"யோனாசிலும் மேலானது இதோ! இங்குள்ளது."
(லூக். 11:32)
** ** ** ** ** ** ** ** ** ** **
பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நினிவே நகரத்து மக்கள்
யோனாஸ் தீர்க்கத்தரிசியின்
சொற்களை கேட்டு
மனம் திரும்பி தங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக தவம் செய்ய ஆரம்பித்தார்கள்.
பிழைத்தார்கள்.
மனம் திரும்புங்கள் என்று கூறிய இயேசு நம்முடனே இருக்கின்றார்.
கன்னி மரியின் வயிற்றில் மனிதனாக கருத்தரித்த அதே இயேசு,
யூதேயா நாடெங்கும் சுற்றிவந்து நற்செய்தியை அறிவித்த அதே இயேசு,
சென்றவிடமெல்லாம் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்கிய அதே இயேசு,
மரித்தோர்க்கு உயிர் கொடுத்த அதே இயேசு,
நமக்காக பாடுகள் பட்டு,
சிலுவையில் அறையுண்டு,
தன்னைத் தானே பலியாக ஒப்புக்கொடுத்த அதே இயேசு
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அதே இயேசு
இன்று நம்மிடையே இருக்கிறார்.
திவ்ய நற்கருணையில் 24 மணி நேரமும் நமக்காகக் காத்திருப்பதோடு
திருவிருந்தின்போது நம்மை முகத்துக்கு முகம் சந்திக்க நம்மிடம் வருகிறார்.
இன்றைய உலகம் நினிவே நகரத்தைவிட மோசமான நிலையில் உள்ளது.
நினிவே யோனாசின் மூலம் கொடுக்கப்பட்ட இறை வார்த்தையைக் கேட்டது.
பிழைத்தது.
நம்மோடு இறைவனே இருக்கிறார்.
அவர் வார்த்தையைக் கேட்டால் பிழைப்போம்.
கேட்போமா?
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment