Sunday, February 18, 2018

முன்னுரிமை எதற்கு? மக்களுக்கா? அல்லது......?

முன்னுரிமை எதற்கு? மக்களுக்கா?  அல்லது......?
+---------------+--+------------------------+

"அப்பா, என்னை நேசிக்கிறீகளா?''

''ஏன் இந்த சந்தேகம்?''

"நான் உங்கள் பிள்ளைதானே.

என்னோடு எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?

நான் எழுமுன்னே எழுகிறீர்கள்.

வேலை என்று போய்விட்டு, நான் படுத்த பின் திரும்புகிறீர்கள்.

வேலையைப் பார்க்க நேரம் இருக்கிறது.

என்னைப் பார்க்க நேரமில்லை."

"வேலை பார்ப்பது உனக்காகத்தானே.

பணம் இல்லாவிட்டால் உன்னை எப்படி வளர்க்க முடியும்? 

வேலை பார்க்காவிட்டால் எப்படி பணம் சம்பாதிக்க முடியு? "

"வேலை பார்க்க வேண்டாம், பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.

உங்கள் மகன்,  உங்கள் வேலை- இரண்டில் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள், 

எனக்கா? 

வேலைக்கா?

அதாவது

எனக்காக வேலையா?

வேலைக்காக நானா?

நீங்கள் கட்டடங்கள் கட்டலாம்,

பள்ளிக்கூடங்கள் கட்டலாம்,

அவற்றை நிர்வாகம் செய்யலாம்,

உங்களது நிர்வாகத் திறமையை உலகமே போற்றலாம்,

ஆனால்,

உங்கள் பிள்ளைகளைக் கவனிக்காவிட்டால்

மற்றதெல்லாம் வீண்."

"நீ சொல்வது புரிகிறது. ஆனால்..."

"ஆனால் போட்டுவிட்டாலே ,  அதற்கு முன்சொன்னது அடிபட்டு விட்டது.

நீங்கள் மட்டுமல்ல உலகில் அநேக அப்பாக்கள்,   உங்கள மாதிரிதான.

பிள்ளைகளைவிட 'பிள்ளைகளுக்காக'வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

பிள்ளைகளுக்காக இலட்சக்கான ரூபாய் செலவழித்து வீடு கட்டுவார்கள்.

கவனிப்பாரற்ற பிள்ளைகள் ஊர் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

உண்பதற்கு நிறைய உணவு வகைகள் சேர்த்து வைத்திருப்பார்கள்,

கவனிப்பாரற்ற பிள்ளைகள் நோய் காரணமாக சாப்பிட முடியாது திண்டாடுவார்கள்.

பிள்ளைகளுக்காகவென்று
வட்டிக்கு கடன்வாங்கிச் செலவழித்திருப்பார்கள்.

கடன் சுமை பிள்ளைகள் மேல்தான் விழும்...."

"புரிகிறது. நான் இப்போ என்ன செய்ய வேண்டும்?"

"எங்களை அன்பு செய்தால் மட்டும் போதாது.

அன்பினைப் பகிர்ந்து கொள்ள,

எங்களோடு உரையாட,

எங்கள் சுக துக்கங்களைத் தெரிந்து கொள்ள,

எங்களுக்கு ஆறுதல் கூற,

எங்களை உற்சாகப்படுத்த

நேரம் ஒதுக்க வேண்டும்.

'வீடு' கட்டடத்தைக் குறிக்காது, 

அதில் வாழும் குடும்பத்தைக் குறிக்கும்.

குடும்பத்தின் மகிழ்ச்சி அது வாழும் கட்டடத்தின் Sizeஐப் பொறுத்து அமையாது.

குடும்த்தினரிடையே நிலவும் அன்புறவைப் பொறுத்தே அமையும்.

எங்களுக்காக பெரிய பெரிய வீடு கட்ட வேண்டாம்.

எங்களுக்குத் தேவை உங்களுடைய அன்பான பராமரிப்புதான்.

உங்களுடைய மக்கள், வேலை - இவ்வவிரண்டில் நீங்கள் முன்னுரிமை கொடுக்கவேண்டியது மக்களுக்குதான்.

இது எல்லா அப்பாக்களுக்கும், (Fathers)
பொருந்தும்."

"சரிப்பா. எனக்கு நீதான் முக்கியம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment