Friday, March 18, 2022

"நான் சொல்லுவதைச் செய்யாமல் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று என்னை நீங்கள் அழைப்பானேன்?"(லூக்.6:46)

"நான் சொல்லுவதைச் செய்யாமல் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று என்னை நீங்கள் அழைப்பானேன்?"
(லூக்.6:46)

ஒவ்வொரு நாளையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பிப்பதும்,

காலையிலும், இரவிலும் செபமாலை சொல்வதும்,

திருப்பலியில் கலந்து கொண்டு, திவ்ய நற்கருணை உட்கொள்ளுவதும்

போற்றுதற்குரிய செயல்கள்தான்.

ஆனால் இவை மட்டும் செபம் அல்ல. செபத்தின் ஒரு பகுதியே.

"ஆண்டவரே, ஆண்டவரே" என்று ஆண்டவரை அழைத்து, அவரிடம் வேண்டுவது செபத்தின் ஒரு பகுதியே.

அடுத்த பகுதி இல்லாவிட்டால் மேற்கூறியவற்றால் உண்மையான செபத்தின் பயனை அடைய முடியாது.

அடுத்த பகுதி எது?

ஆண்டவர் சொல்வதைச் செய்வது.

ஆண்டவரையும், அயலானையும் சிந்தனை, சொல், செயலால் அன்பு செய்வதும்,

பிறருக்கு நம்மால் ஆன உதவி செய்வதும்,

நமக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பதும்,

அவர்களுடைய நலனுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வதும்,

எல்லோரும் வாழ உழைப்பதும்
செப வாழ்வின் மிக முக்கிய பகுதி.

இரண்டு பகுதிகளையும் சேர்ந்து வாழ்ந்தால் தான் செப வாழ்வின் முழுப் பயனை அடைய முடியும்.

கிறிஸ்தவ வாழ்வை முழுமையாக வாழ்வோம்.

செப வாழ்வின் பயனாகிய விண்ணக வாழ்வை அடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment