Monday, February 13, 2023

இயற்கை நிகழ்வுகள், கடவுள், நாம்.

இயற்கை நிகழ்வுகள், கடவுள், நாம்.

"தாத்தா, ஒரு கேள்வி கேட்பேன், கோபப்படாமல் பதில் சொல்ல வேண்டும்."

""நீ சொல்வதைப் பார்த்தால் கேட்கக்கூடாத கேள்வியை கேட்கப் போகிறாய் போல் தெரிகிறது.''

"கேட்கக்கூடாத கேள்வியா, கேட்கக் கூடிய கேள்வியா என்பது நான் கேட்ட பின்புதான் தெரியும்."

"" சரி, கேள்"

"கடவுளின் அன்பைப் பற்றி தாய்த்திருச்சபை என்ன சொல்கிறது?"

"'கடவுள் அன்பு மயமானவர் என்று கூறுகிறது.
God's very being is love.

God is love."

"கடவுள் தானே உலகையும் அதில் வாழும் நம்மையும் படைத்தார்?" 

"'அதில் என்ன சந்தேகம்?" 

"சந்தேகம் ஒன்றும் இல்லை.

ஆனால் சில விஷயங்கள் புரியவில்லை."

"'சில விஷயங்கள் என்றால்?" 

"படைத்தவர் தானே தனது படைப்புகளைப் பராமரிக்க வேண்டும்."

"'ஆமா. நம்மை படைத்த கடவுள் தான் நம்மைப் பராமரித்துக் கொண்டிருக்கிறார்."

"இயற்கையைப் படைத்த கடவுள் தானே இயற்கை விதிகளையும் படைத்திருப்பார்?"

"'அவர்தான் படைத்தார். அதில் உனக்கு என்ன சந்தேகம்?"

"சந்தேகம் எதுவும் இல்லை.

ஆனால் சில விஷயங்கள் புரியவில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்."

"'புரியாதவற்றை நேரடியாக கேட்க வேண்டியது தானே. 
எதற்கு இத்தனை கேள்விகள்?"

"சரி, நேரடியாகவே கேட்கிறேன்.

அவர் படைத்த இயற்கையின் சில நிகழ்வுகள் அவர் படைத்த மனிதனைப் பாதித்துக் கொண்டிருக்கிறன.

அதை ஏன் அனுமதிக்கிறார்?"

"'என்ன நிகழ்வுகள்?"

"'சுனாமி, வெள்ளம், கடலால் ஏற்படும் நில அரிப்பு, நில நடுக்கம் போன்றவை."

"'இயற்கை நிகழ்வுகள் மனிதனை எப்படிப் பாதிக்கின்றன?"

''சுனாமியால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தது பாதிப்பு இல்லையா?

துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தில் பெரிய பெரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோர் இறந்தது பாதிப்பு இல்லையா?"

"'நீ கத்தோலிக்க கிறிஸ்தவன் தானே?"

''அதில் என்ன சந்தேகம்?"

"'கடவுள் எப்படிப்பட்டவர் என்று நீ விசுவசிக்கிறாய்?'' 

" கடவுள் அன்பானவர், இரக்கமுள்ளவர், நல்லவர், மற்றும் கத்தோலிக்க திருச்சபை கடவுளைப் பற்றி கூறும் அனைத்தையும் 
விசுவசிக்கிறேன்."

"'நீ விசுவசிப்பது உண்மையானால் உலக நிகழ்வுகளை விசுவாசக் கண் கொண்டு பார்க்க வேண்டும்.

ஒரு மாணவன் அவனுடைய ஆசிரியரை எப்படிப் பார்க்க வேண்டும்?"

"அவன் மீது அக்கறை உள்ளவர்,

 அவனது நன்மைக்காகவே உழைக்கின்றவர் என்று பார்க்க வேண்டும்."

"'அப்படிப் பார்த்தால் ஆசிரியர் கையில் இருக்கும் பிரம்பைப் பற்றி மாணவன் குறை கூறுவானா?"

"நிச்சயமாக மாட்டான்.

ஆசிரியர் என்ன செய்தாலும் அது அவனது நன்மைக்காகவே இருக்கும் என்று தான் நினைப்பான்."

"' சாதாரண மாணவன் அப்படி நினைப்பான் என்றால்,

கடவுள் மீது உண்மையான விசுவாசம் கொண்டவன் 

கடவுளது செயல்களைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும்?"

"கடவுளது செயல்கள் எல்லாம் அவனது நன்மைக்காகவே என்று
 நினைக்க வேண்டும்."

"'நினைத்திருந்தால் நீ கேட்ட கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டாய்.

இயற்கையைப் படைத்த இறைவன் தான் மனிதனையும் படைத்தார்.

இயற்கையை மனிதனுக்காகவே படைத்தார். 

மனிதனுக்காக படைக்கப்பட்ட இயற்கை எப்படி மனிதனை எதிர்மறையாகப் பாதிக்கும்?"

"அதைத்தான் புரியவில்லை என்று சொன்னேன்."

"' விசுவாசக் கண் கொண்டு பார்த்தால் எல்லாம் புரியும்.

கடவுள் மனிதனை எதற்காகப் படைத்தார் என்று நீ விசுவசிக்கிறாய்?"

"கடவுளை அறிந்து, 
அவரை நேசித்து, அவருக்காகவே வாழ்ந்து அவரோடு நிலை வாழ்வு வாழ்வதற்காகவே படைத்திருக்கிறார் என்று விசுவசிக்கிறேன்."

"'நாம் பிறந்ததன் இறுதி நோக்கம் என்ன?''

"இறைவனோடு வாழ வேண்டிய நிலை வாழ்வு."

"'உலகில் பிறந்த மனிதன் எப்போது நிலை வாழ்வை அடைவான்?"

"அவனுடைய மரணத்துக்குப் பின்."

"'அப்படியானால் மரணம் நிகழ வேண்டிய ஒன்றா?  நிகழக் கூடாத ஒன்றா?"

"நிகழ வேண்டிய ஒன்று. 

அது நிகழ்ந்தால்தான் விண்ணகத்தில் நமக்கு நிலை வாழ்வு கிடைக்கும்."

"'அப்படியானால் மரணம் மனிதனுக்கு உதவுகிறதா? அவனது வாழ்வைப் பாதிக்கிறதா?"

"விசுவாசத்தின் அடிப்படையில் பார்த்தால் உதவுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

உலக வாழ்வின் அடிப்படையில் பார்த்தால் பாதிக்கிறது என்று சொல்ல வேண்டும்."

 "' ஒரு விசுவாசி எந்த அடிப்படையில் பார்க்க வேண்டும்?"

"விசுவாசத்தின் அடிப்படையில்."

"'நீ இயற்கை நிகழ்வுகளைப் பற்றி எந்த அடிப்படையில் கேட்டாய்?"

"உலக வாழ்வின் அடிப்படையில்."

"' ஆன்மீக அடிப்படையில் பார்த்தால் சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகள் மனிதனைப் பாதித்திருக்கின்றனவா?

அல்லது,

அவனுக்கு உதவியிருக்கின்றனவா?"

"சுனாமியால் மரணம் அடைந்த மனிதன் விண்ணக வாழ்வுக்கு ஏற்றவனாக இருந்தால் சுனாமி அவனுக்கு உதவியிருக்கிறது என்று சொல்லலாம்.

அவனது ஆன்மா விண்ணக வாழ்வுக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் சுனாமியால் அவனுக்கு எந்த ஆன்மீக நலனும் இல்லை."

"'தனது ஆன்மாவை ஒவ்வொரு நிமிடமும் விண்ணக வாழ்வுக்கு ஏற்றதாக வைத்திருக்க வேண்டியது மனிதனின் கடமை.

மரணம் கடவுளின் நித்திய காலத் திட்டப்படி

 வயது முதிர்வு காரணமாகவோ,

 நோய் நொடிகள் காரணமாகவோ,

இயற்கை நிகழ்வுகள் காரணமாகவோ,

 விபத்து காரணமாகவோ 
 வரலாம்.

எந்த காரணம் மூலமாக வந்தாலும் 

தனது ஆன்மாவை பாவமாசின்றி வைத்துக்கொள்ள வேண்டியது மனிதனின் கடமை.

மனித ஆன்மாவின் நிலைமைக்கும், சுனாமிக்கும் சம்பந்தம் இல்லை.

உணவு உடலுக்கு நல்லதா? கெடுதியா?"

"உணவு மனித உடல் வளர உதவுகிறது, ஆகவே நல்லது தான்."

"'உணவு கெட்டுப் போயிருந்தால்?"

"தாத்தா, எதனால் கெட்டுப் போய் இருக்கிறதோ அதுதான் கெடுதி,

உணவு அல்ல."

"'மரணம் விண்ணகம் செல்லும் வாசல்.

ஆன்மா விண்ணகம் செல்ல வேண்டுமா 

அல்லது 

எதிர் திசையில் செல்ல வேண்டுமா என்பதை தீர்மானிப்பது மரணம் அல்ல.

ஆன்மாவின் நிலைமைதான் தீர்மானிக்கிறது.

மரணத்தின் காரணத்தை தீர்மானிப்பது இறைவன்.

மரணம் வழியாக எங்கே செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பது மனிதன்.

விண்ணகம் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க

 அவனுக்கு கடவுள் முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

நமது சுதந்திரத்தில் இறைவன் குறுக்கிட மாட்டார்.

கடவுள் இயற்கையை படைக்கும் போது அது இயங்குவதற்கான விதிமுறைகளை அதற்கு கொடுத்திருக்கிறார்.

அது அவற்றின்படி தான் இயங்கும்..

இயற்கை நிகழ்வுகள் நமக்கு உதவிகரமாக இருக்கின்றனவா

 அல்லது 

கெடுதியாக இருக்கின்றனவா என்பதை 

நமக்கு ஏற்படும் பாதிப்புகளை வைத்து 

நாம்தான் தீர்மானிக்கிறோம்.

மழையும், அதனால் ஏற்படும் வெள்ளமும் இயற்கை நிகழ்வுகள்.

மழையை நல்லது என்கிறோம்.
வெள்ளத்தை கெடுதி என்கிறோம்.

நல்லதால் கெடுதி ஏற்பட முடியாது.

ஆனால் விவசாயத்துக்கு உதவும் மழையை நல்லது என்கிறோம்,

பயிர்களை அழிக்கும் வெள்ளத்தை கெடுதி என்கிறோம்.

ஒருவருக்கு நன்மை பயக்கும் இயற்கை நிகழ்வு இன்னொரு நபருக்கு தீமை பயக்கலாம்."


"தாத்தா, கடவுள், அவர் படைத்த இயற்கையின் சில நிகழ்வுகள் அவர் படைத்த மனிதனைப் பாதிக்க ஏன் அனுமதிக்கிறார்? என்பது என் கேள்வி.

என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஏதோ பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்."

"'நீ இயற்கை நிகழ்வுகள் என்று கூறும் அனேக நிகழ்வுகளுக்கு மனிதன்தான் காரணம் என்பது உனக்கு தெரியுமா?

தான் காரணமாக இருந்துவிட்டு பழியை மனிதன் இயற்கை மேல் போட்டுக் கொண்டிருக்கிறான்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment