Saturday, August 3, 2019

அள்ள அள்ள குறையாத செல்வம்.

அள்ள அள்ள குறையாத செல்வம்.
-----------------------------------------------

"ஏங்க, நான் சொல்றது எதுவுமே காதில விழலியா?"

..."ஏண்டி, சொல்றது காதில விழலியா? சொன்னாத்தானடி விழும்?

ஒரு கால் மணி நேரமா என் முன்ன உட்கார்ந்திருக்க.

அது என் கண்ணுல விழுது.

ஆனால் நீ எதுவும் பேசலிய. பேசாதது எப்படி காதுல விழும்?"

"மௌனம் மிகச் சக்திவாய்ந்த மொழின்னு நீங்களே சொல்லியிருக்கீங்க.

என் மௌனத்திற்கு சக்தியே இல்லையா?"

..."எதெதெற்கு எங்கெங்கே  என்னென்ன பொருள்,

எதெதெற்கு எங்கெங்கே

என்னென்ன மதிப்பு,

எதெதெற்கு எங்கெங்கே
எவ்வெவ்வளவு சக்திங்கிற
வரைமுறை கிடையாதா?

ஒரு கேள்விக்கு ஒரு பதிலா மௌனம் வரலாம்.

ஒரு பிரச்சினைக்குத் தீர்வா மௌனம் வரலாம்.

ஒரு நோய்க்கு மருந்தாகூட
மௌனம் வரலாம்.

இந்த மௌனங்களுக்கு பொருள் இருக்கு.

உன்னுடைய இந்த மொனத்திற்குப் பொருள்?"

"நீங்க Webல எதையே தேடிக்கிட்டிருந்தீங்க.

எங்கிட்ட கேட்டா நான் சொல்லியிருக்க மாட்டேனா?

இதுதான் என்
மௌனத்திற்குப் பொருள்."

..."ஒரு செயல்,

இவ்வுலகத்தின் எல்லா இன்பத்திற்கும் காரணம் அதுதான்,

துன்பத்திற்கும் காரணம் அதுதான்,

சகல பிரச்சனைகட்கும் காரணம் அதுதான்,

பிரச்சனைகளின் தீர்வுகளுக்கும்
காரணம் அதுதான்,

என்ன அது?"

"நான் கேட்கிற கேள்விக்குப்  பதில் சொல்லுங்க

உலகிற்கு சமாதானத்தையும், பிரிவினையையும் உண்டாக்க வந்தவர் யார்? "

..."இதற்குறிய பதிலைத்தான் ஏற்கனவே இயேசுவே கூறிவிட்டாரே!

"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்?

இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(லூக்.12:51)

இயேசு மண்ணுலகிற்கு வந்தது சமாதானத்தை அளிக்கத்தான்.

இயேசு மண்ணுலகிற்கு வந்திராவிட்டால் எல்லோரும் பாவிகளாகவே இருந்திருப்போம்.

அவர் வந்ததால் அவரை ஏற்றுக்கொள்பவர்கள் இறைவனோடு சமாதானம் அடைகிறார்கள்.

ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாவத்திலேயே நீடிக்கிறார்கள்.

நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பிரிவினை ஏற்டுகிறது.

இங்கே ஒரு முக்கிய இறையியல் உண்மையை இயேசு நயமாக வெளிப்படுத்துகிறார்.

உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆதிகாரணர் (Primary cause) கடவுள்தான்.

அவர் மனிதனைப் படைத்ததுதானே பாவம் நுழைய காரணம்!

மனிதனைப் படைத்திருக்காவிட்டால் பாவம் என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது.

ஆனாலும் பாவத்திற்குப் பொறுப்பு  மனிதன்தான். (Secondary cause is man.)

ஏனெனில் அவன் சுதந்திரத்தைப் பயன்படுத்தியே பாவம் செய்கிறான்.

இப்போ என் கேள்விகக்குப் பதில்?"

"அன்பு!"

..."அதெப்படி அன்பு
எல்லா இன்பத்திற்கும்
துன்பத்திற்கும் காரணமாக இருக்கமுடியும்?"

"நித்திய காலமும் பேரின்பத்தில்
வாழ்பவர் இறைவன்,

இறைவன் அன்புமயமானவர்.
God is love.

ஆகவே, பேரின்பத்தில் வாழ்பவர் அன்பு.

ஆகவே அன்பு பேரின்பமயமானது.

அன்பின் காரணமாக நம்மைப் படைத்த கடவுள்,  அன்பையே நம் உயிர்மூச்சாக வைத்தார்.

இறை உறவினால் மனிதன் அடையும் பேரின்பத்திற்குக் காரணம் அன்பு.

குடும்ப இன்பத்திற்குக் காரணம் அன்பு.

நட்பின் இன்பத்திற்குக்  காரணம் அன்பு.

துன்பத்திற்குக் காரணமும் அன்புதான்.

இயேசுவின் பாடுகளுக்குக் காரணமே அவர் நம்மீது  கொண்ட அன்பு தானே!

பெற்றோர் கஸ்டப்பட்டு  உழைப்பதே பிள்ளைகள்மீது கொண்ட அன்பினால்தானே!"

..." பிரச்சனைகட்கு காரணமும், தீர்வுமாய் இருப்பது எப்படி?"

"கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள பிரச்சனை என்ன?"

..."பாவம். பாவத்திற்கு அன்பு எப்படி  காரணமாய் இருக்கமுடியும்?"

"இறைவன் மீது வைக்கவேண்டிய அன்பை மனிதன் உலகின் மீது வைக்கும்போதுதான்

பாவம்    என்ற பிரச்சனையே  உண்டாகிறது.

மனிதன் தன் தவற்றை உணர்ந்து

அன்பைக் கடவுள் பக்கம் திருப்பும்போது

செய்த பாவத்திற்காக மனஸ்தாபப்படுகிறான்.

பாவத்தைச் சங்கீர்த்தனம் செய்கிறான்.

பாவம் மன்னிக்கப்படுகிறது.

பிரச்சனை  தீர்கிறது."

..."ஆக, அன்பை உலகின்பக்கம் திருப்பும்போது ஏற்படும் பிரச்சனை, கடவுள் பக்கம் திருப்பும்போது தீர்ந்துவிடுகிறது!

நமது அன்பின் தன்மையைப் பொறுத்து நமது ஆன்மீக வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும்."

"ஆமா."

..."அப்படியானால் நமது அன்பு எப்படி இருக்கவேண்டும்?"

"இறைவன்மேல் நாம்
வைத்திருக்கும் அன்பு முழுமையாய் இருக்க வேண்டும்.

அன்பைக் கூறு போடமுடியாது.

நமது முழு மனதுடன் இறைவனை அன்பு செய்ய வேண்டும்.

அதாவது நமது மொத்த அன்பும் இறைவனுக்கு மட்டும்தான்."

..." நம் அயலானையும் அன்பு செய்ய வேண்டுமென்று ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே!"

" 'நான் திராட்சைக் கொடி: நீங்கள் அதன் கிளைகள்.'
(அரு.15:5)

என்று என்று இயேசு கூறியது ஞாபகம் இல்லையா?

நாம் எல்லோருமே இயேசுவாகிய ஞானசரீரத்தின்  அங்கங்கள்.
(We all are the limbs of the mystical body of Christ.)

இயேசுவை முழுமையாக நாம்  நேசிக்கும்போது அவரின்
ஞானசரீரத்தையும்தானே முழுமையாக நேசிக்கிறோம்

அதாவது இயேசுவை உண்மையாக நேசிப்பவன் அவரோடு அணைந்துள்ள அயலானையும் நேசிக்கிறான்.

இறையன்பையும் பிறரன்பையும் பிரிக்கமுடியாது.

அதனால்தான் இறையன்பால் ஏவப்பட்டு பிறருக்கு சேவை செய்யும்போது இறைவனுக்கே சேவை செயகிறோம்.

ஆனால் இறைவனுக்காக அல்லாமல் சுயதிருப்திக்காக செய்யப்படும் பிறர்பணி இறைப்பணி ஆகாது.

அதற்கு விண்ணகத்தில் சம்பாவனை எதுவும் கிடையாது.

அதேபோல் இறை நம்பிக்கை இல்லாத சிலர் 'மனிதம்' பற்றி பேசுவார்கள்.

இறைவனை மறுத்து மனிதம் பற்றி பேசுவது பொருளற்றது."

..."நாம் இறைவனையும்,பிறனையும் அன்பு செய்வதற்கும்,

கடவுள் நம்மை அன்பு செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதா?"

1."இறைவனுக்கு அன்பு இயல்பானது.

God is love by nature.

எப்படி நெருப்பினால் வெப்பம் தராமல் இருக்கமுடியாதோ,

அதுபோல

இறைவனால் அன்புசெய்யாமல் இருக்கமுடியாது.

நமக்கு அன்பு இறைவனால் தரப்பட்ட வரம்.

நாம் இறைவன் அருளால் அன்பு செய்கிறோம்.

2..அவர் அன்பிற்குப் பதிலாக எதிர்பார்ப்பது நமது அன்பை மட்டுமே.

நாம் அவரை அன்பு செய்யுமுன்னே அவர் நம்மை அன்பு செய்கிறார்.

அவரது அன்பை நாம் எதிர்பார்க்கத் தேவையில்லை. கேட்காமலேயே கிடைக்கும் இலவச வரம் அது.

நாம் அவரிடம் எதிர்பார்ப்பது

அவரது அருளையும்,

ஆசீரையும்,

அரவணைப்பையும்,

அவரோடு நித்தியமாய் வாழ்வதையும்ததான்.

3. அவரது அன்பு அளவில்லாதது,  மாறாதது.

நாம் அளவுள்ளவர்கள், நமது அன்பும் அளவுள்ளது.

கடைசி வரை நமது அன்பு வளர இடமிருக்கிறது.    

நமது அன்பு வளரவும்,  மாறாமலிருக்கவும் அவருடைய அருள் உதவி தேவை.

4. கடவுள் நம்மீது கொண்டுள்ள
அன்பிற்கு துவக்கமில்லை.

நம்மைப் படைக்குமுன்னரே நித்திய காலத்திலிருந்தே நம்மை அன்பு செய்கிறார்.

நான் இறைவன் இருக்கிறார் என்பதை அறிந்தபின்னரே அன்பு செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

நமது அன்பு இயேசுவிடமிருந்து பெற்ற வரம்.

பெற்ற வரத்தைப் பேணிக்காக்க வேண்டிய அருள் வரத்தையும் இயேசுவே தரவேண்டும்."

..."இப்போது ஒரு கேள்வி. இக்கேள்வியை கேட்பது நானல்ல. இயேசுவின் சொந்த ஊர்க்காரர்கள்.

'இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன?'

நாம் நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் இயேசுவிடம் கேட்டுப் பெற்றுக் கொள்கிறோம்.

அவர் யாரிடமிருந்து பெற்றார்?"

"இயேசு நசரேத் ஊரில் 30 ஆண்டுகள் சூசையப்பருக்கும், மாதாவுக்கும் கீழ்ப்படிந்து தச்சுவேலை செய்துவந்தார்.

அங்குள்ள மக்களுக்கு அவர் இறைமகன் என்று தெரியாது.

  அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்   'தச்சன் மகன்'.

ஆகவே அவரது பேச்சில் வெளிப்பட்ட ஞானத்தைக் கண்டு மலைத்துப்போய்,

'இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன?'

என்று கேட்டார்கள்.

ஆனால் நமக்குதான் தெரியுமே அவர் கடவுள் எனறு.

அவருடைய ஞானம் அவருடைய ஞானம்தான்.

அவருடைய வல்லமை அவருடைய வல்லமைதான்.

அவருடைய அன்பு அவருடைய அன்புதான்.

வேறு யாரிடமிருந்து எதையும் பெறுபவர் கடவுளாய் இருக்க முடியாது.

இயேசு  கடவுள். ஆகவே

அவருடைய ஞானமும் புதுமைகளும்  அவரிடமிருந்துதான் வருகின்றன."

..."நாம் இறைவனிடமிருந்து பெற்ற யாவற்றையும் இலவசமாகப் பெற்றோம்.

இலவசமாகப் பெற்றதை இலவசமாகக் கொடுப்போம்.

கடவுள் நம்மோடு பகிர்ந்துகொண்டதை

நாம் மற்றவர்களோடு பகிரும்போது நாம் பெற்றது குறையாது, அதிகரிக்கும்.

அள்ள அள்ள குறையாத செல்வம் இறைவன் மட்டும்தான்.

ஆவலோடு அள்ளுவோம், ஆவலோடு பகிர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment