Sunday, August 25, 2019

"ஆண்டவர் யார் மேல் அன்பு கூர்கிறாரோ, அவனைக் கண்டித்துத்திருத்துகிறார்." (எபி.12:6)

"ஆண்டவர் யார் மேல் அன்பு கூர்கிறாரோ, அவனைக் கண்டித்துத்திருத்துகிறார்."
(எபி.12:6)
****    ****    *****     ****     ****

"சார், ஒன்பதாங்கிளாஸ் சார் நீங்கதானே?"

..."ஐயா,  ஒன்பதாங்கிளாஸ் C பிரிவின் class teacher நான். உங்களுக்கு என்ன வேணும்?"

" என் பையனுக்கு class teacher நீங்கதானே? "

"பையன் பேரு?"

"எனக்கு நாலு பையங்க இருக்காங்க. எந்தப் பையன்  பெயரைக் கேட்கிறீங்க?"

"ஒன்பதாங்கிளாஸ் C பிரிவில படிக்கிற உங்க பையன் பேரு?"

"அவன் எந்த பிரிவில படிக்கிறான் என்று எனக்குத் தெரியாது.

அது எனக்கு முக்கியம் அல்ல.

ஆனால்,  அவனுடைய English வாத்தியார் அவன பயங்கரமா அடிக்கிறாராம்.

வீட்டில் வந்து அழுகிறான்.

என் மகன நானே அடிக்கிறதில்ல.

அவன் அம்மா அடிச்சாள்னா, நான் அவள அடிப்பேன்.

அவ்வளவு செல்லமா வளர்த்துக்கிட்டு இருக்கேன்.

அவன வாத்தியார் அடிக்கிறாராம்.

அந்த வாத்தியாரப் பார்த்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்."

..."என்ன சொல்லிட்டுப் போகலாம்னு? "

"அவன அடிக்கக் கூடாதுன்னு. சார், என் பையனப் பாடம் படிக்கதுக்காகப் பள்ளிக்கு அனுப்பிவச்சேனா? அடிபடறதற்கு அனுப்பிவச்சேனா?"

..."நீங்க என்ன வேல பார்க்கிறீங்க?"

"பேச்ச மாற்றாதிங்க. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க."

"சொல்றேன்.முதல்ல  நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.

நீங்க என்ன வேல செய்றீங்க?"

"விவசாயம் பார்க்கிறேன்."

..."பார்க்கல, செய்றீங்க.  ஆமா, நீங்க நிலத்த மெசின் கலப்பையைக்கொண்டு உழுவீங்க,

மண்வெட்டியைக்கொண்டு வெட்டுவீங்க,

காலக்கொண்டு மிதிப்பீங்க,

செடிகளுக்கிடையே முளைக்கும் புல்லைப் பிடுங்குவீங்க,

செடிகளுக்குப் பூச்சி மருந்து அடிப்பீங்க,

அரிவாளைக்கொண்டு அரிவீங்க...."

"சார், இதெல்லாம் செய்யாமல் எப்படி  விபசாயம் பார்க்கமுடியும்?"

..."அதாவது உங்க கையில ஒப்படைக்கப்பட்ட நிலத்தை என்ன வேணும்னாலும் செய்வீங்க, உற்பத்திங்கிற பெயரில..."

"சார், சம்பந்தம் இல்லாம பேசறீங்க. நான் கேட்கவந்தது...."

..."பையனை ஏன் கண்டிக்கிறீங்க என்பதைப் பற்றிதான?"

"ஆமா."

..." நானும் அதைப்பற்றிதான் பேசிக்கிட்டிருக்கேன்.

எப்படி நிலத்தில நல்ல விளைச்சல ஏற்படுத்துவதக்காக விபசாயி நிலத்தைப் புண்படுத்துறானோ...."

"சார், புண்படுத்தல, பண்படுத்துகிறான்"

..."Very good. நீங்க இப்படிச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படிச் சொன்னேன்.

எப்படி  டெய்லர்  தன்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற புதுத்துணியை கத்தரிக்கோல் வெட்டி, கையால் கிழிக்காவிட்டால் ....."

"புதுச் சட்டை தைக்கமுடியாதோ! .."

..."ஹலோ!  சம்பந்தம் அப்பாவா இப்படிப் பேசறது? நம்ப முடியவில்லை!"

"என்னைத் தெரிஞ்சி வச்சிருக்கீங்க! 

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தெரியாதது மாதிரி விசாரிச்சீங்க?"

..."அதெல்லாம் ஒரு டெக்னிக். ஆசிரியருடைய வேலையே திணிப்பது அல்ல.

உள்ளே இருப்பதை வெளியே வரவழைப்பதுதான்.

நீங்கள் விவசாயி. பூமிக்குள் இருக்கும் உணவுப் பொருளை வெளியே கொண்டுவரத்தானே நிலத்தைப்..."

"புண்டுத்திப் பண்படுத்துகிறோம்.

நீங்களும் மாணவனின் உள்ளிருக்கும் திறமையை வெளியே கொண்டுவரத்தான்

அவனைப் புண்படுத்தியாவது பண்டுத்துகிறீர்கள்."

..."Very good. இப்போ புரிந்து கொண்டீர்கள்,  நான் சம்பந்தம் இல்லாம பேசவில்லை என்று!"

"இல்லை, சம்பந்தம் இல்லாமதான் பேசினீர்கள்!"

..."ஆமாமா, நாம பேசியபோது உங்க மகன் பக்கத்தில இல்லையே!"

"வகுப்பிலேயும் இப்படித்தான் பேசுவீர்களா?"

..."எங்கே பேசினாலும் இப்படித்தான் பேசுவேன்.  இதே வாய்தானே!"

"எதாவது தப்பா பேசியிருந்தா மனசுல வச்சுக்காதிங்க. இனி இந்த மாதிரி குறுக்கே வரமாட்டேன்.  வரட்டுமா?"

"வரமாட்டேன்னு சொன்னவுடனே வரட்டுமாங்கிறீங்க?

சரி, வாங்க."

மறுநாள் வகுப்பில்.

"எல்லோரும் புத்தகங்களை மூடிவிட்டு என்னைப் பாருங்க.

இன்றைய நல்லொழுக்க வகுப்பில் ஒரு முக்கியமான விசயம்பற்றி பேசப்போகிறோம்.

மனித வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததுன்னு எல்லோருக்கும் தெரியும்.

சிலர் இந்த துன்பங்களைக் காரணம் காட்டி,

"கடவுள் இல்லவே இல்லை.

இருந்தால் துன்பங்களை வரவிடுவாரான்னு"ன்னு

கேட்கிறாங்க.

அவங்களுக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்க?

பதில் வச்சிருக்கவன் கை தூக்கு!........ஹாய் சம்பந்தம் கை உயர்ந்திருக்கு.

எங்க, பதில சொல்லு."

"சார், நமக்கு வருகிற துன்பங்கள்தான் கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம்! "

..."எப்படி?"

"சார், நீங்க வகுப்பில இருக்கிறதினாலதான சார் எங்களுக்கு அடிவிழுது! "

..."அதாவது ......?"

"சார், மாணவன் தப்பு செய்யும்போது அவன திருத்துவதற்காக ஆசிரியர் அவனை அடிக்கிறார்.

தப்பு செய்யும்போது அடி விழாவிட்டால் வகுப்பில ஆசிரியர் இல்லைன்னு அர்த்தம்."

..."அதாவது?"

"உலகத்தில. மனிதர் தவறு இழைக்கும்போது

அவர்களைத் திருத்துவற்காகத்தான்

அவர்களைப் படைத்த கடவுள்

அவர்களுக்குத் துன்பங்களை வரவிடுகிறார்.

கடவுள் நம்மீது கொண்ட அன்பின் காரணமாகத்தான்

நாம் திருந்துவதற்காக நமக்குத் துன்பங்களை அனுப்புகிறார்."

..."துன்பங்கள் வருவதால் கடவுள் இல்லை என்று கூறுபவர்கள்?"

"சிந்திக்கத் தெரியாதவர்கள்.

குடும்பத்திற்குள் கஸ்டம் வந்தால் அப்பா இல்லை என்று அர்த்தமா?

அவ்வளவுதான் எனக்குத் தெரியும்."

..."ஆனாலும், நேற்றுவரை நீ இப்படி இல்லையே!"

"நேற்று அப்பா உங்களைப் பார்த்ததாகச் சொன்னார்.

உங்களைப் பார்த்தபின் அவரும் மாறிவிட்டார்,  என்னையும் மாற்றிவிட்டார்."

..."ரொம்ப சந்தோசம்.

இப்போ எல்லோரும் கவனிங்க.

நம்மில் அநேகர்  துன்பதை நாம் செய்த பாவங்களுக்கு நமக்குக் கிடைத் தண்டனையாக நினைக்கிறோம்.

நமது முதல் பெற்றோர் பாவம் செய்தபோது பாவத்திற்குத் தண்டனையாகத்தான் துன்பங்கள் புவிக்குள் நுழைந்தன.

ஆனால் நம் மீது கொண்ட அன்பின்  காரணமாக,

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே பலியாக்கிய இயேசு

தண்டனையை ஆசீர்வாதமாக மாற்றிவிட்டார்.

தங்கள் சிலுவையைச் சுமப்பவர்கள்தான்,

அதாவது தங்களுக்கு வரும் துன்பங்களை இயேசுவுக்காக ஏற்றுக் கொள்பவர்கள்தான்

அவரது சீடர்களாக இருக்க முடியும் என்று அவரே கூறிவிட்டார்.

இப்போ ஒரு கேள்வி.

நமக்கு வரும் துன்பங்கள் கடவுள் நமக்குத் தரும் ஆசீர்வாதங்கள், எப்படி?

தெரிஞ்சவங்க கை தூக்குங்க!...

செல்வா,  சொல்லு."

"நாம் படும் துன்பங்களை

இயேசு நமக்காகப் பட்ட பாடுகளுடன் சேர்த்து 

இறைத்தந்தைக்கு ஒப்புக்கொடுத்தால்,

தந்தை நாம் கேட்கும் அருள் வரங்களைத் தருவார்.

அருள் வரங்கள் ஆசீர்வாதங்கள்தானே!

இயேசு நமக்காகப் பட்ட பாடுகளுடன்

நாம் படும் துன்பங்களையும் சேர்த்தால்  நமது துன்பங்களின் பலன் அதிகரிக்கிறது.

100 லிட்டர் பாலுடன் ஒரு தம்ளர் தண்ணீரைச் சேர்த்தால் தண்ணீரும் பாலாக மாறிவிடுறதே,

அதேபோல,

குறைந்த அளவு பலன் நமது துன்பங்களை

அளவற்ற பலனுள்ள இயேசுவின் பாடுகளுடன் சேர்க்கும்போது

அவை அளவற்ற பலனைப் பெறுகின்றன!

யானை மீது அமர்ந்து போரிடுபவன் யானைப் பலத்துடன் போரிடுகிறான்! "

..."துன்பங்களால் வேறு பயன் எதுவும் இருக்கிறதா?  லூயிஸ்!"

"இயேசு தன் பாடுகளை நமது 
பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்தார்.

நாமும் நமது துன்பங்களை இயேசுவின் பாடுகளோடு சேர்த்து

நமது மற்றும் உலகின்
பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கலாம்."

..."துன்பங்களைப் பாவப்பரிகாரமாக ஒப்புக்கொடுத்தால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் நமது வேதனை குறையும்.

ஆகவே, மாணவர்களே, துன்பங்கள் வரும்போது நாம் வருந்தக்கூடாது,

மாறாக, மகிழ்ச்சி அடையவேண்டும்.

இயேசுவின் பாடுகளில் நமக்கும் ஒரு பங்கு தந்தமைக்காக அவருக்கு  நன்றி கூறவேண்டும்.''

"ஆனால்,  சார், அதை யாரும் செய்வதில்லையே.

'தந்தையே, உம் திருமகனின் பாடுகளைப் பார்த்து என் கஸ்டங்களை நீக்கியருளும்'

என்றுதானே வேண்டுகிறோம்!"

..."அப்படி வேண்டுவதில் தப்பு ஏதும் இல்லை.

ஆனாலும் ஏற்றுக்கொண்டால் அதற்குரிய பலனை அடைவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment