Monday, December 9, 2019

" ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை " என்று சொல்லிக்கொள்ளத் துணியவேண்டாம்." (மத்.3:9)

 " ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை " என்று சொல்லிக்கொள்ளத் துணியவேண்டாம்." (மத்.3:9)
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

"சார், அபிரகாம் நல்லவர்தானே?"

..."நாட்டில் நிறையப் பேர் அந்த பேர்ல இருக்காங்க. நீ எந்த அபிரகாம சொல்ற?"

"கையில பைபிள் வச்சிருக்கேன்.

எனக்குத் தெரிஞ்சி பைபிளில ஒரு அபிரகாம்தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்."

"அது எனக்கும் தெரியும். உங்கள் கேள்வியைப் பார்த்ததும் அந்த சந்தேகம் வந்தது.

'அபிரகாம் நல்லவர்தானே'ன்னு கேட்கிறீங்க?

பைபிள் அபிரகாமைப் பற்றி நல்லவரா, கெட்டவரா என்றசந்தேகமே வந்திருக்கக் கூடாது.

அவர் விசுவாசத்தின் தந்தை."

"நாம் அவருடைய பிள்ளைகள்னு  சொன்னா நமக்குப் பெருமைதானே?"

..."யார் இல்லைன்னு சொன்னா?"

"நான் அந்த வசனத்தை வாசிக்கிறேன்.நீங்க கண்டு பிடிங்க.

'ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை " என்று சொல்லிக்கொள்ளத் துணியவேண்டாம்.'

யார் சொன்னார்னு கண்டு பிடிங்க! "

..."ஸ்நாபக அருளப்பருடைய வார்த்தைகள்.

இதில் எந்த வார்த்தை   அபிரகாமை நல்லவர்தானேன்னு  கேட்க வச்சிது?"

"அவரைத் தந்தை என்று சொல்லிக்கொள்ளத் துணியவேண்டாம்னுi ஸ்நாபக அருளப்பர் சொல்கிறார்.

நல்லவரை தந்தை என்று சொன்னால் பெருமைதானே!

ஏன் சொல்லிக்கொள்ளத் துணியவேண்டாம்னு சொல்லுகிறார்.

அருளப்பரிடம் ஏதாவது பிரச்சனையா?"

"பிரச்சனை  அருளப்பரிடம் இல்லை. உங்களிடம்தான்.

நேற்றே என்ன சொன்னேன்?

எந்த வசனத்துக்கும் பொருள் புரிய முன்ன பின்ன பார்க்கணும்.

முந்திய வசனத்தை வாசியுங்கள்."

"மனந்திரும்பியவர்க்கேற்ற செயலைச் செய்து காட்டுங்கள்."

..."என்ன பொருள்? "

"மனம் திரும்பினால் மட்டும் போதாது.

மனம் திரும்பியவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

மனம் திரும்பி விட்டோம் என்பதை செயலில் காட்ட வேண்டும். வெறும் வாய்ப்பந்தல் போடக்கூடாது."

"கரெக்ட். இப்போ அடுத்த வசனத்தை வாசியுங்கள்."

"ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை " என்று சொல்லிக்கொள்ளத் துணியவேண்டாம்.

இப்போ புரிகிறது.

அதாவது,

""ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை " என்று வாய்ப்பந்தல் போடவேண்டாம்.

ஆபிரகாமின் பிள்ளைகளாக இருப்பதால் மட்டும் இரட்சண்யம் வந்துவிடாது.

இப்போது மனம் திரும்பி இருக்கிறீர்கள்.

அதைச் செயலில் காட்டுங்கள்.

அபிரகாமின் பிள்ளைகளாக வாழுங்கள்.

உங்கள் வாழ்வின்  செயல்கள்தான் உங்களுக்கு இரட்சண்யதைக் கொண்டுவரும்."

சரியா? "

"Super சரி.

ஸ்நாபக அருளப்பர் யூதேயாவின் பாலைவனத்தில் தோன்றி,


தன்னிடம் வந்தவர்களிடம்,


"மனந்திரும்புங்கள்,

ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவித்து வந்தார்.


யெருசலேமிலும் யூதேயா முழுவதிலும், யோர்தானை அடுத்த நாடெங்கும் வாழ்ந்தோர் அருளப்பரிடம் போய்,

தங்கள் பாவங்களை வெளியிட்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றுவந்தனர்.

பரிசேயர், சதுசேயருள் பலர்  ஞானஸ்நானம் பெற வந்தார்கள்.

அவர்கள் மனந்திரும்பிதான் ஞானஸ்நானம் பெற வந்தார்கள்.

ஆனால் அவர்கள் வெறுமனே பழம் பெருமை பேசக் கூடியவர்கள்.

ஆகவே அவர்களைப் பார்த்து அருளப்பர்,

  "விரியன்பாம்புக் குட்டிகளே,

வரப்போகும் சினத்துக்குத் தப்பித்துக்கொள்ள

(அதாவது, மனம் திரும்ப)

உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவன் யார் ?

என்று கேட்டுவிட்டு,

"நீங்கள் மனம் திரும்பினால் மட்டும் போதாது,

அதற்கேற்ற நற்செயல்கள் புரியவேண்டும்.

வெறுமனே

'நாங்கள் அபிரகாமின் மக்கள் ' என்று பெருமையாய்ப் பீற்றிக் கொள்வதில் எந்த பயனும் இல்லை' என்கிறார்."

."நீங்கள் ஒன்பதாவது வசனத்தை விளக்க முதல் வசனத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறீர்கள்."

..."சில வசனங்களுக்கு விளக்கம் கூற அதிகாரம்  முழுவதையுமே வாசிக்க வேண்டியிருக்கும்.

'அருளப்பர் பரிசேயரையும், சதுசேயரையும் பார்த்துதானே சொன்னார், இதை வாசித்து நமக்கு பயன்' என்று எண்ணக்கூடாது.

இறைவாக்கு எல்லா காலத்துக்கும், எல்லா மக்களுக்கும் பொதுவானது.

காலங்கள் மாறலாம், மக்கள் மாறலாம், இறைவாக்கு மாறாது.

இந்த வசனம் நமக்கு எவ்வாறு
பொருந்தும்?

இந்த வசனம் மூலமாக ஸ்நாபக அருளப்பர் நமக்கு என்ன பாடம் புகட்டுகிறார்?

நாம் கிறிஸ்தவர்கள்.

இயேசுவின் சீடர்கள்.

சர்வ வல்லப கடவுளின் சுவிகாரப் புத்திரர்கள்.

விண்ணகத் தந்தையை நோக்கி 'அப்பா' என்று அழைக்க முழு உரிமை பெற்றவர்கள்.

ஆனால் இந்த பெருமை மட்டும்
நமக்கு இரட்சண்யத்தைத் தந்துவிடாது.

கிறிஸ்தவனுக்குரிய இறையன்பும்,பிறர் அன்பும், நற்செயல்களும் நம்மிடம் இருந்தால் மட்டுமே இரட்சண்யம் கிடைக்கும்.

இயேசுவை நோக்கி  'ஆண்டவரே' என்று அழைக்கும் உரிமை இருப்பது மட்டுமே இரட்சண்யத்தைப் பெற்றுத் தந்துவிடாது.

நமது விண்ணகத் தந்தையின் திருச் சித்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே இரட்சண்யம் கிடைக்கும்.

இரட்சண்யம் பெற கிறிஸ்தவனாக இருந்தால் மட்டும் போதாது.

கிறிஸ்தவனாக வாழவேண்டும்.

பைபிளை வாசித்தால் மட்டும் போதாது,

பைபிளை வாழ வேண்டும்.

விசுவாசம் மட்டும் நம்மை இரட்சிக்காது.

விசுவாச வாழ்வுதான் நம்மை
இரட்சிக்கும்."

"நான் என் பாணியில் சொல்லட்டுமா?

ஊருக்கு வழி தெரிந்தால் மட்டும் போதாது. அந்த வழியே போகவேண்டும். அப்போது ஊரை அடையலாம்."

லூர்துசெல்வம்.




No comments:

Post a Comment