Monday, March 14, 2022

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு. 3:17)


"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு. 3:17)

இந்த வசனத்தை வாசித்து விட்டு நண்பர் ஒருவர்,

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று,"

என்று இயேசு கூறியிருக்கிறாரே,

ஆனால் நாம்  

"இயேசு சீவியரையும் மரித்தவரையும் நடுதீர்க்கவருவார்."

என்று விசுவசிக்கிறோமே,

நமது விசுவாசம் தவறா?"

என்று கேட்கிறார்.

இறுதித் தீர்ப்பு உண்டு என்று
(மத்.25:31-46) இயேசுவே கூறியிருக்கிறார்.

ஆகவே நமது விசுவாசம் சரியானது தான்.

"அப்படியானால்

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
என்ற வசனம்?

அதுவும் இயேசு கூறியதுதானே!

அதெப்படி
இயேசுவே 

இறுதித் தீர்ப்பு உண்டு என்றும்,
அவர் உலகிற்கு வந்தது தீர்ப்பளிக்க அல்ல என்று கூறுவார்?"

இயேசுவின் இரு கூற்றுக்களும் சரியானவையே,

நாம் தான் புரிந்து கொள்ளக் கூடிய விதமாய்ப் புரிந்து கொள்ள வேண்டும்.

இயேசு சொன்ன வசனம் முழுமையாக:

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே.

அவரில் விசுவாசம் கொள்பவன் தீர்ப்புக்கு ஆளாவதில்லை:

 விசுவாசங்கொள்ளாதவனோ ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டான்."

பள்ளிக்கூட மாணவர்கள்களுக்கு இது புரியும்.

தேர்வு எழுதுகிறவர்களுக்கு,
விடைத்தாளை மதிப்பிட்ட பின்

Pass, fail ஆகிய இரண்டில் ஒரு முடிவு வரும்.

விடைத்தாளைத் தாளைத் திருத்துபவர் ஆசிரியர், மதிப்பெண் போடுபவரும் அவர்தான்.

Pass Mark போடுபவரும் அவர்தான்.

fail mark போடுபவரும் அவர்தான்.

ஆனால் மாணவனை fail ஆக்குபவர் பேப்பர் திருத்தும் ஆசிரியரா?

மாணவன் 35 மதிப்பெண்ணுக்குக் கூட சரியான பதில் எழுதாவிட்டால் அவன் fail தான்.

உண்மையில மாணவன் தன்னைத் தானே fail ஆக்கிக் கொள்கிறான், சரியாக பதில் எழுதாததன் மூலம். 

அவன் தன்னைத் தானே fail ஆக்கிக் கொண்டதை ஆசிரியர் சொல்கிறார். அவ்வளவுதான்.
அவர் fail ஆக்குவதில்லை.

 கடவுள் மனிதனை முழுமையான சுதந்திரம் உள்ளவனாகப் படைத்தார்.

விண்ணக வாழ்வுக்காக அவனைப் படைத்திருந்தாலும் அதை அவன் தன் சுதந்தரத்தைப் பயன் படுத்தி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவர் திட்டம்.

அவர் "என்னோடு வாழ்வதை (மோட்சத்தை) தேர்ந்தெடு" என்று சொல்கிறார்.

மனிதன் மோட்ச வாழ்வைத் தேர்ந்தெடுப்பதற்காகவே கடவுள் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.


கடவுளை விசுவசித்து, அதன்படி வாழ்ந்து, மரிப்பவர்கள் விண்ணகம் செல்வார்கள் என்பதும்,

கடவுள் வேண்டாமென்று பாவ வாழ்க்கை வாழ்ந்து மரிப்பவர்கள்

 அவர்கள் விருப்பப்படி கடவுளைப் பிரிந்த நிலைக்கு, அதாவது, நரகத்திற்குப் போவார்கள் என்பதும் இறைவன் வகுத்த நியதி.

மோட்சம் வேண்டுமா, நரகம் வேண்டுமா என்று தீர்மானிப்பவர்கள் வாழும் மனிதர்கள்தான், கடவுள் அல்ல.

இறக்கும்போது
கடவுள் வேண்டும் என்று வாழ்ந்தவர்கள் அவர்கள் விருப்பப்படி மோட்சத்திற்கும்,

வேண்டாம் என்று வாழ்ந்தவர்கள் அவர்கள் விருப்பப்படி நரகத்துக்கும் செல்வார்கள்.

இறுதி நாளில் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுவார்கள்,

அப்போதுதான் நடுத்தீர்வை இருக்கும்.

இயேசு வருவார்.

 ஏற்கனவே தங்கள் நித்திய நிலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் 

தங்கள் உடலோடு ஏற்கனவே தாங்கள் போன நிலைக்கே போவார்கள்.

மரணத்துக்குப் பிந்திய நமது வாழ்க்கை நிலையை நாம்தான்
தேர்ந்தெடுக்க வேண்டும்.

35 மதிப்பெண் பெற்றால்தான் pass, குறைவாகப் பெற்றால் fail என்று தெரிந்த பின்னும் படிக்காதவர்களை ஆசிரியர் என்ன செய்வார்?

பாவம் இல்லாமல் வாழ்ந்து மரித்தால் மோட்சம்,

 பாவத்தோடு வாழ்ந்து மரித்தால் நரகம் 

என்று தெரிந்த பின்பும்

 பாவ நிலையில் வாழ்ந்து மரிப்பவர்களை  கடவுள் என்ன செய்வார்?

கடவுள் இரக்கம் உள்ளவராய் இருப்பதால் தான் நாம் பாவம் செய்யும்போதும் நாம் திருந்தி வாழ அழைப்பும், நேரமும் கொடுத்திருக்கிறார்.

கடவுளது இரக்கத்தைப் பயன் படுத்தி திருந்தி வாழ்பவர்கள் மோட்சத்துக்கும்,

திருந்தி வாழாதவர்கள் நரகத்துக்கும் போவார்கள்.  

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். தேர்வு வைக்கிறார். 

தேர்வில் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்கள் வெற்றி என்றும்,

குறைவாகப் பெறுபவர்கள் தோல்வி என்றும் சொல்லி விடுகிறார்.

வெற்றி பெற ஆசிப்பவர்கள் நன்கு படிப்பார்கள்.

வெற்றியைப் பற்றி அக்கறைப் படாதவர்கள், அதாவது, தோற்றாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் நன்றாகப் படிக்க மாட்டார்கள்.

வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பவர்கள் மாணவர்களே, ஆசிரியர் அல்ல.

அதேபோல்தான்,

கடவுளோடு வாழ வேண்டுமா,

அல்லது கடவுளைப் பிரிந்து வாழ வேண்டுமா

என்று தீர்மானிப்பவர்கள் மனிதர்களே, கடவுள் அல்ல.

மனிதர்கள்தான் தங்களைத்  தாங்களே தீர்ப்பிட்டுக் கொள்கிறார்கள், கடவுள் அல்ல.

உலக முடிவில் இறுதித் தீர்ப்பு இருக்கும். இயேசு வருவார். தீர்ப்பிட அல்ல.

 தங்கள் வாழ்க்கை மூலம் தங்களையே தீர்ப்பிட்டுக் கொள்பவர்கள் மனிதர்களே.

கடவுள் திட்டப்படி வாழ்வோம்.
நித்திய பேரின்ப வாழ்வைத் தேர்ந்து கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment