ஒளியும் இருட்டும் சேர்ந்திருக்க முடியுமா?
* * * * * * * * * * * *
"செல்வம், ஒரு சேலை எடுப்பேன்னு நினைத்தேன்.
ஆனால் மூன்று எடுத்திருக்க!"
"மூன்றுமே எனக்கில்லீங்க.
வசதி இல்லாத மூன்று பேருக்கு."
..."Very good. குழந்தை இயேசுவின் ஆசீர் உன்னோடு என்றும் இருக்கும்."
"நீங்க வரும்போது சொன்னதில் ஒரு சின்ன சந்தேகம். கோபம் வெறுப்பின் விளைவாகத்தான் வரணுமா?"
..."உலகத்தில மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களும் இருக்கின்றன.
நாம் அன்பு செய்ய வேண்டியது மனிதர்களையா? பொருட்களையா?"
"மனிதர்களைத்தான்."
..."ஏன்?"
"அன்பின் சுபாவமே பதில் அன்பை எதிர்பார்ப்பதுதான்.
மனிதர்களால் நேசிக்கவும் முடியும், நேசிக்கப்படவும் முடியும்.
இது பொருட்களால் முடியுமா?"
..."கரெக்ட். யார் மேல் கோபப்படமுடியும்?"
"மனிதர்மேல்தான்.
நாம் விரும்பாத ஒன்றை யாராவது செய்தால் அவர்மேல் கோபம் வரும்.
ஆனால் நம் மீது கோபப்படுபவர்கள் நம்மை வெறுப்பவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே!
நம்மை நேசிப்பவர்கள் நாம் தப்பு செய்யும்போது நாம் திருந்துவதற்காக கோபப்படலாம் அல்லவா?
வெறுப்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லையே!"
..."நாம் தப்பு செய்யும்போது நாம் திருந்துவதற்காக கோபப்படலாம்.
வெறுப்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பெற்றோர் பிள்ளைகளைக் கோபிப்பதும்,
ஆசிரியர்கள் மாணவர்களைக்
கோபிப்பதும்
இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
ஆனால் நாம் தப்பு செய்யும்போது நம்மீது கோபப் படாமல் திருத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.
கோபப்பட்டுத் திருத்துகிறவர்களுக்கும்,
கோபப்படாமல் திருத்துகிறவர்களுக்கும்
மனதளவில் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது.
கோபம் என்பது தோன்றி மறையும் ஒரு உணர்ச்சி. (Emotion)
நிரந்தரமானது அல்ல.
நமது விருப்பத்திற்கு மாறாக யாராவது, எதையாவது செய்தால்
உடனே நமக்குள் தோன்றும் உணர்ச்சிதான் கோபம்.
கொஞ்ச நேரம் கழித்து அது மறைந்து விடும்.
தப்பு செய்பவர் மீது நமக்கு வரும் கோபம் சரியானதுதான்.
இது மனித சுபாவத்தைச் சார்ந்த ஒரு உணர்ச்சி.
ஆனால் தோன்றி மறையும் உணர்ச்சி.
ஆனால் என்ன நடந்தாலும் உணர்ச்சி வசப்படாமல்,
கோபப்படாமல்,
நடந்த தவறைத் திருத்த முயல்பவர்களும் இருக்கிறார்கள்.
முந்தியவர்கள் (Former) உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
பிந்தியவர்கள் (Latter)
உணர்ச்சி வசப்படாதர்கள்.
ஆனால் ஒருவருக்கு மற்றொருவர் மீது வெறுப்பு இருந்தால்,
அவர் என்ன செய்தாலும் கோபம் வரும்.
இது தவறு."
"மனிதர்களில் அன்பினால் இயக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்,
வெறுப்பினால் இயக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்.
முந்தியவர்கள் நல்லவர்கள்,
பிந்தியவர்கள் கெட்டவர்கள்.
ஆனால் கடவுள் அன்பினால் மட்டுமே இயக்கப்படு...."
...."Stop. கடவுள் எதனாலும் இயக்கப்படுவர் அல்ல.
கடவுள் இயங்குபவர்.
அன்பு அவருக்குள் இல்லை.
அவர்தான் அன்பு.
God is Love.
அன்பு நித்திய காலமாக இயங்குகிறார்.
அன்புதான் நம்மை இரட்சிக்க மனிதன் ஆனார்.
அன்புதான் நமக்காகப் பாடுபட்டு மரித்தார்.
அன்புதான் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.
அன்புதான் தன்னையே நமக்கு உணவாகத் தருகிறார்.
அன்புதான் திவ்ய நற்கருணைப் பேழையில் நம்மோடு வாழ்கிறார்."
"பழைய ஏற்பாட்டில் சில இடங்களில் கடவுள் கோபத்தோடு செயல்படுவதாக காட்சிகள் வருகின்றவே,
அன்பு மயமான கடவுள்
கோபப்பட முடியுமா?"
"முதலில் சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு
அப்புறம் பைபிள் வாசிக்க வேண்டும்.
1. கடவுள் மாறாதவர். அவர் நித்தியகாலமும் அன்பாக இருக்கிறார்.
2.அவர் அன்பாய் இருப்பதால்
அன்போடு ஒத்துப்போகாத எந்தப் பண்பும் அவராய் இருக்க முடியாது.
அவர் நீதியானவர், ஞானமானவர்.
இப்பண்புகள் அன்போடு சேர்ந்தவை.
3..தோன்றி மறையக்கூடிய உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்.
எதிர்பாராது நடக்கும் நிகழ்ச்சிகள்தான் கோப உணர்ச்சிக்குக் காரணம்.
சர்வ ஞானமான கடவுளுக்கு தெரியாதது, எதிர்பாராதது எதுவும் இல்லை.
நம்மைப் படைக்கும் முன்பே நம்மைப் பற்றிய எல்லா உண்மைகளும் அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.
இன்று உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய,
இன்னும் நடைபெறக்கூடிய,
அனைத்து அட்டூளியங்களும் அவருக்கு நித்தியகாலமாகவே தெரியும். அப்படியிருக்க அவருக்கு எப்படிக் கோபம் வரும்?
இந்த உண்மைகளை மனதில் வைத்துக் கொண்டு,
என்றும் மாறாத அன்பு என்னும் என்ற கண்ணாடி மூலம் பைபிளை வாசிக்க வேண்டும்.
"நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்." (அரு.12:47)
"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு.3:17)
என்று கூறிய அதே புதிய ஏற்பாட்டின் கடவுளே
பழைய ஏற்பாட்டின் கடவுளும்.
கடவுள் மாறாதவர்.
பழைய ஏற்பாட்டிலும் அவர் மீட்பர்தான்.
புதிய ஏற்பாட்டிலும் அவர் மீட்பர்தான்.
தீர்ப்பளிப்பதற்கும், மீட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
தீர்ப்பு இருவகை முடிவுகளைத் தரலாம்:
1.விடுதலை,
2.தண்டனை.
மீட்பு என்றால் விடுதலை.
இயேசு மனிதனாகப் பிறந்தது நம்மைத் தண்டிப்பதற்கன்று, மீட்பதற்கே.
அப்படியானால் இறுதித் தீர்வை? மோட்சம்? நரகம்?
உண்டு.
ஒரு சின்ன Analogy .
ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்காக கிணற்றிற்குள் குதிக்கிறார்.
அவரைக் காப்பாற்றுவதற்காக ஒருவர் அவர் பின்னாலே குதிக்கிறார்.
காப்பாற்றுவதற்காக இயன்ற அளவு முயல்கிறார்.
தற்கொலைக்காகக் குதித்தமைக்காக வருந்தி,
காப்பாற்றக் குதித்தவரோடு ஒத்துழைக்கிறார்.
காப்பாற்றப் படுகிறார்.
ஆனால் தன் தற்கொலை முயற்சியை உறுதிசெய்து,
காப்பாற்ற வந்தவரை உதைத்துத் தள்ளிவிட்டு,
மூழ்குபவர் உயிரை இழக்கிறார்.
சாவான பாவம் செய்பவர் தற்கொலை முயற்சி செய்கிறார்.
அவரைக் காப்பாற்ற இயேசு விண்ணிலிருந்து மண்ணிக்கு வருகிறார்.
ஒத்துழைப்பவர் காப்பாற்றப் படுகிறார்.
ஒத்துழைக்காதவர் சாகிறார், சாவான பாவம் காரணமாக.
இயேசு வந்தது மீட்க மட்டும்தான், தண்டிக்க அல்ல.
மோட்சம், மீட்பு,
நரகம், இழப்பு.
மீட்புக்குக் காரணம், இயேசு.
இழப்பிற்குக் காரணம், இழந்தவர்தான்.
பொதுத் தீர்வையின்போது நரகத்திற்குப் போகின்றவர்கள் அவர்களாகத்தான் போகிறார்கள்.
தேர்வில் 35 ம், அதற்கு மேலும்
மதிப்பெண்கள் பெற்றால் வெற்றி.
34ம் அதற்குக் கீழும் மதிப்பெண்கள் பெற்றால் தோல்வி.
ஒரு மாணவன் தேர்வில் 30 மதிப்பெண்களுக்கான கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுதியுள்ளான்.
தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர் மிகவும் இரக்கப்பட்டு
30 மதிப்பெண்கள் போட்டிருக்கிறார்.
மாணவன் தோல்வி.
ஆசிரியர் தோற்கடித்தாரா? மாணவன் தோற்றானா?"
"மாணவன்தான் தோற்றான், புரிகிறது.
ஆனால் இறுதித் தீர்ப்பு நாளில்
மனுமகன்,
இடப்பக்கம் உள்ளோரை நோக்கி, "சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடுசெய்துள்ள முடிவில்லா நெருப்புக்குள் செல்லுங்கள்."
என்று சொல்வார் என்று இயேசுவே சொல்லியிருக்கிறாரே!"
..."இயேசு மக்களிடம் இருந்த பழக்கப்படி மக்களுக்குப் புரியும் விதத்தில் சொல்லியிருக்கிறார்.
மக்கள் பழக்கப்படி குற்றம் புரிந்தவன் தானே ஜெயிலுக்குப் போவதில்லை.
நீதிபதிதான் குற்றவாளியை ஜெயிலுக்குப் போகும்டி தீர்ப்பிடுவார்.
அதனால்தான் மக்களுக்குப் புரியும்படி இவ்வாறு சொன்னார்.
உண்மையில் இறந்தவுடனேயே,
பொதுத் தீர்வை வரைக் காத்திருக்காமல்,
ஆன்மா தான் போகவேண்டிய இடத்திற்குப் போய்விடுகிறது."
"பழைய ஏற்பாட்டில் கடவுள் கோபக்காரராக சித்தரிக்கப் பட்டிருக்கிறாரே!"
..."பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது நமக்குத் தரப்பட்டிருக்கும் செய்தியை (Message) எடுத்துக் கொள்வதுதான் முக்கியம்.
பழைய ஏற்பாட்டு ஆசிரியர்கள் நமக்குப் புரியவேண்டும் என்பதற்காக கடவுளுக்கு மனித செயல்களையும், குணங்களையும் கொடுத்து எழுதியிருப்பார்கள்.
உதாரணத்திற்கு:
உரைத்தார் ,
என்றார் ,
ஓய்வு எடுத்தார்,
களிமண்ணால் மனிதனை உருவாக்கினார்,
உலாவிக் கொண்டிருந்தார்.
இவை எல்லாம் மனிதன் தன் உடலால் செய்யும் செயல்கள்.
ஆனால் அவற்றை இறைவனுக்கு அளித்து எழுதியுள்ளார்ள்
வருந்துதல், கோபப்படுதல்
போன்ற மனித உணர்வுகளையும் இறைவனுக்கு அளித்து எழுதியுள்ளார்கள்.
அவற்றால் குறிக்ப்படும் செய்தியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதற்காக அவ்வாறு செய்தார்கள்.
நாம் ஒவ்வொரு சொல்லையும் பிடித்துக்கொண்டு இஸ்டம்போல் விளக்கக்கூடாது.
கடவுளின் ஒவ்வொரு செயலும் அவரது நித்திய திட்டங்கள்.
மனிதனுக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.
மனிதன் தன் சுதந்திரத்தை அவரது பணிக்காகப் பயன்படுத்த வேண்டுமென்பது அவரது நோக்கமாக இருந்தாலும்
அவனது சுதந்திரத்தில் அவர் குறுக்கிடுவதே யில்லை.
அவன் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது
அவனைத் திருத்துவதற்காக நித்திய காலமாக திட்டங்கள் வகுத்து
அவற்றைச் செயல்படுத்துகிறார்.
ஆதாம் ஏவாளைப் படைக்கத் திட்டமிடும்போதே அவர்கள்
சுதந்திரத்தைத்
தவறாகப் பயன் படுத்துவார்கள் என்று அவருக்குத் தெரியும்.
ஆகவே தான் மனிதனாகப் பிறந்து அவனை மீட்கும் திட்டத்தையும் தீட்டிவிட்டார்.
இரண்டுமே நித்திய திட்டங்கள்.
அவ்வாரே தான் மனிதனாகப் பிறப்பதற்காக யூத குலத்தைத் தேர்ந்தெடுத்தார்.
அக்குலத்தோர் தவறு செய்யும் போது அவர்களைத் திருத்துவதற்காகத் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினார்.
இவை அவர்கள் மேலுள்ள கோபத்தினால் அல்ல, அவர்களைத் திருத்துவதற்காக.
எகிப்திய அடிமைத்தனம், பாபிலோனிய அடிமைத்தனம்,
ரோமானியர் ஆட்சி
இவை எல்லாம் யூதர்கள் மீது அவருக்கிருந்த அன்பின் விளைவு,
கோபத்தின் விளைவு அல்ல.
எந்த சமயத்திலும் அவர்கள் மீது கோபப்பட்டதில்லை,
ஏனெனில் அவரால் கோபப்பட முடியாது.
அன்பினால் இரக்கப்பட முடியும்,
கோபப்பட முடியாது.
குளிர்ந்த நீர் அதே சமயத்தில் வெந்நீராக இருக்க முடியுமா?
ஒளியும் இருட்டும் சேர்ந்திருக்க முடியுமா?
அன்பு ,கோபப்பட முடியுமா?"
லூர்துசெல்வம்
No comments:
Post a Comment