"அவன் நீரருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பானவன்."
(ஏரேமி..17:8)
** ** ** ** ** ** ** ** ** ** **"
"எல்லோரும் என் இரண்டு கைகளையும் பாருங்க.
என்ன வைத்திருக்கிறேன், தெரிகிறதா?
"தெரிகிறது சார். இரண்டு இலைகள் வைத்திருக்கிறீர்கள், சார்."
"லூர்துசாமி, சொல்லு, இரண்டு இலைகளுக்கு இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கா?"
"இரண்டு இலைகளுக்கு இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கா?"
"நீங்க சொல்லச் சொன்னதச் சொல்லிட்டான், சார்!"
"பரவாயில்லை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு"
"நீங்க இன்றைக்கு நடத்தப்போகும் பாடங்களுக்கு உபகரணங்களாக இரண்டு இலைகளைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
ஒரு இலை மிகவும் பசுமையாக இருக்கிறது. மற்றது அவ்வளவு பசுமையாக இல்லை."
"செல்வராஜ் எழுந்திரு.
பசுமைக்கும், பசுமை இன்மைக்கும் காரணம் புரிகிறதா?"
"பசுமையான இலை நீர் செழிப்பு அதிகமுள்ள இடத்தில் வளரும் மரத்தில் இருந்து பறிக்கப்பட்டது.
பசுமை அற்ற இலை வறண்ட
இடத்தில் வளரும் மரத்தில் இருந்து பறிக்கப்பட்டது"
"கரெக்ட்.
பசுமையான இலை நமது ஊருக்கு அருகில் ஓடும் ஆற்றின் கரையில் வளரும் மரத்திலிருந்து பறிக்கப்பட்டது.
பசுமை அற்ற இலை நமது ஊர் நடுவில் உள்ள மைதானத்தில் வளரும் மரத்தில் இருந்து பறிக்கப்பட்டது."
"சார், இப்போது புரிந்துவிட்டது, நீங்கள் நடத்தப்போகும் பாடம் எதைப் பற்றியது என்று.
"அவன் நீரருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பானவன்."
என்ற பைபிள் வசனத்திற்கு விளக்கமாக இந்த இலைகள் கொண்டு வர பட்டிருக்கின்றன.
நான் இன்று காலை இந்த வசனத்தை வாசித்தேன்."
"வாசிக்க மட்டும் செய்தாயா அல்லது...."
"வாசித்து அதைப்பற்றி சிறிது நேரம் தியானித்தேன், சார்."
"எங்கே, நீ தியானித்ததை எங்களோடு கொஞ்சம்
பகிர்ந்து கொள் பார்ப்போம்."
"மனிதர்களில் இரண்டு வகையினர் உண்டு.
ஒரு வகையினர் எப்போதும் கடவுளின் சந்நிதானத்தில் வாழ்பவர்கள்.
இன்னொரு வகையினர் கடவுளைப் பற்றி நினையாமல்
இந்த உலகத்தை பற்றியே நினைத்து கொண்டிருப்பவர்கள்.
ஆற்றங்கரையில் வளரும் மரத்தின் வேர் எப்பொழுதும் தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கும்.
ஆற்றுத் தண்ணீர் மலையில் இருந்து வருவதால் அங்குள்ள மூலிகைச் சத்து நிறைந்ததாக வரும்.
சத்து நிறைந்த தண்ணீரைக் குடித்து மரம் செழுமையாக வளரும்.
கடவுள் தனது அருளால் பொங்கி வடிபவர்.
God is always overflowing with grace.
அவரோடு, அவரில் வாழ்பவர்கள் அவருடைய அருள் வரங்களில் சதா நனைந்து கொண்டிருப்பார்கள்.
அவர்கள் உலகில் வாழ்ந்தாலும் உலகைச் சாராமல், இறைவனை மட்டும் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் இறைவனது அருளால் உயிர்வாழ்வதால் இறைவனுக்காக மட்டுமே வாழ்வார்கள்.
இறைவனுக்காக மட்டுமே வாழ்பவர்களை இறைவனுக்கு எதிரான எதுவும் அண்டாது.
அவர்களது ஆன்மீகம் இறையருளால் செழித்து வளர்வதால், பாவமோ அதன் விளைவுகளோ அவர்களை அண்டாது."
"கொஞ்சம் பொறு. ஒரு கேள்வி.
ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் விளைவாகத்தான் துன்பமும் மரணமும் பூமிக்குள் நுழைந்தது.
அப்படியானால் பாவம் செய்யாமல் வாழ்பவர்களுக்குத் துன்பமும் மரணமும் வராதா?"
"துன்பத்தையும் மரணத்தையும் பாவம் செய்கிறவர்கள் எந்த கண்ணோக்கில் பார்க்கிறார்களோ
அந்த கண்ணோக்கில் மீட்கப்பட்டவர்கள் பார்ப்பது இல்லை.
இறைமகன் இயேசு தனது பாடுகளாலும், சிலுவை மரணத்தாலும் பாவத்தை வென்று விட்டதால்,
பாவத்தின் விளைவுகளையும் வென்று விட்டார்.
அதாவது மீட்பின் சக்தியால்
துன்பங்களும் மரணமும் ஆசீர்வாதங்களாக மாறிவிட்டன.
துன்பத்தைச் சிலுவையாக மாற்றிவிட்டார் இறைமகன் இயேசு.
சிலுவை நமது இரட்சண்யத்தின் காரணியாக மாறிவிட்டதுபோல,
நமது துன்பங்களும், அதாவது, சிலுவைகளும், நமது நித்திய பேரின்பத்தின் காரணிகளாக மாறிவிட்டன.
அதாவது நாம் இயேசுவுக்காக அனுபவிக்கும் துன்பங்கள் நித்திய பேரின்பத்தைப் பெற்றுத் தரும் ஆசீர்வாதங்கள்.
Sufferings are no more pains, they are blessings, as they bless us with everlasting bliss.
இயேசு தனது சிலுவை மரணத்தால், பாவத்தின் சம்பளமான மரணத்தை மோட்சத்தின் வாசலாக மாற்றிவிட்டார்."
"Correct. இறையருளால் ஆளப்படுபவன் எப்படி இருப்பான்?"
"எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்.
இறைவன் மகிழ்ச்சியின் ஊற்று.
அந்த ஊற்று தண்ணீரில் குளிப்பவன் மகிழ்ச்சியாக இருப்பதை தவிர வேறு எப்படி இருக்க முடியும்?
கொரோனஸ் வைரஸால் கூட அவனது மகிழ்ச்சியை அழிக்க
முடியாது.
மகிழ்ச்சி இன்மைக்கு முக்கியமான காரணம் பயம்.
நம்மை நோய் தொற்றிக்கொள்ளுமோ என்று சதா பயந்துகொண்டு இருப்பவர்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
நாம் இறைவன் கையில் இருக்கிறோம்.
ஒவ்வொரு வினாடியும் நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பவர் அவரே.
சர்வ வல்லபர் கையில்
இருக்கும்போது நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?
Why should we fear when we are in the hands of the Almighty?
"நீ அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்."
"Do not be afraid, for I am with you." (இசை. 41.10)
என்று நம்மைப் படைத்தவர் கூறுகிறார்.
இறைவனைப் பற்றிய அடிப்படை உண்மையை புரிந்துகொண்டால் நாம் பயப்படவே மாட்டோம்.
இறைவன் எங்கும் இருக்கிறார்.
மண்ணுலகிலும இருக்கிறார், விண்ணுலகிலும் இருக்கிறார்.
நாம் மண்ணுலகில் இருக்கும் போதும் அவரோடுதான் இருக்கிறோம்.
விண்ணுக்குச் செல்லும்போதும் அவருடன் தான் இருப்போம்.
அப்படியானால் நாம் எங்கிருந்தால் என்ன?
மரணத்தால் நம்மை இறைவனோடு சேர்க்கத்தான் முடியுமேயொழிய
பிரிக்க முடியாது.
பின் ஏன் அதைக் கண்டு பயப்பட வேண்டும்?"
"பாக்கியராஜ், இறைவனை மறந்து உலகிற்காக வாழ்பவர்களைப் பற்றி ஏதாவது கூற முடியுமா?"
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment