"தாத்தா, சுவாமியார் பிரசங்கத்தில் கடவுளிடம் எதைக் கேட்டாலும் விசுவாசத்தோடு கேளுங்கள் கிடைக்கும் என்றார்.
ஆனால் நான் விசுவாசத்தோடு கேட்பதையெல்லாம் தருகிறது மாதிரி தெரிவிய."
",விசுவாசத்தோடுன்னா?"
"கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு."
", நீ சுவாமியார் சொன்னதை தப்பா புரிஞ்சிருக்க.
இறைவனோடு நம்மைச் சம்பந்தப்படுத்தும் புண்ணியங்கள் எவை?"
"விசுவாசம்,
நம்பிக்கை,
தேவ சிநேகம்."
", இந்த மூன்றில் சுவாமியார் குறிப்பிட்ட விசுவாசம்தான் நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவின் ஆரம்பம்.
"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.
விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்." என்று ஆண்டவர் அப்போஸ்தலர்களுக்குச் சொன்னாரே
அதில் குறிப்பிட்டிருக்கிற விசுவாசம்.
விசுவாசம் என்றால் இறைவனை முழுமையாக ஏற்றுக்கொண்டு, நம்மையும் முழுமையாக அவருக்கு அர்ப்பணித்தல்.
நாம் இறைவனை விசுவசிக்கிறோம் என்றால்
அவர் நமது தந்தை என்று முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.
அதோடு நம்மை முழுமையாக அர்ப்பணிக்கிறோம். நாம் அவருக்காக மட்டும் வாழ்கிறோம்.
இந்த விசுவாச உணர்வோடுதான் செபிக்க வேண்டும், வேண்டியதைக் கேட்க வேண்டும்.
முழுமையான விசுவாசம் இருக்கும் இடத்தில் நம்பிக்கையும் இருக்கும்.
மகன் தந்தையிடம் கேட்பதை மகனுக்கு நன்மை பயக்கும் பட்சத்தில் உறுதியாகத் தருவார்.
மகன் தந்தையிடம் போய்,
" அப்பா விளையாட ஒரு பாம்பு பிடித்துத் தாருங்கள் " என்று கேட்டால் கொடுப்பாரா?
கொடுக்க மாட்டார். ஏனெனில் அது மகனுக்குத் தீமை பயக்கும் என்று அவருக்குத் தெரியும்.
நாமும் இறைவனை தந்தை என்று ஏற்று, அவருக்காக வாழ்ந்து கொண்டு,
அவரிடம் எதைக் கேட்டாலும் நாம் கேட்பது அவருக்காக நாம் வாழ்வதில் உதவியாக இருந்தால் கட்டாயம் தருவார்.
நாம் கேட்பதைத் தராவிட்டால் நாம் கேட்பது பாம்பைக் கேட்பதற்குச் சமம் என்று அர்த்தம்.
ஆகவே விசுவாசத்தோடு கேட்பவன் கேட்டது கிடைத்தாலும் மகிழ்வான் கிடைக்காவிட்டாலும் மகிழ்வான்.
கிடைத்தாலும் நன்றி கூறுவான்.
கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவான்."
"அதாவது, கடவுளை நோக்கி,
"தந்தையே, நான் உமக்காகவே வாழ்கிறேன். நான் கேட்பது நமது உறவுக்கு உதவியாய் இருந்தால் தாருங்கள்,
கெடுதியாய் இருந்தால் தர வேண்டாம்.
உதவியாய் இருப்பதைத் தாருங்கள்."
என்று கூறி கேட்க வேண்டும்.
அதற்குப் பெயர் தான் 'விசுவாசத்தோடு கேட்டல்.'
சரியா?"
"Super சரி!"
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment