Thursday, December 26, 2019

டிசம்பர் 25.

            டிசம்பர் 25.
*   *    *   *   *    *  *   *    *   *   *    *


"அண்ணாச்சி, ஒரு சின்ன சந்தேகம்."

"முதல்ல சந்தேகத்தைச் சொல்லு. 

அது சிறுசா பெருசா என்கிறத அப்புறம் பார்ப்போம்."


"இயேசு பிறந்தது டிசம்பர் 25ல தானே?"

..."இதுதான் சந்தேகமா?  உன் வயசு என்ன?"

"16"

..."16 வருசமா கிறிஸ்மஸ் கொண்டாடியிருக்க. இப்ப சந்தேகம் வருது!"

"எனக்கு சந்தேகம் இல்லை அண்ணாச்சி. என் நண்பன் ஒருவன் வேற மாதிரி சொன்னான். அவனுக்குப் பதில் சொல்லணும். அதுதான் கேட்டேன்."

..."வேற மாதிரி என்ன சொன்னான்? "

"டிசம்பர்25,  ரோமை சாம்ராஜ்யத்துல சூரிய கடவுளின் பிறந்த நாளாம்.

கான்ஸ்டன்டைன் என்ற அஞ்ஞான (Pagan) மன்னன்தான் கிறிஸ்தவனாக மாறியபின்  

சூரிய கடவுளின் பிறந்த நாளை இயேசுவின் பிறந்த நாளாக மாற்றினானாம்.

அது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும்.

ஆனால் அவனுக்கு உண்மையை எப்படிப் புரிய வைக்கிறதுன்னு தெரியல."

"சரி, கவனமா கேளு. 

சூரிய கடவுள் ரோமை சாம்ராஜ்யத்தின் கடவுளாக ரோமை மன்னனால் அறிவிக்கப் பட்டதே கி.பி 274 ல் 
தான்.

(In 274 AD the Roman emperor Aurelian made it an official cult alongside the traditional Roman cults.”) (Source: Wikipedia – Sol Invictus)

ரோமர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ல் அவனுக்கு விழா எடுத்தார்கள்.


ஆனால் 274க்கு முன்னரே

 கிறிஸ்து பிறந்தது டிசம்பர் 25 என்று கிறிஸ்தவர்களிடையே நம்பிக்கை இருந்தது.

கி.பி 171-183 காலக்கட்டத்தில் வாழ்ந்த புனித தியோபிலுஸ்
இத்தேதியை உறுதிப்படுத்தினார்.

 "என்ன கிழமையில் டிசம்பர் 25 வந்தாலும், அன்று நாம் கிறிஸ்மஸைக் கொண்டாட வேண்டும்." என்றார்.


St. Theophilus (171-183 A.D) was the first to identify December 25 as the birth date of Christ, saying ...
.
“We ought to celebrate the birth day of our Lord on what day soever the 25th of December shall happen." 


புனித இரேனேயுஸ் ( 130–202)
பைபிள் குறிப்புகளிலிருந்து


ஸ்நாபக அருளப்பர் உற்பவித்தது செப்டம்பர் 25என்றும்


இயேசு  உற்பவித்தது மார்ச்25
என்றும், 

இயேசு  பிறந்தது டிசம்பர்25 என்று உறுதிப்படுத்தினார்."

"ஸ்நாபக அருளப்பர் உற்பவித்தது செப்டம்பர் 25என்று எப்படி உறுதி செய்தார்? "


"யூத  இறைவழிபாட்டு முறைமைப்படி 

சக்கரியாஸ் ஆலயத்துள் சென்று தூபங்காட்டியது யூதர்கள் மாதம் Tishrei 15 ல். 

அது செப்டம்பர் 25 ச் சமம். 

சக்கரியாஸ் தூபங்காட்டிய தம்முடைய திருப்பணி நாட்கள் கடந்ததும் அவர் வீடு திரும்பினார்.  அடுத்து எலிசபெத் கருத்தரித்தாள்."



"இன்னும் வேறு யாராவது இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்களா? "

"ஆமா. புனித ஹிப்போலிட்டஸ். (St. Hippolytus (170-236 A.D)

அவர் கணக்குப்படி இயேசு பிறந்தது டிசம்பர் 25 புதன் கிழமை.

அதுமட்டுமல்ல, ஆதித்  திருச்சபையிலேயே ஆண்டவர் பிறந்த நாளை டிசம்பர் 25ல் கொண்டாடும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.


ரோமை மன்னர்கள் சூரிய கடவுளுக்கான விழாவை ஆரம்பித்ததற்கு வெகு காலத்திற்கு முன்பேயே கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸை டிசம்பர் 25 ல் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.



நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்ஸ்டனடைன்  எப்படி

சூரியகடவுள் பிறந்த தேதியை கிறிஸ்துவின் பிறந்த தேதியாக அறிவித்திருக்க முடியும்?

ஆனால் அவன் ஒரு நல்ல காரியம் செய்தான்.

அவன் ஆட்சி ஆரம்பிக்கும்போது அவன் ஒரு அஞ்ஞானி.(Pagan)

அப்போது அஞ்ஞானிகள் டிசம்பர் 25ல் சூரிய கடவுளுக்கு விழா எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் மனம் திரும்பி, கிறிஸ்தவத்தை தேசிய மதமாக்கியபின்

சூரிய கடவுளின் வழிபாட்டை நிறுத்தினான்.

கிறிஸ்தவர்கள் சுதந்தரமாக, உற்சாகமாக கிறிஸ்மஸைக் கொண்டாடினார்கள்.

தேதி மன்னன் கொடுத்தது அல்ல.

ஆதித் திருச்சபைப் புனிதர்கள் நிர்ணயித்த டிசம்பர் 25.

இப்போ புரியுதா?"

"நல்லா புரியுது. எப்படி புரிய வைக்கணுங்கதும் புரியுது."

லூர்துசெல்வம்

No comments:

Post a Comment