Tuesday, December 31, 2019

Hi all! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Hi all!  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
*   *    *  *    *   *   *    *   *   *    *  *

"ஹலோ! புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

"யாருக்கு? எனக்கா?"

"ஆமாங்க. நீங்கதான என் முன்னால நிற்கிறீங்க!"

"அது சரி. ஆனா புத்தாண்டு பிறக்கலிய."

"ஹலோ! 19 போய்ட்டுங்க.
20 வந்தாச்சி.

நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க?"

"நான் நீங்க இருக்கிற அதே உலகத்திலதான் இருக்கிறேன்.

19 எங்கே போனது? 20 எங்கே வந்தது?"

"Something is wrong. "

" No,  Everything is wrong."

"புரியவில்லை."

..."அப்போ புரியாமல்தான் பேசிக்கிட்டிருக்கீங்களா?"

"நீங்க சொல்றது புரியல."

..."19, 20, இரண்டும் என்னது?."

"வருடங்கள், அதாவது காலம்."


..."அதாவது காலம் மாறிப்போச்சின்னு சொல்றீங்க."

"ஆமா."

..."இங்கே பாருங்க. காலம் ஒவ்வொரு வினாடியும் மாறிக்கிட்டுதான் இருக்கு.

 ஆனால் மாற வேண்டியது நாம்.

காலம் மட்டும் மாறி நமக்கு என்ன பிரயோஜனம்?

 நாம் மாறணுங்க."

"இப்போ புரியுது.

அதாவது, நமது குணம் மாற வேண்டும். அது உண்மைதான். 

காலம் மாறிப்போச்சு 

ஆனால் மனிதன் மாறவே இல்லை."

..."அப்படி சொல்வதும் தப்பு.

 ஏனெனில் மனிதன் மாறிக் கொண்டுதான் இருக்கிறான்.

 ஆனால் எப்படி மாற 
 வேண்டுமோ அப்படி 
மாறவில்லை."

"எப்படி மாறவேண்டும்?"

..."இயேசு எதற்காக மனிதனாகப் பிறந்தார்? "

"நம்மை பாவத்திலிருந்து மீட்க.

நம்மை நல்லவர்களாக மாற்ற.

நம்மை இரட்சிக்க,

நமது பாவங்களுக்குப்  பரிகாரம் செய்ய.

 அதாவது  நம்மை  பாவத்தில் இருந்து மீட்டு

 புண்ணியவான்கள் ஆக மாற்ற. 

இவ்வுலகில் பாவம் செய்யாமல் நம்மை காத்து

 இறுதியில் நம்மை மோட்ச பேரின்ப வாழ்விற்கு அழைத்துச்செல்ல."

..."கரெக்ட். 

ஆனால் உலகத்துல பாவம் குறைந்திருக்கிறதா?.

 கொஞ்சம் யோசிச்சு பாருங்க."

"குறையவா? நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது."

..."சரி, உலகத்தை  விட்டுவிடுங்க,


 நம்மை மட்டும் பார்ப்போம்.

 நாம் எப்படி?  பாவத்தை விட்டு விட்டோமா?  நமது குணத்தை மாற்றி இருக்கிறோமா?

 நல்லவங்களா மாறி இருக்கிறோமா?"

"அதுக்கு நாம் ஒவ்வொருவரும் நமது ஆன்மாவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்."

..."நாம் புத்தாண்டில்,

நமது உடலை மூட புதிய டிரஸ் எடுப்பதிலேயே குறியாக இருக்கிறோம்.

 ஆனால் நமது ஆன்மாவுக்கு புதிய உடை வாங்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை.

பாவமாகிய பழைய உடையை கழற்றி எறிந்துவிட்டு

 புண்ணியமாகிய புது உடையை அணியவேண்டும்.

நாம்  தங்கும் அறையை   தூசி தட்டி, பெறுக்கி சுத்தம் செய்கிறோம். 

நமது வீட்டையும் வெள்ளையடித்து,   அல்லது கலர் அடித்து  அலங்காரமாக வைத்துக் கொள்கிறோம்.

 ஆனால் நமது ஆன்மாவில் படிந்துள்ள குற்றம் குறைகள் ஆகிய தூசியை தட்டி விட்டு.

 அதைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோமா? 

 இல்லையே.

 வெளிப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டு

 உட்புறத்தை நாறவிட்டால்

 அதுவே வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை. 

 புத்தாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே 

நமது ஆன்மாவைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை.

 நமது உடலைப்பற்றி மட்டும்தான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம்.

நாம் புதிய மனிதர்களாக மாற வேண்டும்."

" இதை பற்றி எல்லாம்  நினைக்காமலே புத்தாண்டு பிறந்து விட்டது.

 பரவாயில்லை காலம் கடந்து போகவில்லை.

 இன்றே நன்கு ஆன்ம பரிசோதனை செய்து

 நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து 

நமது ஆன்மாவை சுத்தப்படுத்தி 

புதிய ஆண்டில் நல்ல

 மனிதர்களாக வாழ ஆரம்பிப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வருகிறேன்,

பழைய ஆண்டில் சந்திப்போம்."

..."என்னது பழைய ஆண்டிலா?"

" ஆமா.
 இன்றைக்கு புத்தாண்டு.

 நாளைக்குப்  பழைய ஆண்டு தானே!"

..."அதுவும் சரிதான்.

 உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!"

லூர்து செல்வம் 







No comments:

Post a Comment