"இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்."
(மாற்கு.7:36)
*************************************
செவிடனும் திக்குவாயனுமாகிய ஒருவனை இயேசு குணமாக்கியபின்,
"இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்" என்று கட்டளையிட்டார்."
எவ்வளவுக்கு அவர் கட்டளையிட்டாரோ, அவ்வளவுக்கு அதிகமாய் அவர்கள் அதை விளம்பரப்படுத்தினர்.
இந்த புதுமையில் மட்டுமல்ல, வேறு அநேக குணமாக்கும் புதுமைகளிலும் இதேபோல்தான் யாருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டாலும் குணமானோர் அதை விளம்பரப் படுத்திக்கொண்டுதான் இருந்தார்கள்.
குணமான விபரத்தை ஏன் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார்?
காரணத்தை இயேசு சொல்லவில்லை.
ஆனால் நம்மால் யூகிக்கமுடியும்.
1.இயேசு பாவிகளைத் தேடியே உலகிற்கு வந்தார்.
பாவிகளை மனந்திருப்பவும், அவர்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே பலியாக்கவும்தான் அவர் மனிதன் ஆனார்.
வியாதியஸ்தர்களைக் குணமாக்குவதற்காக மனிதனாகவில்லை.
2.பாவிகளை மனம் திருப்புவதற்கான நற்செய்தி அறிவிப்பின்போது அவர் சந்தித்த நோயாளிகளை இரக்கத்தின் காரணமாகக்
குணமிக்கினார்.
3.நோயாளிகளைக் குணமாக்கியது அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்த,
விளம்பரத்திற்காக அல்ல.
4. வியாபார நோக்கோடு மருத்துவ மனை நடத்துபவர்கள்தான் தங்கள் சேவைகளை விளம்பரம் செய்வார்கள்.
இயேசு செய்தது அன்புப் பணி.
இயேசு 'யாரிடமும் கூற வேண்டாம்' என்று கட்டளை இட்டிருந்தும்கூட பயன் பெற்றவர்களால் தங்கள் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிராமல் இருக்கமுடியவில்லை.
ஆயினும் இயேசு விளம்பரத்தை விரும்பவில்லை.
இயேசுவிடம் உள்ளதெல்லாம் அன்பு, அன்பு, அன்பு,அன்பு, அன்பு, அன்பு, அன்பு, அன்பு, அன்பு,அன்பு, அன்பு, அன்பு மட்டுமே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment