Monday, August 5, 2019

வாழ்வு நூலில் இடம் பெறுவோம் , விண்ணக வாழ்வடைவோம்.

வாழ்வு நூலில் இடம் பெறுவோம் , விண்ணக வாழ்வடைவோம்.
*          *        *    *      *      *          *

"ஒரு சின்னப் பிரச்சனை. நேற்று டாக்டர் மருந்து சீட்டு ஒண்ணத் தந்து,

'இத வாங்கிச் சாப்பிட்ட பிறகு சாப்பிடுங்க'ன்னு சொன்னாரு.

நான் மருந்த வாங்கிட்டேன். இப்போ என்ன செய்றதுன்னு தெரியல."

..."இது ஒரு பிரச்சனையா? சாப்பிட வேண்டியதுதானே! "

"அதுதாங்க பிரச்சனையே."

..."எது? சாப்பிடறதா?"

"டாக்டர் 'சாப்பிட்ட பிறகு சாப்பிடுங்க'ன்னு சொன்னாரு.

எதச் சாப்பிட்டபிறகு எதச் சாப்பிட?

மாத்திரையைச் சாப்பிட்டபிறகு
உணவைச் சாப்பிடவா?

உணவைச் சாப்பிட்டபிறகு மாத்திரையைச் சாப்பிடவா?"

..."வழக்கமா காலையில என்ன சாப்பிடுவ? அத முதல்ல சாப்பிடு.
அப்புறம் மாத்திரையைச் சாப்பிடு."

"சாப்பிட்டுவிட்டேன். மாத்திரையைச் சாப்பிடணும்.

ஏங்க, இதில வச்சிருந்த மாத்திரையை எங்க?"

..."மாத்திரையை எங்கவச்ச"

"உங்க மேசையில் இந்தப்பக்கம் வச்சிட்டு சாப்பிடப்போனேன்.

இங்க மாத்திரையைக் காணல."

..."அடி பாவி, அது மாத்திரையா?
சொல்லிட்டுப் போயிருக்கலாம்லா?"

"ஏன்? "

..."சொல்லிட்டுப் போயிருந்தா நான் எடுத்துச் சாப்பிட்டிருக்க மாட்டேன்."

"என்னது?  நீங்க எடுத்துச் சாப்பிட்டீங்களா?  அது தலைவலி மாத்திரைங்க!"

..."நான் என்னத்தக் கண்டேன்.   பெப்பர்மின்ட் மாதிரி தெரிஞ்சது. எடுத்து வாயில போட்டுவிட்டேன்.

பெப்பர்மின்ட் மாதிரிதான இனிச்சுது!  நல்லா உதப்பி இப்பதான் விழுங்கினேன்.

வேற மாத்திரை இல்லையா?"

"இல்லைங்க. ஒரு மாத்திரைதான் வாங்கினேன்.

தலைவலியே இல்லாதவங்க தலைவலி மாத்திரை சாப்பிட்டா ஏதாவது பிரச்சினை வந்திருங்க.

Side effects இல்லாத.  மாத்திரையே கிடையாதுங்க."

..."இப்போ என்ன ஆகும்னு பயப்படுற?

கூடப்போனா உயிர் போகும், அவ்வளவுதான."

"ஐயைய்யோ! அப்படியெல்லாம் சொல்லாதீங்க! நீங்க நூறாண்டு காலம் உயிர்வாழணும்."

..."அட மக்கு.

உயிர்போனால்தான்,

நிலை வாழ்வு,

அதாவது

நித்திய வாழ்வு

வாழ முடியும்."

"அது எனக்கும் தெரியும்.

நமது பெயர் ஏற்கனவே வாழ்வு நூலில் (Book of life) எழுதப்பட்டிருக்கும்.

நாம் நிலைவாழ்வுக்குள் நிழையப்போவது உறுதி.

அது எப்போது என்று நமக்குத் தெரியாது.

ஆனால் நித்திய காலமாகவும்
நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்குத் தெரியும்."

."அம்மா! "

"நீ எப்போதுடா வந்த?"

..."நீ 'வாழ்வு நூலில்  எழுதப்பட்டிருக்கும்'னு சொல்லும்போதே வந்து விட்டான்."

."அது என்னம்மா 'வாழ்வு நூல்'?"

"நாம் யாருன்னு நாம் பிறந்த பிறகே நமக்குத் தெரியும்."

."அது எனக்கும் தெரியும். எனக்குத் தெரியாததத் சொல்லித் தாங்கம்மா."

"நான் டீச்சர். நீ மாணவன். குறுக்ககுறுக்க பாயாமல் பாடத்தைக் கவனி.

சந்தேகம் இருந்தால் மட்டும் கேளு, சரியா?"

"சரிம்மா. அப்பா நீங்களும் மாணவன்தான்.

குறுக்ககுறுக்க பாயாமல் பாடத்தைக் கவனிங்க."

..."அம்மா பேசும்போது என்னால குறுக்கே பேச முடியுமா?"

"ஏங்க, நக்கலா?"

..."சும்மா சொன்னேன். நீ சொல்லு."

"நாம் வாழும் இந்த உலகம் கால வரையறைக்கு உட்பட்டது.

இதற்கு துவக்கமும்,முடிவும் உண்டு.

நாம் வாழும் காலத்தை கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்றாகப் பிரிக்கிறோம்.

ஆனால் கடவுள் காலங்களைக் கடந்தவர்.

துவக்கமும் முடிவும் இன்றி நித்தியமாக வாழ்பவர்.

இந்த உலகத்திற்கு துவக்கம் இருந்தாலும்

அது நித்தியகாலமாக ideaவாக கடவுளின் உள்ளத்தில் இருந்தது.

அவர் உலகைப்பற்றியும், அதில் வாழும் நம்மைப் பற்றியும் நித்தியத்திலிருந்தே திட்டம் தீட்டினார்.

இத்திட்டத்தை நாம் 'இறைவனின் நித்தியத் திட்டம் (Eternal plan of God) என்று அழைக்கிறோம்.

இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும்  இறைவனின்  திட்டப்படிதான் இயங்குககின்றது.

நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் இறைவனின் திட்டப்படிதான் நடக்கிறது.

இப்போ உனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கணுமே.

வராவிட்டால் நீ பாடத்தைக் கவனிக்கவில்லை என்று அர்த்தம்."

"சந்தேகமே வராவிட்டால் ஒருவன் ஒன்று அதிமேதையாய் இருக்கவேண்டும்.

அல்லது அடிமுட்டாளாய் இருக்க வேண்டும்.

எல்லாம் இறைவன் திட்டப்படி நடந்தால்

நாம் செய்கிற எந்த செயலுக்கும் நாம் பொறுப்பில்லையே!

அப்புறம் நாம் எப்படிப் பாவம் செய்ய முடியும்?"

"நீ +2 முடித்தவுடன் உனது எதிர்கால மேற்படிப்பு குறித்துத் திட்டமிட உன் அப்பாவும் நானும் உன்னோடு உட்கார்ந்து கலந்து பேசியது ஞாபகம் இருக்கா."

."நல்லா ஞாபகம் இருக்கு."

"அப்ப உன் அப்பா என்ன சொன்னார்."

." 'உன் எதிர்கால ஆசைளைக்கூறிவிடு.

அவற்றை மையமாய் வைத்துதான் உன் எதிர்காலத்தைக் குறித்துத் திட்டமிட வேண்டும்' என்று சொன்னார்.

நானும் கூறினேன்.

அதன்படிதான் அப்பா திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்."

"அதே போல்தான் நம் விண்ணகத் தந்தையும் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்.

யாரையும் 'இவன் மோட்சத்திற்குப் போகவேண்டும்,

இவன் நரகத்திற்குப் போகவேண்டும் என்று திட்டமிட்டுப் படைக்கவில்லை.

அதைத் தேர்ந்தெடுப்பது நாம்தான்.

நம்மைப் படைக்கும்போது நம்மை முழுச்சுதந்திரத்தோடு படைத்தார்.

God created us with full freedom of choice and action.

நமது சுதந்திரத்தைச் சரியாகப் பயன்டுத்த வேண்டிய அருள்வரங்களைத் தருகிறார்.

He gives us enough and more  actual grace to help us to make the right choice.

ஆனால் நமது சுதந்திரத்தில் அவர் குறிக்கிடுவதில்லை.

நமது சுதந்திரத்தைச் சரியாகப்  பயன்படுத்தி அவரது சித்தப்படி நடந்தால் உறுதியாக இரட்சண்யம் அடைவோம்.

இரட்சண்யம் பெற வேண்டிய அருள் வரங்களை கடவுள் தருகிறார்.

அவற்றைப் பயன்படுத்த வேண்டியது மட்டுமே நமது வேலை.

இரட்சண்யம் உறுதி.

கடவுளது ஞானம் அளவற்றது.

நாம் நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவோம் என்று நித்திய காலமாகவே இறைவனுக்குத் தெரியும்.

அவரது அருள்வரத்தின் உதவியால்

நாம்  இரட்சண்யம் அடைவது உறுதியானால்

நமது பெயர் அவரது  முன்னறிவில்  (Foreknowledge) இருக்கும்.

அவரது ஞானத்தின் முன்னறிவையே விவிலியம் 'வாழ்வு நூல்' ( Book of life) என்று உருவகமாகக் (Metaphorically) கூறுகிறது.

'ஆனால் மாசுபட்டது எதுவும் அதனுள் நுழையாது. அருவருப்பானதும் பொய்யானதும் செய்பவர்கள் அங்கு நுழைவதில்லை.

செம்மறியானவர் வைத்திருக்கும் வாழ்வு நூலில் எழுதப்பட்டிருப்பவர் மட்டுமே அங்குச் செல்வர்.'(திருவெ.21:27)

கடவுளின் அருள்வரங்களை ஏற்று,

அதன்படி வாழ முடிவெடுத்து,

அதன்படி வாழ்வோர்

இயேசுவின் வாழ்வு நூலில் நித்திய காலமாகவே இருக்கிறார்கள்.

அவர்கள் இயேசுவால் இரட்சண்யத்திற்காக முன் குறிக்கப் பெற்றோர். (Predestined for salvation)

கடவுளின் நித்திய திட்டம்
தன்னிச்சையான (arbitrary)   திட்டமல்ல.

அவருக்கு தம் வாழ்க்கையை அர்ப்பணித்து,

தங்கள் முழுச்சுதந்திரத்தைப் பயன்டுத்தி,

அவருக்காகவே வாழ்கின்றவர்களைக் கருத்திற்கொண்டு

அவர்களது இரட்சண்யத்துக்காகப்

போடப்படும் திட்டம்.

நாம் எப்படிச் சுதந்திரமாகச் செயல்படுவோம்

என்று அவருக்கு முன்னரே தெரியுமாகையால்

நம் நன்மையைக் கருத்திற்கொண்டு
போடப்படும் திட்டம்.

கடவுள் மாறாதவர், தன் நித்திய திட்டத்திலிருந்து மாறமாட்டார்.

அதனால்தான் நாம் அவரை முற்றிலும் நம்புகிறோம்.

நாம் இரட்சண்யம் அடைய மூன்று புண்ணியங்கள் அத்தியாவசியமானவை.

1.விசுவாசம்.

கடவுள் உண்மையானவர் என்பதால் அவரை விசுவசிக்கிறோம்.

2.நம்பிக்கை.

அவர் கொடுத்த வார்த்தையிலிருந்து மாறாதவர் என்பதால் அவரை முற்றிலும் நம்புகிறோம்.

3.தேவசிநேகம்.

அவர் நமது தந்தை என்பதால் அவரை நேசிக்கிறோம்."

."ஒரு விசயம் நன்கு புரிகிறது.

நம்மைக் கேளாமலேயே நம்மைப் படைத்த கடவுள்

நமது  ஒத்துழைப்புடன்தான் நம்மை இரட்சிக்கிறார்."

"ஏங்க, நீங்க எதுவுமே சொல்லல?"

..."இது என்னுதுன்னு தெரியுதா?"

"இதுதான் நான் சாப்பிடவேண்டிய தலைவலி மாத்திரை.  இத நீங்க சாப்பிட்டு விட்டதா சொன்னீங்க!"

..."எனக்கென்ன பைத்தியமா தலைவலி மாத்திரையைச் சாப்பிடறதற்கு?

எடுத்து ஒழிச்சி வைத்திருந்தேன்."

"ஏங்க?"

..."வலி மாத்திரைகளைச் சாப்பிடுறது உடம்புக்குக் கெடுதி.

அதிகம் சாப்பிட்டால் கிட்ணியைப் பாதிக்கும். அதனால்தான் ஒழிச்சி வைத்தேன்.

இப்போ தலைவலி இல்லெல்லா?"

"இல்ல."

..."தலைவலி வந்தா யாரிடமாவது ஆண்டவரைபற்றி பேசு.

பேச ஆள் கிடைக்காட்டா
கொஞ்சம் ஓய்வெடு.

தலைவலி தானா போயிடும்."

"அம்மா,  இது வரை அப்பா நீங்க சொன்னத கேட்கல. உங்க மாத்திரைக்குக் காவலுக்கு இருந்திருக்காரு."

"அது எனக்காகத்தான!"

..."கடவுளுக்காக.

மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் செய்கிற சேவை

கடவுளுக்கு செய்கிற சேவை.

கடவுளுக்காகத் தன் அயலானுக்கு சேவை செய்பவனுக்கு வாழ்வு நூலில் கட்டாயம் இடம் உண்டு!"

"அம்மா,நாம பேசிக்கிட்டு இருக்கும்போது அப்பா பேசாம காரியம் சாதிச்சிட்டார் பார்த்தீங்களா!"

"இறைப்பணி புரிவோம், வாழ்வு நூலில் இடம் பெறுவோம்."

"அம்மா, தங்கள் சுதந்திரத்தைத் தவறாக, இறைவனுக்கு எதிராகப்  பயன்படுத்துபவர்கள்?"

"அவர்களுக்கு வாழ்வு நூலில் இடமில்லை.

"வாழ்வு நூலில் பெயர் எழுதப்பட்டிராத எவனும் இந்நெருப்புக் கடலில் எறியப்பட்டான்."
(திருவெ.20:15)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment