இறைவனை மறந்து உலகிற்காக வாழ்பவர்கள்.
** ** ** ** ** ** ** ** ** ** **
ஒரு running race.
நடத்துகின்றவர் இறைவன்.
Starting point ம் அவர்தான், finishing point ம் அவர்தான்!
அவரே நம்முடனும் ஓடியும் வருவார்!
நாம் செய்ய வேண்டியதெல்லாம் track மாறாமல் ஓட வேண்டும், அவ்வளவுதான்.
வேகமாகவும் ஓடலாம், மெதுவாகவும் ஓடலாம்.
நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
We must keep moving.
நம்மோடு போட்டிக்கு வேறு ஆள் இல்லை.
நாம் வேகமாக ஓடுகிறோமா, மெதுவாக ஓடுகி றோமா என்பதைவிட
track மாறாமல்
ஓடுகிறோமா, finishing point ஐ அடைகிறோமா என்பது தான் முக்கியம்.
இன்னும் ஒரு முக்கியமான point
start பண்ணும்போதும், ஒடும் போதும் நம்மோடு இருக்கும் கடவுள் நமது கண்ணுக்குத் தெரியமாட்டார்.
ஆனால் நமது ஓட்டத்தில் நமக்கு உதவி செய்துகொண்டே இருப்பார்.
finishing point ஐ அடையும்போது நம்மை முகத்துக்கு முகம் (face to face) சந்தித்து, இறுக்க அரவணைத்துக் கொள்வார்.
இதுதாங்க நமது வாழ்க்கை.
இதை விட இலேசான, இனிமையான வேறு வாழ்க்கை இருக்க முடியுமா?
ஆனால் இறைவனிடமிருந்து பந்தயத்தை ஆரம்பித்த சிலர்,
அவர் தங்களோடு வருவதைப் பற்றி அக்கரை கொள்ளாமல்,
track மாறி வேறு எங்கேயோ போய் மாட்டிக் கொண்டு,
finishing point ஐ அடையாமலே போய்விடுகிறார்கள்!
நமது வாழ்வின் அடிப்படைத் தத்துவமே
நாம் எதை அடைய வேண்டுமோ
அதை அடைய நமக்கு ஆசை வர வேண்டும்,
ஆசையே இல்லாத பொருளை அடைய நாம் முயற்சி செய்யவும் மாட்டோம்,
அடையவும் மாட்டோம்.
நமது வாழ்வில் குறிக்கோளாகிய இறைவன் மேல் நமக்கு ஆசை இருந்தால்தான்
அவரை அடையும் முயற்சியில் இறங்குவோம்.
உலக வாழ்வின் மேல் நமக்கு முழு ஆசை வருமானால்
நாம் உலக வாழ்வையே சதமாக நினைத்து வாழ்வோம்.
விளைவு?
விண்ணக வாழ்வைத் தொலைத்து விடுவோம்.
ஒரு ஊழியன் இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய இயலாது.
ஒரே நேரத்தில் கடவுளுக்கும் உலகத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது.
நண்பர் ஒருவர் வினா ஒன்றை எழுப்பினார்.
"கடவுள் தானே நம்மை படைத்து இந்த உலகில் வைத்தார்.
அவர் தந்த உலகை அனுபவித்தால் என்ன தவறு?
உலக இன்பங்களும் அவரால் தானே படைக்கப்பட்டன.
அவர் தந்ததை அனுபவித்தால் அதை எப்படி தவறு என்று அவரே கூறுவார்?"
பதில் :
தனது சாயலாக மனிதனைப் படைத்த கடவுள் அவன் உலகை
"ஆளக்கடவன"
என்றுதான் சொன்னார்.
இயேசு ஊழியம் செய்ய சொன்னது
அவரது சாயலாக படைக்கப் பட்ட நமது அயலானுக்கு,
உலக இன்பங்களுக்கு அல்ல.
உலக இன்பங்களை ஏன் படைத்தார்?
வாழ்வதற்காக உணவைப் படைத்த கடவுள் உண்ணும்போது அனுபவிக்க ருசியைப் படைத்தார்.
வாழ்வதற்காக உண்ணும்போது ருசியை அனுபவிக்கலாம், தப்பே இல்லை.
ஆனால், ருசிக்காக மட்டும் உண்பதும்,
உண்பதற்காக மட்டும் வாழ்வதும்தான் தப்பு.
வாழ்வதற்காக உண்பவன் அளவோடு உண்பான்.
அளவோடு உண்பது 'மட்ட சனம்' (Temperance) என்னும் புண்ணியம். (Virtue)
உண்பதற்காக வாழ்பவன் அளவுக்கு மீறி உண்பான். அவன் போசனப் பிரியன். (glutton)
.gluttony பாவம். (ஏழு தலையான பாவங்களுள் ஒன்று)
இல்லற இன்பம் புண்ணியம்.
அதே இன்பத்தை இல்லறத்திற்கு வெளியே அனுபவிப்பது பாவம்.
பணத்தைச் சரியான வழிகளில் பயன்படுத்துவது புண்ணியம்.
தவறாகப் பயன்படுத்துவது பாவம்.
சுருக்கமாக சொல்வதானால் இந்த உலகத்தை பயன்படுத்தி விண்ணகம் செல்ல வேண்டும்.
அழியப்போகும் உலக சிற்றின்பத்தை அனுபவிப்பதற்காக விண்ணக பேரின்பத்தைத் தியாகம் செய்துவிட வேண்டாம், please.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment