Wednesday, December 4, 2019

பைபிளில எங்க இருக்கு?

 

பைபிளில எங்க இருக்கு? 
*   *    *   *   *    *   *    *    *   *  *  *


"ஹலோ! கையில என்ன?"

"செபமாலை."

"எதுக்காக செபமாலை?"

"செபம் சொல்ல."

"செபமாலை இல்லாம செபம் சொல்ல முடியாதா?"

"முடியும்.  செபமாலை அன்னை மரியாளுக்குப் பிடித்தமான செபம்."

"அப்படீன்னு யார் சொன்னா? அவங்க வந்து சொல்லிட்டுப் போனாங்களா?

அல்லது, பைபிளில எங்கேயாவது சொல்லியிருக்கா?"

"உங்க கையில என்னது?

"பைபிள்."

"இதுதான் பைபிள்னு பைபிளில எங்கேயாவது சொல்லியிருக்கா?"

"ஹலோ!  முட்டாள்தனமான கேள்வி!"

"தம்பி, உங்க கேள்விதான் உங்ககிட்ட திரும்பி வருது.

அடையாளம் தெரியல?

பைபிளில எங்க இருக்கு? "

"ஆமா. கேட்டேன். பைபிளில எங்கேயாவது சொல்லியிருக்கான்னு கேட்டேன். பதில் சொல்லாம எதிர்க் கேள்வி கேட்கிறீங்க?"

"அதுதான் பதில்."

"அதெப்படி கேள்வி பதிலாக முடியும்."

...சரியான கேள்வி கேட்டால் சரியான பதில் வரும்.

திண்டுக்கு முண்டா கேள்வி கேட்டா பதிலும் அப்படித்தான் வரும்."

"ஆன்மீக சம்பந்தமான எல்லா விசயங்களுக்கும் பைபிளில ஆதாரம்  இருக்கணும்.

செபமாலையைப் பற்றி பைபிளில எதுவும் சொல்லப்படல.

பைபிளில ஆதாரம் இல்லாத ஒன்றை எப்படிச் செபமென்று சொல்லலாம்?" 


"செபத்திற்கு ஆதாரம் பைபிளில இருக்கா?"

"இருக்கு."

"அப்போ நாங்க செபம் சொல்லலாமா?"

"தாராளமா சொல்லுங்க."

..."அனுமதி கொடுத்ததற்கு நன்றி.

ஒரு ரோஜா மட்டும் இருந்தா ரோஜாப்பூ. பல ரோஜாக்களை நூலில் தொடுத்தால் அது. ரோஜா மாலை.

அதே போல ஒரே செபத்தைத் திரும்பத் திரும்பத் தொடர்ந்து சொன்னா  அது ஜெபமாலை.

திரும்பத் திரும்பத் தொடர்ந்து சொல்லக்கூடாதுன்னு பைபிளில எங்கேயாவது  சொல்லப் பட்டிருக்கிறதா?"

"நீங்க கர்த்தரைப் பார்த்து ஒரு நேரம் சொல்லிவிட்டு மரியாளைப் பார்த்து பத்து நேரம் சொல்றீங்க.

இது கர்த்தரை அவமானப் படுத்தறது மாதிரி இல்லை?

இயேசு சொல்லித் தந்தது ஒரே ஒரு செபந்தான். அதை மட்டும்தானே சொல்லணும்!

எதுக்கு மரியாளைப் பார்த்து?"

..."இதைத் தெரிஞ்சிக்கிடணும்னா நீங்க உடனே மோட்சத்துக்குப் போகணும்.

நேரே தந்தையாகிய இறைவன்கிட்ட போய்,

"கடவுளே, எதற்காக நீங்க கபிரியேல் தூதரை மரியாளிடம் அனுப்பி,

"அருள் நிறைந்தவளே வாழ்க,"
 
என்று வாழ்த்தச் சொன்னீர்?

நீர் சொல்லச் சொன்னதைப் பார்த்து ஆர்சிக்காரங்களும் உம்முடைய வார்த்தைகளைக் கொண்டே அவளை வாழ்த்திக்கிட்டு இருக்காங்க."
என்று சொல்லுங்க.

அவர், "மரி என் அருளை நிறைவாகப் பெற்றவள்" என்பார்.

(மரியே, அஞ்சாதீர்: கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.)


அடுத்து எலிசபெத்தம்மாட்ட போங்க.

அவங்களைப் பார்த்து,
"யார்ட்டக் கேட்டு மரியாளைப் பார்த்து,

 "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே!"ன்னு வாழ்த்னீங்கன்னு கேளுங்க.

அவள், "நான் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று அவ்வாறு சொன்னேன்" என்பார்.

அப்புறம் பூமிக்கு வந்து பைபிளைத் திறந்து அவங்க சொன்ன பதில் அங்கே இருக்கிறதா என்று பாருங்க."

"அப்போ தந்தையும் பரிசுத்த ஆவியும் உங்க பக்கம்! 

பரவாயில்லை. இயேசு எங்கள் பக்கம். எங்களுக்கு அது போதும்."

...."ஹலோ! மனப்பால் குடிக்காதீங்க. இயேசு மரியாளின் வயிற்றின் கனி.

பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று

 எலிசபெத்தம்மாள் கூறிய வார்த்தைகள் இவை. 

சந்தேகம் இருந்தால் பைபிளைத் திறந்து பாருங்கள்.

அதுமட்டுமல்ல இயேசு மரியாளின் வயிற்றில் உற்பவித்தது முதல்,

மரியாள் விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டது வரையிலான 

அனைத்து பைபிள் நிகழ்ச்சிகளையும் 

 தியானித்துக் கொண்டுதான் மரியாளைப் புகழ்கிறோம்."

"ஹலோ! மரியாள் விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்ட விபரம் பைபிளில் எங்கே இருக்கு?"

..."பழைய படி ஆரம்பிச்சாச்சா? 

உங்க அப்பா யாரு?"


"நீங்களும் பழைய படி ஆரம்பிச்சாச்சா, கேள்விக்குப் பதில் கேள்வி?  

பரவாயில்லை. என்னுடைய அப்பாவை உங்களுக்குத் தெரியுமே!"

..."அது நீங்க சொல்லி எனக்குத் தெரியும். உங்களுக்கு எப்படித் தெரியும்? "

"என்னுடைய அம்மா சொல்லி எனக்குத் தெரியும்."

...."உங்க அம்மாவை நீங்க நம்புறீங்களா?"

"நம்புகிறேன். தாயை நம்பாதவன் 
பிள்ளையே இல்லை."

..."கரெக்ட்.  மரியாள் விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்ட விபரத்தை

 என்னுடைய தாய்தான் உறுதிப் படுத்தி எங்கிட்ட சொன்னாங்க.

 அதற்கு ஆதாரம் பைபிளும், பாரம்ரியமும்.(Sacred Tradition)

பைபிளில காட்சியாகமத்தில
 12:1-18 நீங்களே வாசித்துப் பாருங்க.

அதை விளக்கணும்னா ரொம்ப நேரம் ஆகும்.

அதற்கென்று ஒருநாள் ஒதுக்கிப் பேசுவோமே."

"தாய்னு யாரைச் சொல்றீங்க?"

..."தாய்த் திருச்சபை, கத்தோலிக்கத் திருச்சபை.

தாயை நம்பாதவன் பிள்ளையே இல்ல.

நான் தாயின் பிள்ளை.

ஆகவே தாயை நம்புகிறேன்."

"அப்போ நீங்க பைபிள விட திருச்பையை நம்புறீங்க!"

..."பைபிளும், பாரம்பரியமும் திருச்சபையின் சொத்து.

நான் திருச்சபையின் பிள்ளை."

"எனக்கு பைபிள்தான் எல்லாம்!"

..."அப்படி உங்கட்ட சொன்னது யாரு?"

"எங்க Pastor."



..."ஆனால் பாரம்பரியம் இல்லாமல் பைபிள் இல்லை.

ஆதாம் ஏவாள் படைக்கப்படும்போது பைபிள் இல்லை.

மோயீசன்தான்  படைப்பிலிருந்து அவர் காலம் வரைக் கிடைத்த வழிவழி,

 அதாவது 

பாரம்பரிய, செய்திகளைத் தொகுத்து பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை எழுதினார்.

இதற்கு பரிசுத்த ஆவி தூண்டுகோலாய் இருந்தார்.

பாரம்பரியத்திலிருந்துதான் பைபிள் பிறந்தது.

இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் புதிய ஏற்பாட்டு நூல் இல்லை.

அவர் சீடர்களைப் போதிக்க அனுப்பும்போது தன் போதனைகளை எழுதச் சொல்லவில்லை.

ஆயினும் தங்கள் போதனைக்கு உதவியாய் இருக்கும் பொருட்டு 

சீடர்கள் நற்செய்தி நூல்களையும், திருமுகங்களையும் எழுதினார்கள்.

ஆனாலும் அவர்களுடைய எழுத்து புதிய ஏற்பாட்டு நூல் வடிவம் பெறவில்லை.

கி. பி நான்காம் நூற்றாண்டில்தான் திருச்சபை இப்போது நாம் பயன்படுத்தும் புதிய ஏற்பாட்டை நமக்குத் தந்தது.

ஆக திருச்சபையின் பாரம்பரியம்தான் நம் கையில் பைபிளைத் தந்தது.

ஆகவே பைபிளும் வேண்டும், பாரம்பரியமும் வேண்டும்.

புரியுதா?"

"புரியுது.


லூர்துசெல்வம்.

No comments:

Post a Comment