Saturday, March 19, 2022

"காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்" என்றான்."(லூக்.13:9)

"காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்" என்றான்."
(லூக்.13:9)

 காய்க்காத அத்திமரத்தை வெட்டிப் போட தோட்டக்காரனுக்கு மனம் வரவில்லை.

"சுற்றிலும் கொத்தி எருப்போடுகிறேன்.

எருப் போட்டு நீரூற்றி கவனித்தால் காய்க்கும்.

அப்படியும் காய்க்காவிட்டால். 

 அதை வெட்டிவிடலாம்."

என்கிறான்.

மனுக்குலம் பாவம் செய்து இறைவனுக்கு எதிராகி விட்டாலும் அதை அழிக்க இறைவனுக்கு மனம் வரவில்லை.

அதைத் திருத்தி, பாவத்திலிருந்து மீட்பதற்காக தன் ஒரே மகனைப் பூமிக்கு அனுப்புகிறார்.

அவர் மனுக்குலத்தை மீட்பதற்காக பாடுகள் பட்டு, தன்னையே சிலுவை மரத்தில் பலியாக்கினார்.

அருள் வரங்களை அள்ளிக் கொடுத்து மனுக்குலத்தை இறைவனுக்கு ஏற்றதாக மாற்றுவதற்காக

திருச்சபையை நிறுவி, திரு அருட்சாதனங்களையும் ஏற்படுத்தினர்.

இயேசுவின் சீடர்களும், அவர்களின் வாரிசுகளும் இயேசுவின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக

தங்கள் உடல் பொருள் ஆவி அத்தனையும் அர்ப்பணித்து உழைக்கிறார்கள்.

மனுக்குலம் மனம் திரும்பி, இயேசுவையும் அவரது மீட்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இறைவன் இவ்வளவு செய்தும் மனம் திரும்பாவிட்டால் அழிவைச் சந்திக்க நேரிடும்.

இயேசுவே இந்த எச்சரிக்கையைத் தருகிறார்.

"மனந்திரும்பாவிடில் நீங்கள் எல்லோரும் அழிவீர்கள்."

இயேசுவின் சொற்படி நடப்போம்.

தேவத்திரவிய அனுமானங்களை ஒழுங்காகப் பெற்று

ஆண்டவரின் அருள் வரங்களோடு மீட்புப் பெறுவோம்.

விண்ணகப் பாதையில் வெற்றி நடை போடுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment