Saturday, April 4, 2020

"ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாகான்"(அரு. 8:51)

"ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாகான்"
(அரு. 8:51)
*  **  **  **   ** ** **   ** **

"ஏன் சார், இந்த உலகத்தில் செத்தாத்தான் நாம் மோட்சத்துக்குப் போக முடியும், ஆகையினால சாகப் பயப்பட வேண்டாம்னு நேற்று ஞானோபதேச வகுப்ல சொன்னீங்க, இன்றைக்கு வேற மாதிரி சொல்றீங்க."

."வேற மாதிரி என்ன சொல்றேன்?"

""ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாகான்"னு ஆண்டவர் சொல்லியிருக்கதா
சொல்றீங்க.
.

அதாவது ஆண்டவர் சொற்படி நடக்கிறவன் சாகமாட்டான்

 என்று சொல்கிறீர்கள்.

அப்போ ஆண்டவர் சொற்படி நடக்கிறவன் மோட்சத்திற்குப் போக மாட்டான் என்றுதானே அர்த்தம்?"

"உனக்கு சாவுல பிரச்சனை.

இப்போ எனது கேள்விக்குப் பதில் சொல்.

 நீ இதுவரை எத்தனை முறை செத்திருக்கிறாய்?"

"சார்,  நான் எப்ப சார் செத்தேன்? 

ஒரு ஆளுக்கு ஒரு நேரம் தான் சாவு வரும்.

 நான் இன்னும் சாகவில்லை. எப்போது சாவேன் என்று எனக்கு தெரியாது."

"அதாவது சாவு என்றால் என்ன என்று உனக்கு தெரியாது.

சரி விளக்குகிறேன்.

இரண்டு வகையான சாவுகள் இருக்கின்றன. 

ஒன்று உனக்குத் தெரிந்த உடல் சம்பந்தப்பட்ட சாவு,

 அது வாழ்நாளில் ஒரு முறை தான் வரும்,

 அதாவது நமது இவ்வுலக வாழ்வின் இறுதியில் வரும்.

அதாவது நாம் சாவும் போது நமது வாழ்வின் இறுதி வரும்.

 அடுத்தது ஆன்மாவின்  சாவு.

 நமது ஆன்மா பாவ மாசு இன்றி இருந்தால்,

அதாவது தேவ இஸ்டப்பிரசாதத்துடன் (Sanctifying grace ) இருந்தால்

 அது உயிரோடு இருக்கிறது என்று அர்த்தம்.

இறைவன் நமது முதல் பெற்றோரை தேவஇஸ்டப்பிரசாதத்துடன்தான் படைத்தார்.

ஆனால் அவர்கள் பாவம் செய்ததால் அந்த உயிர்நிலையை இழந்தார்கள்.

 ஆன்மா சாவான பாவம் செய்தால் மரிக்கிறது.

 பாவத்தின் சம்பளம் மரணம் என்பதன் உண்மையான பொருள் இதுதான்.
'
இந்த மரணத்தைத்தான் நமது ஆண்டவர் தனது சிலுவை மரணத்தினால் வென்றார்.

அதாவது தனது சிலுவை மரணத்தினால் நமது பாவங்களுக்கு அவரே பரிகாரம் செய்து,

நாம்  அவற்றிற்கு மன்னிப்பு பெற வகை செய்தார்.


அவர் சிலுவையில் மரணித்திருக்காவிட்டால் நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெறவே முடிந்திருக்காது.

 பாவத்தினால் இறந்த ஆன்மா இறந்ததாகவே இருந்திருக்கும்.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது நமது ஆன்மா ஜென்மப் பாவம் மன்னிக்கப்பட்டு உயிர்நிலையை அடைந்தது.

ஆனால் நாம் சாவான பாவம் செய்யும்போது நமது ஆன்மா மரிக்கிறது.

  நாம் மனஸ்தாபத்தினாலும், பாவ சங்கீர்த்தனத்தினாலும்

பாவ மன்னிப்புப் பெறும்போது 

இறந்த ஆன்மா உயிர் பெறுகிறது.

 மறுபடி சாவான பாவம் செய்தால் மறுபடி மரணிக்கிறது.

 மறுபடி மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு பெற்றால் திரும்பவும் உயிர் பெறுகிறது.

 உலக சம்பந்தப்பட்ட சாவின் போது நமது ஆன்மா உயிரோடு இருக்க வேண்டும்.

 உயிருள்ள ஆன்மாதான் மோட்சத்திற்கு செல்ல இயலும்.


நாம் உலகில் வாழும்போது நமது ஆன்மா எத்தனை முறை மரணித்தாலும் 

அத்தனை முறையும்  பாவமன்னிப்பின் மூலமாக உயிர் பெறலாம்.

"ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாகான்" என்றால்

 "எனது கட்டளைகளை கடைபிடிப்பவன் பாவம் செய்ய மாட்டான். அவன் ஆன்மா நித்தியததிற்கும் வாழும்" என்பது பொருள்.

புரிகிறதா?"

"புரிகிறது"

"என்ன புரிகிறது?"

"கடவுளுக்கும் ஆன்மாவிற்கும் உறவு இருக்கும்பொழுது,

 அதாவது ஆன்மா பரிசுத்தமாக இருக்கும்போது,

 அது உயிரோடு இருக்கிறது.

 ஆனால் சாவான பாவம் செய்யும் போது ஆன்மா இறைவனோடு தனக்கு இருக்கும் உறவை துண்டித்துக் கொள்கிறது. 

இதனால் அது மரிக்கிறது.

 பாவத்திற்காக மனம் வருந்தும்போது இறைவன் ஆன்மாவை  மன்னிக்கிறார்.

 மன்னிப்பின்போது இழந்த உறவு திரும்ப கிடைக்கிறது.

 ஆன்மாவும் உயிர் பெறுகிறது.

நாம் மரணம் அடையும்போது 

உயிருள்ள ஆன்மா இறைவனோடு  நிலைவாழ்வு பெறுகிறது. (மோட்சம்)

உயிரற்ற ஆன்மா நித்திய மரணத்தை (நரகம்) அடைகிறது. 

மோட்சம் என்றால் என்றும் இறை  உறவோடு வாழ்வது பேரின்ப நிலை.

நரகம் என்றால் என்றும் இறை  உறவு அற்ற நிலை. பெருந்துயர் நிலை."

"Very good. வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?"

"மனஸ்தாபம் பற்றி கொஞ்சம் விளக்குங்களேன், சார்."

"நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துவதைத்தான் மனஸ்தாபம் என்கிறோம்.

மனஸ்தாபம் இருவகை: 

உத்தம மனஸ்தாபம், Perfect contrition

 அடிமை மனஸ்தாபம். imperfect contrition.

இறைவன் மேலுள்ள அன்பினால் உந்தப்பட்டு வருவது உத்தம மனஸ்தாபம்.

"அன்பு நிறைந்த தேவனுக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டோமே,

 பாசம் மிகுந்த  நல்ல தந்தையின் மனதை பாவத்தினால்  நோகச் செய்துவிட்டோமே"

 என்று நினைத்து வருந்துவது உத்தம மனஸ்தாபம்.

" பாவத்தோடு இறந்தால் நரக வேதனை  அனுபவிக்க வேண்டி இருக்குமே"

 என்று பயந்து பாவத்திற்காக வருந்துவது அடிமை மனஸ்தாபம்.

 பாவ சங்கீர்த்தனம் செய்வதற்கு முன்பு பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு

 இனிமேல் பாவம் செய்ய மாட்டேன் என்று தீர்மானம் எடுக்க வேண்டும்."

"இப்போது கொரோனா காரணத்தினால் ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன.

 குருவானவரைச் சந்திக்க இயலாது,

 பாவசங்கீர்த்தனம் செய்யவும் இயலாது,

 அப்படியானால் நாம் பாவ மன்னிப்பு பெறுவது எப்படி?"


"நல்லா கவனி.

 உத்தம மனஸ்தாப பட்டால் நமது பாவங்கள் உடனடியாக மன்னிக்கப் படுகின்றன.

 சந்தர்ப்பம் கிடைக்கும்போது பாவசங்கீர்த்தனம் செய்துவிட வேண்டும்.

இப்போது உள்ள சூழ்நிலையில் உத்தம மனஸ்தாபப்பட்டு,
பாவ மன்னிப்பு பெற்று,

 சந்தர்ப்பம் எப்போது கிடைக்கிறதோ அப்போது பாவசங்கீர்த்தனம் செய்து கொள்ள வேண்டும்.

 அதற்காக இறை அன்பைப் பற்றி அதிகமாக தியானித்து

 இறைவன் நம்மை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார்,

 நாம் அவரை எவ்வளவு அதிகமாக நேசிக்க வேண்டும் என்பதை

 மனப்பூர்வமாக உணர வேண்டும்.

 இந்த உணர்ச்சி இருந்தால் நாம் பாவம் செய்யவே மாட்டோம்.


இறை அன்பை மறக்கும் பொழுது தான் பாவத்திற்குள் விழுகிறோம். புரிகிறதா?"

"புரிகிறது, சார். நல்லா புரியுது.

கொரோனாவின் காலம் அளவு உள்ளது,

கடந்து போய்விடும்.

மனம் திரும்பாவிட்டால் பாவத்தின் விளைவு?

நாம் மரித்தபின்னும் நம்மை விடாது.

ஆகவே,

மனம் திரும்புவோம்.

இறைவனது கட்டளைகளைக் கடைப்பிடிப்வோம்.

நிலை வாழ்வுக்குத் தயார் ஆவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment