Monday, December 30, 2019

ஒரே குடும்பம்.


ஒரே குடும்பம்.
*   *    *  *    *   *   *    *   *   *    *  *

என்னுடைய friend ஒருத்தன் அடிக்கடி சொல்கிறான்:

"என்னுடைய அப்பாதான்  என்னைப்  பெற்றவர்.

நான் அவரை நேசிக்கிறேன்.

எனக்கு அவர் மட்டும்தான் வேணும்.

அவரோடு மட்டுமே பேசுவேன்

உறவினர் யாரும் எனக்குத் தேவை இல்லை.

அப்பா தவிர வேறு யாரோடும் பேசமாட்டேன்.

அவர் என்னுடைய மனதில் இருக்கிறார்.


அது போதும்.

அவருடைய
 புகைப்படத்தைக் கூட  நான் வைத்துக் கொள்வதில்லை.


நான் சொல்கிறேன்:

என்னுடைய அப்பா அம்மாதான் என்னைப்  பெற்று வளர்த்தார்கள்.

நான் அவர்களை நேசிக்கிறேன்.

அவர்கள் என்னிடம் கூறினார்கள்,

"மகனே, எங்களை நேசி.
.
அதோடு நமது உறவினர்கள் அனைவரையும் நேசி. 

அவர்கள் எல்லோரும் நமது இரத்தம்தான்.

நமது வீட்டிற்கு அவர்களும் வரவேண்டும்."

எனது பெற்றோர் விருப்பப்படி நான் உறவினர் அனைவரையும் நேசிக்கிறேன்.

அவர்கள் எனக்கு உதவுகிறார்கள்,

நான் அவர்களுக்கு உதவுகிறேன்.  


யார் அந்த நண்பன் என்று கேட்டு விடாதீர்கள்.

இது ஒரு analogy.

உண்மையை விளக்க கூறப்படும் ஒரு ஒப்புமை.


இயேசு ஒரே திருச்சபையை மட்டும் நிறுவினார்.

அதை இராயப்பர் என்னும் பாறைமீது நிறுவினார்.

பைபிளை ஒழுங்காக வாசிப்பவர்களுக்கு இது புரியும்.

அவர் என்னை மட்டும் அன்பு செய்யுங்கள் என்று கூறவில்லை.

"உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக" என்பது முதல் கட்டளை.

31 "உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் 
அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக" என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிடப் பெரிய கட்டளை வேறில்லை" என்றார்.

நாம் கடவுளை நேசிக்க வேண்டும்.

அவரால் படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் நேசிக்க வேண்டும்.

எல்லோரும் போகவேண்டியது ஒரே விண்வீட்டிற்கு தான்.

இறைவனில் மனிதர் அனைவரும் உடன்பிறந்தோரே.

இன்று மோட்சத்தில் இருப்பவர்களும்,

உத்தரிக்கிற ஸ்தலத்தில் '
இருப்பவர்களும்

நமது உடன்பிறப்புக்களே.

எல்லோரும் சேர்ந்து இறைவனில் ஒரே குடும்பம்.

எல்லோருக்கும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முழு உரிமை உண்டு.

" இது பைபிளில் எங்கு இருக்கிறது?" என்று யாராவது கேட்டால்,

"ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள  உரிமை இல்லை" என்று பைபிளில் எங்கு இருக்கிறது?"

என்றுதான் கேட்க வேண்டியிருக்கும்.

கொள்கை அடிப்படையில் பிரிந்து கிடக்கும் 38000 பிரிவினரும் ஒரே பைபிளை வைத்துதான் போதித்துக் கொண்டிருககிறார்கள்.

அவரவர்  அவரவர் இஸ்டப்படி பைபிளை மொழிபெயர்த்துக் கொண்டு 

இஸ்டம் போல் விளக்கம் கொடுத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

நம்மைப் பொறுத்த மட்டில் இராயப்பர் என்னும் பாறைமேல் கட்டப்பட்ட திருச்சபை கொடுக்கும் விளக்கமே உண்மையான விளக்கம்.

'விண்ணக வாசிகளும், நாமும் ஒரே குடும்பத்தினர் என்பதால் நாம் அவர்களோடு பேசலாம், 

அதாவது,

அவர்களை நோக்கி செபிக்கலாம்.

அவர்களுக்கு விழா எடுக்கலாம்.

அவர்கள் நமக்காக ஆண்டவரிடம் பேசலாம்.

ஆண்டவரின் தாய் நமது தாய்.

புனிதர்கள் அனைவரும் நமது சகோதர சகோதரிகள்.

 அம்மாவுடனும் , சகோதரரிடமும் பேசுவது தப்பு என்று பேசுவவர்கள் 

இயேசுவின் கட்டளைகளை அவமதிக்கிறார்கள்.

எல்லோரையும் நேசிக்கச் சொன்னவர் பேசாதிருக்கச் சொல்லவில்லை.

மரியாளை அவமதிக்கிறவர்கள் மரியாளின் மைந்தனை அவமதிக்கிறார்கள்.

பைபிள் மட்டும் போதும் என்பவர்களிடம்  ஒரே ஒரு கேள்வி, 

 பைபிள் மட்டும் போதும் என்றால்  சபை எதற்கு? 

அதை மட்டும் வைத்துக் 
கொண்டு நாமாகவே  வாழலாமே!

பைபிள் மட்டும் போதும்  என்று சொல்லிக்கொண்டு இன்றைய தேதியில் 38000  சபைகள் இருக்கின்றன.

ஒரே பைபிளுக்கு 38000 விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.

இறைவார்த்தையை அவரவர் விளையாடும் கைப்பொம்மை போல் ஆக்கிவிட்டார்கள்.


எங்களைப் பொறுத்த மட்டில் பைபிள் கட்டாயம் வேண்டும்,

அதற்கு  விளக்கம் சொல்ல 'இயேசுவால் இராயப்பர் என்ற பாறைமீது கட்டப்பட்ட' ஒரே திருச்சபை'  வேண்டும்.

அந்த திருச்சபை இயேசுவின் காலம் தொட்டு,

அவரால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்கள் வழியாக

தொடர்ந்து இயங்கி வரும் சபையாக இருக்கவேண்டும்.

இயேசு திருச்சபையைக் கட்டியது இராயப்பர் என்ற பாறைமேல்.

அவர்தான் திருச்சபையின் உலகத் தலைவர்.

இராயப்பரின் வாரிசான பாப்பரசர்தான் திருச்சபையின் இன்றைய தலைவர்.

அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இயேசுவின் நியமன அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதாவது இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

தந்தையின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் பிரிந்து சென்றவன் தந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேபோல் இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இயேசுவையே ஏற்றுக்
கொள்ளவில்லை.

இயேசுவால் நிறுவப்பட்ட ஒரே திருச்சபை வழியாகத்தான் இரட்சண்யம்.

திருச்சபை வழியாகத்தான் பாவமன்னிப்பு.

திருச்சபை வழியாகத்தான் திருவிருந்து.

விண்ணகம் செல்லும்போது இயேசுவோடு 

அவரால் இரட்சிக்கப்பட்ட அனைவரும் 

ஒரே குடும்பமாய் 

ஒருவரோடு ஒருவர் பேசி

 மகிழ்ச்சியாய் வாழ வேண்டும்.

எல்லா புனிதர்களும் நமது உறவினர்கள்.

இயேசுவின் தாய் நமது தாய்.

இதைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment