"இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" என்று சொன்னார்." (அரு. 11:50)
தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்த போது அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்த கயபா என்பவர்
"இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை" என்று சொன்னார்.
அவர் என்ன பொருளில் சொன்னாலும்,
அவர் சொன்னது
"தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார்" என்ற இறைவாக்காகஅமைந்து விட்டது.
தலைமைக் குருவின் பணி மோசேயின் சட்டப்படி மக்களை வழி நடத்துவது.
அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள்,
அவரது சொந்த நோக்கத்துக்கு மாறாக,
இறை வாக்காய் அமைந்து விட்டன.
மனித இனத்தை வாழ வைப்பதற்காக
தான் இறக்கவே இறைமகன் மனுமகனாய்ப் பிறந்தார்.
ஒரு வகையில் இறைவனின் திட்டம் நிறைவேற யூத மத குருக்கள் உதவியிருக்கிறார்கள்.
இறை நம்பிக்கைக்கு சம்பந்தமே இல்லாத சில உலக நிகழ்வுகள் இறைவன் திட்டம் நிறைவேற உதவிய அனுபவங்கள் நமது வாழ்க்கையிலும் இருந்திருக்கும்.
என்னுடைய தாத்தா இராமசாமி இராயப்பனாக மாறிய நிகழ்வு இப்படித்தான் நிகழ்தது.
அவர் எங்கள் ஊர் இந்துக் கோயில் ஒன்றின் தர்ம கர்த்தா.
அவரது குடும்ப திருமண நிகழ்வு ஒன்றில் அவருக்கும் சக இந்துக்களுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் இந்து சமயத்தை விட்டு விட்டு கிறிஸ்தவராக மாறினார்.
இராமசாமி இராயப்பனாக மாறினார்.
அவரை மனிதர்கள் யாரும் மாற்றவில்லை.
அவர் மனம் மாறியதற்கும், விசுவாசத்துக்கும் சம்பந்தமே இல்லை.
அவரை மாற்றியது ஊருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை.
ஆனால் இதில் இறைவனின் திட்டம் இருக்கிறது. அவரின்றி அணுவும் அசையாது.
அவரது மனமாற்றத்தை இறைவன் பயன்படுத்திக் கொண்டார்.
அவரது மகன் இலச்சுமணன் ஞானமணியாக (எனது தந்தை) மாறினார்.
அவரது குடும்பத்திலிருந்து தான் இறைவன் ஒரு சேசு சபைக்குருவையும்
(சங். சுவாமி. ஞா. மிக்கேல் பெர்க்மான்ஸ் சே.ச)
ஒரு அருட்சகோதரியையும்
(அருட்சகோதரி அன்னைத் தெரசா) உருவாக்கியிருக்கிறார்.
அவரது பேரன் L.G.M. Prakasam, served as L.R.D.E Outstanding Scientist.
After retirement he has been serving as Senior Vice president at Astra Microwave Products Ltd , Bengaluru.
இறைவனது வழிகள் வித்தியாசமானவை, அற்புதமானவை.
எந்த நிகழ்விலிருந்தும் அவரால் நன்மையை வரவழைக்க முடியும்.
"ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்."
(மத்தேயு நற்செய்தி 1:6)
இயேசு பாவிகளைத் தேடியே உலகுக்கு வந்தார்.
பாவத்தை வெறுக்கும் அவர் பாவியை நேசிக்கிறார்.
தான் பாவிகளைத் தேடியே உலகுக்கு வந்ததன் முன் அடையாளமாக
தாவீது என்னும் மனம் திரும்பிய பாவியை, அதிலும் அவரோடு பாவம் செய்த உரியாவின் மனைவியை தனது மூதாதையர் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.
நாமும் பாவிகள் தான். நம்மைத் தேடித்தான் இயேசு உலகுக்கு வந்தார்.
ஆகவே நாம் பாவிகளை நேசிக்க இயேசுவிடமிருந்து கற்றுக் கொள்வோம்.
இன்று நமது ஒன்றிய அரசியல் தலைவர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பது நமக்குத் தெரியும்.
ஆனால் அவர்களின் செயல்களை கடவுள் தனது திட்டம் நிறைவேற பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தங்களுடைய செயல்களால் எண்ணற்ற பேர்களை நித்திய பேரின்ப வாழ்வுக்குள் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைத் தண்டிப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களுக்கு உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை கொடுத்து நித்திய பேரின்ப வாழ்வுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் இறைவனிடம் இந்தியா மனம் திரும்ப வேண்டிக் கொண்டிருக்கிறாராகள்.
எதிரிகள் விதைக்கும் ஒவ்வொரு தீமை விதையிலிருந்தும் ஒரு நன்மை முளைத்து வளர்ந்து கொண்டிருக்கும்.
அவர்களுடைய எதிர்மறைச் செயல்களை தன் அன்பர்களின் நன்மைக்கு இறைவன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மலை வாழ் பழங்குடியினர் நல் வாழ்வுக்காக உழைத்த அருட்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்களை மறை சாட்சியாக விண்ணகத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் நமது தலைவர்கள்.
அவர் விண்ணகத்தில் இந்தியத் திரு நாட்டின் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாற எல்லாம் வல்ல இறைவனிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
காற்று அடைக்கப்பட்ட பந்தை எந்த வேகத்தில் கீழ் நோக்கி அடிக்கிறோமோ அதே வேகத்தில் அது மேல் நோக்கி எழும்பும்.
ஆனால் கிறிஸ்தவம் அடிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் பரவும்.
ரோமை வீரர்கள் தான் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.
அதற்குத் தலைமை வகித்த ரோமைப் படைத்தளபதி நூற்றுவர் தலைவர் மனம் திரும்பி
யாரைச் சிலுவையில் அறைந்து கொன்றாரோ அவர்தான் உலக மீட்பர் என்று போதிக்க ஆரம்பித்து விட்டார்.
இயேசுவுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்து, வேத சாட்சியாக மரித்தார்.
புனித லோன்ஜினுஸ் என்னும் அவருடைய திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் நாள் கொண்டாடுகிறோம்.
(Longinus is the "Centurion of the Crucifixion" and is venerated as a saint in the Catholic Church. His feast day is celebrated on October 16th.)
ரோமை மன்னர்கள் கிறிஸ்தவத்தை அடியோடு அழிக்க முயன்றனர்.
ஆனால் இன்று அதே ரோமையில் தான் கிறிஸ்தவத்தின் தலைவர் பாப்பரசர் வசித்து நம்மை அரசாள்கிறார்.
கிறிஸ்தவத்துக்கு மாறிய முதல் ரோமை மன்னன் கான்ஸ்டன்டைன்.
கிறிஸ்தவத்தின் எதிரிகளையும் மனம் திருப்பும் வல்லமை கடவுளுக்கு உண்டு.
முதலில் கிறிஸ்தவளாக மாறியவள் கான்ஸ்டன்டைன் மன்னனின் தாய் புனித ஹெலெனா. ( St. Helena)
அவளது மகன் மனம் திரும்புமுன்பே அவள் இரகசியமாக கிறிஸ்தவளாக மாறி விட்டாள்.
இன்றைய நமது அரசியல் தலைவர்களை விட மோசமான முறையில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியவர்கள் ரோமை மன்னர்கள்.
ரோமை மன்னனையே மனம் மாறச் செய்த கடவுளால் நம்மவர்களை மனம் மாற்ற முடியாதா?
முடியும்.
அவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்.
நமது வாழ்வில் என்ன துன்பங்கள் நேர்ந்தாலும், நோய் நொடிகள் வந்தாலும், தோல்விகள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் நமது ஆன்மீக நன்மைக்கே என்று இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
இறைவனிடம் கேட்பது கிடைத்தாலும் நன்றி கூறுவோம்,
கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவோம்.
நோய் குணமானாலும் நன்றி கூறுவோம், குணமாகாவிட்டாலும்
நன்றி கூறுவோம்.
என்ன நேர்ந்தாலும் அதை அவரது மகிமைக்காக ஒப்புக் கொடுப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment