Tuesday, February 13, 2018

உமது சித்தம் எமது பாக்கியம்.

உமது சித்தம் எமது பாக்கியம்.
**********************************

"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" (மாற்கு1:40)(தொழுநோயாளி)

"விரும்புகிறேன், குணமாகு."
(இயேசு)

இது ஒரு வித்தியாசமான செபம்.

வழக்கமாக நாம் செபிக்கும்போது நமது  வேண்டுதலுக்கு முதலிடம் கொடுப்போம்.

கடவுளின் சித்தத்தைப்பற்றிக் கவலைப்படவே மாட்டோம்.

ஆனால்  இங்கு தொழுநோயாளி

முதலில் இயேசுவின் விருப்பத்தை வைத்து

இரண்டாவதுதான் தன் வேண்டுதலை வைக்கிறான்.

1." விரும்பினால்" - இயேசுன் சித்தம்.

2. "என்னைக் குணமாக்க" - வேண்டுதல்.

இத்தகைய செபம் இயேசுவுக்கு மிகவும் பிடித்தமானது.

"தந்தையே, உமக்கு விருப்பமானால்,

இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: "

தனது பாடுகள் ஆரம்பிப்பதற்கு சற்று முன் இயேசு சொன்ன
செபம்.

தான் பாடுபட வேண்டுமென்பதுதான் தந்தையின் சித்தம்  என்பது இயேசுவுக்குத் தெரியும்.

தான் மனிதனாய்ப் பிறந்ததே பாடுபடத்தான் என்பதும் அவருக்குத் தெரியும்.

பின் ஏன் இவ்வாறு செபித்தார்?

அவர் மனிதனாய்ப் பிறக்கும்போதே பாவத்தைத் தவிர மற்ற எல்லா மனித பலகீனங்களையும் ஏற்றுக்கொண்டுதான் பிறந்தார்.

வலியைக் கண்டு பயப்படுவது மனித பலகீனம்.

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகவே சர்வ வல்லப கடவுள்  பலகீனமான மனித சுபாவத்தை ஏற்றுக்கொண்டார்.

நமக்காக நமது சுபாவத்தை ஏற்றுக்கொண்ட கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?

சொல்ல வேண்டும்.

எப்படிச் சொல்ல?

அவருக்காக அவரது சித்தத்தை ஏற்றுக் கொள்வதின் மூலம் நமது நன்றியைத் தெரிவிப்போம்.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே மகன் மனிதன் ஆனார்.

இயேசுவின் சித்தத்தை நிறைவேற்றவே நாம் அவரது சீடரானோம்.

வேண்டும்போது இறைவனின் சித்தத்திற்கு முதலிடம் கொடுப்போம்.

"அன்புத் தந்தையே,

உம்முடைய சித்தம்

பரலோகத்தில்

செய்யப்படுவதுபோல

பூலோகத்திலும்

செய்யப்படுவதாக."

                                                             

"இயேசுவே,

எங்கள் வாழ்வில்

என்ன நேர்ந்தாலும், 

உமது சித்தம்

எமது பாக்கியம்.

ஆமென்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment