Monday, May 2, 2022

"நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்."(அரு.14:7)

"நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்."
(அரு.14:7)

அரு.14:7 முதல்17 வரையிலான வசனங்களைக் கூர்ந்து கவனத்து வாசித்தால்

இயேசு தன்னைப் பற்றிய முக்கிய இறையியல் உண்மையை தனது சீடர்களுக்கு வெளிப் படுத்தியிருப்பது (Revealed) தெரியும்.

அவராகவே சொல்லா விட்டால் யாராலும் அவரைப் பற்றி எதுவும் அறிய முடியாது.

"நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். 

இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தவர்களாய் இருக்கிறீர்கள், அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்." (7)

"என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான்."(9)

"நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா?"(10)

"நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார்."(11)

"நானும் தந்தையைக் கேட்பேன்: தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்:"(16)

"நீங்களோ அவரை அறிவீர்கள்: ஏனெனில், அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்."
(17)

இந்த வார்த்தைகளின் மூலம் இயேசு பரிசுத்த  தம திரித்துவத்தின்  இரகசியத்தை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

"என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான்."(9)

இயேசுவைப் பார்க்கும்போது தந்தையை பார்க்கிறோம்.

இயேசு மகன்.

மகனைப் பார்க்கும்போது தந்தையை பார்க்கிறோம் என்றால் இருவரும் ஒருவரே என்பது புரியும்.

மகன் ஒரு ஆள்.
தந்தை ஒரு ஆள்.

இரண்டு ஆட்களும் ஒரே கடவுள்தான்.

இதை விளக்கி விட்டு மூன்றாவது ஆளைக் குறிப்பிடுகிறார்.

"தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்:"(16)

"நீங்களோ அவரை அறிவீர்கள்: ஏனெனில், அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்."

அதாவது,

"தந்தை பரிசுத்த ஆவியை அனுப்புவார். அவரை உங்களுக்கு தெரியும். அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்."

பரிசுத்த ஆவியை பற்றி யாருக்கும் சுயமாக எதுவும் தெரியாது.

இயேசு தனது சீடர்களிடம்  சொல்கிறார்,

"அவரை உங்களுக்கு தெரியும். அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்."

அதாவது 

உங்களுக்கு தெரிந்தவர் நான்தான். நான் உங்களோடு தங்கியிருக்கிறேன், 

அதாவது 
பரிசுத்த ஆவி உங்களோடு தங்கியிருக்கிறார்.

அதாவது 

நானும் பரிசுத்த ஆவியும் ஒருவரே."

மகனும் தந்தையும் ஒருவரே,

 மகனும் பரிசுத்த ஆவியும் ஒருவரே,

 அதாவது தந்தையும், மகனும், பரிசுத்த ஆவியும் ஒருவரே.

 தந்தை ஒரு ஆள்,

 மகன் ஒரு ஆள்,

 பரிசுத்த ஆவி ஒரு ஆள்,

 மூவரும் மூன்று ஆட்கள், ஆனால் ஒரே கடவுள்.

மகனைப் பார்க்கும்போது எந்த கடவுளைப் பார்க்கிறோமோ

 அதே கடவுளைத்தான் தந்தையை பார்க்கும்போதும்,

 பரிசுத்த ஆவியைப்
 பார்க்கும்போதும் பார்க்கிறோம்.


ஆட்கள் மூவர், கடவுள் ஒருவர்.

ஆட்கள் தனித் தனி.

தந்தை, மகன், பரிசுத்த ஆவி வெவ்வேறு ஆட்கள்.
ஆனால் ஒரே கடவுள்.

மனிதனாய் பிறந்தது மகன் மட்டுமே.

தந்தை மனித உரு எடுக்கவில்லை.

பரிசுத்த ஆவி மனித உரு எடுக்கவில்லை.

ஆனால்,

மகன் கடவுள், 
ஆகவே,

கடவுள் மரியாளிடம் மனித உரு எடுத்தார்.

கடவுள் மரியாளின் மகனாய் பிறந்தார். ஆகவே தான் மரியாளைக் கடவுளின் தாய் என்கிறோம்.

கடவுள்தான் நற்செய்தி அறிவித்தார்.

 கடவுள்தான் பாடுகள் பட்டார்.

 கடவுள்தான் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

 கடவுள்தான் மனிதன் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

கடவுளுக்கு  துவக்கமும் முடிவும் இல்லையே,

கடவுள் கஷ்டப்பட முடியாதே,

பிறகு எப்படி பாடுகள் பட்டு மரிக்க முடிந்தது?

பிறந்து வளர்ந்து பாடுகள் பட்டு மரிப்பதற்காகத்தான் 

தேவ சுபாவத்தில் கஷ்டப்பட  முடியாத  இறைமகன்

கஷ்டப்படக் கூடிய  மனிதனாய்ப் பிறந்தார்.

மரியாளின் வயிற்றில் மனித
 உரு எடுத்த வினாடியிலிருந்து,

இறைமகனுக்கு இரண்டு சுபாவங்கள், தேவ சுபாவம், 
மனித சுபாவம்.

அதாவது, ஆள் ஒன்று, சுபாவங்கள் இரண்டு.

இறைமகன் தனது மனித சுபாவத்தில் நமக்காகப் பாடுகள் பட்டு மரித்தார்.

திவ்ய நற்கருணை கடவுளும், மனிதனுமாகிய இறைமகன்.

திவ்ய நற்கருணையை உணவாக நாம் வாங்கும்போது நம்மைப் படைத்த கடவுளையே உணவாக வாங்குகிறோம்.

கடவுளே நம்முள் வரும்போது நமது உள்ளம் பாவமாசின்றி இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment