"தீர்ப்பிடாதீர்கள், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்."
(லூக்.6:37)
** ** ** ** ** ** ** ** ** ** **
"உங்களுக்குப் பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ,
அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."(மத். 7:12)
"Therefore, all things whatsoever that you wish that men would do to you,
do so also to them."
நாம் மற்றவர்களிடம் இருந்து நல்லதையே எதிர்பார்க்கிறோம்.
அப்படியானால் நாமும் மற்றவர்களுக்கு நல்லதையே செய்ய வேண்டும்.
நாம் மற்றவர்களிடம் இருந்து உதவியையே எதிர்பார்க்கிறோம்.
அப்படியானால் நாமும் மற்றவர்களுக்கு உதவியையே செய்ய வேண்டும்.
மற்றவர்கள் நம்மோடு அன்பாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்படியானால் நாமும் மற்றவர்களோடு அன்பாக இருக்கவேண்டும்.
மற்றவர்கள் நம்மைப் பற்றி கெடுத்துப் பேசுவதை நாம் விரும்புவது இல்லை.
அப்படியானால் நாமும் மற்றவர்களைப் பற்றி கெடுத்துப் பேசக் கூடாது.
மற்றவர்கள் நம்மை தீர்ப்பிட விரும்புவதில்லை.
நாமும் மற்றவர்களை தீர்ப்பிடக் கூடாது.
"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
(அரு. 3:17)
ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது கடவுள் அவர்களை உரிய வகையில் தீர்ப்பிட்டிருந்தால் மனுக்குலம் அவர்களோடு முடிந்து போயிருக்கும்.
ஆனால் அன்பே உருவான கடவுள் மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்டு, இரட்சிக்க இரட்சகரை அனுப்ப வாக்களிக்கிறார்.
தன் ஒரே மகனையே இரட்சகராக அனுப்புகிறார்.
நாம் பாவிகள்.
நாமே இரட்சிக்கப்பட வேண்டியவர்கள்.
மற்றவர்களைப் பற்றி தீர்ப்பு சொல்ல நமக்கு எந்த உரிமையோ, அதிகாரமோ இல்லை.
நமது இரட்சண்யத்துக்காக உழைப்பதோடு,
மற்றவர்களையும் இரட்சண்ய வளையத்திற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
நாம் இபேசுவின் நற்செய்திப்படி வாழ்வதோடு,
மற்றவர்கட்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
நற்செய்திப்படி வாழ்வோம்,
நற்செய்தியை மற்றவர்கட்கும்
அறிவிப்போம்.
அனைவரும் மீட்படைவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment