"நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும், மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்"
(மத்.17:4)
** ** ** ** ** ** ** ** ** ** **/
இயேசு இராயப்பரையும் யாகப்பரையும், அவர் சகோதரர் அருளப்பரையும் அழைத்து,
ஓர் உயர்ந்த மலைக்கு ஒதுக்கமாய்க் கூட்டிக்கொண்டு போகிறார்.
அங்கே
மோயீசனும் எலியாசும் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் .
அங்கே இருப்பவர்கள்:
இயேசு,
மோயீசன்,
எலியாஸ்,
இராயப்பர்,
யாகப்பர்,
அருளப்பர்
ஆக ஆறு பேர்.
இப்பொழுது இராயப்பர் இயேசுவிடம் ஒரு செப விண்ணப்பம் வைக்கிறார்.
நமது செபம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இராயப்பரது செபம் ஒரு முன்னுதாரணம்.
செபத்தை
'நீர் விரும்பினால்'
என்ற முன்னுரையோடு ஆரம்பிக்கிறார்.
'இது என்னுடைய ஆசை, ஆனால் நீர் விரும்பினால் மட்டுமே இது நடக்கட்டும்'
என்று தன் செபத்தை இயேசுவின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறார்.
அடுத்து
'உமக்கு ஒன்றும்,
மோயீசனுக்கு ஒன்றும்,
எலியாசுக்கு ஒன்றுமாக
இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்'
என்கிறார்.
இராயப்பர் தனக்காக செபிக்கவில்லை.
இயேசுவுக்கும், மோயீசனுக்கும், எலியாசுக்குமாக மூன்று கூடாரங்கள் அமைக்க அனுமதி கேட்கிறார்.
தனக்கும், யாகப்பருக்கும், அருளப்பருக்கும் எதுவும் கேட்கவில்லை.
அவரது செபத்தில் தன்னலம் இல்லை.
இயேசுவுக்கும், மோயீசனுக்கும், எலியாசுக்குமாக
ஒரு கூடாரம் அமைக்க அல்ல, மூன்று கூடாரங்கள் அமைக்க அனுமதி கேட்கிறார்.
மூவரும் ஒரே கூடாரத்தில் தங்கினால், நெருக்கடியாக இருக்கும்,
மூன்று கூடாரங்களில் தங்கினால் சௌகர்யமாக இருக்கும் என்று எண்ணுகிறார்.
நமது ஜெபம் எப்படி?
நமது செபத்தில் நாம் யாருக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்?
கடவுளுக்குக் கூட நாம் முன்னுரிமை கொடுப்பது இல்லை.
இராயப்பர் இயேசுவிடம் வேண்டும்போது
" நீர் விரும்பினால்"
என்று ஆரம்பிக்கிறார்.
அதாவது
"நான் கேட்கிறேன் உமக்கு விருப்பம் இருந்தால் கொடும்,
விருப்பம் இல்லாவிட்டால் கொடுக்க வேண்டாம்"
என்று .
அதாவது அவர் முற்றிலும் இறைவனுடைய சித்தத்திற்கு கட்டுபடுகின்றார்.
ஆனால் நாமோ இறைவனிடம் விண்ணப்பம் வைக்கும்பொழுது
நமது விண்ணப்பம் கேட்கப்பட வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கிறோமே தவிர இறைவனுடைய சித்தத்தைப் பற்றி கவலை படுவது இல்லை.
அது மட்டுமல்ல நாம் மற்றவர்களுக்காக வேண்டுவதை விட நமக்காக வேண்டுவதே அதிகம்.
மற்றவர்களுக்காக வேண்டும் போது கூட அந்த வேண்டலில் நமக்கும் ஒரு பங்கு இருக்கும்.
"ஆண்டவரே, எனக்கு நல்ல சுகத்தை தாரும்."
(எனக்காக.)
"இயேசுவே, என் மகனுக்கு நல்ல சுகத்தை தாரும்."
(எனது மகனுக்காக)
நமது வழக்கமான விண்ணப்பங்கள்
ஒன்று நமக்காக இருக்கும்,
அல்லது நம்மை சார்ந்தவர்களுக்காக இருக்கும்,
அல்லது நாம் சம்பந்தப்பட்ட நபர்களுக்காக இருக்கும்,
அல்லது நாம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக இருக்கும்.
"நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி"
என்பது இயேசுவின் கட்டளை.
"நமது அயலான் யார்?"
என்ற கேள்விக்கு விடையாக ஆண்டவர் நல்ல சமாரித்தன் உவமையைக் கூறினார்.
நமக்காக வேண்ட வேண்டாம் என்று ஆண்டவர் கூறவில்லை.
ஆனாலும் நமது விண்ணப்பங்களில் மற்றவர்களையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment