Monday, March 21, 2022

உண்மையான அன்புடன் அன்பு செய்வோம்.

உண்மையான அன்புடன் அன்பு செய்வோம்.

".ஹலோ, ஏன் முகத்தை ஒரு மாதிரி வச்சிருக்க?"

"செருப்படி வாங்கியவன்
முகத்தை வேறு எப்படி வச்சிருப்பான்?"

'',என்னது செருப்படி வாங்கினீயா?"

"அதை ஓயாமல் சொல்லணுமா?"

",ஓயாமல் சொல்ல வேண்டாம். செருப்படி வாங்கிக்கினத
நம்ப முடியல. அதுதான் கேட்டேன்."

"என்னால கூட தான் நம்ப முடியல, ஆனால் முதுகு வலிக்கிறதே. நம்பித்தான் ஆகணும்."

". முதுகு?"

"அடிபட்ட இடம்."

", சரி. நடந்தத விபரமா சொல்லு."

"ஞாயிற்றுக் கிழமை சுவாமியார் எதைப் பற்றி பிரசங்கம் வச்சார் ஞாபகம் இருக்கா?"

", பிறரன்பு பற்றி."

"Love your neighbour as you love yourself ன்னு சொன்னதோடு,

நேசிச்சா மட்டும் போதாது, அதைச் சொல்லாலும், செயலாலும் வெளிக் காட்டணும்னும் சொன்னாரு, ஞாபகம் இருக்கா?"

". நல்லா ஞாபகம் இருக்கு."

"நானும் முதல்ல சொல்லால் வெளிப்படுத்துவோம்னு தீர்மானித்து, வீட்டுக்குப் போனவுடன் அப்பாவிடம்,

'I love you, Dad.'ன்னு சொன்னேன்.

அப்போது அவர் அனுபவித்த மகிழ்ச்சியைப் போல ஒரு நாளும் அனுபவித்திருக்க மாட்டார்.

நானும் அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தேன்.

அப்புறம் அம்மா, அக்கா, தம்பி எல்லோருக்கும் நான் நேசிப்பதைச் சொன்னேன்.

எல்லோரும் சந்தோசப் பட்டாங்க.

தாத்தாவிடம் சொன்னபோது அவர் என்னைக் கட்டி அரவணைத்து முத்தமே கொடுத்து விட்டார்.

அப்போது அவர் அடைந்த இன்பத்தைப் போல வாழ்நாளில் ஒரு நாளும் அடைந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

நானும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துகொண்டே ,

அப்புறம் யாருக்குச் சொல்லலாம் என்று நினைவதுக் கொண்டே வெளியே போனேன்.

எதிரே பக்கத்து வீட்டு  அக்கா வந்து கொண்டிருந்தாள்.

அவளிடம் போய்,

"I love you." ன்னு சொன்னேன், புன்னகையோடு.

அடுத்த விநாடி அவள்  கொடுத்ததுதான் செருப்படி.

வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அடி."

", வா, உட்கார், இதைப்பற்றி கொஞ்சம் பேசுவோம்."

"எதைப் பற்றி? அடியைப் பற்றியா?"

", இல்லை. அன்பைப் பற்றி."

"எனக்கு அடி வாங்கிக் கொடுத்த அன்பைப் பற்றியா?"

", உனக்கு அன்பு அடி வாங்கிக் கொடுக்கவில்லை. அதைப் பற்றிய தவறான எண்ணம் தான் அடி வாங்கிக் கொடுத்தது.

நமக்குத் தெரியும், கடவுள் அன்பு மயமானவர் என்று.

God is love.

தனது அன்பின் காரணமாகத் தான் அவர் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார்."

"அன்பு மயமானவனாகவா படைத்தார்?"

", அன்பு மட்டுமே செய்ய வேண்டியவனாகப் படைத்தார்.

அதாவது அன்பு செய்வதற்காக மட்டுமே அவனைப் படைத்தார்.

கடவுள் மனிதனுக்குக் கொடுத்த கட்டளையே

"உன்னைப் படைத்த என்னையும்,

உன்னோடு படைக்கப்பட்ட உன் அயலானையும் அன்பு செய்" என்பது மட்டுமே.

அன்புக்கு எதிராகச் செய்யப் படுவது பாவம்.

அன்பின் வளர்ச்சிக்காகச் செய்யப் படுவது புண்ணியம்.

மனிதன் தான் செய்த பாவத்தினால் தனக்கு அளிக்கப் பட்டிருந்த இறைச் சாயலைக் களங்கப் படுத்தி விட்டான்,

அதாவது,

அன்பையே களங்கப் படுத்தி விட்டான்.

(குடிப்பதற்காகக்  கொடுக்கப் பட்ட தண்ணீரை,

  குடிப்பதற்காகப் பயன்படுத்தி அதன் பெயரைக் கெடுத்து விட்டதுபோல.)

நீ I love you. சொன்ன போது மகிழ்ந்தவர்கள் அதை இறைவன் கொடுத்த அன்பாக நினைத்தார்கள்.

ஆனால் உன்னை அடித்தவள் பாவத்தினால் களங்கப்படுத்தப் பட்ட அன்பாக நினைத்து விட்டாள்."

"இப்போது ஒன்று புரிகிறது.

உலகத்திலுள்ள பொருட்களைக் கொடுத்தவர் கடவுள்.

மனிதனுக்குப் புத்தியைக் கொடுத்தவரும் கடவுள் தான்.

மனிதன் கடவுள் கொடுத்த புத்தியையும், கடவுள் கொடுத்த பொருட்களையும்

கடவுளுக்கு விரோதமாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறான்.

கடவுள் படைத்த அணுவையே அணுக்குண்டு தயாரிக்கப் பயன்படுத்தி

 கடவுளுடைய படைப்பையே அழித்துக் கொண்டிருக்கிறான்."

", மனிதன் திருந்த வேண்டுமென்றால் மனிதன் கடவுளையும், அவரது படைப்புகளையும்,

கடவுள் பகிர்ந்து கொண்ட அன்பினால் அன்பு செய்ய வேண்டும்.

கடவுளை அவரது நன்மைத் தனத்திற்காக அன்பு செய்ய வேண்டும்.

அயலானை அவனுக்கு உதவி செய்வதற்காக அன்பு செய்ய வேண்டும்.

உன்மையான பிறரன்பு பிறனின் ஆன்மாவை நேசிக்கும்.

வெறும் கவர்ச்சிக்கும் மனிதன் அன்பு என்று பெயர் வைத்து விட்டதால்தான்,

அன்பு என்ற சொல் களங்கப் பட்டுவிட்டது.

இறைவனை நேசிக்கும் அன்பைக் கொண்டே அயலானையும் நேசிப்போம்.

பாவ உணர்ச்சிகளால்  அன்பைக் களங்கப்படுத்தி விடக்கூடாது.

ஒருவரது அழகுக்காகவும், அவரிடமுள்ள பொருட்களுக்காகவும் மட்டும் ஒருவரை விரும்பினால் அதற்குப் பெயர் அன்பு அல்ல.

இறைவனுக்காக செய்யப் படும் அன்பே உண்மையான அன்பு.

உண்மையான அன்புடன் அன்பு செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment