Saturday, December 7, 2019

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு."(மத்9:37)

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு."
(மத்9:37)
*   *    *   *   *    *   *    *    *   *  *  *
"Hello!  Brother!  கொஞ்சம் உட்கார்ந்து பேசுவோமா?"


..."Hello!  நானே ஏற்கனவே உட்கார்ந்துதான இருக்கேன். நீங்கதான் உட்காரணும்.

உட்காருங்க. சொல்லுங்க."

"நான் இன்றைக்கு  பைபிள் வாசிக்கும்போது, பின்வரும்  வசனம் கண்ணுல பட்டது.

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு.

ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்"

இதன் பொருளைக் கொஞ்கம் விளக்க முடியுமா?"

..."அதென்ன 'கண்ணுல பட்டது அப்போ நீங்க தொடர்ந்து வாசிக்கல. அந்த வசனம் வந்தவுடனே வாசிப்பதை நிறுத்திட்டிங்க!

ஒரு  வசனத்துக்குப் பொருளை முன்னால அல்லது பின்னால உள்ள வசனங்களே விளக்கும்.

முந்திய வசனம்:

"அவர் மக்கட்கூட்டத்தைக் கண்டு, 

அவர்கள் ஆயனில்லா ஆடுகள்போலத் தவித்துக் கிடந்தமையால், 

அவர்கள்மேல் மனமிரங்கினார்."

தன் பின்னால் வருகின்ற ஏராளமான மக்களைப் பார்க்கின்றார்.

அப்போது அவர் மனதில் இப்படி ஓடியிருக்க வேண்டும்:

'இந்த மக்களை சரியான வகையில் வழி நடத்த சரியான ஆட்கள் இல்லை.

யூத மதப் பெரியோருடைய வழி நடத்துதல் சரி  இல்லை.

(ஆயனில்லா ஆடுகள்)

இப்போது நம் பின்னால் வருகின்றவர்களை நாம் கவனித்துக் கொள்கிறோம். 

நாம் விண்ணகம் சென்றபின் பூமியில் அவர்களோடு இருந்து அவர்களைக் கவனிக்க ஆட்கள் வேண்டுமே! '

இந்த எண்ண ஓட்டத்தில் 

 பிற்காலத்தில்  அவரைப் பின்பற்றப் போகிற நாமும்

 இடம் பெற்றிருக்க வேண்டும்.

அநேக இடங்களில் காணப்படும் குருக்கள் பற்றாக்குறையும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இருக்கிற விசுவாசிகளைக் கவனிக்கவும்,

புதிய விசுவாசிகளை உருவாக்கவும்

ஏராளமான குருக்கள்  வேண்டும்.

அப்படி எண்ணிக்  கொண்டே

அவர் தம் சீடர்களை நோக்கிச்
சொல்கிறார்,

 "அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு.

ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி 

அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்" 



அடுத்து அவர்ளை அழைத்து

 நோய் பிணியெல்லாம் குணப்படுத்தவும், 

அசுத்த ஆவிகளை ஓட்டவும் அவற்றின்மேல் அதிகாரம் அவர்களுக்கு அளிக்கிறார்.   .

பின் அவர்களை  நற்ய்தியை  அறிவிக்க அனுப்புகிறார். 


 இப்போ ஒன்று புரிந்திருக்கும்,

அறுவடை என்பது நற்செய்திப் பணி.

நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய ஆட்கள் மிகுதி.

நற்செய்தி அறிவிக்க ஆள் பற்றாக்குறை.

நற்செய்திப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் இறைவனை மன்றாட வேண்டும்."

"ஓரிரு கேள்விகள்.

1.'ஆயனில்லா ஆடுகள்' என்கிறார். அப்படியானால் ஆயர்கள்தானே தேவை. அறுவடைக்கு ஆட்கள் எதற்கு?

2.இயேசுதானே கடவுள். அறுவடைக்கு ஆட்களை அனுப்ப வேண்டியது அவர்தானே. 

ஏன் அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்" 

என்கிறார்?

அறுவடையின் ஆண்டவர் அவர்தானே!

பன்னிருவரையும் தேர்ந்தெடுத்ததும் அவர்தானே! 

அவர் எல்லாம் வல்லவர்.
நாம் கேளாமலேயே அவரால் ஆட்களை அனுப்ப முடியுமே"

..."1.'ஆயனில்லா ஆடுகள்'  இன்றைய தினம் ஒவ்வொரு பங்கிலும் உள்ள பரம்பரைக் கிறிஸ்தவவர்களைக் குறிக்கிறது.

வெகு நாட்களுக்கு முன்பே ஒரு ஆயர் அவரால் இயன்ற அளவு ஆடுகளை (ஆட்களை)

மந்தையில் (சபையில்) சேர்த்திருப்பார்.

காலப்போக்கில் ஆடுகள் பலுகிவிட்டன.

ஆனால் ஆயர்களின் எண்ணம் அந்த விகிதப்படி அதிகரிக்கவில்லை.

ஒரு சின்னக் கணக்கு
 போட்டுப் பார்ப்போம்.

1925ஆம் ஆண்டு. தென்காசி பங்குக்கு ஒரு பங்குச் சாமியார்.


எங்கள் குடும்த்தில் என்னுடைய ஐயா, அம்மா இரண்டு பேர். 

அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் நான்கு பேர்.

ஒருத்தர் சாமியார் ஆகி விட்டார்.

மீதி மூன்று பேர்.

இந்த மூன்று பேருடைய


 பிள்ளைகள்,

பிள்ளைகளின்  பிள்ளைகள்

 அவர்களின் பிள்ளைகள் எண்ணிக்கை

ஐந்தாவது தலை முறையிலேயே 90 ஐத் தாண்டி விட்டது.

இரண்டுபேர் 45 மடங்கு பலுகி உள்ளார்கள்.

அதாவது தென்காசிப் பங்கிலுள்ள அத்தனை கிறிஸ்தவ குடும்பங்களும் 45 மடங்கு பலுகியிருப்பார்கள்.

அப்படியானால் குருக்களின் எண்ணிக்கையும் ஒன்று 45 ஆகியிருக்க வேண்டும்!

ஒரு பங்கு 45 பங்குகள் ஆகி இருக்க வேண்டும்.


ஆனால் 8 பங்குகளாக மட்டுமே பிரிந்துள்ளது!

ஆயர்களின் எண்ணிக்கை பெருகாமல் ஆடுகளின் எண்ணிக்கை மட்டும்

 பெருகியுள்ளதால் 


'ஆயனில்லா ஆடுகள்' எண்ணிக்கை கூடியுள்ளது.

இன்றைய நிலையை அன்றே அறிந்திருந்த இயேசு மேய்ப்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்டி 

ஆடுகளின் உரிமையாளரிடம் நம்மை வேண்டச் சொல்கிறார்.

"அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்." என்பதில்

 மேய்ப்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்டி வேண்டச் சொல்வதும் அடங்கி இருக்கிறது.

ஆடுகளைப்பற்றி பேசும்போது 'அறுவடை' ஏன் வருகிறது?

'ஆயனில்லா ஆடுகள்' மந்தையைச் சேர்ந்த ஆடுகள்,

நமது பங்கு மக்கள் மாதிரி.


ஆனால் மந்தையைச் சேராத ஆடுகள் 

கிறிஸ்துவை இன்னும் அறியாத, 

அறிந்தும் ஏற்றுக் கொள்ளாத அனைத்து மக்களும்.


உலகை வயலாகவும், 

உலகில் மக்களை அறுவவடைக்காகக் காத்திருக்கும் நெற்பயிராகவும்

 உருவகப் படுத்தியிருக்கிறார் இயேசு.

நெற்பயிரை வளர்த்து, கதிர் வந்து முற்றியவுடன் அறுவடை செய்து நெல்லை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த வேலையைச் செய்ய விவசாயிகள் (அறுவடையாளர்கள்) தேவை.

அதேபோல், உலகில் வாழும்  மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து, 

அதன்படி வாழச் செய்து,

 வாழ்ந்து முடித்தவர்களை விண்ணக வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இப்பணியைச் செய்ய ஆன்மீக அறுவடையாளர்களான குருக்கள் தேவை.

உலக மக்கள் தொகையை எடுத்துக் கொண்டால்

 அவர்களை மனம் திருப்பி கிறிஸ்துவிடம் கொண்டுவர

 இப்போது இருக்கும் குருக்கள் போதுமா?

நிச்சயமாகப் போதாது.

அதனால்தான் இயேசு

  சீடர்களை நோக்கி,

 "அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு.

 ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்" என்றார்.

நாமும்  உலகம்  முழுவதும் நற்செய்தியை அறிவிக்கப்

 போதுமான நற்செய்தியாளர்ளை  அனுப்ப

 இறைவனிடம்  வேண்ட வேண்டும்."

"அது சரி, அறுவடையின் ஆண்டவரே இயேசுதானே.

அவருக்குதான் ஆட்கள் தேவை என்று தெரியுமே.

நம்மை ஏன் வேண்டச் சொல்கிறார்?"

..."இயேசு ஒரு நல்ல தந்தை, அதனால்தான்."

"புரியவில்லை."

..."நாம் குழந்தைகளைக் கேட்காமல்தான் அவர்களைப் பெறுகிறோம்.

இதில் எல்லா தந்தையரும் ஒரே மாதிரிதான்.

ஆனால் வளர்க்கும் முறையில்தான்  வேறுபாடு.

குழந்தைக்கு வேண்டியதை எல்லாம் அது,

வளர்ந்தபின் அவன்,

 கேட்காமலேயே

கொடுத்து வளர்ப்பது சரியான வளர்ப்பு முறையல்ல.

அப்படி வளரும் குழந்தைகள் 'தேவை' என்று ஒன்று இருக்கிறது என்பதை உணராமலேயே வளரும்.

மேலும் தந்தையோடு உறவாடும் நேரமும் குறையும்.

கேளாமலே கிடைத்து விடுவதால் சிக்கனமாக இருக்கத் தெரியாது.

வளர்ந்து சுய வாழ்வுக்கு வரும்போது தேவைகளைச் சந்திக்க முடியாமல் திண்டாடும்.



கேட்டால் மட்டும் கொடுப்பதுதான் சரியான முறை.

தந்தையோடு உறவாடும் நேரம் அதிகமாகும்.

சிக்கனம் வளரும்.

பெற்றோர் இல்லாமல் தான் இல்லை என்ற உணர்வு வளரும்.

கேட்டபின் கொடுப்போர்தான் சரியான பெற்றோர்.


கடவுள் நம்மை அளவில்லாமல் அன்பு செய்வதால் 

நாம் எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கவும்,

அவருடனே பேசிக்
கொண்டிருக்கவும்
 வேண்டும் 

என்று ஆசிக்கிறார். 

ஆகவே நாம் எதன்மேல் ஆசைப்பட்டாலும் முதலில் அவரை நினைக்க வேண்டும்,

அப்புறம் அவரிடம் கேட்க வேண்டும்

என ஆசிக்கிறார்.

தருவதில் காலம் கடத்துவதே நாம் அவரிடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இவ்வாறு கேட்பது உறவை வளர்க்கிறது.

தனிப்பட்ட முறையில் மட்டும் அல்ல சமூக நிலையிலும் சமூகமாகச் சேர்ந்து அவரிடம் செபிக்க வேண்டும்.

நாம் கேளாமலேயே நமக்கு வேண்டியதெல்லாம் கிடைத்துக் கொண்டிருந்தால் நாம் கடவுளை நினைக்க மாட்டோம்.

ஆகவேதான் 

"கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள்"

என்கிறார்.

நாம் அவர் ஏற்படுத்திய திருச்சபையை நேசிக்க வேண்டும், 

அது வளர ஆசைப்பட வேண்டும்,

அதன் வளர்ச்சியில் முழு அக்கரை எடுக்க வேண்டும் 

அதற்காக நாம் அவரிடம் பரிந்து பேச வேண்டும்

 என்பது அவர் ஆசை.

அவரே நிறுவிய திருச்சபைக்கு கஸ்டங்கள் வர அவர் அனுமதிப்பதே 

நாம் அவரை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். 

இந்த உணர்வு  நம்மிடம் எப்போதும்  இருக்க வேண்டும்.

இறைவனிடம் கேட்பது மட்டுமல்ல,

நமது இல்லங்களில் இருந்து, நாமே 'அறுவடைக்கு ஆட்களை' அனுப்ப வேண்டும்.

மந்தையைச் சேர்ந்த ஆடுகளை மேய்க்க 'மேய்ப்பர்களை' அனுப்ப வேண்டும்.

இறை வசனம் இதைத்தான் எதிர்பார்க்கிறது."

லூர்துசெல்வம். 

No comments:

Post a Comment