இயேசு நமக்குக் கற்பித்த செபத்தில் உள்ள ஒரு முக்கியமான மன்றாட்டு:
"எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் பாவங்களை மன்னியும்."
அதாவது நாம் மன்னித்தால்
நாமும் மன்னிக்கப் படுவோம்.
கடவுளைப் பொறுத்த மட்டில் மன்னிப்பு மிக எளிதான செயல்.
நமது பாவங்கள் எத்தனையாய் இருந்தாலும்,
எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும்
"உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டன." என்று அவர் சொன்ன விநாடியே அவை மன்னிக்கப் பட்டு விடும்.
ஆனாலும் நாம் மன்னிப்புக் கேட்டால்தான் கடவுள் நமது பாவங்களை மன்னிப்பார்.
இப்போது பிரச்சனை நாம் மன்னிப்புக் கேட்பதில்தான் இருக்கிறது.
மன்னிப்புக் கேட்குமுன் நாம் நமக்கு விரோதமாகக் குற்றம் செய்தவர்களை மன்னித்துவிட வேண்டும்.
நமக்கு யார் மீதும் கோபமோ, வன்மமோ இருக்கக் கூடாது.
மற்றவர்களை மன்னித்த பின்புதான் நாம் கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மன்னிப்பதில் கஷ்டம் இல்லா விட்டால் மன்னிப்புக் கேட்பதிலும் கஷ்டம் இல்லை.
மன்னிப்பது கஷ்டமானால் மன்னிப்பு கேட்பதும் கஷ்டமாகி விடும்.
ஆகவே நாம் முதலில் மற்றவர்களை மன்னிப்போம்.
கடவுளும் நமது பாவங்களை மன்னிப்பார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment