தபசு காலமும், இயேசு உயிர்த்த நாளும் ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறி வருகின்றன. ஏன்?
* * * * * * * * * * * *
"ஏங்க, பூகோளப் புத்தகத்தையும், பைபிளையும் ஒரே நேரத்தில வாசித்துக் கொண்டு இருக்கீங்க? "
"ஏண்டி, பூகோளத்துக்கும், பைபிளுக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி பேசற.
பைபிளே பூகோளத்திலிருந்து தானே ஆரம்பிக்குது!
"ஆதியிலே கடவுள் விண்ணையும், மண்ணையும் படைத்தார்."
'மண்'ணுன்னா பூமின்னு உனக்குத் தெரியாது?
'பூகோளம்னா' என்ன அருத்தம்?"
"ஏதோ சின்னப் பிள்ளைய்ட்ட கேட்கது மாதிரி கேட்கிறீங்க? நானும் உங்கள மாதிரி டீச்சர் வேலை பார்த்திட்டு ரிட்டயர்ட் ஆனவதாங்க!"
"நான் உன்ன Test பண்ணல.
வயசாகிட்டில்ல. நிறைய வார்த்தைகள் மறந்து போச்சி. தெரியாமல்தான் கேட்டேன்."
"அப்போ சொல்றேன்.
'பூ கோளம்'னா 'பூமி உருண்டை'ன்னு அருத்தம்.
ஆமா! பூமி உருண்டைக்கும், பைபிளுக்கும் என்ன சம்பந்தம்?"
"பைபிள் நமது ஆண்டவர் இயேசுவை மையமாகக் கொண்டது.
இயேசுவின் வாழ்க்கை அவரது
உற்பவத்தையும்,
பிறப்பையும்
உயிர்ப்பையும் மையமாகக் கொண்டது.
உற்பவம் Conception.
பிறப்பு Christmas.
உயிர்ப்பு Easter.
இந்த விழாக்களை மையமாக வைத்துதான் திருச்சபையின் ஆண்டு தீர்மானிக்கப்படுகிறது.
இவற்றில் கிறிஸ்மஸ் தேதி மாறாது, டிசம்பர் 25.
உயிர்ப்புத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறி வரும்."
"ஏன்?"
..."உயிர்ப்புத் திருவிழாவின் தேதி பூகோளத்தை மையமாக வைத்துதான் தீர்மானிக்கப் படுகின்றது."
"என்னது? உயிர்ப்புத் திருவிழாவின் தேதி பூகோளத்தை மையமாக வைத்துதான் தீர்மானிக்கப் படுகின்றதா?
விளங்கவில்லை."
பொறுமையா கேட்பதா இருந்தால் சொல்லுகிறேன்."
"ஏங்க, உங்க கூடவே 60 வருசம்
பொறுமையா குப்பகொட்டி இருக்கேன். கேட்டுக்கொண்டு இருப்பது பெரிய காரியமா? சொல்லுங்க."
"பூமி உருண்டை தனது அச்சில 23.5° சாய்ந்து, தானும் சுற்றிக் கொண்டு, நீள்வட்டப் பாதையில் சூரியனை வலம் வருகிறது."
"அதென்ன வலம் வருகிறது? சூரியனைச் சுற்றுகிறது என்றுதான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்."
..."'வலம் வருகிறது' என்றால் வலதுபுறமாக சுற்றுகிறது என்று அருத்தம்.
நீ எப்போவது உவரிக்குப் போகும்போது அந்தோனியார் கோவிலைச் சுற்றியிருக்கிறாயா?"
"ஆமா."
..."வலப்புறமாகவா? இடப்புறமாகவா?"
"கொஞ்சம் பொறுங்கள். ம்ம்ம்.
வலப்புறமாகத்தான். வலது கை கோவில் பக்கம் இருக்கும்.
சரிதான். வலம் வருவது இயல்பானது. இடம் வந்தால் கொஞ்சம் Strain எடுக்கணும்."
"உனக்குத் தெரியும், பூகோளத்தின்மேல் கிழக்கு மேற்காக வரையப்பட்டிருக்கும் கற்பனைக் கோடுகளுக்கு அட்ச ரேகைகள் என்று பெயர்.
இவற்றில் நடு மத்தியிலுள்ள
அட்ச ரேகைக்கு நிலநடுக்கோடு என்று பெயர்.
நிலநடுக்கோட்டிற்கு வடக்கே 23.5° அட்சம் கடகரேகை எனப்படும்.
நிலநடுக்கோட்டிற்குத் தெற்கே
23.5° அட்சம் மகர ரேகை எப்படும்."
"ஏங்க,.இதெல்லாம் தெரிஞ்சது தானே. பூமி 23.5° சாய்ந்து சூரியனைச் சுற்றுவதனால சூரியகதிர்கள் வருடம் முழுவதும் ஒரே இடத்தில் செங்குத்தாக விழாது.
கடக ரேகையிலிருந்து மகர ரேகை வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் செங்குத்தாக விழும்.
இதை சூரியன் கடக ரேகையிலிருந்து மகர ரேகை வரை பயணிக்கிறது என்போம்.
சூரியன் கடக ரேகையிலிருந்து தெற்கு நோக்கி
நிலநடுக்கோடு வழியாகப் பயணித்து,
மகர ரேகைகக்குச் சென்று,
பின் அங்கிருந்து வடக்கு நோக்கி பயணித்து
நிலநடுக்கோடு வழியாகப் ,
கடக ரேகைகக்குச் சென்று,
பின் தெற்கு நோக்கித் திரும்பும்."
..."பொறு. நம்ம Pointக்கு வந்துவிட்டோம்.
கடக ரேகையிலிருந்து மகர ரேகைக்குச் சென்று, மறுபடியும்
கடகரேகையை வந்தடைய ஒரு வருடம் ஆகும்."
"இதுக்கும் இயேசுவின் வாழ்க்கைக்கும் என்னங்க சம்பந்தம்?"
..."சொல்றேன். சூரியன் கடக ரேகையையும், மகர ரேகையையும் ஆண்டிற்கு ஒருமுறைதான் தொடும்.
ஆனால் நில நடுக்கோட்டை இரு முறை கடக்கும், வடக்கு நோக்கிச் செல்லும்போது ஒரு முறை, (மார்ச் 21ஐ ஒட்டி)
தெற்கு நோக்கிச் செல்லும்போது ஒரு முறை.
(செப்டம்பர் 22 ஐ ஒட்டி.)
இப்படி கடக்கும் நாளுக்கு
equinox என்று பெயர்.
ஆண்டவருடைய வாழ்க்கையில் equinox முக்கிய பங்கு வகிக்கிறது.
இயேசு உற்பவித்ததும் அதை ஒட்டிதான்,
உயிர்த்ததும் அதை ஒட்டிதான்.
அதாவது மார்ச் 21 ஒட்டி. (Around March 21)
'ஒட்டி' (around) என்றேன். ஏனெனில் காலம் மாறாது, நாள் மாறலாம்.
இயேசுவின் பிறப்பு சூரியன் மகரரேகையைத் தொடும் டிசம்பர் மாதம். தேதி 25. அதில் மாற்றம் இல்லை.
அதாவது நமது விழாக் கொண்டாட்டத் தேதியில் மாற்றம் இல்லை.
ஆனால், உயிர்ப்பின் காலம் மாறாது, தேதி மாறும்.
சூரியனின் வடக்கு நோக்கிய பயண Equinox ல்
(around மார்ச் 21ல்)
வரும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஞாயிறு உயிர்ப்பு ஞாயிறு.
Easter falls on the first Sunday
after the Full Moon date,
based on mathematical calculations,
that falls on or after March 21.
பௌர்ணமி ஞாயிற்றுக் கிழமை வந்தால் அதற்கு அடுத்த ஞாயிறு உயிர்ப்பு ஞாயிறு.
அன்றைய தேதி ஆண்டுக்கு ஆண்டு மாறும்.
If the Full Moon is on a Sunday, Easter is celebrated on the following Sunday.
தபசுகால நாட்கள் உயிர்ப்பு ஞாயிறை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.
சாம்பற்புதன், ஈஸ்டருக்கு 46 நாட்களுக்கு முன்னால்.
குறுத்து ஞாயிறு ஈஸ்டருக்கு
முந்தைய ஞாயிறு.
அதைத் தொடர்ந்து புனித வாரம்.(Holy week)
ஈஸ்டருக்குப் பின்னால்
விண்ணேற்ற விழா
39 நாட்களுக்குப் பிறகு.
பென்தேகோஸ்தே
49 நாட்களுக்குப் பிறகு.
தமதிருத்துவ ஞாயிறு
56 நாட்களுக்குப் பிறகு.
Corpus Christi
60 நாட்களுக்குப் பிறகு."
நான் சொன்னவற்றிலிருந்து உனக்கு என்ன புரிகிறது?"
".1.சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தில் நிலநடுக் கோட்டைக் கடக்கும்போது இயேசு உற்பவித்தார்.
அதிலிருந்து கடகரேகையை அடைய 3 மாதங்கள்.
அடுத்து கடகரேகையிலிருந்து தெற்கு நோக்கிப் பயணித்து நிலநடுக்கோடு வழியாக மகரரேகையை அடைய 6 மாதங்கள்.
மகரரேகையை அடைந்து திரும்பும் காலக்கட்டத்தில் இயேசு பிறந்தார்.
33 ஆண்டுகள் கழித்து தான் உற்பவித்த அதே காலக் கட்டத்தில் (Equinox) மரித்து, உயிர்த்தார்.
நமது வாழ்வின் மையம் தானே என்று இயேசு எண்பித்தார்.
2.கடவுள் உலகைப் படைப்பற்கு முன்பே தான் படைக்கப் போகும் மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறக்கத் திட்டமிட்டுவிட்டார். இது நித்திய காலத் திட்டம
3.பிறந்த நாமும் இறந்தாலும் ஒருநாள் உயிர்ப்போம்.
4..அவர் பிறந்தது குளிர்காலத்தில்.
உயிர்த்தது வசந்தகாலத்தில்.
குளிர் கஸ்டம்,
வசந்தம் மகிழ்ச்சி.
நாமும் பிறந்தபின் கஸ்டப்பட்டாலும்,
உயிர்த்தபின் மகிழ்ச்சியாய் இருப்போம்."
..."வசந்த காலத்தில் உற்பவித்து,
குளிர் காலத்தில் பிறந்து,
வசந்த காலத்திலேயே மரித்து உயிர்த்தார் இயேசு.
இதிலிருந்து நாம் ஒரு பாடம் கற்போம்.
நமது வாழ்விலும் வசந்மும், குளிரும் மாறிமாறி வரும்.
இறுதியில் வசந்தமே நிலைக்கும்.
ஆம், நாம் நிலை வாழ்வு பெறுவோம்."
லூர்துசெல்வம்
No comments:
Post a Comment