Thursday, February 15, 2018

"அவர்கள் எல்லாரையும் பார்த்து, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." (லூக்.9:23)

"அவர்கள் எல்லாரையும் பார்த்து, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(லூக்.9:23)

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::;:::::::::::::

உழைப்பு இல்லாவிட்டால் ஊதியம் இல்லை.

சிலுவை இல்லாவிட்டால் சேசு இல்லை.

மரணம் இல்லாவிட்டால் உயிர்ப்பு இல்லை.

நாம் இயேசுவின் சீடர்கள்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

அப்படியானால் நம்மில்  இயேசு வாழவேண்டும்.

நம்மில் வாழும் இயேசுவை நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.

We must reflect Jesus in our life.

இயேசு தன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே மனிதன் ஆனார்.

இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதே நம் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

"மனுமகன் பாடுகள் பல படவும். மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்"
(லூக்.9:22)

"முதலில் அவர் மிகவும் பாடுபட்டு இந்தத் தலைமுறையால் புறக்கணிக்கப்பட வேண்டும்."(லூக்.9:25)

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(லூக்.9:23)

ஆக, தான் பாடுபட வேண்டும் என்று அறிவித்த இயேசு தன்னைப் பின்ற்றுபவர்களும் பாடுபட வேண்டும் என்று கூறுகிறார்.

இயேசு பாடுபட்டு,  அதாவது,  துன்பங்கள் அனுபவித்து சிலுவை மரத்தில் உயிரை விட்டதால், நமது வாழ்வில் வரும் துன்பங்களை 'சிலுவை' என்று அழைக்கிறோம்.

'தன் சிலுவையை' என்று இயேசு கூறியுள்ளார்.

அவரவர் சுமப்பதற்கென்று சிலுவை பல ரூபங்களில் தினமும் வரும்.

வியாதிகள்  ரூபத்திலோ,

உறவினர்      ரூபத்திலோ,

பணியின்     ரூபத்திலோ,

இருப்பிட      ரூபத்திலோ

சிலுவை வரலாம்.

எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஆண்டவருக்காகவும், நமது பாவங்களுக்குப் பரிகாரமாகவும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசு மனித குலத்தின் பாவங்களை எல்லாம் சிலுவையாய் ஏற்றுச் சுமந்தார்.

நாம் குறைந்தபட்சம் நமது சிலுவையை சுமக்க வேண்டும்.

நல்ல மனதிருந்தால் மற்றவர்களின்சிலுவையையும்சுமக்க அவர்கட்கு உதவலாம்.  

நமது வாழ்வில் துன்பங்கள் வரும்போது அவற்றிலிருந்து நம்மையே விடுவித்துக்கொள்ள முயல்வதும், விடுவிக்க இறைவனிடம் வேண்டுவதும் தவறு இல்லை.

இயேசுவே ''தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.

ஆயினும் அதையும் மீறி துன்பங்கள் தொடர்ந்தால் அது இறைவனின் சித்தம் என்பதை ஏற்று, அவருக்கு அவற்றை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

துன்பங்களை இறைவனின் சித்தம் என்று ஏற்று இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தால் நாம் இயேசுவைப் போலாகிறோம்.

துன்பங்கள் வரும்போது அவற்றை எதாவது கருத்திற்காக இறைவனிடம் ஒப்புக்கொடுத்தால் சக்தி வாய்ந்த செபமாக மாறுகின்றன.

வீட்டில் குப்பைகள் சேர்வது இயற்கை. 

பயனற்றவையாய்த் தோன்றும் குப்பைகளை ஏதாவதொரு தாவரத்திற்கு அருகே மண்ணில் புதைதத்து வைத்தால் அவை சக்தி வாய்ந்த உரமாக மாறி,  நமக்கு காயாகவோ, பழமாகவோ திரும்பக் கிடைக்கின்றன.

குப்பை உணவாக மாறுவதுபோல்,  துன்பமும் செபமாக மாறும் இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கப் படும்போது.

இயேசு தன் சிலுவைப் பாதையை நமது இரட்சண்யப் பாதையாக மாற்றியது போல நாம் நமது துன்பங்களை ஆன்மீக உணவாய் மாற்ற முடியும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியதுதான்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன்,

''இறைவா எனது இன்றைய துன்பங்களை

எனது பாவங்கழுக்குப் பரிகாரமாக/

எனது பிள்ளைகளின் ஆன்ம, சரீர நலன்களுக்காக/

பங்குத் தந்தையின் கருத்துகட்காக/ 

தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் வெற்றிக்காக/.......

உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்."

என்று செபிப்போம்.

நமது துன்பம் நன்மையாக மாறும்.

லூர்து செல்வம்.



No comments:

Post a Comment