மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள். (மத்.6:1)
+++++++++++++++++++++++++++
மீட்பு அடைய இன்றியமையாதவை:
1. விசுவாசம்.
2. அன்பு
3. நற்செயல்கள்.
விசுவசிக்க வேண்டியது இறைவனை.
அன்பு செய்ய வேண்டியது இறைவனை.
நற்செயல்கள் செய்யவேண்டியது இறைவனுக்காக.
மீட்பு என்றால் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு,
இறைவனின் திருப்பாதத்தை அடைவது.
மீட்பு பெற இறைவனை விசுவசிக்க வேண்டும்,
இறைவனை அன்பு செய்யவேண்டும்,
இறைவனுக்காக நற்செயல் புரிய வேண்டும்.
ஆக, விசுவாசம், அன்பு, நற்செயல் வாழ்வின் மையம் இறைவன் மட்டுமே.
அதாவது,
இறைவனை நீக்கி விட்டால்,
விசுவாசத்துக்கும் அர்த்தம் இல்லை,
அன்புக்கும் அர்த்தம் இல்லை,
நற்செயல்களளுக்கும்
அர்த்தம் இல்லை.
இறையன்பில் பிறர் அன்பும் அடங்கியுள்ளது.
இறையன்பு இல்லாத பிறர் அன்பும்,
பிறர் அன்பு இல்லாத இறையன்பும்
பொய்.
அதேபோல்,
இறைவனுக்காக அல்லாமல் செய்யப்படும் எந்த பிறரன்புச் செயலும் நசெயலே அல்ல.
தற்காலத்தில் 'மனித நேயம்' என்ற சொற்றொடர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
இறைவன் இன்றி மனிதன் இல்லை.
இறைநேயம் இன்றி மனித நேயம் இல்லை.
ஆனால் இறை நம்பிக்கையே இல்லாத சிலர் மனித நேயம் பற்றியும், சமூக சேவை பற்றியும் பேசி வருகிறார்கள்.
இது பெற்றோரைக் கவனியாதவர்கள் சகோதர பாசம் பற்றி பேசுவது போலிருக்கிறது.
இறையன்பை மையமாகக்கொண்ட பிறர் அன்புதான் உண்மையான அன்பு.
ஏனெனில் மனிதன் இறைவனால் படைக்கப்பட்டதே
இறைவனில், இறைவனுக்காக வாழ்வதற்கான்.
ஆகவே இறைவனுக்காகச் செய்யப்படும் செயல் மட்டுமே நற்செயல்.
மற்றவை எல்லாம் சாதாரணச் செயல்கள்தான்.
ரூபா நோட்டுக்குள்ள மதிப்பு வெற்றுத் தாளுக்கு எப்படி இருக்கும்?
இறைவன் முத்திரை இருக்கும் செயல் நற்செயல், அது எவ்வளவு சிறியதாய் இருந்தாலலும்.
இறைவன் முத்திரை இல்லாத செயல், எவ்வளவு பெரிய செயலாய் இருந்தாலும், மதிப்பு இல்லாதஇல்லாத வெறுஞ்செயல்தான்.
இறைவன் பெயரால் ஒரு ஏழைக்கு ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் கொடுத்தால், அது ஒரு நற்செயல்.
அதற்கு விண்ணுலகில் இறைவன் சன்மானம் அளிப்பார்.
ஆனால்,
ஒருவர் இறைவனுக்கு ஆலயம் கட்ட, தன் பெயர் கோவில் கல்வெட்டில் நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஒரு கோடி ரூபாய்
நன்கொடை கொடுத்தாலும் அது சாதாரண செயல்தான், நற்செயல் அல்ல.
அதற்குரிய சன்மானம் இவ்வுலகில் கிடைக்கும் புகழ் மட்டடும்தான்.
ஆகவேதான்,
"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
என்று இயேசு சொன்னார்.
நற்செயல்களை 'மனிதர் பார்க்க வேண்டுமென்று' செய்யக்கூடாது.
விளம்பரத்திற்காகச் செய்தால்
'வானகத்திலுள்ள உங்கள் தந்தையிடம் உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.'
ஆகவே,
விளம்பரம் செய்யாமல்
நற்செயல் செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment