்த்தும் போதே அவளிடம் சென்று சேரும்.
அவ்வாறே ஒவ்வொரு புனிதரிடமும் நாம் நினைக்கும் போதெல்லாம் தொடர்பு கொள்ளலாம்.
எந்த புனிதரை நாம் நினைத்தாலும்
அவர் நாம் நினைக்கும் போது நம்மோடு இருப்பார்.
நமது ஆன்மா எப்போதும் இறைவனோடு ஐக்கியமாக இருந்தால்
பாவ சோதனைகளால் நம்மை வெல்ல முடியாது.
இறைவனோடு ஐக்கியமாக இருக்கும் நம்மை சாத்தானால் நெருங்க முடியாது.
நமது ஆன்மா இறைவனையும் புனிதர்களையும் நினைத்துக் கொண்டிருப்பது ஒன்றே
பாவம் செய்யாதிருக்க மிக எளிதான வழி."
"தாத்தா, நான் அன்னை மரியாளிடம் வேண்டும்போது
நீங்களும் வேண்டினால் நமது இருவர் வேண்டுதையும்
மரியாள் கேட்பாளா?"
"'நாம் இருவர் மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை கோடி மக்களும் ஒரே நேரத்தில் வேண்டினாலும்
அத்தனை பேருடைய வேண்டுதல்களையும் அன்னையால் கேட்க முடியும்."
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாம் பூமியில் வாழும்போதே விண்ணகத்திலும் வாழலாம் போலிருக்கிறது."
"' இறைவன் நம்மோடு வாழ்கிறார் என்று
விசுவசிக்கிறாயா?''
"விசுவசிக்கிறேன்.''
"'இறைவன் நம்மோடு வாழ்ந்தால் நாமும் அவரோடு தானே வாழ்கிறோம்."
"ஆமா. அப்படியானால் நாம் பூமியில் வாழும்போதே
விண்ணக வாழ்வையும் ருசித்துப் பார்க்கிறோம்,
செபிக்கும்போது "
"'When we pray we have a pretaste of heaven.
நமது வாழ்க்கையே செபமாக இருந்தால்!"
"வாழ்க்கையே செபமாக இருந்தால் நாம் விண்ணக வாழ்க்கையை பூமியிலேயே ஆரம்பித்து விட்டோம் என்று அர்த்தம்.
"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும்
நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:"
(அரு.17:21)
இயேசு தந்தையிடம் வேண்டியது போல நாம் தந்தையுடனும் இயேசுவுடனும் ஒன்றித்திருப்போம்.
ஒன்றித்திரிந்தால் நமது நாட்டம் எல்லாம் விண்ணகத்திலேயே இருக்கும்.
உலகைப் பற்றி கவலைப்பட மாட்டோம்.
உலக நாட்டம் இல்லாதவர்களை பாவம் நெருங்காது."
லூர்து செல்வம்
No comments:
Post a Comment