Thursday, December 5, 2019

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்''(மத்.7:21)




"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்''
(மத்.7:21)
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

நண்பர் ஒருவர்.  பிற சமயத்தவர்.

முகமெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டே என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

சிரிப்புக்குக் காரணம் புரியவில்லை.

அருகில் வந்ததும் அவரே பேச்சை ஆரம்பித்தார்.

"நீங்க தந்த பைபிளை இன்றைக்குதான் திறந்தேன்."

..."ரொம்ப சந்தோசம். வாசித்தீங்களா?"

"திறந்த பக்கத்தில் கண்ணில்  பட்ட வரியை வாசித்தேன்."

"அதென்ன ஸ்பெஷலா கண்ணில்  பட்ட வரி?  

எல்லோரும் கண்ணில்  பட்ட வரியைத்தான் வாசிப்பார்கள்.

கண்ணில் படாத வரியை எப்படி வாசிக்க முடியும்? "

"எனக்கு இது ஸ்பெஷல்தான்.
பைபிளைத் தந்து என்னைக் காப்பாற்றி விட்டீர்கள்."

..."அப்படியா?  ரொம்ப சந்தோசம்."

"ஆனால் உங்களைப் பார்க்கதான் பாவமா இருக்கு."

..."ஏன்?

"உங்களுக்கு விண்ணரசு கிடைக்காது. 

நான் சொல்லவில்லை, பைபிள் சொல்கிறது."

..."அப்படியா? பைபிள் என்ன சொல்கிறது?"

 "என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்."

என்று சொல்கிறது.

நீங்கள் சதா "ஆண்டவரே, ஆண்டவரே" என்றுதானே
சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

உண்மையிலேயே உங்கள்மேல் பரிதாபப் படுகிறேன்.

அதெப்படி தினமும் பைபிள் வாசிக்கும் உங்கள் கண்ணில் இவ்வரிகள் படவில்லை?"

.."நான் விண்ணகம் போக முடியாது என்பதற்காகவா உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சி?"

"இல்லை. அது நான் தப்பித்துக் கொண்டேன் என்பதற்காக."

..."உங்களைப் போலவே பைபிள் வாசிப்பவர்களுக்கு உதவியாக இன்னும் பல வரிகள் பைபிளில் உள்ளன.
உதாரணத்துக்கு,

"கடவுள் இல்லை."

"கொஞ்சம்  பொறுங்கள். உண்மையிலேயே இந்த வரி பைபிளில் உள்ளதா?"

..."ஆமா."

"அப்படியானால் கடவுள் இல்லை என்று பைபிள் கூறுகிறதா?"

..."நான் அப்படிச் சொல்லவில்லையே.

'பல வரிகள் பைபிளில் உள்ளன.' என்றுதானே சொன்னேன்."

"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? "

...."உங்கள் மகன் எருமை மாடுதானே?"

"ஹலோ!  Brother, ....."

..."ஏன் கோபம் வருகிறது?

'ஏய் எருமை மாடு' என்று உங்கள் மகனை நீங்கள் அழைத்ததில்லை? "

"எந்த சொல்லும் எந்த சந்தர்ப்பத்தில் (Context) கூறப்பட்டது என்பதைப் பார்த்து அதற்குப் பொருள் கொடுக்க வேண்டும்.

அவனுடைய சோம்பேறித்தனத்தைச் சுட்டிக் காட்டி அவனைத் திருத்துவதற்காக அப்படிச் சொல்லியிருப்பேன்.

சொல்லை மட்டும் பார்த்துப் பொருள் கொள்ளக் கூடாது.

சொல்லப்டும் சந்தர்ப்பம்தான் சொல்லுக்குப் பொருள் கொடுக்கிறது."

"Correct. இது பைபிள் வாசிப்புக்கும் இது பொருந்தும்.

"கடவுள் இல்லை என்று மூடன் தன் இருதயத்துக்குள் சொல்லிக் கொள்கிறான். 

The fool has said in his heart, “There is no God.”

விளக்கம்:  கடவுள் இல்லை என்று நினைப்பவன் மூடன்."

"சரி. Accepted.

"ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்."

என்ற வாக்கியத்தின் சந்தர்ப்பம் (Context)?"

..."இயேசு சென்றவிடம் எல்லாம் நற்செய்தியை அறிவித்ததோடு 

மக்களுடைய நோய்களைக் குணமாக்கினார்.

மக்கள் நோய்நீங்கிக் குணம் அடையவும், 

அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்கவும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

இயேசு இவ்வுலகிற்கு வந்தது

 நற்செய்தியை அறிவிக்கவும், நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவுமே.

வெறுமனே வியாதிகளைக் குணமாக்குவற்காக  அல்ல.

வியாதிகளைக் குணமாக்கி, நற்செய்தி அறிவிப்பது

 தேனோடு மருந்தைக் கலந்து கொடுப்பது போலதான்.

நற்செய்தி நம் பாவ நோய்க் குணமாகுவதற்கான மருந்து.

உடல் நோயைக் குணமாக்குவது தேன்மாதிரி.

நோய் குணமாக வரும்போது நற்செய்தி அறிவிக்கப்பபடும்.

நற்செய்தியின் அவசியத்தை உணர்ந்த பின் மக்கள் நற்செய்தியைக் கேட்கவே வருவார்கள்.

அவரைப்பற்றிய பேச்சு சீரியாநாடு முழுவதும் பரவியது. 

பல்வேறு நோய் நோக்காட்டினால் வருந்தும் பிணியாளர் அனைவரையும், பேய்பிடித்தோரையும் பைத்தியக்காரரையும் திமிர்வாதக்காரரையும் அவரிடம் கொண்டுவந்தனர்.

 அவர் அவர்களைக் குணப்படுத்தினார்.

25 கலிலேயா, தெக்கப்போலி, யெருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதியாகிய இடங்களிலிருந்து, மக்கள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு திரளான கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர்ந்து நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்.

அவர் அறிவித்த நற்செய்தி வானகத்திலுள்ள அவரது தந்தையின் விருப்பம்.

இயேசுவின் நற்செய்திப்படிப் படி நடப்பவர்கள்

அவரது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள்.

அவர் அறிவித்துக் கொண்டிருக்கும்போதே 

நற்செய்திப்படி நடக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக,


"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்.

 வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."

என்றார்.

அதாவது,

"ஆண்டவரே, ஆண்டவரே, என்னைக் குணமாக்கும் என்று அழைத்து, நோய் குணமாவதால் மட்டும் இரட்சண்யம் அடைய முடியாது,

நான் அறிவிக்கிற நற்செய்திப்படி 

(அதாவது என் தந்தையின் விருப்பப்ப்படி )
 
நடப்பவர்களே இரட்சண்யம் அடைவர்."



தேனை மட்டும் அருந்திவிட்டு

மருந்தைச் சாப்பிடாவிட்டால் வியாதி எப்படிக் குணமாகும்? 

இப்போ சொல்லுங்கள், எனக்கு விண்ணரசு உண்டா?"

"நீங்கள் நற்செய்திப்படி நடந்தால் உண்டு."

..."Correct answer."

"ஒன்று புரிகிறது, பைபிளைத் தொடர்ச்சியாக வாசித்தால்தான் Context ம் பொருளும் புரியும்.

நுனிப்புல் மேய்ந்துகொண்டு போனால் தப்புத் தப்பாப் புரியும்."

..."தப்பு தப்பாய்ப் புரிந்தால் தப்பில்லை.

சரியானதைத்  தப்பாய்ப் புரிந்தால்தான் தப்பு!"

"இப்போ நான் சொல்றதத் தப்பாய்ப் புரியக்கூடாது.

இன்றைய கிறிஸ்தவர்கள் நிலை எப்படி?

நான் வெளியே இருந்து பார்க்கிறேன்.

உள்நடப்பு உள்ளே இருப்பவர்கட்குத்தான் புரியும்."

..."சபைக்குள் இருப்பதால் மட்டும் சபையினரின் உள் உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது.

Only God can see people's heart.


அதுமட்டுமல்ல, மற்றவர்களைப் பற்றி தீர்ப்பிட நமக்கு அதிகாரம் இல்லை.

We have no right to judge others. 

ஆனாலும் நற்செய்தியை அ

குழந்தை வரம் கேட்டு,

 வருமானம் கேட்டு,

தேர்வில் வெற்றி கேட்டு,

என்ன உதவி வேண்டுமானாலும் கேட்டு

செபிக்கலாம்.

இதற்காகத் திருத்தலங்களுக்குச் செல்லலாம்.

நமது பரலோகத் தந்தையிடம் நேரடியாகவோ, 

புனிதர்கள் மூலமாகவோ கேட்க நமக்கு முழு உரிமை இருக்கிறது.

அதே சமயத்தில் இயேசு  அறிவித்த நற்செய்திப்படி நடக்கவும்,

மற்றவர்களுக்கு நற்செய்தியை  அறிவிக்கவும் கடமை இருக்கிறது.

கடமையைச் செய்து கொண்டே உரிமையைக் கேட்போம்.

கடமையைச் செய்யாவிட்டால் உரிமையால் பயனில்லை.


தந்தை மகன் மூலம் தந்த நற்செய்திப்படி வாழ்வோம்.

விண்ணகம் நமதே!"

லூர்துசெல்வம்.

No comments:

Post a Comment