அன்புக்கு அடிமை.
***********************************
மாறிக்கொண்டே இருப்பது மனித சுபாவம்.
By nature man is subject to change.
குழந்தையாய்ப் பிறந்து, சிறுவன், பையன், வாலிபன், கிழவன் என்று பல மாற்றங்களை அடைந்து இறுதியில் இறப்பவன் மனிதன்.
உடலளவில் மட்டுமல்ல குணத்தில்கூட மாறுகிறான்.
நல்லவன் கெட்டவன் ஆகிறான்,
கெட்டவன் நல்லவன் ஆகிறான்.
குணத்தின் தன்மை நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் கடவுள் மாறாதவர்.
நாம் கடவுளைப் பற்றிப் பேசும்போது அவர் மீதும் மாற்றங்களை ஏற்றி விடுகிறோம்.
உதாரணத்திற்கு,
"கடவுள்....ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்."
கடவுளால் ஓய்வு எடுக்க முடியாது.
ஓய்வு நாளின் முக்கியத்துவத்தை நாம் அறிய கடவுளே ஓய்வு எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
"கடவுள், இவ்வுலகில் மனிதனைப் படைத்து குறித்து வருந்தினார்."
கடவுளால் வருந்த முடியாது.
மனிதனைப் படைத்தது கடவுளின் திட்டம். அது எப்படி தவறாக முடியும்?
நமது பாவங்களின் கனாகனத்தை நமக்கு உணர்த்த இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
உண்மையில்
கடவுளால் மாற முடியாது ,
வருந்த முடியாது,
கோபப்பட முடியாது,
வெறுக்க முடியாது.
சர்வ வல்லபரான அவரால் அன்பு செய்யவும் அன்பு சார்ந்த காரியங்களைச் செய்யவும் மட்டும் முடியும்.
ஏன் கடவுளால் மாற முடியாது ?
நிறைவற்றவர் (Imperfect people) களால் மட்டுமே
நிறைவை நோக்கியோ ( வளரவோ) ,
அதற்கு எதிர்மறையாகவோ மாற (தேயவோ) முடியும்.
கடவுள் அவருடைய எல்லா பண்புகளிலும் நிறைவானவர்.
அவர் நித்தியர்.(Eternal) அதாவது, துவக்கமும், முடிவும் இல்லாதவர்.
அழவற்ற ஞானம்(Wisdom) உள்ளவர்.
சர்வ வல்லபர்.(Almighty)
அன்பு மயமானவர்.(He is love.)
நீதி(Justice) உள்ளவர்.
இப்பண்புகளுக்கு எதிர்மறையான பண்புகள் அவரிடம் இருக்க முடியாது.
துவக்கமும், முடிவும் இல்லாதவராய் இருப்பதால், மனித முறையிலான காலங்களைக் கடந்தவர்
அதாவது இறந்த காலமும், எதிர்
காலமும் இல்லாதவர்.
அவர் இருக்கிறவர்.
ஆகவே வயது கிடையாது.
அவர் எல்லாம் அறிந்தவர்.
நமது கணக்குப் படியிலான இறந்த கால நிகழ்ச்சிகளும், எதிர் கால நிகழ்ச்சிகளும் இறைவனைப் பொறுத்த மட்டில் நிகழ்கால நிகழ்ச்சிகள்தான்.
உதாரணத்திற்கு,
உலகம் உண்டானது முதல் இன்றைய நாள் வரை பல கோடி ஆண்டுகள் கடந்துவிட்டன.
இறைவனின் நித்திய கணக்குப்படி காலம் எதுவும் கடக்கவில்லை.
ஏனெனில் இறைவன் காலங்களுக்கு அப்பாற்பட்டவர்.
இறைவன் அளவற்ற ஞானம் உள்ளவர்.
நமது கணக்குப்படியான எல்லா கடந்த கால நிகழ்ச்சிகளும், எதிர் கால நிகழ்ச்சிகளும் கடவுளுக்கு நித்தியகாலமாகவே தெரியும்.
இவ்வுலகின் சடப்பொருட்கள் யாவும்(All the material things) அவர் வகுத்த இயற்கை விதிகள் படியே இயங்குகின்றன.
ஆனால் மனிதனுக்கு அவர் வகுத்துக் கொடுத்த ஒழுக்க நெறிகளை மனிதன் மீறி நடக்கிறான்.
நித்திய காலமாகத் திட்டம் போடும்போதே அவனுக்கு அளிக்கவிருக்கும் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி பாவம் செய்வான் என்று கடவுளுக்குத் தெரியும்.
ஆகவே அவனை இரட்சிக்கத் தன் திருமகனை மனிதனாகப் பிறக்கச் செய்ய கடவுள் நித்திய காலமாக திட்டமிட்டார்.
மனிதன் அவருடைய கட்டளையை மீற வேண்டும் என்பது அவரது திட்டமல்ல.
ஆனால் தான் அளித்த சுதந்திரத்தை மனிதன் தவறாகப் பயன்படுத்துவான் என்பது அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.
ஆனாலும் தான் அளித்த சுதந்திரத்திற்கு குறுக்கே வர அவர் விரும்பவில்லை.
ஆனாலும் அவரது அளவில்லாத அன்பின் காரணமாக மனிதனை இரட்சிக்க அவர் திட்டமிட்டார்.
இத்திட்டம் மனிதன் கெட்டபின் தீட்டப்பட்டதல்ல.
அவரது ஞானத்தினால் நித்திய காலமாகவே அறிந்து, நித்திய காலமாகவே தீட்டப்பட்ட திட்டம்.
ஆகவே அவர் மாறவில்லை.
அவர் தன் நித்திய திட்டத்தின்(Eternal plan) படியே, மாறாமல், செயலாற்றுகிறார்.
நமது அனுபவப்படி எதிர்பாராத விதமாய் நமக்கு விரோதமாய் ஏதாவது நடந்துவிட்டால், நமக்குக் கோபமோ, வருத்தமோ ஏற்படும்.
இந்தக் கோபமும், வருத்தமும் நமக்குள் ஏற்படும் மாற்றம்.
ஆனால் இறைவனைப் பொறுத்தமட்டில் அவருக்கு எல்லாம் தெரியுமாகையால் எதிர்பாரராதது எதுவும் நடக்காது.
கோபமோ, வருத்தமோ ஏற்பட வாய்ப்பே இல்லை.
மேலும் இறைவன் மாறாதவராகையால் எந்த உணர்வும் நித்தியமானதாகத்தான்
இருக்கும்.
சதா கோபமாகவும், வருத்தமாகவும் உள்ள கடவுளை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியுமா?
கோபமும் சாந்தமும் எப்போதும் சேர்ந்தே இருக்க முடியுமா?
வருத்தமும் மகிழ்ச்சியும் கைகோர்த்த்து நடக்க முடியுமா?
கடவுளால் கோபப்படவும் முடியாது, வருத்தப்படவும் முடியாது
நண்பர் ஒருவரோடு மிக அன்பாய் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
ஒருநாள் அவர் தன் வார்த்தைகள் மூலம் நம்மைக் காயப்படுத்தி விட்டார்.
உறவு முறிந்து விட்டது.
இரண்டு நாள் கழித்து நம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்டார்.
மன்னித்து ஏற்றுக்கொண்டோம்.
இந்நிகழ்ச்சியில் நாம் இருமுறை,
1.உறவு முறியும்போது,
2.சேரும்போது,
மாறியிருக்கிறோம்.
இதேபோல் நாம் சாவான பாவம் செய்யும்போது இறைவனுக்கும், நமக்கும் உள்ள உறவு முறிகிறது.
பாவசங்கீத்தனம் செய்யும்போது உறவு திரும்புகிறது.
இப்போது இறைவன் மாறவில்லையா?
மாறவில்லை.
மாறமுடியாது.
எப்படி?
இறைவன் நம்மை நித்திய காலமாய் அன்பு செய்கிறார்.
அதாவது,
அவரது அன்புக்குத் துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை.
அதாவது,
நாம் மோட்சமே வேண்டாமென்று கூறிவிட்டு நரகத்துக்குச் சென்று விட்டாலும் அவரது அன்பு தொடரும், அளவு குறையாமல்.
ஊதாரிப்பிள்ளையின் உவமை இதை விளக்குகிறது.
ஊதாரி மைந்தன் தந்தையின் சொத்தை பிரித்து எடுத்து வெகுதூரம் சென்றுவிட்டாலும் அவன்மீது தந்தை கொண்டிருந்த அன்பு குறையவில்லை.
நரகத்துக்குச் சென்றவர்கள் திரும்ப முடியாது.
ஆனாலும் இறைவனின் அன்பு குறையாது.
அவர் அன்புக்கு அடிமை.
பாவம் செய்பவர்கள்தான் உறவை முறித்துக்கொள்கிறார்கள்.
பாவம் செய்பவர்கள்தான் நரகத்தைத் தேர்வு செய்கிறார்கள், கடவுள் அல்ல.
நாம் அன்போடு வாழும் நித்திய பேரின்ப வாழ்வைத் தேர்ந்தெடுப்போம்.
கடவுள் அன்புக்கு அடிமை, நாம் அவருக்கு அடிமையாய் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment