"நீங்கள் பரிசுத்தராவதே கடவுளின் திருவுளம்."
(1தெச.1:3)
---------- --------- ----------
நண்பர் ஒருவர் கவலையோடு உட்கார்ந்திருந்தார்.
"என்னாச்சி? கப்பல் ஏதாவது கவுந்திட்டா?"
"கப் Dining table ல்லதான் இருக்கு. ஒரு பல்தான் கவுந்துட்டு! "
"ஐயோ! கொஞ்சம் வாயத் திறங்க."
"எதுக்கு? கவுந்த பல்லப் பார்க்கிறதுக்கா?
அது உங்களால் முடியாது."
"கொஞ்சம் வாயைத் திறங்க. முடியுமா? முடியாதா? ங்கிறத நான் பார்த்துக்கிறேன்."
"அது முடியாது ,சார். கவுந்தது என் பல்லல்ல."
"அப்புறம் யார் பல்லு? "
"அது தெரியாமதான் கவலையாய் இருக்கிறேன்."
..."கவலைய விடுங்க, சார். யார் பல்லோ விழுந்ததுக்கு நீங்க ஏன் கவலப் படணும்? "
"நீங்க கவலப் படணும்னு நான் சொல்லவே இல்லையே.
நான்தான் கவலப் படணும்."
..."நீங்கன்னா நான்தானே, சார்."
"திரும்பச் சொல்லுங்க."
..."சாரி. கொஞ்சம் விளக்கமா சொல்லி இருக்கணும்....."
"இல்ல. நீங்க சொன்னதுதான் சரி.
சொன்னத அப்படியே திரும்பச் சொல்லுங்க!"
..."நீங்கன்னா நான்தானே."
"Correct. நீங்கன்னா நான்தான்.
நான்னா தீங்கதான்.
Problem solved.
Thank you for reminding the truth, which should not have been forgotten."
..."எனக்கு ஒண்ணுமே புரியல."
..."ஆனால் எனக்குப்புரிஞ்சிட்டு.
சார் 'நேற்று நான் நெல்லையிலிருந்து பேருந்துல வந்து கொண்டிருந்தபோது
என்னோடு அருகில் அமர்ந்து பயணித்த நண்பர்,
(நான் அவரை 'நண்பர்' என்றது மரியாதை அடிப்படையில்.)
தன் சொந்தக்கதை, சோகக்கதையை எல்லாம்
என்மேல் கொட்டிக் கொண்டிருந்தார்.
அவரை எனக்கு முன்னப் பின்னத் தெரியாது.
ஆனாலும்,
மழை நம் மேல் கொட்டும்போது,
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நனைவது போல,
அவர் சோகம் என்னையும் தொற்றிக்கொண்டது.
சோகம் மாற வேண்டுமென்றால் யாரென்றே தெரியாத அவரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
எல்லோரும் ஒரே குலம்தானே!"
..."நீங்க உண்மையிலேயே பெரிய மனுசன்தான் சார்."
"மனுசன் தமிழ் வார்த்தைதானே, சார்?"
..."அதில என்ன சந்தேகம்? "
"சந்தேகமே இல்லை. அது ஆங்கிலம் கலந்த தமிழ் வார்த்தை.
ஒரு பெரிய செய்தியைச் (Message) சுமந்துவரும் வார்த்தை.
நீங்க மனுசன்தானே?"
..."அதில என்ன சந்தேகம்?"
"நானும் மனுசன்தானே?"
"நீங்க பேசுவதைப் பார்த்தா..."
"பார்த்தா இல்லை, கேட்டா.
பேசுவதைக் கேட்கதான் முடியும்."
..."சார், உங்கள் முகத்தில் இருந்த சோகம் பறந்து விட்டது.
அதுக்குக் காரணம் என்ன."
"மனுசன்தான். அந்த வார்த்தையைக் கவனிங்க,
ஆங்கிலம் கலந்த தமிழ்,
அல்லது
தமிழ் கலந்த ஆங்கிலம்!
மனுson!
அதாவது 'மனு மகன்'!"
..."Super! அதெப்படி திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது? "
"அதைப்பற்றி அப்புறம் ஆராய்வோம்.
இப்போ விசயத்துக்கு வருவோம்.
இறை மகன் இயேசு
'மனு மகன்'ஆனார்!
நாமும் தன்னைப்போல ஆக வேண்டும் என்பதுததானே இயேசுவின் விருப்பம்!
அப்படி ஆவதில் முதல் படி எடுத்து வைத்து விட்டோம்.
அதாவது நமக்கு நாமே மனுSon பெயர் சூட்டிக்கொண்டோம்."
..."அடுத்தபடி அவரைப்போல் ஆவதுதான்."
"கரெக்ட். அவரைப்போல் ஆனால்தான்
வாழ்க்கையின் சோகத்தில் மாட்டிக் கொண்டிருப்பவர்களை
வெளியே கொண்டுவர முடியும்.
இயேசு இறைமகன் மனுமகன் ஆனார்.
நாம் எப்படி...?"
..."இறை மகன் ஆக முடியும்னு கேட்கிறீங்களா?
இயேசுவே நம்மை இறைமக்கள் ஆக்கிவிட்டாரே!
அவரைப் பெற்ற தந்தையை நோக்கி,
'விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே'
என்று அழைக்கச் சொன்னாரே!
நம் எல்லோரையும் தனது சகோதரர்கள் ஆக்கிக்கொண்டாரே!
இயேசு பிறப்பினால் இறைமகன்.
நாம் சுவீகாரத்தினால் இறைமக்கள்!
ஆக, நாமும் இறைமக்கள்தான்!
ஆனால் பெயரளவில் இறைமக்களாக இருந்தால் போதாது.
நமது எண்ணம், சொல், செயலிலும் இறைமக்கள் ஆக வேண்டும்.
இது விசயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை புனித சின்னப்பர் கூறியுள்ளார்.
..."நீங்கள் பரிசுத்தராவதே கடவுளின் திருவுளம்."
(1தெச.1:3)
அதாவது நாம் எல்லோரும் பரிசுத்தர்களாய் வாழவேண்டும்.
பாவ மாசு அற்ற நிலையே பரிசுத்தம்.
இறைவன் பரிசுத்தர்.
அவரால் பாவம் செய்ய இயலாது.
இறைவனது கட்டளைகளுக்கு எதிராகச் செயல்படுவதுதான் பாவம்.
கடவுள் அவரது சித்தப்படிததான் செயல்படுகிறார்.
அவருக்கு எதிராக அவரே செயல்பட முடியாது.
அவரது சித்தமே அவரது செயலாகிறது.
நாமும் அவரது சித்தப்படி செயல்பட்டால் நாமும் பரிசுத்தர்ளாய் வாழலாம்.
இயேசு தந்தையின் சித்தப்படி செயல்பட்டார்.
இயேசுவின் சித்தமும், பிதாவின் சித்தமும் ஒன்றுதான்.
(ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே ஞானம், ஒரே தேவசுபாவம்)
நமது சித்தமும் தந்தையின் சித்தமும் ஒரே சித்தம் அல்ல.
நாம் கடவுளின் சித்தத்தை நமது சித்தமாய் ஏற்றுக்கொண்டு,
அதன்படி வாழ்ந்தால் பரிசுத்தர்களாய் வாழ்கிறோம்.
இறைவன் சித்தத்திற்கும் நமது சித்தத்திற்கும் இடையில் இடைவெளி எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ
அவ்வளவுக்கவ்வளவு பரிசுத்தத்தனத்தின் அளவு அதிகமாகும்.
அதாவது இறைவனுனக்கும், நமக்கும் உள்ள உறவின் நெருக்கமே
நமது பரிசுத்தத்தனத்தின் அளவைத் தீர்மானிக்கும்.
இறைவன் அன்புமயமாவர்.
அவரது அன்பு அளவற்றது.
நமக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள அன்பின் அளவுக்கு ஏற்ப
உறவின் நெருக்கமும் இருக்கும்.
நமது அன்பின் அளவு கூடும், குறையும்.
அன்பின் அளவுக்கு ஏற்றபடி
இறைவன் முன் நமது அன்புச் செயல்களின் மதிப்பு இருக்கும்.
அன்புச் செயல்களின் மதிப்பு விண்ணகத்தில் நமது பேரின்பத்தின் அளவைத் தீர்மானிக்கும்.
ஆக, நமது ஆன்மீக வாழ்வில் எப்பபோதும் நமது கவனத்தில் இருக்கவேண்டியவை,
1விசுவாசம்.(Faith)
2.இறைவனோடு நமக்குள்ள உறவு.(Relationship)
3.அன்பு (Love).
.
4.பரிசுத்தத்தனம்.(Holiness)
.5. நற்செயல்கள்.(Good works)
விசுவாசம்தான் ஆன்மீக வாழ்வின் அடிப்படை.
சாவான பாவம் இல்லாதிருந்தால் மட்டுமே உறவு இருக்கும். அற்பப் பாவங்களும் இல்லாதிருந்தால் உறவு நெருக்கமாகும்.
அன்புதான் இறை உறவு.
அன்பு அதிகமானால் பாவங்கள் குறையும்.
பாவங்கள் குறைய குறைய
பரிசுத்தத்தனம் அதிமாகும்.
அன்பு அதிகமாக அதிகமாக நற்செயல்கள் அதிகமாகும்.
நற்செயல்கள் விண்ணகத்தில் சம்பாவனையை ஈட்டித்தரும்.
மேற்கூறப்பட்டவை எல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை."
"ஆக,
நாம் இறைமக்களாய் வாழவேண்டுமென்றால்,
பரசுத்தத்தனம்,
அன்பு,
பிறருக்கு உதவுதல், (நற்செயல்கள்)
ஆகிய இறைப் பண்புகள் நம்மிடமும் இருக்கவேண்டும்.
நான் உடனடியாகச் செய்ய வேண்டிய வேலை.
எனது பேருந்து நண்பரைக் கண்டுபிடிப்பதுததான்.
வருகிறேன்."
..."வாங்க."
இரை மக்களாய் அல்ல,
இறை மக்களாய் வாழ்வொம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment