Saturday, April 23, 2022

"என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்"(அரு.20:21)

"என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்"
(அரு.20:21)

இயேசு தன் சீடர்களிடம் சொல்கிறார்:

"என் தந்தை எதற்காக என்னை உலகிற்கு அனுப்பினார்?

உலக மக்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, அவற்றை மன்னிப்பதற்காகத்தான் என்னை உலகிற்கு அனுப்பினார்.

நான் உலகிற்கு வந்ததின் நோக்கமே பாவமன்னிப்புதான்.

தந்தையிடமிருந்தும், தூய ஆவியிடமிருந்தும் என்னைப் பிரிக்க முடியாது.

நானும், தந்தையும் ஒன்றாயிருப்பது போலவே தூ ஆவியும் எங்களோடு ஒன்றாக, ஒரே கடவுளாக இருக்கின்றார்.

 தந்தையோடு ஒன்றாக இருந்து கொண்டே நான் உலகிற்கு வந்தது போல எங்களோடு  ஒன்றாக இருக்கும் தூய ஆவியை உங்களிடம் அனுப்புகின்றேன்.

தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

எதற்காக?

நான் உலகிற்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக.

அதாவது உலகினரின் பாவங்களை மன்னிப்பதற்காக.

பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்.


பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது தந்தையையும், என்னையும் சேர்த்துதான், 

அதாவது பரிசுத்த திரித்துவத்தைப், 

பெற்றுக் கொள்கிறீர்கள்.

நாங்கள் எப்போதும் ஒன்றாய் இருப்பதுபோல  நீங்களும் எங்களோடு,

அதாவது,

ஒரே கடவுளோடு ஒன்றாய் இருங்கள்.

நீங்கள் மக்களிடம் செய்யும் ஒவ்வொரு செயலும் பாவ மன்னிப்பை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

நற்செய்தியைப் போதியுங்கள்,

தேவத் திரவிய அனுமானங்களை நிறை வேற்றுங்கள்,

திருப்பலி நிறைவேற்றி, மக்களுக்கு என்னை உணவாகக் கொடுங்கள்,

இவை எல்லாம் மக்கள் பாவம் இல்லாமல் பரிசுத்தமான வாழ்வு வாழ்வதற்காகத்தான்.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து, பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

மக்களின்  பாவங்களை மன்னிக்கும் முழு அதிகாரத்தை உங்களிடம் தந்திருக்கிறேன்.

அதை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்யும்படி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

மக்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றுமுன் பாவசங்கீர்த்தனத் தொட்டியில் உட்காருங்கள்.

பாவம் இன்றி திருப்பலியில் கலந்து கொண்டால் தான் எனது அருள் வரங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

பாவத்தோடு என்னை உணவாக உட்கொண்டால் அது என்னை அவமதிக்கும் செயல் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

பரிசுத்தமான உள்ளத்தோடு தான் மக்கள் என்னை வரவேற்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

நான் உங்களுக்குத்  தந்திருக்கும் 
பாவங்களை மன்னிக்கும்  அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். 

நான் தந்தையோடும், தூய ஆவியோடும்  எப்போதும் உங்களோடு இருக்கின்றேன்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் பாவங்களை மன்னியுங்கள்."

*           *                  *                *              *



அன்புள்ள சகோதர, சகோதரிகளே,

இயேசு தனது சீடர்களிடம் கூறிய வார்த்தைகள்  நமக்காகத்தான்.

நமது மீட்புக்காகத்தான் இயேசு தனது சீடர்களை நம்மிடம் அனுப்பியுள்ளார்.

ஆகவே இயேசுவின் விருப்பப்படி நாம் அனைவரும் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்வோம்,

பரிசுத்தமாய் வாழ்வோம்,

பரலோக சாம்ராச்சியம் நமதே!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment